என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சல்மான் கான்"
- ராய்ச்சூர் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் நாராயண் என்பவரது நம்பர் என்று தெரிய வந்தது
- சல்மான் கானுக்கும் தனுக்கு தானேயும் இவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக போலீஸ் தெரிவித்துள்ளது.
பாலிவுட் நடிகர் சல்மான் கானிடம் ரூ. 5 கோடி கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததோடு மட்டுமல்லாமல் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் அவர் நடிக்கும் 'சிக்கந்தர்' படத்தில் பாடல் எழுதிய, 'மெயின் சிக்கந்தர் ஹூன்' பாடலின் பாடலாசிரியருக்கும் மிரட்டல் வந்தது. மேலும், கடந்த சில வாரங்களாக, மும்பை போக்குவரத்து காவல்துறையின் ஹெல்ப்லைனுக்கு பல மிரட்டல் செய்திகள் வந்துள்ளன.
அந்த நம்பரை டிரேஸ் அவுட் செய்த போலீசார் அது கர்நாடகாவில் உள்ள ராய்ச்சூர் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் நாராயண் என்பவரது நம்பர் என்று தெரிய வந்தது. ஆனால் அவரது போனில் இன்டர்நெட் வசதி இல்லை என்று தெரியவந்தது. அவரை விசாரித்ததில் மார்க்கெட்டில் வைத்து ஒருவருக்கு தனது போனை பயன்படுத்தக் கொடுத்தேன் என்று தெரிவித்தார். அவரது போனில் ஒடிபி ஒன்றும் கண்டறியப்பட்டது.
விசாரித்ததில் சோஹைல் பாஷா என்ற நபர் அந்த நபரின் போனை வாங்கி அதில் ஓடிபி நம்பர் பெற்று அந்த நம்பர் மூலம் தனது போனில் வாட்சப் செயலி பதிவிறக்கம் செய்து இந்த மிரட்டலை விடுத்ததாக கண்டறியப்பட்டது. டிவிஸ்ட் என்னவென்றால் இந்த சோஹைல் பாஷாதான் 'மெயின் சிக்கந்தர் ஹூன்' பாடலின் பாடலாசிரியர் என்றும் என்றும் தனது பாடல் பிரபலமடைய வேண்டும் என்று விரும்பி சல்மான் கானுக்கும் தனுக்கு தானேயும் இவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக போலீஸ் தெரிவித்துள்ளது.
லாரன்ஸ் பிஷ்ணோய் கும்பலிடம் இருந்த்து தொடர் மிரட்டல் வந்துகொண்டிருப்பதால் இதையும் அந்த கும்பலே விடுத்திருக்கும் என்று நம்பிவிடுவார்கள் என சோஹைல் நினைந்துள்ளார். ஆனால் தற்போது குட்டு வெளிப்பட்ட நிலையில் ராய்ச்சூரில் வைத்து அவரை கைது செய்த போலீஸ் மேற்கொண்டு விசாரணை நடந்த மும்பைக்கு அழைத்துச் சென்றது.
லாரன்ஸ் பிஷனோய் - சாலமன் கான் பகை
சல்மான் கான் கடந்த 1998 ஆம் ஆண்டு ராஜஸ்தானில் சினிமா ஷூட்டிங்கின்போது கரும்புள்ளி [blackbuck] மான்களை வேட்டையாடிய வழக்கில் சிக்கினார். பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான் பகுதிகளில் அதிகம் வாழும் பிஷ்னோய் சமூகத்தினர் பிளாக்பக் மான்களை புனித விலங்காக கருதுவதால் சல்மான் கான் அவற்றை வேட்டையாடியது அவர்களின் நம்பிக்கையை புண்படுத்துவதாக அமைந்தது.
இந்நிலையில் இதற்காக லாரான்ஸ் பிஷ்னோய் என்ற பிரபல ரவுடியின் கும்பல் சல்மான் கானுக்கு தொடர் கொலை மிரட்டல் விடுத்து வந்தது. அவரது வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு நடத்துவது உள்ளிட்ட செயல்களில் இறங்கிய அந்த கும்பல் சல்மானுக்கு நெருக்கமாக இருந்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் பாபா சித்திக்கை கடந்த அக்டோபர் மாதம் மும்பையில் வைத்து சுட்டுக்கொலை செய்தது.
