என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சமூக வலைத்தளம்"
இதையடுத்து கடந்த ஏப்ரல் 21ம் தேதி, குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடர்பான தவறான செய்திகளும், வதந்திகளும் பரவாமல் தடுக்கும் வகையில் பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை அரசு முடக்கியது.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை இலங்கை அரசு இன்றுடன் நீக்கியது. இதேபோல் தாக்குதல்களை தொடர்ந்து ஒருவாரமாக நீடித்த இரவுநேர ஊரடங்கு உத்தரவு கடந்த ஏப்ரல் 28 அன்று நீக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. #Colomboblast #SocialMedia
சென்னை சி.பி.சி.ஐ.டி. தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் விசாரித்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பான தகவல்கள் தெரிந்தவர்கள் கோவை அவினாசி ரோட்டில் செயல்படும் சி.பி.சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தெரிவிக்கலாம்.
மேலும் இந்த வழக்கு தொடர்பான வீடியோ ஆதாரங்களோ, புகைப்படங்களோ வைத்திருப்பவர்களும் கோவை துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு நேரில் சென்று கொடுக்கலாம். தகவல் கொடுப்பவர்கள் அல்லது புகைப்படங்கள், வீடியோ ஆதாரங்கள் கொடுப்பவர்களின் பெயர், விவரம் ரகசியமாக வைக்கப்படும்.
இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதி பாதிக்கப்பட்டவர்களின் புகைப்படங்களையோ, வீடியோ ஆதாரங்களையோ சமூக வலைத்தளங்களில் வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் இந்த வழக்கு தொடர்பாக ஏதாவது தகவல் தெரிந்து கொள்ள வேண்டும் என்றாலோ அல்லது தகவல் தெரிவிக்க வேண்டும் என்றாலோ 94884 42993 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு பேசலாம். cb-c-i-d-c-b-e-c-ity@gm-a-il.com என்ற இணையதள முகவரிக்கும் தகவல்களை அனுப்பலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #PollachiAbuseCase #PollachiCase
ஈரோடு:
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட கலெக்டருமான கதிரவன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் ஆகியோர் இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த உடனேயே பொது இடங்கள் தனியார் இடங்களில் வைக்கப்பட்டுள்ள கட்சி கொடிகள் சின்னம் ஆகியவை அழிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
மேலும் ஈரோடு கலெக்டர் அலுவலகம், அனைத்து துறை அலுவலகங்களிலும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா படங்கள், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி படங்கள் அகற்றப்பட்டுவிட்டன.
நடத்தை விதிமுறைகளை கண்காணிக்க பறக்கும் படை குழுக்கள், நிலை கண்காணிப்பு குழுக்கள், வீடியோ கண்காணிப்பு குழுக்கள் வீடியோ பார்வை குழுக்கள், கணக்கு குழுக்கள் ஆகிய ஐந்து குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
24 மணி நேரமும் செயல்படக்கூடிய தேர்தல் கட்டுப்பாட்டு அறை ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கப்பட்டுள்ளன. பறக்கும் படையினர் தற்போது வாகன சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர். இதே போன்று வீடியோ குழுவினர் தங்கள் சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும் பொதுமக்கள் புகார்களை படத்துடன் தெரிவிக்க தனியாக வாட்ஸ் அப் உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் புகார் கூற விரும்பும் பொதுமக்கள் படத்துடன் புகார் கூறலாம். அதன் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இந்த நிலையில் சமூக வலை தளங்களான வாட்ஸ்- அப், பேஸ்புக் ட்விட்டர் இன்டோஸ்க்ராம் போன்ற சமூக வலைத்தளங்களை சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
தவறான தகவல்கள் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். உதாரணமாக ஒரு சிலர் எங்கள் கட்சிக்கு வாக்களித்தால் குறிப்பிட்ட தொகைக்கு ரீசார்ஜ் செய்து விடுவதாக விளம்பரம் செய்வார்கள்.
இவ்வாறு விளம்பரம் செய்வது தண்டனைக்குரியது. இதனை சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறார்கள். #tamilnews
யோகா குரு பாபா ராம்தேவ் பற்றி ‘காட்மேன் பிரம் டைகூன்’ (தொழில் அதிபராக இருந்து சாமியார் ஆனவர்) என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதப்பட்டுள்ளது.
அதில் பாபா ராம்தேவுக்கு எதிரான கருத்துக்கள் இடம் பெற்றுள்ளது. அவற்றை நீக்கும்வரையில், அந்த புத்தகத்தை வெளியிட டெல்லி ஐகோர்ட்டு கடந்த ஆண்டு தடை விதித்தது. ஆனால் நீக்கப்படாத பகுதிகள் சமூக வலைத்தளங்களில் வீடியோ இணைப்பாக (லிங்க்) வெளியானதாக தெரிகிறது.
இது தொடர்பாக டெல்லி ஐகோர்ட்டில் நீதிபதி பிரதிபா சிங் முன்னிலையில் பாபா ராம்தேவ் சார்பில் மூத்த வக்கீல் ராஜீவ் நய்யார் நேற்று முறையிட்டார்.
அதைத் தொடர்ந்து, ‘காட்மேன் பிரம் டைகூன்’ புத்தகத்தின் நீக்கப்படாத பகுதிகளை பார்க்க உதவும் வீடியோ இணைப்பை நீக்க வேண்டும் என்று பேஸ்புக், கூகுள், யுடியூப், டுவிட்டர் சமூக வலைத்தள நிறுவனங்களுக்கு நீதிபதி பிரதிபா சிங் உத்தரவிட்டார்.
