என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "செம்மரம் கடத்தல்"
அரூர்:
தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியில் கோட்டப்பட்டி, சிட்லிங் உள்ளிட்ட மலை கிராமங்கள் உள்ளன. இதில் சித்தேரி மலை ஊராட்சியில் 62 கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களை சேர்ந்த தொழிலாளர்களுக்கு அதிக பணம் வழங்குவதாக கூறி, புரோக்கர்கள் செம்மரம் வெட்ட ஆந்திரா மாநில வனப்பகுதிக்கு அழைத்து செல்கின்றனர்.
பணத்துக்கு ஆசைப்பட்டு செல்லும் கூலித் தொழிலாளர்கள் ஆந்திர வனத்துறை மற்றும் போலீசாரிடம் சிக்கி கைதாகும் சம்பவங்களும் அடிக்கடி நடந்து வருகிறது.
கடந்த, 2015-ம் ஆண்டில் செம்மரங்களை வெட்டி கடத்திய தமிழகத்தை சேர்ந்த, 20 பேரை ஆந்திர போலீசார் சுட்டுக்கொன்றனர். இதில், சித்தேரியை சேர்ந்தவர்கள் 7 பேர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது செம்மரம் வெட்டுவதற்காக சென்ற சித்தேரி வாலிபர் மர்மமான முறையில் இறந்ததும், அவரது உடலை ஒரு கும்பல் வீசி விட்டு சென்றதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள சித்தேரி மெதிகாடு கிராமத்தை சேர்ந்தவர் ராமன்(வயது 38). இவருக்கு உண்ணாமுலை என்ற மனைவியும், ஒரு மகளும், 2 மகன்களும் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த வாரம், ராமன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த முருகன் (30), தீர்த்தமலை, சுப்பிரமணி உள்பட 5 பேர் செம்மரம் வெட்டி கடத்துவதற்காக ஆந்திர மாநிலம் வனப்பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது ராமன், மர்மமான முறையில் இறந்துள்ளார்.
இதற்கிடையே ராமனுடன் சென்ற முருகன் உள்பட 4 பேரும், ஆந்திர வனத்துறையினரிடம் சிக்கி கைதாகி உள்ளனர்.
இந்த நிலையில் இறந்த ராமன் உடலை எடுத்து வந்து சித்தேரி பஸ் நிறுத்தம் பகுதியில் சொகுசு காரில் வந்த ஒருவர் வீசி விட்டு தப்பி சென்று விட்டதாக அப்பகுதி மக்கள் இன்று அரூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்,
இதுகுறித்த தகவலறிந்த அரூர் போலீசார் மற்றும் பாப்பி ரெட்டிப்பட்டி வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அரூர் அருகே உள்ள நாதியனூர் கிராமத்தை சேர்ந்த பார்த்திபன் என்பவர் சொகுசு காரில் ராமன், உடலை கொண்டு வந்து சாலையில் வீசி விட்டு சென்றது தெரிய வந்தது.
இதையடுத்து பார்த்திபனை போலீசார் தேடி வருகின்றனர். இவர் எதற்காக ராமன் உடலை காரில் கொண்டு வந்து வீசி விட்டு சென்றார் என்பது மர்மமாக உள்ளது.இதுகுறித்து அரூர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் ராமனை அழைத்து சென்ற 4 பேரும் ஆந்திர வனத்துறையினரின் காவலில் உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தினால் தான் உண்மை தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
செம்மரம் வெட்டும் வேலைக்கு சென்ற அரூர் தொழிலாளி மர்மமான முறையில் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பீலேர் பகுதியில் வனத்துறை அதிகாரி வெங்கட் நரசிம்மன் தலைமையில் வனத்துறையினர் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது கலகடா என்ற ஊரில் இருந்து பீலேர் நோக்கி நேற்று முன்தினம் இரவு லாரி ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. அந்த லாரியை வனத்துறை அதிகாரிகள் மறித்தனர். ஆனால் லாரி நிற்காமல் சென்றது. இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள், லாரியை பின் தொடர்ந்து விரட்டிச் சென்று மடக்கி பிடித்தனர். அப்போது லாரிக்குள் சோதனை நடத்தியதில் 37 பேர் பதுங்கி இருந்தனர்.
மேலும் அவர்களிடம் செம்மரங்களை வெட்டும் உபகரணங்களான 2 ரம்பம், 20 கோடாரிகள் மற்றும் 10-க்கும் மேற்பட்ட செம்மரக்கட்டைகள் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அதிகாரிகள் அவர்களை கைது செய்து பீலேர் வனத்துறை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் 37 பேரும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.
