என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஆசிரியர் பலி"
ஆலங்குளம்:
நெல்லையை அடுத்த சுத்தமல்லி பூங்காநகரை சேர்ந்தவர் கோமதி நாராயணன்(வயது56). இவர் ஆலங்குளம் அருகே உள்ள மருதம்புத்தூர் அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வந்தார். தற்போது 10-ம் வகுப்பு தேர்வுக்கான பறக்கும் படையில் கோமதிநாராயணன் இடம்பெற்றிருந்தார்.
இதையடுத்து எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடந்த முதல் நாளான நேற்று கோமதி நாராயணன் மாதாபட்டிணம் மற்றும் அந்த பகுதியில் உள்ள பள்ளிகளில் கண் காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். எஸ்.எஸ்.எல்.சி. முதன்முறையாக நேற்று மதியம் தொடங்கியது. இதனால் பணி முடிந்து மாலையில் அவர் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பினார்.
பாப்பாக்குடி அருகே புதுக்கிராமம் என்ற இடத்தில் வந்தபோது திடீரென சாலையின் குறுக்கே நாய் ஓடியது. இதனால் மோட்டார் சைக்கிளில் இருந்து கோமதிநாராயணன் தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலை, கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரி வரும் வழியிலேயே கோமதிநாராயணன் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி பாப்பாக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தேர்வு கண்காணிப்பு பணிக்கு சென்று விட்டு வீடு திரும்பிய போது விபத்தில் சிக்கி ஆசிரியர் பலியான சம்பவம் அவரது குடும்பத்தினரை கடும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
தாம்பரம்:
கிழக்கு தாம்பரம் கணபதி புரத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 50). இவர் கூடுவாஞ்சேரியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்தார்..
நேற்று மாலை பணி முடிந்ததும் மின்சார ரெயிலில் பெருங்களத்தூர் வந்தார். இங்கு ரெயிலில் இருந்து இறங்கிய அவர் வீட்டுக்கு புறப்பட்டார். அவர் செல்போனை பார்த்தபடியே நடந்து சென்றார்.
அப்போது கால் தடுக்கி தண்டவாளத்தில் விழுந்ததால் அவர் மீது ரெயில் மோதியது. இதனால் படுகாயம் அடைந்த அவர் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.
தாம்பரத்தை அடுத்த தர்காஸ் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் (29).
இவர் அருகில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். நேற்று மாலை தனது நண்பர் ரஞ்சித் குமாருடன் படப்பைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.
கரசங்கால் என்ற இடத்தில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே ஒரு மணல் லாரி வேகமாக வந்தது.
கண்இமைக்கும் நேரத்தில் அந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ஆசிரியர் சந்தோஷ் உடல் நசுங்கி உயிர் இழந்தார்.
படுகாயம் அடைந்த ரஞ்சித் குமார் குரோம்பேட்டை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். மணல் லாரி டிரைவர் லாரியை விட்டுவிட்டு தப்பி ஓடி விட்டார். அவரை குரோம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி தேடி வருகிறார்.
விபத்தில் மரணம் அடைந்த ஆசிரியர் சந்தோஷ் மனைவி பெயர் பார்கவி. இவர்களுக்கு திருமணம் முடிந்து 10 மாதங்கள்தான் ஆகிறது.
நெல்லை:
பாளை பெருமாள்புரம் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது48). இவர் திருக்குறுங்குடியில் உள்ள நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சுபாஷினி (40), ஆலங்குளம் அரசு உயர் நிலைப்பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.
இவர்களுக்கு வர்ஷினி (15) என்ற 10-ம் வகுப்பு படிக்கும் மகளும், விக்னேஷ் (12) என்ற 7-ம் வகுப்பு படிக்கும் மகனும் உள்ளனர். ஆசிரியர் முருகன் தினமும் காலை ‘அரை டவுசர், டீசர்ட்’ அணிந்து வாக்கிங் செல்வார்.அதுபோல் இன்று பெருமாள்புரத்தில் இருந்து ரெயில்வே பீடர் ரோடு வழியாக மகாராஜநகர் வரை ‘வாக்கிங்’ சென்றார்.
பின்பு அவர் அன்புநகர் மகாராஜநகர் இடையே உள்ள ரெயில்வே தண்டவாளத்தை கடந்து மறுபுறம் செல்ல முயன்றார். அப்போது சென்னையில் இருந்து திருச்செந்தூர் சென்ற ‘செந்தூர் எக்ஸ்பிரஸ்’ ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற ஆசிரியர் முருகன் மீது மோதியது. இதில் முருகன் தலை சிதறி சம்பவ இடத்திலேயே பலியானார். ரெயில் என்ஜின் டிரைவர் இதை கவனித்து உடனடியாக ரெயிலை நிறுத்தினார்.
சம்பவ இடத்துக்கு ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜீலியஸ் மற்றும் போலீசார் விரைந்து சென்று முருகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இதுகுறித்து அவரது உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்தனர்.
முருகன் உடல் வைக்கப்பட்டுள்ள நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்த அவரது மனைவி சுபாஷினி மற்றும் குழந்தைகள், உறவினர்கள் கதறி துடித்தனர். இந்த சம்பவம் பெரும் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த விபத்து காரணமாக செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் சுமார் ½ மணி நேரம் காலதாமதமாக புறப்பட்டு சென்றது. அதுவரை தியாக ராஜ நகர் ரெயில்வே கேட் திறக்கப்படாததால் ஏராளமான வாகன ஓட்டிகளும் நீண்ட நேரம் காத்திருந்தனர்.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள முருக கவுண்டம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் சந்திர சேகரன் (வயது37). இவர் மஞ்ச பாளையம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி உமாமகேஷ்வரி (30) இவரும் அரசு பள்ளி ஆசிரியை ஆவார்.
நேற்று பிற்பகல் கணவன்- மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் பரமத்தி சென்று கொண்டிருந்தனர். தனியார் பள்ளி அருகே சென்ற போது அந்த வழியாக வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சந்திரசேகரனும், உமாமகேஷ்வரியும் படுகாயம் அடைந்தனர்.
உடனே இரண்டு பேரும் ஆம்புலன்ஸ் மூலம் கோவை கொண்டு செல்லப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சந்திரசேகரன் பரிதாபமாக இறந்தார். உமா மகேஷ்வரி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
விக்கிரவாண்டி அருகே உள்ள வா.பகண்டை பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 62). ஓய்வு பெற்ற ஆசிரியர்.
இவர் நேற்று அதே பகுதியில் உள்ள தனது விவசாய நிலத்துக்கு நடந்து சென்றார்.
அங்குள்ள கரும்பு தோட்டத்தை பார்வையிட செல்லும்போது கீழே அறுந்து கிடந்த மின்கம்பியை எதிர்பாராதவிதமாக குமார் மிதித்து விட்டார்.
இதில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
குமாரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து விக்கிரவாண்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்