என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அல் கொய்தா"
- ஒசாமா பின்லேடனை அமெரிக்கப் படை 2011, மே 2-ம் தேதி சுட்டுக் கொன்றது.
- ஹம்சா பின்லேடன் குறித்து தகவல் தெரிவித்தால் 1 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசாக வழங்கப்படும் என்றது.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி நியூயார்க் உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுர கட்டிடத்தின் மீதும், ராணுவ தலைமையகமான பென்டகன் மீதும் அல்-கொய்தா பயங்கரவாதிகள் விமானங்களை மோதி தாக்குதல் நடத்தினர். இந்த கொடூர தாக்குதலில் 3,000 கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட அல்-கொய்தா இயக்க தலைவரான ஒசாமா பின்லேடனை அமெரிக்கா தீவிரமாக தேடியது.
10 ஆண்டு தேடுதல் வேட்டைக்கு பிறகு பாகிஸ்தானின் அபோதாபாத்தில் பதுங்கியிருந்த ஒசாமா பின்லேடனை அமெரிக்கப் படையினர் 2011, மே 2-ம் தேதி சுட்டுக்கொன்றனர்.
ஒசாமா மகன் ஹம்சா பின்லேடன் குறித்து தகவல் தெரிவிப்பவருக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசாக வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்தது. அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பை குறிவைத்து அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் ஹம்சா பின்லேடன் 2019-ம் ஆண்டில் கொல்லப்பட்டதாக செய்தி வெளியானது.
இந்நிலையில், ஒசாமா மகன் ஹம்சா பின்லேடன் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார் என தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக தி மிர்ரர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
ஒசாமா பின்லேடன் மகன் ஹம்சா பின்லேடன் உயிருடன் தான் உள்ளான் என ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் தலிபான் எதிர்ப்பு ராணுவ அமைப்பான என்.எம்.எப். என்ற அமைப்பு தெரிவிக்கிறது.
2021 ஆப்கானிஸ்தானில் அதிபர் ஆட்சி முடிவுக்கு வந்து தலிபான்கள் கைப்பற்றியபோது பல்வேறு பயங்கரவாத குழுக்களுக்கான பயிற்சி மையம் அமைத்து 450 பாகிஸ்தானியர்கள் ஹம்சா பின்லேடனுக்கு பாதுகாப்பு அரணாக இருந்து வருகின்றனர்.
அவனது கட்டளையின் கீழ், அல்-கொய்தா மீண்டும் ஒருங்கிணைந்து வரும் காலங்களில் மேற்கத்திய நாடுகள் மீது தாக்குதல்களுக்கு தயாராகி வருகிறது.
ஒசாமா பின்லேடனுக்கு பிறகு அல்-கொய்தா விவகாரங்களை கவனித்து வரும் அய்மன் அல்-ஜவாஹிரியுடன் ஹம்சா பின்லேடன் தொடர்பில் இருந்து வருவதாகவும் நம்பப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 1996-ல் இருந்து மறைந்த பின்லேடனின் நெருங்கிய உதவியாளராக இருந்துள்ளார்.
- பாகிஸ்தானில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த திட்டமிட்டது தெரியவந்துள்ளது.
பாகிஸ்தானின் பயங்கரவாத தடுப்பு துறையின் அதிகாரிகள், அல்-கொய்தா நிறுவன தலைவரான பின்லேடனின் நெருங்கிய உதவியாளரும், அந்த இயக்கத்தின் மூத்த தலைவருமான அமின் உல் ஹக் கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவித்துள்ளனர்.
புலனாய்வு அடிப்படையிலான தேடுதல் வேட்டையில் பயங்கரவாதியான அமின் உல் ஹக் கைது செய்யப்பட்டுள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் மிகப்பெரிய தாக்குதலுக்கு திட்டமிடப்பட்டிருந்தது முறியடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவால் உலகளாவிய பயங்கரவாதி என அறிவிக்கப்பட்ட அமின் உல் ஹக்கை, பஞ்சாப் மாகாணம் குஜராத் மாவட்டத்தில் உள்ள சராய் அலாம்கிர் நகரில் இருந்து காவலில் எடுத்துள்ளோம் என பயங்கரவாத தடுப்பு துறையின் டிஐஜி உஸ்மான் அக்ரம் கொனதல் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் போலீசின் பயங்கரவாத தடுப்பு துறையின் செய்தி தொடர்பாளர் "அமின் உல் ஹக் கைது பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையின் முக்கியமான திருப்புமுனை" எனத் தெரிவித்துள்ளார்.
