என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "உட்கட்சி தேர்தல்"
- தே.மு.தி.க. உட்கட்சி தேர்தல் தற்போது நடைபெற்று வருகிறது.
- ஆலோசனை கூட்டத்தில் கரூர் புறநகர் மாவட்ட கழக செயலாளர் பதவிக்கு மாவட்ட கழக அவைத்தலைவர் பேராசிரியர் ரெங்கநாதன் போட்டியிடுவதற்கான விருப்பத்தை தெரிவித்தார்.
கரூர் :
தே.மு.தி.க. உட்கட்சி தேர்தல் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் கரூர் மாவட்டம் குளித்தலை நகர அலுவலகத்தில் நடந்த உள்கட்சி தேர்தல் தொடர்பான கூட்டத்தில் மண்டல தேர்தல் பொறுப்பாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான அழகாபுரம் மோகன்ராஜ், கரூர் தேர்தல் பொறுப்பாளர் பாக்கிய செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் கரூர் புறநகர் மாவட்ட கழக செயலாளர் பதவிக்கு மாவட்ட கழக அவைத்தலைவர் பேராசிரியர் ரெங்கநாதன் போட்டியிடுவதற்கான விருப்பத்தை தெரிவித்தார். இந்த கூட்டத்தில் கரூர் புறநகர் மாவட்ட செயலாளர் சிவம் ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் வலையபட்டி தாமேதரன், நகர செயலாளர் எம்.விஜயகுமார்,
மருதூர் நகர செயலாளர் கோபாலகிருஷ்ணன், மாவட்ட மாணவரனி பாரதிநகர் வடிவேல் மற்றும் தே.மு.தி.க. நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
- மாநகராட்சி பகுதியில் உள்ள பகுதி கிளை நிர்வாகிகளுக்கான தேர்தல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
- வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட வீரபாண்டி, ஆண்டிபாளையம் மற்றும் முத்தணம்பாளையம் ஆகிய 3 கிளைகளுக்கு, பலவஞ்சிபாளையம் ரோட்டில் உள்ள வடக்கு மாவட்ட அலுவலகத்தில் மனுக்கள் பெறப்படுகிறது.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் உள்ள தி.மு.க.,பகுதி கிளை நிர்வாகிகள் தேர்தலுக்கு நாளை வேட்பு மனுத்தாக்கல் நடைபெறவுள்ளது.தி.மு.க.,வின் 15வது உட்கட்சி அமைப்பு தேர்தல் கடந்த பல மாதங்களாக பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது.
இதில் மாநகராட்சி பகுதியில் உள்ள பகுதி கிளை நிர்வாகிகளுக்கான தேர்தல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வகையில், பகுதியில் உள்ள பகுதி கிளைகளுக்கான வேட்பு மனுக்கள் நாளை காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை பெறப்படும். தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ரவிச்சந்திரன் மனுக்களை பெறுகிறார்.
இதில், திருப்பூர் மத்திய மாவட்டத்துக்கு உட்பட்ட வேலம்பாளையம், அண்ணா நகர், பாண்டியன் நகர், கொங்கு நகர், வாலிபாளையம் மற்றும் நல்லுார் ஆகிய ஏழு கிளைகளுக்கு, மத்திய மாவட்ட அலுவலகத்தில் வேட்பு மனுக்கள் பெறப்படும்.
அதேபோல் வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட வீரபாண்டி, ஆண்டிபாளையம் மற்றும் முத்தணம்பாளையம் ஆகிய 3 கிளைகளுக்கு, பலவஞ்சிபாளையம் ரோட்டில் உள்ள வடக்கு மாவட்ட அலுவலகத்தில் மனுக்கள் பெறப்படுகிறது. இதில் பகுதி கிளைக்கு, அவைத் தலைவர், செயலாளர், மூன்று துணை செயலாளர்கள் மற்றும் மாவட்ட பிரதிநிதிகள் பதவிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.
