என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஒருதலை காதல்"
ஒருதலைக்காதல் கொலைகள் அதிகரிப்பதை தடுக்க பெண்களும் விழிப்புணர்வாக இருக்க வேண்டும். இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலான இளைஞர்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக இவர்கள் முகநூல் (பேஸ்புக்), வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பெரும்பாலான நேரங்களை செலவிடுகின்றனர்.
இதன் மூலம் தாங்கள் பதிவிடும் கருத்துக்கு ஆதரவு தெரிவிப்பது, சாட் செய்வது உள்ளிட்ட சம்பவங்களால் ஒருவருக்கொருவர் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்கின்றனர். இந்த பழக்கத்தை சிலர் ஒருதலைக்காதலாக கருதி, தான் விரும்பிய பெண்ணிடம் காதலை தெரிவிப்பது, அதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கவே... தனக்கு கிடைக்காத பெண் யாருக்கும் கிடைக்க கூடாது என்ற மனோபாவம் தான் இதுபோன்ற படுகொலைகள் அதிகரிக்கிறது என்று மனோதத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இன்றைய வாழ்க்கை சூழ்நிலையில் கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு செல்கின்றனர். பள்ளி, கல்லூரிக்கு செல்லும் தங்கள் மகள்களையோ, பணி இடங்களுக்கு செல்லும் தங்கள் மகள்களையோ கண்காணிக்க அவர்களுக்கு பெரும்பாலும் வாய்ப்புகள் இருப்பது இல்லை. பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவிகளும், வேலைக்கு செல்லும் இளம்பெண்களும் தங்களை வாலிபர்கள் யாராவது பின்தொடர்ந்தாலோ, தங்களை காதலிக்குமாறு வற்புறுத்தினாலோ அதுபற்றி தங்கள் பெற்றோரிடம் தெரிவிப்பதில்லை. ஏன் வீண் சிரமம்? குடும்பத்தில் தெரிவித்து தங்களை படிக்க அல்லது வேலைக்கு அனுப்ப மறுத்து விடுவார்களோ என்ற எதிர்கால பயம் பெண்களிடம் இருப்பதால் தான் இதுபோன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்தேறுகிறது.
ஆரம்பத்திலேயே தங்களை பின்தொடரும் நபர்கள் மீது பெண்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தங்கள் எதிர்ப்பை அவர்களுக்கு சுட்டிக்காட்டுவதோடு அதுபற்றி தங்கள் பெற்றோரின் கவனத்துக்கும் கொண்டு செல்வது அவசியம். பெற்றோர்களும் மகள், பள்ளி, கல்லூரிக்கோ அல்லது பணி இடத்துக்கோ போகும்போது வாலிபர்கள் பின் தொடர்கிறார்கள் என்றால் அதுகுறித்து அசட்டையாக இருந்து விட வேண்டாம்.
சம்பந்தப்பட்ட நபரை நேரில் சந்தித்து தங்கள் குடும்ப வாழ்க்கை முறையை எடுத்துரைத்து பின்தொடர்வதை தடுக்கலாம். இல்லாவிட்டால் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்து நடவடிக்கை மேற்கொள்ளலாம். இது கூட சில நேரங்களில் ஆத்திரத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. ஆனால் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிப்பதன் மூலம் சில நேரங்களில் பெண்களை பின் தொடர்ந்து செல்லும் வாலிபர்கள் தங்கள் முயற்சியை கைவிடவும் வாய்ப்பு உள்ளது.
பெண்களும் தங்களை ஒருதலையாக காதலிக்கும் வாலிபர்களிடம் இருந்து தப்பிக்க எப்போதும் தனிமையான இடத்திற்கு செல்ல வேண்டாம். பொதுமக்கள் அதிகம் நடமாடும் இடத்தின் வழியாக செல்லுங்கள். முடிந்தவரை கிட்ட நெருங்கினாலோ சத்தம் போட்டு ஊரை கூட்டுங்கள். நிச்சயம் அது பலன் கொடுக்கும். பெண்களே உங்களை நீங்கள் தான் காத்து கொள்ள வேண்டும்.
