என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "எல்லை பாதுகாப்பு படை"
- பஞ்சாப் மாநிலத்தில் இரண்டு வெவ்வேறு இடங்களில் எல்லை பாதுகாப்பு படை தேடுதல் வேட்டை நடத்தினர்.
- எல்லை பாதுகாப்பு படையினர் மற்றும் பஞ்சாப் போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் ட்ரோன் ஒன்றை பறிமுதல் செய்தனர்.
பஞ்சாப் மாநிலத்தில் இரண்டு வெவ்வேறு இடங்களில் எல்லை பாதுகாப்பு படை தேடுதல் வேட்டை நடத்தினர்.
அமிர்தசரஸ் மாவட்டம் ரத்தன்குர்த் பகுதியில் எல்லை பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் ட்ரோன் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது. இதே போன்று தர்ன் தரன் மாவட்டத்தில் தால் கிராமத்தில் எல்லை பாதுகாப்பு படையினர் மற்றும் பஞ்சாப் போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் ட்ரோன் ஒன்றை பறிமுதல் செய்தனர்.
தேடுதல் வேட்டையில் பறிமுதல் செய்யப்பட்ட இரண்டு ட்ரோன்களும் சீனாவில் தயாரிக்கப்பட்ட DJI Mavic 3 Classic மாடல்கள் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
- மக்களவை தேர்தல் அடுத்த ஆண்டு பிப்ரவரி-மார்ச் மாதங்களில் நடைபெறும்.
- எல்லை பாதுகாப்பு படை பாரபட்சமின்றி செயல்பட வேண்டும்.
மேற்கு வங்காளத்தின் கிராமப்புறங்களில் ஜூலை 8ம் தேதி பஞ்சாயத்து தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் கணிசமான இடங்களை கைப்பற்றுவதற்காக ஆளுங்கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், முதல்வருமான மம்தா பானர்ஜி மும்முரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்.
அவ்வகையில், ஜல்பைகுரி மாவட்டத்தில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் மம்தா பானர்ஜி பேசியதாவது:
பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வராமல் போகலாம் என்பதை உணர்ந்து எல்லை பாதுகாப்பு படை (BSF) பாரபட்சமின்றி செயல்பட வேண்டும். மக்களவை தேர்தல் அடுத்த ஆண்டு பிப்ரவரி-மார்ச் மாதங்களில் நடைபெறும். பா.ஜ.க. அரசின் பதவிக்காலம் இன்னும் வெறும் 6 மாதங்களே உள்ளது. தேர்தலில் அடையப் போகும் தோல்வியை அவர்கள் உணர்ந்துள்ளார்கள். அதனால், அவர்கள் பல்வேறு குழுக்கள் மற்றும் சமூகங்களை லாபி செய்ய முயற்சிக்கவில்லை.
எல்லா எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகளையும் நான் குற்றம் சாட்டவில்லை, அவர்கள் எங்கள் எல்லைகளைக் காக்கிறார்கள். ஆனால் எல்லை பாதுகாப்பு படை பாரபட்சமின்றி செயல்பட வேண்டும். ஏனெனில், நாளை பா.ஜ.க. ஆட்சியில் இருக்காது. ஆனாலும், அவர்கள் (BSF) தங்கள் வேலையைத் தொடர்ந்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மேலும், எல்லைப் பகுதிகளில், எல்லை பாதுகாப்பு படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு தரப்படும் என்றும் அவர்கள் குடும்பத்தினருக்கு வேலைகள் வழங்கப்படும் என்றும் மம்தா பானர்ஜி அறிவித்தார்.
எல்லையோர பகுதிகளில் உள்ள வாக்காளர்களை பா.ஜ.க. சார்பாக எல்லை பாதுகாப்பு படை மிரட்டுவதாக மம்தா நேற்று குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பஞ்சாப் எல்லைப் பகுதி வழியாக இந்த ஆண்டு 215 ட்ரோன்கள் ஊடுருவல்.
- சட்டவிரோதச் செயலில் ஈடுபட்டுள்ளவர்களின் முகவரியை கண்காணிக்க முடியும்.
பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு எதிராக செயல்படும் பயங்கரவாத அமைப்புகள் பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீர் எல்லைகள் வழியே ட்ரோன்கள் எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்கள் மூலம் போதைப்பொருள், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை வீசி வரும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய எல்லைப் பாதுகாப்பு படையின் இயக்குநர் ஜெனரல் பங்கஜ்குமார் சிங் கூறியுள்ளதாவது:
ட்ரோன் தடயவியல் ஆய்வுக்காக டெல்லியில் அண்மையில் அதிநவீன ஆய்வகத்தை எல்லை பாதுகாப்பு படை நிறுவி உள்ளது. அதன் முடிவுகள் எங்களுக்க மிகவும் ஊக்கமளிக்கின்றன. இதன் மூலம் எல்லை தாண்டிய சட்டவிரோதச் செயலில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகளின் முகவரியைக் கூட பாதுகாப்பு ஏஜென்சிகள் கண்காணிக்க முடியும்.
