என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "காவலாளி கொலை"
காட்பாடி அடுத்த சேவூர் பகுதியை சேர்ந்தவர் நேதாஜி (வயது 62). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தார்.
ரத்தினகிரியை அடுத்த நந்தியாலம் பகுதியை சேர்ந்தவர் அருள் (40). இவர் சேவூரில் உள்ள இந்தியன் உணவுக்கிடங்கில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேதாஜி நேற்று இரவு 8 மணியளவில் சேவூரில் உள்ள பொது இடத்தில் வைத்து மது அருந்தினார்.
அப்போது அங்கு வந்து அருளும் மது அருந்தி உள்ளார். இருவரும் அருகருகே அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்தபோது திடீரென அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி தகராறாக மாறியது.
அப்போது நேதாஜி மதுபோதையில் அருளின் கையில் கடித்தார். அதனால் வலியில் துடித்த அருள் ஆத்திரம் அடைந்து நேதாஜியை சரமாரியாக கைகளால் தாக்கினார்.
பின்னர் அவரின் தலையை பிடித்து அருகேயுள்ள சுவரில் பலமாக அடித்ததாக கூறப்படுகிறது. இதில், பலத்த காயம் அடைந்த நேதாஜி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதைக்கண்ட அப்பகுதி மக்கள் திருவலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று நேதாஜியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து அப்பகுதியில் வசிப்பவர்களிடம் விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அருளை கைது செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டை அடுத்த ஆலம்பாக்கம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 47). மறைமலைநகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இவரது மனைவி சந்திரா. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த 9-ந் தேதி இரவு வீட்டு மாடியில் இருந்து சிவகுமார் கீழே விழுந்து கிடந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
மது போதையில் அவர் மாடியில் இருந்து கீழே விழுந்ததாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையே சிவகுமார் சாவில் மர்மம் இருப்பதாக அவரது தாய் செங்கல்பட்டு தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். பிரேத பரிசோதனையில் சிவகுமார் விஷம் கொடுத்தும், கழுத்தை இறுக்கியும் கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து சிவகுமாரின் மனைவி சந்திராவிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவரும், அதே பகுதியில் வசிக்கும் தங்கை மாரியம்மாளும் சேர்ந்து சிவகுமாருக்கு மதுவில் விஷம் கலந்து கொடுத்தும், கழுத்தை நெரித்தும் கொன்றதாக தெரிவித்தார்.
கொலை குறித்து சந்திரா போலீசில் கூறும்போது, “கணவர் சிவகுமார் அடிக்கடி தங்கை மாரியம்மாளுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்து வந்தார். இதனை கண்டித்தும் அவர் கேட்கவில்லை. இதனால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டது.
எனவே கணவர் சிவகுமாரை தீர்த்து கட்ட நாங்கள் முடிவு செய்தோம். வழக்கமாக சிவகுமார் வீட்டு மாடியில் மது குடிப்பது வழக்கம். கடந்த 9-ந்தேதி இரவு அவர் வாங்கி வைத்திருந்த மதுவில் விஷத்தை கலந்து வைத்தோம். இதனை தெரியாமல் அவர் குடித்து மயங்கினார்.
உடனே நானும், தங்கை மாரியம்மாளும் சேர்ந்து கணவர் சிவகுமாரின் கழுத்தை இறுக்கி கொன்றோம். பின்னர் கொலையை மறைப்பதற்காக வீட்டு மாடியில் இருந்து உடலை கீழே தள்ளிவிட்டோம்.
அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் ஏற்படாத வகையில் மதுபோதையில் சிவகுமார் கீழே விழுந்து இறந்துவிட்டதாக கூறி நாடகமாடினோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதையடுத்து சந்திராவையும், மாரியம்மாளையும் போலீசார் கைது செய்தனர். இந்த கொலைக்கு அவர்களுக்கு வேறு யாரேனும் உதவினார்களா? வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுரை:
மதுரை மாவட்டம் காஞ்சரம்பேட்டை அருகே உள்ள அண்டமான்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது50). இவர் அதே பகுதியில் உள்ள தோட்டத்தில் காவலாளியாக இருந்தார்.
இவருக்கு சிவனம்மாள் (45) என்ற மனைவியும், 4 மகள்களும் உள்ளனர். இதில் 3 மகள்களுக்கு திருமணமாகி விட்டது.
நேற்று இரவு ராஜேந்திரன் வழக்கம்போல் தோட்டத்திற்கு சென்று விட்டார். இன்று காலை அவர் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர் தோட்டத்துக்கு சென்று பார்த்தனர்.
அப்போது அங்குள்ள வீட்டில் ராஜேந்திரன் சரமாரியாக குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் எம்.சத்திரப்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடம் வந்த போலீசார் ராஜேந்திரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ராஜேந்திரனுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதில் அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்