என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஊழியர்கள் போராட்டம்"
கடன்சுமை காரணமாக ‘ஜெட் ஏர்வேஸ்’ நிறுவனம் விமான சேவையை நிறுத்தி உள்ளது. இதனால் விமான பயணிகள் மட்டுமின்றி அந்த நிறுவனத்தின் ஊழியர்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தங்களது பாதிப்பை வெளிப்படுத்தும் விதமாக ‘ஜெட் ஏர்வேஸ்’ ஊழியர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பெண் விமானிகள், பெண் ஊழியர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
போராட்டம் குறித்து நிறுவன அதிகாரி அசோக் குப்புசாமி கூறுகையில், “ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகிறோம். சில காரணங்களால் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க இயலாத சூழல் ‘ஜெட் ஏர்வேஸ்’ நிறுவனத்துக்கு ஏற்பட்டது. இதை சமாளிக்க வங்கிகளிடம் கடன் தொகை கோரப்பட்டது. ஆனால் கடன் கிடைக்கவில்லை. எனவே, இந்த விவகாரத்தில் பிரதமர் தலையிட்டு கடன் கிடைக்க உதவி செய்ய வேண்டும்” என்றார். #JetAirwaysEmployees #Strike
திருவனந்தபுரம், மங்களூர், கவுகாத்தி, லக்னோ, அகமதாபாத், ஜெய்ப்பூர் ஆகிய 6 விமான நிலையங்களை தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவு செய்து உள்ளது.
இதற்கு அனைத்து விமான நிலைய ஊழியர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். விமான நிலையங்களை தனியார் மயமாக்குவதை கண்டித்து இன்று இந்தியா முழுவதும் அனைத்து விமான நிலையங்களிலும் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல் சென்னை விமான நிலையத்திலும் அனைத்து தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். அவர்கள் விமான நிலையத்தில் உள்நாட்டு முனையம் 1-வது வருகை நுழைவு வாயில் அருகே தொடர் உண்ணாவிரதத்தை தொடங்கினர். வருகிற புதன்கிழமை வரை இந்த உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது.
விமான நிலைய ஊழியர்களின் போராட்டத்தால் விமான சேவை மற்றும் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பணிகள் பாதிக்காத வகையில் ஊழியர்கள் பகுதியாக வந்துபோராட்டத்தை தொடர்ந்து உள்ளனர். #chennaiAirport
திருவள்ளூர்:
சத்துணவு ஊழியர்கள் காலமுறை ஊதியம் ஓய்வூதியமாக ரூ. 9 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகவளாகம் முன்பு நேற்று முன்தினம் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் 113 பேர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்து நேற்றும் திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் சமையல் செய்து அங்கேயே உண்டு உறங்கி போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
இதில் மாவட்டத் தலைவர் சிவா, மாநில செயற்குழு உறுப்பினர் கலைமணி, மாநிலத் தலைவர் சுந்தரம்மாள், மாவட்டச் செயலாளர் சந்திரசேகரன், மாநிலச் செயலாளர் ஆண்டாள், அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் இளங்கோவன், மாவட்டச் செயலாளர் காந்திமதி நாதன், உள்பட பலர் பங்கேற்றுள்ளனர்.
இன்று 3வதுநாளாக போராட்டம் நடைபெறுகிறது. இதனால் அந்த பகுதி பரபரப்பாக காணப்படுகிறது. போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
திருவள்ளூர்:
சத்துணவு ஊழியர்கள் அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியமாக ரூ. 9 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் சத்துணவு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம் முன்பு நேற்று சத்துணவு ஊழியர் சங்கத்தினர் 100-க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
ஆனால் அவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்து திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் போராட்டத்தை தொடர்ந்தனர்.
இதில் மாவட்டத் தலைவர் சிவா, மாநில செயற்குழு உறுப்பினர் கலைமணி, மாநிலத் தலைவர் சுந்தரம்மாள், மாவட்டச் செயலாளர் சந்திரசேகரன், மாநிலச் செயலாளர் ஆண்டாள், அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் இளங்கோவன் உள்ளிட்ட பங்கேற்றனர்.
இன்று 2-வது நாளாக போராட்டம் தொடர்கிறது. இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.
இது குறித்து சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சந்திர சேகரன் நிருபரிடம் கூறியதாவது:-
எந்த அரசாக இருந்தாலும் எங்கள் கோரிக்கைகள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும், பணப்பயனாக ரூ. 5 லட்சம் வழங்கிடவேண்டும். சமையலர் மற்றும் உதவியாளருக்கு ரூ. 3 லட்சம் வழங்கிட வேண்டும், ஓய்வூதியமாக மாதம் தோறும் ரூ. 9 ஆயிரம் வழங்கிட வேண்டும்,
எங்கள் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க மாநில நிர்வாகிகளை அழைத்துப் பேசி நிரந்தர தீர்வு காண வேண்டும். அதுவரை எங்களது காத்திருப்பு போராட்டம் தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே கலெக்டர் அலுவலகம் முன்பு அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக சத்துணவு ஊழியர்கள் 78 பெண்கள் உள்பட 113 பேர் மீது திருவள்ளூர் டவுண் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
புதுவை பாப்ஸ்கோ நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 15 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை.
தங்களுக்கான மாத சம்பளத்தை வழங்க கோரி பாப்ஸ்கோ ஊழியர்கள் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாப்ஸ்கோ ஊழியர் சங்கத்தின் சார்பில் நிலுவையிலுள்ள சம்பளத்தை வழங்க கோரி இன்று தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது.
போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் துறையின் மேலாண் இயக்குனர் அறைக்குள் வைத்து பூட்டு போட்டு பூட்டினர். பின்னர், அலுவலக அறை வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். திங்கட்கிழமை முதல் கையெழுத்து போட்டு விட்டு வேலை செய்யாமல் உள்ளிருப்பு போராட்டம் நடத்துவதாக அவர்கள் கூறினர். #tamilnews
திண்டுக்கல்:
திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் 32 புக்கிங் ஏஜெண்டுகள் உள்ளனர். இவர்கள் மூலம் டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூர் போன்ற பெரு நகரங்களுக்கு காய்கறிகள் ஏலக்காய், முருங்கை, நெல்லிக்காய், வாழை இலை, மலர்கள் போன்றவை அனுப்பி வைக்கப்படுகின்றன.
தினசரி திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து மட்டும் 10 டன் அளவுக்கு விளை பொருட்கள் பல்வேறு நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. திண்டுக்கல் கோட்ட வர்த்தக அலுவலராக பொறுப்பேற்றுள்ள ஜெயச்சந்திரன் என்பவர் கடந்த சில மாதங்களாக புக்கிங் ஏஜெண்டுகள் மூலம் எந்த பொருட்களையும் ரெயிலில் ஏற்றக் கூடாதுஎன உத்தரவு பிறப்பித்தார்.
கடந்த 4 நாட்களாக லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் ரெயில்கள் மூலம் காய்கறிகள் மற்றும் விளை பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. நேற்று ரெயில்வே அதிகாரி ஜெயச்சந்திரன் புக்கிங் ஏஜெண்டுகள் மூலம் யாரையும் பொருட்கள் ஏற்ற அனுமதிக்க கூடாது என்றும் அவர்களை உள்ளே வர விடக்கூடாது என்றும் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதனை கண்டித்து திண்டுக்கல் நிலைய அலுவலர் ராதா கிருஷ்ணனிடம் ஊழியர்கள் மற்றும் லோடு மேன்கள் புகார் மனு அளித்தனர். இது குறித்து புக்கிங் ஏஜெண்டு நாகராஜ் தெரிவிக்கையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள கோட்ட அலுவலர் வேறு ஏதோ காரணத்துக்காக எங்களை அனுமதிக்க மறுக்கிறார்.
தினசரி ரூ.30 லட்சம் ரெயில்வே நிர்வாகத்துக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்று எடுத்து கூறியும் அவர் கேட்கவில்லை. நிலைய அலுவலரிடம் புகார் அளித்தும் அவர் இது தனது கட்டுப்பாட்டில் வராது என கைவிரித்து விட்டார். எனவே நாங்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இது குறித்து ரெயில்வே உயர் அதிகாரிகளுக்கு புகார் அளிக்க உள்ளோம் என்று தெரிவித்தார். #struggle
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலின் தெற்கு வாசல் நடைபாதை வழி 20 அடி அகலம் உள்ளது.
இதை பக்தர்களின் வசதிக்காக 30 அடி நடைபாதை அகலப்படுத்துமாறு திருவள்ளூர் கலெக்டர் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. நேற்று ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று கருதிய எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊழியர்கள் இந்த பணியை நேற்று மாலை செய்ய ஏற்பாடு செய்து இருந்தனர்.
இந்த நிலையில், தெற்கு திசையில் உள்ள கடைகளை நடைபாதையில் இருந்து பத்து அடிக்கு மேற்கு திசைக்கு தள்ளி வைத்து நடைபாதை வழியை அகலப்படுத்தினர். சாலையில் இருந்த பள்ளத்துக்கு வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் மண் கொட்டி நிரப்பும் பணியை மேற்கொண்டனர்.
அப்போது, கோவிலின் அறங்காவலர் லோகமித்ரா மற்றும் கோவிலில் பணியாற்றும் ஊழியர்கள் உள்பட 25-க்கும் மேற்பட்டோர் இந்த பணியை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தெற்கு வாசல் வழி அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவில் சார்பில் நடை பாதை அமைத்தோம். இந்த நிலம் எங்களுக்கு உபயோகப்படுத்தி கொள்ள கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது என்று கூறி எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து பெரியபாளையம் காவல் நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் வந்து உரிய தீர்வு காணும் வரையில் தங்களது அறப்போராட்டம் தொடரும் என்று அப்பகுதியில் அமர்ந்திருந்தனர்.
தகவல் அறிந்ததும் ஊத்துக்கோட்டை தாசில்தார் இளங்கோ தலைமையில் வருவாய் துறையினர் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும், நிலம் சம்பந்தமாக ஆவணங்கள் இருந்தால் அதனை கொண்டு வந்து காண்பிக்குமாறு கூறினர். இந்த பிரச்சனை தொடர்பாக வியாழக்கிழமை விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் கூறிவிட்டு சென்றனர். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர். #PeriyapalayamTemple
மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள், ஊராட்சி செயலாளர்கள், பதிவுத் துறை எழுத்தாளர்களுக்கு வழங்கும் இணையான ஊதியத்தை வழங்க வேண்டும்.
உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும், ஊரக வளர்ச்சி துறையில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட 26 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி மீஞ்சூர் ஒன்றிய அலுவலகத்தில் போராட்டங்கள் நடத்தினர்.
அவர்கள் அலுவலகத்துக்கு பூட்டு போட்டு கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் குணசேகரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஊராட்சி செயலாளர்கள், ஊராட்சி உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்