இதையடுத்து செம்மரம் வெட்ட பயன்படுத்திய ரம்பம், கோடாரி மற்றும் கடத்தி வந்த செம்மரக்கட்டைகள் ஆகியவற்றை அவர்களிடம் இருந்து வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #tamilnews
திருப்பதி:
காளஹஸ்தி அருகேயுள்ள கிருஷ்ணராஜபுரம் போலீசார் காளஹஸ்தி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
வேகமாக வந்த 2 கார்களை சப்-இன்ஸ்பெக்டர் மல்லிகார்ஜூனா மற்றும் போலீசார் மடக்கி சோதனை செய்தனர். அப்போது 2 கார்களிலும் 44 செம்மரங்களை கடத்தி சென்றது தெரியவந்தது. காரையும் செம்மரங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
காரில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தியதில் காஞ்சிபுரத்தை சேர்ந்த பாஸ்கர், புகழேந்தி, பிரபு, உசேன் என தெரியவந்தது. 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்கள் திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் இருந்து செம்மரங்களை சென்னைக்கு கடத்தியதாக தெரிவித்தனர். காரில் கடத்திவரப்பட்ட செம்மரங்களின் மதிப்பு ரூ,50 லட்சம் என கூறப்படுகிறது.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த கடத்தலில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது. எவ்வளவு செம்மரம் கடத்தி உள்ளனர்.
கடத்தப்படும் செம்மரங்களை எங்கு பதுக்கி வைத்து விற்பனை செய்கின்றனர். என பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அப்போது மணமக்களை ஏற்றி செல்வது போன்ற அலங்கரிக்கப்பட்ட கார் ஒன்று வந்தது. மார்கழி மாதம் திருமணம் எதுவும் நடக்காது.
திருமண சீசன் முடிந்த நிலையில் அலங்காரத்துடன் சென்ற கார் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. போலீசார் காரை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர்.
அப்போது காரில் செம்மரம் கடத்துவது தெரியவந்தது. அதிலிருந்த 10 செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர்.
மேலும் அதனை கடத்தி வந்த சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த துரைவேலு (24), திலீப்குமார் (23), தேஜா (25), மஸ்தான் (24) ஆகியோரை கைது செய்தனர்.
இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. திலீப்குமார் மீது கொலை வழக்கு உள்ளது. சமீபத்தில் திருப்பதியில் தொப்பி வியாபாரம் செய்து வந்தார். செம்மரம் எங்கு கடத்தி செல்லப்பட்டது. ஏஜெண்டுகள் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். #RedSandalwood
ஸ்ரீ காளஹஸ்தி, கொல்லப்பள்ளியில் நேற்று செம்மரம் கடத்துவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் செம்மரக்கடத்தல் தடுப்புப்பிரிவு அதிகாரி சீனிவாசராவ் கலந்து கொண்டு பேசியதாவது:-
செம்மர தடுப்புப்பிரிவு ஐ.ஜி.காந்தாராவ் அறிவுரையின்படி, பொதுமக்களிடம் செம்மரம் கடத்துவது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
ராயலசீமா பகுதிகளிலும், சித்தூர் மாவட்டத்திலும் அரியவகை செம்மரங்கள் இருப்பதால் இவை மிகவும் விலை மதிப்புள்ளது. இவற்றை ஒரு சிலர் முறைகேடாக வெட்டுவதோடு மட்டுமல்லாது, கடத்தியும் வருகின்றனர்.
இதுபோன்று செம்மர கடத்தலில் ஈடுபடுபவர்கள் முதல் முறையாக பிடிபட்டால் 5 ஆண்டு சிறை தண்டனை, ரூ.3 லட்சம் அபராதமும், 2-வது முறை பிடிபட்டால் 7 ஆண்டு சிறை தண்டனை, ரூ.5 லட்சம் அபராதமும், 3-வது முறை பிடிபட்டால் 10 ஆண்டு சிறை தண்டனை, ரூ.10 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். செம்மரம் கடத்துபவர்களின் விவரங்களை தெரியப்படுத்துபவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். மேலும் ரூ.1 லட்சம் பரிசாக வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் செம்மர தடுப்பு பிரிவு ஊழியர்கள் சுப்பிரமணியம், சத்தியநாராயணா, பாபாராம் உள்பட பலர் கலந்து கொண்டனர். #sandalwood #smuggling
திருப்பதி அடுத்த சேஷாசலம் வனப்பகுதி புள்ளைய காரி பல்லி என்ற அடத்தில் இன்று அதிகாலை செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வாசு தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது 30க்கும் மேற்பட்ட கும்பல் செம்மரங்களை வெட்டிக் கொண்டிருந்தனர். அவர்களை சரணடையுமாறு போலீசார் எச்சரித்தனர். ஆனால் செம்மரம் வெட்டிக் கொண்டிருந்த கும்பல் போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் கோதண்டம் என்ற போலீஸ்காரரின் தலையில் கல்பட்டு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.