- விண்ணப்பங்களை தேர்தல் ஆணையர் சிவ.ஜெயராஜ் பெற்றுக் கொண்டார்
- உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்
வாணியம்பாடி:
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 6 ஒன்றியத்தைச் சேர்ந்த திமுக நிர்வாகிகளுக்கான உட் கட்சி தேர்தலுக்கான விருப்பமனுக்கள் பெறப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்ட பொறுப்பாளரும், ஜோலார்பேட்டை க.தேவராஜி எம்.எல்.ஏ. தலைமையில், வாணியம்பாடி சசிபிரியா மஹாலில் நடைபெற்ற வேலூர் மேற்கு (திருப்பத்தூர்) மாவட்ட ஒன்றிய கழக நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்பமனுக்களை வழங்குதல் மற்றும் விருப்பமனு பெறும் நிகழ்ச்சியில் கழக உட்கட்சி தேர்தலில் போட்டியிடும் கட்சியினரிடம் விருப்பமனுக்களை வழங்கப்பட்டது.
தொடர்ந்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தேர்தல் ஆணையர் சிவ. ஜெயராஜ் பெற்றுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் திருவண்ணாமலை சி.என்.அண்ணாதுரை, செங்கம் மு.பெ.கிரி, திருப்பத்தூர் அ.நல்லதம்பி எம்.எல்.ஏ, திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார், மாவட்ட அவைத் தலைவர் ஆர்.எஸ்.ஆனந்தன், மாவட்ட துணை செயலாளர்கள் கே.பி.ஆர்.ஜோதிராஜன், ஆ.சம்பத்குமார், மாவட்டப் பொருளாளர் டி.ரகுநாத், தலைமை செயற்குழு உறுப்பினர் பூ.சதாசிவம், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் தே. பிரபாகரன் மற்றும் ஒன்றிய கழக செயலாளர்கள், பொறுப்பாளர்கள், பிறஅணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள்.
- மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. உட்கட்சி தேர்தலில் நிர்வாகிகள் விருப்பமனு வழங்கினர்.
- தேர்தல் ஆணையாளர், தெற்குமாவட்ட செயலாளர் ஆகியோரிடம் மனுக்களை கொடுத்தனர்.
திருமங்கலம்
மதுரை தெற்குமாவட்ட தி.மு.க. உட்கட்சி தேர்தல் நடைபெற்றுவருகிறது. திருமங்கலம் கிழக்கு, மேற்கு, தெற்கு, திருப்பரங்குன்றம் கிழக்கு, மேற்கு, தெற்கு, கள்ளிக்குடி வடக்கு, தெற்கு, டி.கல்லுப்பட்டி கிழக்கு, வடக்கு, தெற்கு, செல்லம்பட்டி வடக்கு, தெற்கு, உசிலம்பட்டி வடக்கு, தெற்கு, சேடபட்டி மேற்கு, வடக்கு, தெற்கு ஆகிய ஒன்றியங்களில் போட்டியிடும் கட்சியினர் மனுக்களை பெற்றனர்.
நேற்று விருப்ப மனுக்களை இந்த ஒன்றியங்களை சேர்ந்த தி.மு.க.வினர் கொடுத்தனர். தேர்தல் ஆணையாளர் குத்தாலம் அன்பழகன், தெற்குமாவட்ட செயலாளர் மணிமாறன் ஆகியோரிடம் மனுக்களை கொடுத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் தெற்குமாவட்ட அவைத்தலைவர் நாகராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. லதாஅதியமான், ஒன்றிய செயலாளர்கள் தனபாண்டி, ராமமூர்த்தி, ஜெயசந்திரன், வேட்டையன், தெற்குமாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மதன்குமார், அணிஅமைப்பாளர்கள் சிவக்குமார், தனுஷ்கோடி, திருமங்கலம் நகராட்சி தலைவர் ரம்யாமுத்துக்குமார், துணைத்தலைவர் ஆதவன்அதியமான், மாவட்ட கவுன்சிலர் கிருத்திகா தங்கபாண்டி, வசந்தாசரவணபாண்டி, ஜெயராஜ், முன்னாள் ஒன்றிய செயலாளர் ஆதிமூலம், தொண்டரணி அமைப்பாளர் ஆலம்பட்டி சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்