மேலும் சல்மான் கானுக்கு உதவி செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கும் அதே கதிதான் என மிரட்டல் விடுத்தது.எனவே சல்மான் கானுக்கு Y கேட்டகிரி பாதுகாப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் கடந்த நவம்பர் 4 ஆம் தேதி சல்மான் கானுக்கு புதிய கொலை மிரட்டல் ஒன்று வாட்ஸ் அப் செயலி மூலம் வந்தது.
- போன் கால் மூலம் பேசிய அந்த மர்ம நபர் ரூ.50 லட்சம் கேட்டும் மிரட்டல் விடுத்திருந்தார்.
- கொலை மிரட்டல் விடுத்தவரைக் கைது செய்துவிட்டோம் என்று இன்று காலை போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் பிரபலங்களுக்குக் கொலை மிரட்டல்கள் அதிகரித்து வருகிறது. மும்பையில் சிவசேனா தலைவர் பாபா சித்திக் கொலைக்கு பின்னர் பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் வந்ததால் அவரது பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
படப்பிடிப்பிலும் உச்சக்கட்ட பாதுகாப்புடனே அவர் வளம் வருகிறார். இந்நிலையில் பாலிவுட் திரையுலகின் உச்ச நட்சத்திரம் ஷாருக் கானுக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொலை மிரட்டல் வந்தது. மேலும் போன் கால் மூலம் பேசிய அந்த மர்ம நபர் ரூ.50 லட்சம் கேட்டும் மிரட்டல் விடுத்திருந்தார்.
இது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மும்பை பந்த்ரா பகுதி போலீஸ் மிரட்டல் விடுத்தவரை வலை வீசி தேடி வந்தது. இந்நிலையில் ஷாருக் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்தவரைக் கைது செய்துவிட்டோம் என்று இன்று காலை போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் நகரில் வசித்து வந்த முகமது பைசான் கான் என்ற வழக்கறிஞர்தான் மிரட்டல் விடுத்ததாக அவரது வீட்டில் வைத்து போலீஸ் அவரை கைது செய்துள்ளது. மிரட்டலுக்கு பய்னபடுத்தப்பட்ட தனது செல்போன் கடந்த நவம்பர் 2 ஆம் தேதி அவர் போலீசில் புகார் அளித்திருந்ததும் தெரிய வந்துள்ளது.
- ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிக்கந்தர் படத்தில் சல்மான் கான் நடித்து வருகிறார்.
- சிக்கந்தர் படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ஒரு ஓட்டலில் நடைபெற்று வருகிறது.
பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் கேங்கை சேர்ந்தவர்கள் சமீபத்தில் அடுத்தடுத்து கொலை மிரட்டல் விடுத்தனர். இதனால் அவருடைய பாதுகாப்பு பலமடங்கு அதிகரித்துள்ளது.
ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான்- ராஷ்மிகா மந்தனா நடிக்கும் சிக்கந்தர் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த ஓட்டலில் சல்மானுக்கு 4 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிக்கந்தர் திரைப்பதில் இடம்பெற்றுள்ள 'மைன் சிக்கந்தர் ஹூன்' பாடலில் சல்மான் கான் மற்றும் கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் தொடர்பான வரிகள் இடம்பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், சிக்கந்தர் படத்தின் 'மைன் சிக்கந்தர் ஹூன்' பாடலை எழுதிய பாடலாசிரியருக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் கொலை மிரட்டல் விடுத்துள்ளது.
இந்தப் பாடலை எழுதியவர் யாராக இருந்தாலும், அவரை உயிருடன் விடமாட்டோம். இந்தப் பாடலை எழுதியவரின் வாழ்க்கையை அடுத்த ஒரு மாதத்தில் முடித்துவிடுவோம் என்று மும்பை போலீசாருக்கு மிரட்டல் வந்துள்ளது.
இந்த கொலை மிரட்டல் தொடர்பான மெசேஜ் மும்பை போக்குவரத்து போலீசாரின் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பப்பட்டது.
