search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இளைஞர் காங்கிரஸ்"

    • கேரள தலைமை செயலகம் நோக்கி இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் பேரணி செல்ல முயன்றனர்.
    • தடியடியில் இளைஞர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பலருக்கு காயம் ஏற்பட்டது.

    கேரளாவில் அமைச்சர்கள், அரசியல் தலைவர்களின் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாக சுயேட்சை எம்எல்ஏ அன்வர் குற்றம்சாட்டினார். இவரது புகாரைத் தொடர்ந்து கேரளாவில் முதல்மைச்சர் பினராயி விஜயனுக்கு எதிராக திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

    போராட்டத்தின் போது, கேரள தலைமை செயலகம் நோக்கி இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் பேரணி செல்ல முயன்றனர். இவர்களை தடுக்கும் போது ஏற்பட்ட மோதல் காரணமாக காங்கிரஸ் கட்சியினர் மீது போலீஸ் தடியடி நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    போராட்டத்தில் போலீசார் நடத்திய தடியடியில் இளைஞர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பலருக்கு காயம் ஏற்பட்டது. ஒருவருக்கு மண்டை உடைந்தது. 


    • கள்ளக்குறிச்சி மாவட்ட பொறுப்பாளர் காங்கை குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • மாநில செயலாளர் கோமதி பாஸ்கரன், விளையாட்டுத்துறை மாநிலத் துணைத்தலைவர் பூவை ராஜா, திருவள்ளூர் வடக்கு மாவட்டத் தலைவர், பேரூர் நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளரும், கள்ளக்குறிச்சி மாவட்ட பொறுப்பாளருமான காங்கை குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் மாநில செயலாளர் கோமதி பாஸ்கரன், விளையாட்டுத்துறை மாநிலத் துணைத்தலைவர் பூவை ராஜா, திருவள்ளூர் வடக்கு மாவட்டத் தலைவர் தனசெழியன், திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் வீராபுரம் தாஸ், எல்லாபுரம் தெற்கு வட்டார காங்கிரஸ் கட்சி தலைவர் டி.சிவசங்கர், ஆசிர்வாதம், திவாகர், சுயம் பிரகாஷ், குருதேவ், பங்காரு நாயுடு, தினேஷ், நரேந்திரன், யுகேந்திரன், பச்சையப்பாஸ் பிரகாஷ், சுரேஷ், அருண், பாலாஜி, சீனிவாசன், வினோத்குமார், யோகேஷ் மற்றும் மாவட்ட, வட்டார, நகர, பேரூர் நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • ராஜாக்கமங்கலம் சந்திப்பில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • கூட்டத்தில் பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    கன்னியாகுமரி : 


    ராஜாக்கமங்கலம் சந்திப்பில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


    வட்டார இளைஞர் காங்கிரஸ் சார்பில் நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செயல் தலைவர் சகாய பிரவீன் தலைமை வகித்தார் நாகர்கோவில் சட்டமன்ற செயல் தலைவர் சுதன் முன்னிலை வகித்தார். இளைஞர் காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் நரேந்திர தேவ் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.

    மாநில பொதுச் செயலாளர் ஆஸ்கர் பிரடி, முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன், மாநகர காங்கிரஸ் தலைவர் நவீன் குமார், மாநில இளைஞர் காங்கிரஸ் செயலாளர் ஆல்வின், சேவியர், பிரேம்குமார் முன்னாள் வட்டார காங்கிரஸ் தலைவர் முருகேசன், வட்டார காங்கிரஸ் தலைவர் வைகுண்ட தாஸ் மாநில காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு துணைத் தலைவர் காமராஜ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    ×