என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சுதந்திர தினவிழா"
நாடு முழுவதும் சுதந்திர தின விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் சுதந்திர தினவிழா நடந்தது. விழாவில் கலந்து கொள்ள மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி காலை 9.13 மணி அளவில் மாவட்ட விளையாட்டு அரங்க மைதானத்துக்கு வந்தார். அவரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா, மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன் ஆகியோர் வரவேற்றனர். தொடர்ந்து மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி 9.15 மணிக்கு தேசிய கொடியை ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். திறந்த ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பை பார்வையிட்டார்.
பின்னர் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். போலீஸ் துறையில் சிறப்பாக பணியாற்றிய கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பொன்ராமு, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சின்ராம், ஜெபராஜ், பிரகாஷ் உள்பட போலீசார் 36 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களும், பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு நற்சான்றிதழ்களும் வழங்கினார். தொடர்ந்து கலெக்டர் சந்தீப் நந்தூரி, புறாக்கள், பலூன்களை பறக்கவிட்டார்.
விழாவில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் ரூ.2 லட்சத்து 35 ஆயிரத்து 160, கூட்டுறவுத்துறை மூலம் ரூ.8½ லட்சம், வேளாண்மைத்துறை மூலம் ரூ.4 லட்சத்து 41 ஆயிரத்து 250, தாட்கோ மூலம் ரூ.24 லட்சத்து 96 ஆயிரத்து 682, மாவட்ட தொழில் மையம் மூலம் ரூ.12 லட்சத்து 74 ஆயிரம், மகளிர் திட்டம் மூலம் ரூ.9 லட்சத்து 12 ஆயிரத்து 833 உள்பட மொத்தம் 10 துறைகள் மூலம் 59 பயனாளிகளுக்கு ரூ.64 லட்சத்து 72 ஆயிரத்து 750-க்கான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
விழாவில் எட்டயபுரம் மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, தூத்துக்குடி விக்டோரியா மகளிர் மேல்நிலைப்பள்ளி, தூத்துக்குடி நல்லாயன் செவித்திறன் குறைவுடையோர் பள்ளி, கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, தூத்துக்குடி காரப்பேட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருச்செந்தூர் காஞ்சி ஸ்ரீசங்கரா அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய 6 பள்ளிக்கூட மாணவ-மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.
விழாவில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ், உதவி கலெக்டர் பிரசாந்த், உதவி கலெக்டர் (பயிற்சி) அனு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தியாகராஜன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மனோகரன், கடலோர காவல்படை கமாண்டர் வெங்கடேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
சென்னை பெரு நகரப் பகுதிகளில் நடைபெறும் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்கள் விவரம் வருமாறு:-
1. தியாகராஜசுவாமி கோயில், திருவொற்றியூர்-சபாநாயகர் தனபால்.
2. சக்தி விநாயகர் கோயில், பி.டி.ராஜன் சாலை, கே.கே.நகர்- முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
3. மருந்தீசுவரர் கோயில், திருவான்மியூர்-துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம்.
4. பார்த்தசாரதி சுவாமி கோயில், திருவல்லிக்கேணி- திண்டுக்கல் சீனிவாசன்.
5. அனந்தபத்மநாப சுவாமி கோயில், அடையாறு- செங்கோட்டையன்.
6. முண்டகக்கண்ணியம் மன் கோயில், மயிலாப்பூர்- செல்லூர் ராஜூ.
7. காளிகாம்பாள் உடனுறை கமடேஸ்வரர் கோயில், தம்புசெட்டித் தெரு-தங்கமணி.
8. கபாலீசுவரர் கோயில், மயிலாப்பூர்-எஸ்.பி.வேலு மணி.
9. சுந்தரேஸ்வரர் கோயில், ராயப்பேட்டை- ஜெயக்குமார்.
10. பாம்பன் சுவாமி கோயில், திருவான்மியூர்- சி.வி.சண்முகம்.
11. ஏகாம்பரேசுவரர் கோயில், தங்கசாலைத் தெரு-அன்பழகன்.
12. தண்டீஸ்வரர் கோயில், வேளச்சேரி-சரோஜா.
13. மாதவப் பெருமாள் கோயில் மயிலாப்பூர்- எம்.சி.சம்பத்.
14. சௌமிய தாமோதரப் பெருமாள் கோயில், வில்லி வாக்கம்- கருப்பண்ணன்.
15. பாலசுப்பிரமணிய சுவாமி கோயில், எல்டாம்ஸ் ரோடு, தேனாம்பேட்டை- காமராஜ்.
16. மகாலட்சுமி கோயில், பெசன்ட் நகர்-ஓ.எஸ்.மணியன்.
17. பாதாளபொன்னியம்மன் கோயில், கீழ்ப்பாக்கம்- ராதாகிருஷ்ணன்.
18. முத்துக்குமாரசுவாமி கோயில், பூங்கா நகர்- விஜயபாஸ்கர்.
19. ஆதிபுரீஸ்வரர் மற்றும் ஆதிகேசவப் பெருமாள் கோயில், சிந்தாதரிப் பேட்டை- துரைக்கண்ணு.
20. கச்சாலீசுவரர் கோயில், அரண்மனைக்காரன் தெரு, சென்னை- கடம்பூர் ராஜூ .
21. வடபழநி ஆண்டவர் கோயில், வடபழநி- ஆர்.பி.உதயகுமார் .
22. அகத்தீஸ்வரர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில், நுங்கம்பாக்கம்-நடராஜன்.
23. சென்னமல்லீஸ்வரர் மற்றும் சென்னகேசவப் பெருமாள் கோயில், தேவ ராஜ முதலி தெரு- வீரமணி.
25. தேவி கருமாரியம்மன் கோயில், திருவேற்காடு- ராஜேந்திர பாலாஜி.