அந்த கொலை மிரட்டல் மெசேஜில், சல்மான் கானுக்கு தைரியம் இருந்தால், அந்த பாடலாசிரியரை காப்பாற்ற வேண்டும் என்று சல்மான் கானுக்கு நேரடியாக சவால் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த கொலை மிரட்டல் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஐதராபாத் மற்றும் மும்பை போலீஸ் ஏற்கனவே பாதுகாப்பு வழங்கி வருகிறது.
- தற்போது முன்னாள் துணை ராணுவ வீரர்களை பாதுகாப்பிற்காக அமர்த்தியுள்ளார்.
பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு கேங்ஸ்டார் லாரன்ஸ் பிஷ்னோய் கேங்கை சேர்ந்தவர்கள் சமீபத்தில் அடுத்தடுத்து கொலை மிரட்டல் விடுத்தனர். இதனால் அவருடைய பாதுகாப்பு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் சல்மான் கான்- ராஷ்மிகா மந்தனா நடிக்கும் சிக்கந்தர் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த ஓட்டலில் சல்மானுக்கு 4 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சுமார் ஒரு மாதமாக தொடர்ந்து நடைபெறும் எனக் கூறப்படுகிறது. ஐதராபாத்தில் உள் பாலக்னுமா பேலஸ் ஓட்டலின் ஒரு பகுதியில் சூட்டிற்கு நடைபெற்று வருகிறது. இருந்த போதிலும் ஓட்டல் முழுவதும் பயங்கர பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் ஓட்டல் கோட்டையாக மாறியுள்ளது.
இந்த ஓட்டலில் விருந்தினர்கள் தங்குதவற்கு ரூம்கள் புக் செய்யலாம். ஆனால், ஓட்டலுக்குள் வரும்போது பயங்கரமான சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். அதேபோல் ஓட்டல் ஸ்டாஃப் உள்ளிட்டோர் பயங்கர சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள்.
அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட பாதுகாப்பை தாண்டி மேலும் இரண்டு அடுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய தனியார் பாதுகாப்பை அமைப்பை சல்மான் அணி வாடக்கைக்கு அமர்த்தியுள்ளார். தற்போது சல்மான் கான் எப்போதும் 50 முதல் 70 பாதுகாப்பு அதிகாரிகள் பாதுகாப்புடன் இருந்து வருகிறார்.
சல்மான் கானுக்கு 4 அடுக்கு பாதுக்காப்பு சிஸ்டம் உள்ளது. முன்னாள் துணைராணுவ வீரர்கள் வாடகைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். ஏற்கனவே நீண்ட காலமாக சல்மான் கானுக்கு பாதுகாப்பு வழங்கும் அணி உடன் உள்ளது. மேலும் ஐதராபாத் போலீஸ் மற்றம் மும்பை போலீசார் பாதுகாப்பு உள்ளது.
ஐதராபாத்தில் ராஷ்மிகா மந்தனாவுடன் இணைந்து சல்மான் கான் நடனமாடும் காட்சிகள் படமாக்கப்படகின்றன.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சல்மான்கானுக்கு அடிக்கடி கொலை மிரட்டல் வந்த வண்ணம் உள்ளன.
- விசாரணையில், மிரட்டல் குறுந்தகவல் கர்நாடக மாநிலத்தில் இருந்து வந்தது தெரியவந்தது.
மும்பை:
மும்பை பாந்திராவில் உள்ள நடிகர் சல்மான்கான் வீட்டின் மீது பஞ்சாப் தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை சேர்ந்தவர்கள் துப்பாக்கியால் சுட்டு பரபரப்பை ஏற்படுத்தினர். கடந்த மாதம் சல்மான்கானுக்கு நெருக்கமானவராக கருதப்படும் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் பாபா சித்திக் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவங்களை தொடர்ந்து நடிகர் சல்மான்கான் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அவருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
இருப்பினும் அவருக்கு அடிக்கடி கொலை மிரட்டல் வந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் அவரிடம் ரூ.5 கோடி கேட்டு கடந்த திங்கட்கிழமை நள்ளிரவு மும்பை போக்குவரத்து போலீஸ் உதவி எண்ணுக்கு குறுந்தகவல் வந்தது. அதில், "சல்மான்கான் உயிருடன் இருக்க வேண்டுமென்றால் அவர் எங்களது பிஷ்னோய் சமுதாய கோவிலுக்கு சென்று பொதுமன்னிப்பு கேட்க வேண்டும், இல்லாவிட்டால் ரூ.5 கோடி தரவேண்டும். இதை செய்ய தவறினால், நாங்கள் அவரை கொலை செய்வோம்" என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதுபற்றி மும்பை ஒர்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், மிரட்டல் குறுந்தகவல் கர்நாடக மாநிலத்தில் இருந்து வந்தது தெரியவந்தது. இது தொடர்பாக கர்நாடக மாநிலம் ஹாவேரிக்கு விரைந்து சென்ற தனிப்படை போலீசார் அங்கு வசித்து வந்த ஜல்ராம் பிஷ்னோய்(வயது35) என்பவரை பிடித்து விசாரித்தனர். அவர் தான் மிரட்டல் விடுத்தது உறுதியானது.