முக்கியமான கட்டமைப்புகள் மற்றும் பிரபலங்களை குறிவைத்து பஞ்சாப் மாகாணத்தில் சதி செயல்களில் ஈடுபட திட்டமிட்டது தெரியவந்துள்ளது. இவர் 1996-ல் இருந்து பின்லேடனின் நெருங்கிய உதவியாளராக இருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் ரகசியமான இடத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொள்ள இருக்கின்றனர்.
கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ள அப்போதாபாத்தில் அமெரிக்கா நடத்திய வேட்டையில் மறைந்து இருந்த பின்லேடன் கடந்த 2011-ம் ஆண்டு சுட்டு வீழ்த்தப்பட்டார்.
அமின் உல் ஹக் 2021-ல் ஆப்கானிஸ்தானில் காணப்பட்டதாகவும் அவரிடம் பாகிஸ்தான் ஐடி கார்டு இருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
- கடந்த ஆண்டு ஏமனில் பயங்கரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த ஐ.நா. சார்பில் சபியுல் அனம் அனுப்பப்பட்டார்.
- அப்போது அதன் தலைநகரமான ஏடனில் வைத்து பயங்கரவாதிகளால் சுபியுல் கடத்தப்பட்டார்.
நியூயார்க்:
வங்காளதேச ராணுவத்தின் முன்னாள் தளபதியாக இருந்தவர் சுபியுல் அனம். ராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் ஐ.நா. சபையில் பாதுகாப்புத்துறை இலாகாவில் அதிகாரியாக பணியமர்த்தப்பட்டார்.
கடந்த ஆண்டு ஏமனில் பயங்கரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த ஐ.நா. சார்பில் சபியுல் அனம் அனுப்பப்பட்டார். அப்போது அதன் தலைநகரமான ஏடனில் வைத்து பயங்கரவாதிகளால் சுபியுல் கடத்தப்பட்டார். அவருடன் இருந்த மேலும் 4 அதிகாரிகளும் கடத்தப்பட்டனர்.
கடத்தல் சம்பவத்திற்கு உள்ளூர் பயங்கரவாத அமைப்பான அல்-கொய்தா பொறுப்பெற்றது. இதுதொடர்பாக வீடியோ ஒன்றும் வெளியிட்டு மீட்பு தொகையாக ரூ.248 கோடி கேட்டது.
இதற்கிடையே, பயங்கரவாதிகளிடம் மாட்டிக்கொண்ட அதிகாரிகளை மீட்கும் பணியில் ஐ.நா.சபை இறங்கியது. தூதர்களை நேரில் அனுப்பி பேச்சுவார்த்தை மேற்கொண்டது.
இந்நிலையில், கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கு பின்னர் அல்-கொய்தா பயங்கரவாதிகள் உடல்நலனை காரணம் காட்டி சுபியுல் அனமை விடுவித்தனர். மேலும் அவருடன் கடத்தப்பட்ட 4 பேரையும் அல் கொய்தாவினர் விடுவித்துள்ளனர் என ஐ.நா.சபை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏமன் நாட்டின் அல் பய்டா மாகாணத்தில் சில பகுதிகளை அல் கொய்தா பயங்கரவாத இயக்கம் கைப்பற்றி உள்ளது. இந்த இயக்கத்தின் உள்ளூர் தளபதியாக இருந்து வருபவர் படாவி.
இவர் கடந்த 2000ம் ஆண்டு அக்டோபரில் எரிபொருள் நிரப்பி கொண்டிருந்த யூ.எஸ்.எஸ். கோல் என்ற அமெரிக்க போர் கப்பலின் மீது நடந்த ஆயுத தாக்குதலில் தொடர்புடையவர். இந்த தாக்குதலில் 17 அமெரிக்க கப்பற்படை சிப்பந்திகள் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில், பயங்கரவாத இயக்க ஆதிக்கம் நிறைந்த அல் பய்டா பகுதி வழியே தனியாக வாகனம் ஒன்றில் படாவி சென்று கொண்டு இருந்துள்ளார். அவர் மீது திடீரென அமெரிக்க படைகள் வான்வழி தாக்குதலில் ஈடுபட்டன. ஆளில்லா விமானம் மூலம் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் படாவி கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
எனினும் இந்த தகவலை ஏமனை சேர்ந்த அல் கொய்தா இயக்கம் உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ இல்லை. #YemenDroneStrike #AlQaidaLeader
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்