திருவள்ளூரை அடுத்த நரசிங்கபுரத்தில் ஒரு அமைப்பு சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பெண்களுக்கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் சிலர் பேசி முழக்கமிட்டனர்.
சாதிகளை விமர்சிக்கும் வகையிலும் கருத்துக்களை தெரிவித்தனர். இது வாட்ஸ்- அப், மற்றும் சமூக வலைதளங்களில் வெளிவந்தது.
இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. திருவள்ளூர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் நரசிங்கபுரம் பகுதியை சேர்ந்த 4 பேர் இதை செய்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சாலமன், அன்பரசு, வினோத் ஆகியோரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். அன்பழகன் என்பவரை தேடி வருகின்றனர். #tamilnews
‘கூகுள்’ தேடல் இணையதளம், தமிழரான சுந்தர்பிச்சை தலைமையில் இயங்குகிறது. இந்த இணையதளத்தின் ஒரு அங்கம் ‘கூகுள் பிள்ஸ்’ சமூக வலைத்தளம். இது 2011-ம் ஆண்டு ஜூன் மாதம் 28-ந் தேதி தொடங்கப்பட்டது. ஆனால் ‘பேஸ் புக்’ சமூக வலைத்தளத்தின் வளர்ச்சியுடன் ஈடுகொடுக்க முடியாத நிலையில் இருந்து வந்தது.
இந்த நிலையில் தற்போது ‘கூகுள் பிளஸ்’ சமூக வலைத்தள உபயோகிப்பாளர்கள் 5 லட்சத்துக்கும் அதிகமானோரின் அந்தரங்க தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இது பற்றி அந்த சமூக வலைத்தள நிறுவனத்தின் துணைத்தலைவர் பென் ஸ்மித் கூறும்போது, “இந்த தகவல் திருட்டு பற்றி, இதை உருவாக்கியவர்களுக்கு தெரியும் என்பதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை. இதில் இருந்து திருடப்பட்ட தகவல்கள் தவறான வழியில் பயன்படுத்தப்பட்டுள்ளன என்று கூறுவதற்கும் எந்த ஆதாரமும் கிடையாது” என்று கூறினார். ஆனால் இந்த தகவல் திருட்டு பற்றி ‘தி வால் ஸ்ரிரீட் ஜர்னல்’ பத்திரிகை வெளியுலகுக்கு அம்பலப்படுத்தி விட்டது.
இதையடுத்து ‘கூகுள் பிளஸ்’ சமூக வலைத்தளம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் உடனடியாக மூடப்பட்டு விடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி பென் ஸ்மித் கூறுகையில், “உபயோகிப்பாளர்களின் பரிமாற்றத்துக்கு தகுந்த வாய்ப்பு அளிக்கப்பட்டு, 10 மாத காலத்தில் கூகுள் பிளஸ் மூடப்படும்” என்று குறிப்பிட்டார்.
‘’பேஸ் புக் சமூக வலைத்தள நிறுவனமும், தனது உபயோகிப்பாளர்களின் அந்தரங்க தகவல்கள் திருட்டு போனதால் சர்ச்சையில் சிக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. #GooglePlus #Google
அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடக்க உள்ளது. அதற்கு முன்னதாக ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், மிசோரம் ஆகிய 4 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தல்களில் சமூக வலைத்தளங்கள் முக்கிய பங்கு வகிக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்த நிலையில் தலைமை தேர்தல் கமிஷனர் ஓ.பி. ராவத், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தேர்தல் கமிஷனின் மூத்த துணை தேர்தல் கமிஷனர் உமேஷ் சின்கா தலைமையில் அமைக்கப்பட்டுள்ள மக்கள் பிரதிநிதித்துவ சட்ட திருத்தம் தொடர்பான குழுவினர், கூகுள், பேஸ்புக், டுவிட்டர் ஆகியவற்றின் உள்நாட்டு தலைமை அதிகாரிகள் கூட்டத்தை கூட்டிப்பேசினார்கள்.
அவர்களிடம், “தூய்மையான தேர்தலை உறுதி செய்வதற்கு ஏற்ற விதத்தில், போலி செய்திகளால் தாக்கம் ஏற்படுவதை தவிர்க்கவும், வாக்காளர்களை குறிவைத்து தகவல்கள் பரப்புவதை தடுக்கவும் உங்களால் என்ன நடவடிக்கை எடுக்க முடியும்?” என கேட்கப்பட்டது.
அப்போது அவர்கள் தேர்தல் தூய்மையாக நடைபெறுவதற்கு, தங்கள் தளங்கள் வழியாக தவறான தகவல்கள் பரவ அனுமதிக்க மாட்டோம் என வாக்குறுதி அளித்தனர். தேர்தலுக்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக தேர்தல் தொடர்பான எதையும் தங்கள் தளங்களில் அனுமதிக்க மாட்டோம் எனவும் அவர்கள் உறுதி தந்தனர்.
இது கர்நாடக சட்டசபை தேர்தலின்போது சோதித்துப் பார்க்கப்பட்டது. அடுத்து நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக 4 மாநில சட்டசபை தேர்தலில் சோதித்துப் பார்க்கப்படும்.
சமூக வலைத்தளங்கள் தேர்தல் நேரத்தில் தங்கள் தளங்களில் அரசியல்கட்சிகள் வெளியிடுகிற விளம்பரங்கள் பற்றிய தகவல்களை அவற்றின் கட்டண விவரத்துடன் தெரிவிக்க ஒப்புக்கொண்டுள்ளனர். இது வேட்பாளர்களின் தேர்தல் செலவு கணக்கிட உதவும்.
இவ்வாறு அவர் கூறினார். #SocialMedia #ElectionCommission #PollCampaign
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்