இதைத் தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் உள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி மும்பை அழைத்து வரும் நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர். ஜல்ராம் பிஷ்னோயின் சொந்த ஊர் ராஜஸ்தான் மாநிலம் என்று தெரியவந்தது. முழுமையான விசாரணைக்கு பிறகு மிரட்டல் பின்னணி தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
- சல்மான் கானுக்கு மிகவும் நெருக்கமானவரும், மகாராஷ்டிர முன்னாள் மந்திரியுமான பாபா சித்திக் சுட்டுக் கொல்லப்பட்டார்.
- சல்மான்கானின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தி நடிகர் சல்மான் கானுக்கு பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் ஏற்கனவே பல முறை கொலை மிரட்டல் விடுத்து இருந்தது.
இந்த கும்பல்தான் அவரை கொல்லும் நோக்கில் அவரது வீட்டில் துப்பாக்கி சூடு நடத்தி இருந்தது.
இதற்கிடையே சல்மான் கானுக்கு மிகவும் நெருக்கமானவரும், மகாராஷ்டிர முன்னாள் மந்திரியுமான பாபா சித்திக் சுட்டுக் கொல்லப்பட்டார். லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல்தான் இதற்கு பொறுப்பேற்றுக்கொண்டது. அதை தொடர்ந்து சல்மான்கானிடம் ரூ.2 கோடி கேட்டு சமீபத்தில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. இது தொடர்பாக பாந்த்ராவை சேர்ந்த ஆசம் முகமது முஸ்தான் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் நடிகர் சல்மான்கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
சல்மான்கான் உயிருடன் இருக்க விரும்பினால் அவர் எங்கள் பிஷ்னோய் சமூகத்தினர் கோவிலுக்கு சென்று பொது மன்னிப்பு கேட்க வேண்டும். அல்லது ரூ.5 கோடி கொடுக்க வேண்டும். அப்படி செய்யாவிட்டால் அவரை கொன்று விடுவோம் என்று மிரட்டல் விடுக்கப்பட்டது.
மும்பை போக்குவரத்து போலீசாரின் ஹெல்ப்லைனில் நள்ளிரவில் கொலை மிரட்டல் அழைப்பு வந்ததாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மிரட்டல் விடுத்தவன் பாபா சித்திக் கொலையில் தொடர்புடைய பிஷ்னோயின் சகோதரர் என்று கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் சல்மான்கானின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
கொலை முயற்சி, மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளில் ஜெயிலில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோய்க்கு இந்த கொலை மிரட்டலை தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- குஜராத் சபர்மதி சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோய் உள்ளே இருந்தவாறே குற்றச்செயலைகளை அரங்கேற்றி வருகிறார்.
- எங்கள் கட்சி மகாராஷ்டிராவில் உள்ள உ.பி. பஞ்சாப், அரியானா, ஜார்கண்ட், உத்தரகாண்ட் மக்களுக்காக போராடும்.
மகாராஷ்டிராவில் அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் முக்கிய தலைவர் பாபா சித்திக் கடந்த அக்டோபர் 12 அன்று சுட்டுக் கொல்லப்பட்டார். இவரது கொலைக்கு லாரன்ஸ் பிஷ்னோய் ரவுடி கும்பல் பொறுப்பேற்றுள்ளது.