முடிந்தவரை சமூக வலைத்தளங்களில் அறிமுகம் இல்லாத நபர்களிடம் அதிக நேரம் அரட்டை அடிக்காதீர்கள். எச்சரிக்கையாக இருங்கள். அது போல் பள்ளி, கல்லூரி மற்றும் வேலை இடங்களுக்கு செல்லும் போது கவனமாக இருங்கள். பின்னால் பிரச்சினை வரும் என்று நினைக்காதீர்கள். உங்கள் பெற்றோரிடமும், நண்பர்களிடமும், வேலை பார்க்கும் இடங்களில் அதிகாரிகளிடமும் தெரிவியுங்கள். ஒருவர் பின்தொடர்கிறார் என்றால் அதை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிந்துவிடுங்கள்.
அது போல் காதல் மயக்கத்தில் இருக்கும் இளைஞர்களும் தங்கள் பொன்னான எதிர்காலத்தை உணரவேண்டும்.. ஒருதலைக் காதலில் இதுபோன்ற ரத்த களரி இனியும் வேண்டாம். இன்று... தங்கள் குடும்பத்துக்கு உதவியாக இருந்த தாங்கள் 22 ஆண்டுகள் ஆசையாக வளர்த்த அருமை மகள் ரம்யாவை இழந்து தவிக்கும் அவர்களது பெற்றோருக்கு யார் ஆறுதல் கூற முடியும். காதல் மோகம் ராஜசேகரின் வாழ்க்கையும் சூறையாடிவிட்டது. எனவே இன்றைய இளைஞர்கள் ஒருதலைக்காதலில் சிக்கி சாதலில் முடிய வேண்டாம். வாழ்க்கை வாழ்வதற்கே.. வாழ்ந்து காட்டுங்கள்.
- குருவன்கோட்டை ஸ்ரீமன்.
அருமனை அருகே மானங்கன்னி விளையைச் சேர்ந்த 16 வயது மாணவி ஒருவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் பிளஸ்-2 படித்து வருகிறார்.
அந்த மாணவியை அருமனை வட்டவிளை பகுதியைச் சேர்ந்த ரெஜின் (வயது 25) என்பவர் கடந்த 2 ஆண்டுகளாக காதலிப்பதாக கூறி தொந்தரவு செய்து வந்தார். இதை அந்த மாணவி தனது பெற்றோரிடம் சென்று கூறினார்.
இதையடுத்து மாணவியின் பெற்றோர் ரெஜின் வீட்டிற்குச் சென்று கண்டித்தனர். நேற்று முன்தினம் மாணவி, பள்ளிக்கூடத்திற்கு சென்றபோது, பள்ளிக்கூட வாசலில் வைத்து மாணவியை ரெஜின் தடுத்து நிறுத்தினார். தன்னை காதலிக்குமாறு கூறினார். அதற்கு அந்த மாணவி மறுப்பு தெரிவித்தார்.
இதனால் ஆத்திரமடைந்த ரெஜின், மாணவியை கன்னத்தில் அடித்ததுடன் கையை பிடித்து இழுத்தார். பின்னர் கொலை மிரட்டலும் விடுத்தார். நடந்த சம்பவத்தை தனது பெற்றோரிடம் கூறி மாணவி கதறி அழுதார்.
இதையடுத்து அந்த மாணவி, மார்த்தாண்டம் மகளிர் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் பார்வதி, சப்-இன்ஸ்பெக்டர் மகேஷ்வரி ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். ரெஜின் மீது போஸ்கோ சட்டம் மற்றும் கொலை மிரட்டல் உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் ரெஜினை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ரெஜின் குழித்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை ஜெயிலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து ரெஜின் ஜெயிலில் அடைக்கப்பட்டார். #tamilnews
கொண்டலாம்பட்டி:
சேலம், ஜாகீர்ரெட்டிப்பட்டி, ஸ்ரீநகர் பகுதியை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் கோபால் (வயது 22). இவர் 5 -ரோட்டில் உள்ள ஒரு தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் கோபால் அதே பகுதியை சேர்ந்த 17 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணை ஒருதலை பட்சமாக காதலித்து வந்தார்.