26. செல்வ விநாயகர் மற்றும் கோதண்டராமர் கோயில் மேற்கு தாம்பரம்- பெஞ்சமின்.
27. அறுபடை முருகன் கோயில், பெசன்ட் நகர்- மணிகண்டன்.
28. காரணீஸ்வரர் கோயில், சைதாப்பேட்டை- ராஜலட்சுமி.
29. திருவல்லீஸ்வரர் கோயில் பாடி-பாண்டிய ராஜன்.
30. கங்காதீஸ்வரர் கோயில், புரசைவாக்கம்-பாஸ்கரன்.
31. காமாட்சி அம்மன் கோயில், மாங்காடு- சேவூர் ராமசந்திரன்.
32. அருணாச்சலேசுவரர் கோயில், பள்ளியப்பன் தெரு-எஸ்.வளர்மதி.
33. ஏகாம்பரேஸ்வரர் கோயில், அமைந்தகரை- பாலகிருஷ்ணா ரெட்டி.
34. பரசுராம லிங்கேஸ்வரர் கோயில், அயன்புரம்- ஜெயராமன்.
35. திருவட்டீஸ்வரர் கோயில் திருவட்டீஸ்வரன் பேட்டை-அரசு தலைமை கொறடா ராஜேந்திரன். #Independenceday
ஊட்டி:
நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சுதந்திர தின விழா நடைபெறுவதை முன்னிட்டு அனைத்துத்துறை அலுவலர்களுடனான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அனைத்துத் துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்தும், குடிநீர்வசதி, கலைநிகழ்ச்சிகள் நடத்துவது மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குவது தொடர்பாகவும், அனைத்துத்துறை அரசு அலுவலர்களுக்கு ஆலோசனைகளும் அறிவுரைகளும் வழங்கி விழா சிறப்பாக நடைபெற அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார்.
மேலும் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் மருத்துவக்குழு மற்றும் தீயணைப்புத்துறையினர் தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ், மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கரூர் தாந்தோன்றிமலை பகுதியிலுள்ள மாவட்ட விளையாட்டரங்கில் வருகிற 15-ந் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இது தொடர்பாக முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமையில் நடந்தது. இதில் கலெக்டர் பேசியதாவது:-
இந்திய திருநாட்டின் சுதந்திர தினத்தை கொண்டாடும் அதே வேளையில், சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகளுக்கு கவுரவம் செய்யும் வகையில் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து, சிறப்புசெய்யும் நடவடிக்கைகளை மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மேற்கொள்ள வேண்டும்.
விழா நடைபெறும் மைதானத்தை தூய்மைப்படுத்திடவும், விழா நாளில் வருகை தரும் அனைவருக்கும் போதிய குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகளை மேற்கொள்ளவும் கரூர் நகராட்சி ஆணையர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அணிவகுப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகளில் பங்குபெறும் மாணவ- மாணவிகளுக்கு உரிய சிற்றுண்டிகள் வழங்கப்பட வேண்டும். விழா நடைபெறும் நாளில் தீ தடுப்பு நடவடிக்கையாக தீயணைப்பு வாகனத்தை மைதானத்திற்கு அருகில் தயார்நிலையில் வைத்திடவும், உரிய மருந்து பொருட்களுடன் நடமாடும் மருத்துவ குழுக்களும், 108 வாகனமும் இருக்கும் வகையில் சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
விழா நடைபெறும் மைதானத்திற்கு பொதுமக்கள், பள்ளி மாணவ- மாணவிகள் வந்து செல்ல ஏதுவாக கரூர் பஸ் நிலையத்திலிருந்து மாவட்ட விளையாட்டு மைதானம் வரை பஸ்களை கூடுதலாக இயக்கிட போக்குவரத்து துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீஸ்துறையினர் ஆங்காங்கே ரோந்து பணியில் ஈடுபட்டு பாதுகாப்பினையும் பலப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
சுதந்திர தினவிழாவை பெரம்பலூரில் சிறப்பாக கொண்டாடுவது குறித்து அனைத்துதுறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமையில் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடந்தது.
கூட்டத்தில் கலெக்டர் சாந்தா பேசியதாவது:-
வருகிற 15-ந்தேதி அன்று சுதந்திர தினவிழா நடைபெறும். கூட்டத்தில் காவல் துறையினர் மூலம் காவல் துறை அணிவகுப்பு, ஊர்காவல் படையினரின் அணிவகுப்பு உள்ளிட்டவற்றை சிறப்பாக நடத்திட காவல்துறையினர் தகுந்த ஏற்பாடு செய்திட வேண்டும்.
விழா நடைபெறும் மேடை, தியாகிகள் அமரும் இடம், பயனாளிகள் அமரும் இடம் ஆகியவற்றிற்கு முறையான இடங்களில் சாமியானா பந்தல் அமைத்து இருக்கைகள் அமைக்க ஏற்பாடு செய்யவேண்டும்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வேளாண்மை துறை உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்களும் தங்கள் துறையின் மூலம் வழங்கப்படும் அரசின் நலத்திட்டங்கள் மூலமாக அதிகப்படியான பயனாளிகள் பயன்பெறும் வகையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இந்திய விடுதலைக்காக போராடிய சுதந்திரப்போராட்ட தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்தல் உள்ளிட்ட பணிகளையும், கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தல் பணிகளை சிறப்பாக செய்ய தகுந்த முன்னேற்பாடுகளை சம்பந்தப்பட்ட துறையினர் சிறப்பாக மேற்கொள்ள வேண்டும்.
விழா சிறப்பாகவும், அமைதியாகவும் நடத்திட அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இதில் மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் ஸ்ரீதர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சேதுராமன், வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன் உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர் களும் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்