பாலிவுட் நடிகர் சல்மான் கானை கொலை செய்யத் துடிக்கும் இந்த கும்பல் அவருக்கு உதவும் யாராக இருந்தாலும் பாபா சித்திக் நிலைதான் என்று எச்சரிக்கை விடுத்தது. எல்லை தாண்டிய போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது குஜராத் சபர்மதி சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோய் உள்ளே இருந்தவாறே குற்றச்செயலைகளை அரங்கேற்றி வருகிறார்.
அவரை என்கவுண்டர் செய்யும் போலீஸ்காரருக்கு ரூ.1.11 கோடி பரிசு தருவதாக கர்னி சேனா அறிவித்தது. இந்நிலையில் மகாராஷ்டிராவில் புதிதாக உதயமாகியுள்ள உத்தர்பாரதிய விகாஸ் சேனா [யுபிவிஎஸ்] கட்சி லாரன்ஸ் பிஷ்னோய் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளது.
இதுதொடர்பாக பேசிய அந்த அமைப்பின் தலைவர் சுக்லா, நாங்கள் உங்களில் [லாரன்ஸ் பிஷ்னோய்] மாவீரர் பகத் சிங்கை பார்க்கிறோம்.எங்கள் கட்சி மகாராஷ்டிராவில் உள்ள உ.பி. பஞ்சாப், அரியானா, ஜார்கண்ட், உத்தரகாண்ட் மக்களின் நல்வாழ்வுக்காகப் போராடும் என்றும் லாரன்ஸ் பிஸ்னோய் தேர்தலில் போட்டியிட தங்கள் கட்சி சார்பில் சீட் தருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.
வரும் நவம்பர் 20 ஆம் தேதி மகாராஷ்டிர தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே தங்கள் மகனுக்கு என்றும் பக்கபலமாக இருப்போம் என்று பஞ்சாபில் உள்ள லாரன்ஸ் பிஷ்னோய் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
- போதைப்பொருள் கடத்திய வழக்கில் கைதாகி லாரன்ஸ் பிஷ்னோய் குஜராத் சபர்மதி சிறையில் உள்ளார்
- சல்மானுக்கு உதவி செய்தால் பாபா சித்திக் கதிதான் நேரும் என்றும் மிரட்டல் விடுத்தது.
மகாராஷ்டிர அரசியல் தலைவர் பாபா சித்திக் கொலை வழக்கில் தொடர்புடைய கும்பலின் தலைவன் லாரன்ஸ் பிஸ்னோய் தலைக்கு ரூ.1.11 கோடி பரிசு அறிவித்துள்ளது சத்ரிய கர்னி சேனா என்ற அமைப்பு.
வெளிநாட்டுக்கு போதைப்பொருள் கடத்திய வழக்கில் கைதாகி தற்போது குஜராத் சபர்மதி சிறையில் லாரன்ஸ் பிஷ்னோய் உள்ள நிலையில் கர்னி சேனாவின் அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த அக்டோபர் 14 ஆம் தேதி மகாராஷ்டிர முன்னாள் அமைச்சரும் அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் தலைவருமான பாபா சித்திக் பாபா சித்திக் அவரது எம்எல்ஏ மகனின் அலுவலகத்துக்கு வெளியே வந்துகொண்டிருந்தபோது மூன்று பேர் துப்பாக்கியால் சுட்டனர். இதில் படுகாயமடைந்த அவர், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த வழக்கில், கொலையாளிகள் என சந்தேகிக்கப்படும் அரியானாவைச் சேர்ந்த குர்மைல் பல்ஜீத் சிங், உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த தர்மராஜ் ராஜேஷ் காஷ்யப் ஆகியோரை போலீசார்,கைது செய்தனர். இதற்கிடையே பாபா சித்திக் கொலைக்கு முழு பொறுப்பேற்பதாக லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் முகநூல் பக்கத்தில் பதிவிட்டது. மேலும் பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்த அந்த கும்பல், சல்மானுக்கு உதவி செய்தால் பாபா சித்திக் கதிதான் நேரும் என்றும் மிரட்டல் விடுத்தது.