மேலும் தனது காதலை அந்த பெண்ணிடம் கூறியதாக தெரிகிறது. அதற்கு அந்த பெண் தனக்கு படிப்புத் தான் முக்கியம். நான் யாரையும் காதலிக்கமாட்டேன் என்று தெரிவித்தார். இருப்பினும் கோபால் தொடர்ந்து அந்த பெண்ணிடம் காதலை ஏற்குமாறு வற்புறுத்தியதாக தெரிகிறது. ஆனால் அந்த பெண் காதலை ஏற்க மறுத்து விட்டார்.
இதனால் விரக்தி அடைந்த கோபால் விஷத்தை எடுத்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். உயிருக்கு போராடிய அவரை உறவினர்கள் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனால், எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் கோபாலை சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து சூரமங்கலம் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
தஞ்சை மாவட்டம், பாபநாசம் 108 சிவாலயம் பகுதியை சேர்ந்தவர் குமரவேல். இவரது மகள் வசந்தபிரியா (வயது 25). இவர் கும்பகோணம் லால்பகதூர் சாஸ்திரி சாலையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.
இந்தநிலையில் வசந்தபிரியாவுக்கும், வலங்கைமானை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் இடையே கடந்த 28-ந்தேதி திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. வருகிற தை மாதத்தில் திருமணம் நடத்த இருவீட்டார் சார்பிலும் முடிவு செய்யப்பட்டு இருந்தது.
இந்தநிலையில் கும்பகோணம் அருகே உள்ள உமாமகேஸ்வரபுரம் செல்லும் சாலையில் காவிரி ஆற்றின் கரையோரத்தில் நேற்று மாலை மர்மமான முறையில் வசந்தபிரியா கொடூரமாக கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் டி.எஸ்.பி.க்கள் ராமச்சந்திரன், செங்கமலகண்ணன், இன்ஸ்பெக்டர்கள் ராஜேந்திரன், மணிவேல், மகாதேவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வசந்தபிரியா உடலை கைப்பற்றினர். பிறகு பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை செய்யப்பட்ட இடத்தில் 2 செல்போன்கள் மற்றும் புதிய சிறிய வடிவிலான பேனாகத்தி கிடந்தது.
தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமாரும் நேரில் வந்து விசாரணை நடத்தினார். பின்னர் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.
இதனால் மோட்டார் சைக்கிளில் வசந்தபிரியாவை அழைத்து சென்ற வாலிபர் யார்? என்று போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் வசந்தபிரியாவின் உறவினர்களிடம் வாலிபரின் உருவபடத்தை காட்டி அடையாளம் தெரிகிறதா? என்று கேட்டனர்.
அப்போது உறவினர்கள் அந்த வாலிபர், வசந்த பிரியாவின் மாமா மகன் நந்தகுமார் (வயது 34) என்று தெரிவித்தனர்.
இதையடுத்து கடலூர் மாவட்டம், திட்டக்குடியில் பதுங்கி இருந்த நந்தகுமாரை நேற்று இரவு போலீசார் கைது செய்தனர். பிறகு அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
ஆசிரியை வசந்த பிரியாவை நந்தகுமார் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இந்தநிலையில் வசந்தபிரியாவுக்கு, வேறொரு வாலிபருடன் நிச்சயதார்த்தம் நடந்ததால் நந்தகுமார் அதிர்ச்சி அடைந்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அவர் நேற்று மாலை ஆசிரியை வசந்தபிரியாவிடம் நைசாக பேச்சு கொடுத்து அழைத்து சென்றார். அங்கு தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினார். ஆனால் வசந்தபிரியா மறுத்து திட்டியதால் ஆத்திரம் அடைந்த நந்தகுமார் பேனா கத்தியால் கழுத்தில் குத்தி அவரை கொலை செய்தது தெரியவந்தது.
ஒருதலை காதலால் ஆசிரியை படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கும்பகோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்