என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சப் இன்ஸ்பெக்டர் தாக்குதல்"
- கைகலப்பில் சங்கர் வைத்திருந்த அரிவாளின் கைப்பிடி சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபனின் உதட்டில் கிழித்தது.
- காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் கூடங்குளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள பழவூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பார்த்திபன்(வயது 30) என்பவர் பணியாற்றி வருகிறார்.
நேற்று மாலை பழவூர் அருகே உள்ள அம்பலவாணபுரம் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கூடங்குளம் அருகே உள்ள சண்முகபுரம் கிராமத்தை சேர்ந்த சங்கர் என்பவரது மினி லாரியில் மணல் கடத்தி கொண்டு செல்லப்பட்டு பழவூரில் இறக்கி விட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
உடனடியாக சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் போலீஸ்காரர்கள் கார்த்தீசன், சுயம்புலிங்கம், கிருஷ்ணராஜ் ஆகியோர் சண்முகபுரத்திற்கு சென்றனர். அங்கு மணலை இறக்கிவிட்டு மினி லாரியில் இருந்து அதன் டிரைவர் மணிகண்டன் இறங்கினார்.
அவரை தடுத்து நிறுத்தி அனுமதி சீட்டை சரிபார்த்த சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன், வீட்டுக்குள் இருந்த சங்கரை அழைத்துள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த சங்கர், அரிவாளை எடுத்து வந்து போலீசாரை வெட்ட முயன்றார்.
உடனே போலீசார் சுதாரித்துக் கொண்டு சங்கரை தடுக்க முயன்றனர். அப்போது ஏற்பட்ட கைகலப்பில் சங்கர் வைத்திருந்த அரிவாளின் கைப்பிடி சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபனின் உதட்டில் கிழித்தது. மேலும் தடுக்க வந்த போலீஸ்காரர் கார்த்தீசனுக்கும் காயம் ஏற்பட்டது. உடனே சங்கரையும் , லாரி டிரைவரான மணிகண்டனையும் போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.
இதற்கிடையே காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் கூடங்குளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் சங்கர், மணிகண்டன் ஆகிய 2 பேரையும் கூடங்குளம் போலீசில் ஒப்படைத்தனர். அவர்களிடம் இருந்து மணல் ஏற்றி வந்த மினிலாரி மற்றும் அரிவாளை கைப்பற்றினர்.
கைதான 2 பேர் மீதும் கொலை முயற்சி மற்றும் மணல் கடத்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் கூடங்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜான் பிரிட்டோ வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். சங்கர் மீது ஏற்கனவே பழவூர், பணகுடி போலீஸ் நிலையங்களில் மணல் கடத்தல் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் போலீஸ் நிலையம் எதிரே நேற்று முன்தினம் திருக்கோவிலூர்-விழுப்புரம் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக 5 பேர் கொண்ட கும்பல் நின்று கொண்டு பட்டாசு வெடித்தனர்.
இதை பார்த்த சப்-இன்ஸ்பெக்டர் டார்ஜான்(வயது 55) அவர்களிடம் சென்று போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தாமல் பட்டாசு வெடிக்குமாறும், அங்கிருந்து கலைந்து செல்லுமாறும் எச்சரித்தார்.
இதனால் ஆத்திரமடைந்த மற்ற 4 பேரும் டார்ஜானை சரமாரியாக தாக்கினர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீஸ் பயிற்சி துணை போலீஸ் சூப்பிரண்டு நமச்சிவாயம், சப்-இன்ஸ்பெக்டர் புனிதவல்லி மற்றும் போலீசார் விரைந்து வந்து 4 பேரையும் மடக்கி பிடித்தனர். ஒருவர் மட்டும் தப்பியோடி விட்டாா்.
பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், அரகண்டநல்லூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அர்ச்சுனன் மகன் ஆகாஷ்(19), சரவணன் மகன் விக்னேஷ்(27), கலியன் மகன் சோமு (35), வள்ளலார் கோவில் தெருவைச் சேர்ந்த சம்சுதீன் மகன் ஷானவாஸ் ஆகியோர் என்பதும், தப்பி ஓடியது அரகண்டநல்லூர் மகாத்மா காந்தி ரோட்டை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் ஹரிதரன்(25) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து 5 பேர் மீதும் கொலை முயற்சி உள்பட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் விக்னேஷ், ஆகாஷ், சோமு, ஷாநவாஸ் ஆகியோரை கைது செய்தனர். தப்பி ஓடிய ஹரிதரனை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மீஞ்சூர் பஜாரில் பெண்களை 4 வாலிபர்கள் கிண்டல், கேலி செய்வதாகவும் வயதான 2 பெண்களை தாக்குவதாகவும் மீஞ்சூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் வந்தது. உடனே சப்-இன்ஸ்பெக்டர் பால கிருஷ்ணன் சம்பவ இடத்துக்கு சென்றார். போலீசாரை பார்த்ததும் 3 வாலிபர்கள் தப்பிஓடி விட்டனர். ஒருவரை மட்டும் சப்-இன்ஸ்பெக்டர் பால கிருஷ்ணன் பிடித்தார்.
குடி போதையில் இருந்த அந்த வாலிபர் சப்-இன்ஸ்பெக்டரை அசிங்கமாக பேசி கையால் அடித்து தாக்கி கொலை செய்துவிடுவதாக மிரட்டி ஓட முயன்றார். அவரை மடக்கி பிடித்து விசாரித்த போது அவர் சென்னையை சேர்ந்த தீபன் சக்கரவர்த்தி, மீஞ்சூர் அடுத்த காணியம்பாக்கத்தில் உள்ள கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருவதாக தெரியவந்தது. அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். #Tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்