இந்த நிலையில்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள லாரன்ஸ் பிஷ்னோயை என்கவுன்டர் செய்யும் போலீஸ் அதிகாரிக்கு வெகுமதி அளிப்பதாக சத்ரிய கர்னி சேனா அமைப்பு அறிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய அவ்வமைப்பின் தேசியத் தலைவர் ராஜ் செகாவத், "லாரன்ஸ் பிஷ்னோயை கொல்லும் எந்த ஒரு போலீஸ் அதிகாரிக்கும் ரூ.1,11,11,111 வெகுமதியாக வழங்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஜெய்ப்பூரில் ராஷ்ட்ரிய ராஜ்புத் கர்னிசேனா அமைப்பின் தலைவர் சுக்தேவ் சிங் கொகாமடி கடந்த 2023ம் ஆண்டு டிசம்பரில் கொல்லப்பட்டார். அவரது படுகொலைக்கு பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
- பாபா சித்திக் கடந்த 12 ஆம் தேதி துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார்.
- லாரன்ஸ் பிஷ்னோய் குழு சல்மான் கானுக்கு மிரட்டல் விடுத்து வருகிறது.
நடிகர் சல்மான் கானின் நெருங்கிய நண்பரும், மகாராஷ்டிரா மாநில முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கடந்த 12 ஆம் தேதி துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். நாடு முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கி சூடு சம்பவத்தைத் தொடர்ந்து நடிகர் சல்மான் கானுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது.
லாரன்ஸ் பிஷ்னோய் குழுவால் முன்னாள் அமைச்சர் படுகொலை செய்யப்பட்டதே சல்மான் கானுக்கு விடுக்கப்பட்ட மற்றொரு எச்சரிக்கை தான் என்று கூறப்பட்டது. கடந்த 1998 ஆம் ஆண்டு சல்மான் கான் கருப்பு மானை வேட்டையாடியதாக குற்றம்சாட்டப்பட்டது.
இந்த வகை கருப்பு மான் ராஜஸ்தான், டெல்லி, அரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் வாழும் பிஷ்னோய் சமூக மக்களால் வணங்கப்படுகிறது. கருப்பு மானை வேட்டையாடிய விவகாரத்தில் சல்மான் கான் ஜோத்பூர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டதில் இருந்து லாரன்ஸ் பிஷ்னோய் குழு அவருக்கு மிரட்டல் விடுத்து வருகிறது.
இந்த வரிசையில் தான் நடிகர் சல்மான் கானுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் குழு கொலை மிரட்டல் விடுத்துள்ளது. இது தொடர்பாக மும்பை போக்குவரத்து காவல்துறையின் வாட்ஸ்அப் எண்ணுக்கு நடிகர் சல்மான் கானிடம் ரூ.5 கோடி கேட்டு மிரட்டல் செய்தி வந்துள்ளது.
அந்த செய்தியில், "இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள், சல்மான் கான் உயிருடன் இருக்க விரும்பினால், லாரன்ஸ் பிஷ்னோய் உடனான பகையை முடிவுக்கு கொண்டு வர விரும்பினால், அவர் ரூ. 5 கோடி கொடுக்க வேண்டும். பணம் கொடுக்கவில்லை என்றால், சல்மான் கானின் நிலை இந்த விவகாரத்தில் பாபா சித்திக்கை விட மோசமாக இருக்கும்" தெரிவிக்கப்பட்டிருந்தது.
சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு இருப்பது தொடர்பாக மும்பை காவல் துறையினர் விசாரணை செய்து வந்தனர்.
இந்நிலையில், மும்பை போக்குவரத்து காவல்துறைக்கு இன்று அதே எண்ணில் இருந்து இன்னொரு வாட்ஸ்அப் மெசேஜ் வந்துள்ளது. அதில், சல்மான் கானுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று செய்தி அனுப்பியதன் மூலம் நான் தவறு செய்துவிட்டேன். என்னை மன்னித்து விடுங்கள்" தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தி ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து அனுப்பட்டுள்ளதாகவும் சம்பந்தப்பட்ட நபரை கண்டுபிடிக்க மும்பையிலிருந்து ஒரு போலீஸ் குழு ஜார்கண்ட் மாநிலத்திற்கு விரைந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
- 1998 இல் சல்மான் கான் கரும்புலி வகை மான்களை வேட்டையாடிய வழக்கில் சிக்கினார்.