கடந்த 2020 ஆம் ஆண்டில் இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லை வழியே ஊடுருவிய சுமார் 79 ட்ரோன்களை பி.எஸ்.எஃப். கண்டறிந்தது. இது கடந்த ஆண்டு 109 ஆக அதிகரித்தது. நடப்பு ஆண்டில் அது 266 ஆக அதிகரித்துள்ளது.
பஞ்சாப் எல்லைப் பகுதி வழியாக இந்த ஆண்டு 215 ட்ரோன்களும், ஜம்முவில் சுமார் 22 ட்ரோன்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த பிரச்சினை தீவிரமானது. அவர்கள் (பயங்கரவாதிகள்) ட்ரோன்கள் மூலம் போதைப்பொருள், ஆயுதங்கள், வெடிமருந்துகள், போலி ரூபாய் நோட்டுக்கள் உள்ளிட்டவற்றை இந்தியாவிற்குள் கொண்டு வருகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- தென்னைக்கு தெளிக்க தண்ணீரில் கலக்கி வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை தவறுதலாக எடுத்து குடித்ததாக தெரிகிறது.
- இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி:
இரணியல் அருகே வில்லுக்குறி அடுத்த மணக்கரை அவரிவிளையை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் ஐயப்பகோபு (வயது 46).
எல்லை பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வந்தார். இவர் விடுமுறையில் கடந்த 4-ம் தேதி ஊருக்கு வந்திருந்தார். ஐயப்பகோபுக்கு அதிக குடிப்பழக்கம் இருந்து வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று மதியம் வீட்டில் இருந்த ஐயப்பகோபு போதையில் தென்னைக்கு தெளிக்க தண்ணீரில் கலக்கி வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை தவறுதலாக எடுத்து குடித்ததாக தெரிகிறது. இதில் வாயில் நுரை தள்ளிய நிலையில் கிடந்த அவரை மீட்டு நாகர்கோவிலில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ஐயப்பகோபு இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து அவரது மனைவி துர்கா (36) இரணியல் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த பிப்ரவரி மாதம் 14-ந்தேதி பாதுகாப்பு படையினர் ராணுவ வாகனங்களில் சென்றபோது தற்கொலை படை பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
இதையடுத்து புல்வாமா மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று முன்தினம் புல்வாமா மாவட்டம் டெலி போராவில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து பாதுகாப்பு படையினர் அங்கு சென்றனர். அப்போது நடந்த துப்பாக்கி சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஒரு ராணுவ வீரர் வீர மரணம் அடைந்தார்.
இதையடுத்து புல்வாமாவில் பாதுகாப்பு படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை புல்வாமா மாவட்டம் அவந்திபோராவில் உள்ள பன்ஸ்கம் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியை பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் சுற்றி வளைத்து தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
பின்னர் பயங்கரவாதிகளை பிடிக்க தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.
பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் துப்பாக்கியால் சுட்டு எதிர்தாக்குதலில் ஈடுபட்ட னர். இதில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
தொடர்ந்து அங்கு துப்பாக்கி சண்டை நீடித்தது. அப்பகுதியில் 2 அல்லது 3 பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களை பிடிக்கும் முயற்சியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 3 நாட்களில் புல்வாமாவில் 2-வது முறையாக பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீநகர்:
70-வது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் அருகே உள்ள சோன்மாக் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத் துறைக்கு தகவல் கிடைத்தது.
இதை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் அந்த பகுதியை சுற்றி வளைத்தனர். பாதுகாப்பு படை வீரர்களை பார்த்ததும் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். இரு தரப்பினர் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது.
இதில் 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். இந்த என்கவுண்டரில் பாதுகாப்பு படை தரப்பில் 3 வீரர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
சுட்டுக் கொலப்லப்பட்ட பயங்கரவாதிகள் பெயர், அவர்கள் எந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்று தெரியவில்லை. மேலும் 2 பயங்கரவாதிகள் அங்கு பதுங்கி உள்ளனர். இதனால் தொடர்ந்து துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.
ஸ்ரீநகரில் குடியரசு விழாவை சீர்குலைக்கும் நோக்கில் பயங்கரவாதிகள் ஊடுருவி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அவர்களின் சதியை பாதுகாப்பு படையினர் முறியடித்தனர். #jammuandkashmir
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்