- பாபா சித்திக் கொலை செய்யப்பட்ட பின்னர் சல்மான் கானின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர முன்னாள் அமைச்சரும் என்சிபி முக்கியப் புள்ளியான பாபா சித்திக் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றுள்ளது. பாலிவுட் நடிகர் சல்மான் கானை கொலை செய்ய தொடர்ந்து முயற்சித்து வரும் இந்த கும்பல் சல்மானுக்கு உதவி செய்தால் பாபா சித்திக்கின் கதிதான் ஏற்படும் என்று பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 1998 இல் பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு முதன்முதலில் லாரன்ஸ் பிஷ்னோய் கொலை மிரட்டல் விடுத்தார். அதன் மூலமே அவர் முதன்முதலில் பரவலாக அறியப்பட்டார். 1998 இல் சல்மான் கான் கரும்புலி வகை மான்களை வேட்டையாடிய வழக்கில் சிக்கியதை அடுத்து இந்த கொலை மிரட்டல் வந்தது. இந்து மதத்தின் பசு புனித விளங்காக உள்ளதுபோல் லாரன்ஸின் பிஷ்னோய் சமூகத்தில் கரும்புலி மான் என்பது புனித விலங்காகும்.
சல்மான் கான் அதை வேட்டையாடினர் என்பதனால் லாரன்ஸ் அவருடன் பகையை வளர்த்துக்கொண்டார். அதுமுதல் பல்வேறு சமயங்களில் சல்மான் கானுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் குறிவைத்து வருகிறது.சமீபத்தில் கடந்த ஏப்ரல் மாதம் சல்மான் கான் வீட்டின்மீது துப்பாக்கிச்சூடு நடந்தது. இந்நிலையில் தற்போது பாபா சித்திக் கொலை செய்யப்பட்ட பின்னர் சல்மான் கானின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சல்மான் கான் பிஷ்னோய் சமூகத்தினரின் புனித விலங்கை சுட்டதற்காக அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக மாநிலங்களவை எம்.பி ஹர்நாத் சிங் யாதவ் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் கரும்புலி வகை மான்களை சல்மான் கான் வேட்டையாடியதாக கூறப்படும் விவகாரம் குறித்து அவரது தந்தை சலீம் கான் மனம் திறந்து பேசியுள்ளார்.
தனியார் செய்தி நிறுவனத்திடம் பேசிய சலீம் கான், "சல்மான் கானுக்கு விலங்குகள் என்றால் மிகவும் பிடிக்கும். அவர் ஒரு கரப்பான் பூச்சியை கூட கொன்றதில்லை. சல்மான் கான் ஒரு நாயை செல்லமாக வளர்த்து வந்தார். அந்த நாய் உடல்நலக் குறைவால் இறந்தபோது சல்மான் கான் கணீர் விட்டு அழுதார். கரும்புலி வகை மான்களை யார் கொன்றது என்று சல்மானிடம் நான் கேட்டேன். நான் அதை செய்யவில்லை என்று அவர் என்னிடம் கூறினார். என்னிடம் அவர் பொய் சொல்லமாட்டார். சல்மான் கான் விளையாட்டுக்காக விலங்குகளை கொள்ளும் நபர் கிடையாது.எந்த தவறும் செய்யாத சல்மான் கான் எதற்காக பிஷ்னோய் சமூகத்தினரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று பேசியுள்ளார்.
- சல்மான் கான் கருப்பு மானை வேட்டையாடியதாக குற்றம்சாட்டப்பட்டது.
- லாரன்ஸ் பிஷ்னோய் குழு சல்மான் கானுக்கு மிரட்டல் விடுத்து வருகிறது.
நடிகர் சல்மான் கானின் நெருங்கிய நண்பரும், மகாராஷ்டிரா மாநில முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கடந்த 12 ஆம் தேதி துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். நாடு முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கி சூடு சம்பவத்தைத் தொடர்ந்து நடிகர் சல்மான் கானுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது.
லாரன்ஸ் பிஷ்னோய் குழுவால் முன்னாள் அமைச்சர் படுகொலை செய்யப்பட்டதே சல்மான் கானுக்கு விடுக்கப்பட்ட மற்றொரு எச்சரிக்கை தான் என்று கூறப்பட்டது. கடந்த 1998 ஆம் ஆண்டு சல்மான் கான் கருப்பு மானை வேட்டையாடியதாக குற்றம்சாட்டப்பட்டது.
இந்த வகை கருப்பு மான் ராஜஸ்தான், டெல்லி, அரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் வாழும் பிஷ்னோய் சமூக மக்களால் வணங்கப்படுகிறது. கருப்பு மானை வேட்டையாடிய விவகாரத்தில் சல்மான் கான் ஜோத்பூர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டதில் இருந்து லாரன்ஸ் பிஷ்னோய் குழு அவருக்கு மிரட்டல் விடுத்து வருகிறது.
இந்த வரிசையில் தான் நடிகர் சல்மான் கானுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் குழு கொலை மிரட்டல் விடுத்துள்ளது. இது தொடர்பாக மும்பை போக்குவரத்து காவல்துறையின் வாட்ஸ்அப் எண்ணுக்கு நடிகர் சல்மான் கானிடம் ரூ.5 கோடி கேட்டு மிரட்டல் செய்தி வந்துள்ளது.
அந்த செய்தியில், "இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள், சல்மான் கான் உயிருடன் இருக்க விரும்பினால், லாரன்ஸ் பிஷ்னோய் உடனான பகையை முடிவுக்கு கொண்டு வர விரும்பினால், அவர் ரூ. 5 கோடி கொடுக்க வேண்டும். பணம் கொடுக்கவில்லை என்றால், சல்மான் கானின் நிலை இந்த விவகாரத்தில் பாபா சித்திக்கை விட மோசமாக இருக்கும்.
சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு இருப்பது தொடர்பாக மும்பை காவல் துறையினர் விசாரணை தொடங்கியுள்ளனர்.
- சிறையில் உள்ள லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் தான் இந்த ரூ.25 லட்ச கான்ட்ராக்ட்டை எடுத்துள்ளது.
- சுகா பாகிஸ்தானில் இருந்து சட்டவிரோதமாக ஏகே 47 ஏகே 92 ரக துப்பாக்கிகளை வாங்கியுள்ளார்
பாலிவுட் நடிகர் சல்மான் கானை கொலை செய்ய முயன்ற வழக்கில் தேடப்பட்டு வந்த சுகா என்ற நபரை நவி மும்பை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் பான்வேல்லில் உள்ள நடிகர் சல்மான் கானின் பண்ணை வீட்டில் வைத்து அவரை கொலை செய்ய 25 லட்சம் பணம் கொடுப்பதாக ஒப்பந்தம் பேசப்பட்டுள்ளது என்று நவிமும்பை போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குற்றப்பத்திரிகையில் 5 பேரின் பெயர் இடம்பெற்றுள்ளது. சிறையில் உள்ள லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் தான் இந்த ரூ.25 லட்ச கான்ட்ராக்ட்டை எடுத்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகா பாகிஸ்தானில் இருந்து சட்டவிரோதமாக ஏகே 47 ஏகே 92 ரக துப்பாக்கிகளை வாங்கியுள்ளார் என்றும் சல்மானை கொலை செய்ய குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள 5 பேரை நியமித்ததாக போலீசார் தெரிவித்தனர்.
சல்மானை கொலை செய்த பின்பு கொலைகாரர்கள் கன்னியாகுமரியில் ஒன்றுகூடி இலங்கைக்கு தப்பி செல்ல திட்டமிட்டிருந்ததாக அதிர்ச்சி தகவல்கள் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் நேஹ்ரா கும்பல்கள், சல்மான் கானை வேவு பார்க்கும் நோக்கத்துடன் அவரின் பந்த்ரா இல்லம், பான்வேல் பண்ணை வீடு மற்றும் படப்பிடிப்பு தளங்களில் அவரின் நடமாட்டத்தை கண்காணிக்க 60 - 70 பேரை களமிறக்கியுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சல்மான் கானை கொலை செய்ய சதி திட்டம் தீட்டப்பட்டிருப்பது குறித்த தகவல் வெளியானதைத் தொடர்ந்து ஏப்ரல் 24ம் தேதி பான்வேல் காவல்நிலையத்தில் பலர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்