அவரை மீட்ட போலீசார் ரங்கம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் செம்மர கடத்தல் கும்பல் தொடர்ந்து போலீசார் மீது தாக்குதல் நடத்தியதால் தற்காப்பிற்காக வானத்தை நோக்கி 2 முறை துப்பாக்கியால் சுட்டனர்.
இதையடுத்து கடத்தல் கும்பல் தப்பி ஓடியது.அவர்களை விரட்டி சென்ற போலீசார் 4 பேரை மடக்கி பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் விழுப்புரம் மாவட்டம் சின்ன சேலத்தை சேர்ந்த பொன்னிவேல், சிலக்காடு, சக்திவேல், சின்னராஜ், குமார் என தெரிய வந்தது.
இதில் தப்பி ஓடும் போது கீழே விழுந்ததில் ஒருவருக்கு கால் உடைந்தது. அவரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மேலும் வனப்பகுதியில் தப்பி ஓடியவர்களை பிடிக்க கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
கடத்தல் கும்பல் விட்டு சென்ற ரூ.30 லட்சம் மதிப்பிலான 25 செம்மரங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். #Redsandalwood #Arrest
திருப்பதி அருகே சேஷாசல வனப்பகுதி பீமாவரம் என்ற இடத்தில் செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி. வெங்கட்ரமணா, இன்ஸ்பெக்டர் சந்து, வன அலுவலர் லட்சுமிபதி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது 20 பேர் கொண்ட கும்பல் செம்மரங்களை வெட்டி காரில் ஏற்றி கொண்டிருந்தனர். அவர்களை கண்ட போலீசார் சரணடையுமாறு எச்சரிக்கை விடுத்தனர். ஆனால் அந்த கும்பல் தப்பி ஓடினர். அவர்களை விரட்டி சென்ற போலீசார் 2 பேரை மடக்கி பிடித்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையை சேர்ந்த வெங்கடேஷ் (24), கிருஷ்ணகிரியை சேர்ந்த கார் டிரைவர் அபு பக்கர் (23) என தெரியவந்தது.
செம்மர கடத்தல் கும்பல் விட்டு சென்ற 14 செம்மரங்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். #RedSandalwood #Tirupati
கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரப்பேட்டை அருகே புதுவாயலில் சென்னை- கொல்கத்தா நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை போலீசார் வாகன சோதனை நடத்தினர்.
அப்போது போலீசாரை கண்டதும் ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி சென்ற கேரளா மாநில பதிவு எண் கொண்ட லோடு வேன் நிற்காமல் வேகமாக சென்றது. பின்னர் அங்கிருந்த பேரிகார்டு தடுப்பு கம்பியில் மோதியது.
உடனே வேனில் இருந்த 3 வாலிபர்களும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். போலீசார் வேனை சோதனை செய்த போது அதில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் கடத்தி வரப்பட்டது தெரிந்தது.
இதையடுத்து வேனுடன் செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய கும்பல் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
திருப்பதி அருகேயுள்ள பாகபல்லி சோதனை சாவடியில் செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர்கள் லட்சுமி நாராயணா, கிருஷ்ணய்யா, சத்திய நாராயணா, ரவிக்குமார் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த டாடா ஏசி லோடு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்த போது அந்த வாகனத்தில் எதுவும் இல்லை. ஆனால் லோடு ஆட்டோ டிரைவர் ஒரு வித பதட்டத்துடன் காணப்பட்டார்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் லோடு ஆட்டோவை தீவிர சோதனை செய்தனர். அப்போது லோடு ஆட்டோவின் உள்பகுதியில் அறை அமைத்து அதில் 2 வாலிபர்கள் மற்றும் 8 செம்மரங்கள் இருப்பதை கண்டு பிடித்தனர்.
செம்மரங்களுடன் லோடு ஆட்டோவை பறிமுதல் செய்த போலீசார் செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.
அவர்களிடம் ஜ.ஜி. காந்தாராவ் விசாரணை நடத்தினார். அதில் அவர்கள் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஈஸ்வர், ஹரிநாத், ரங்கநாதன் என தெரியவந்தது 3 பேரையும் கைது செய்தனர்.
மேலும் அவர்கள் கூறுகையில் சிங்கம்-3 படத்தை பார்த்து ஆட்டோவில் ரகசிய அறை அமைத்து செம்மரம் கடத்தியதாக தெரிவித்துள்ளனர். #tamilnews
திருமலை:
திருப்பதி அடுத்த ரேணிகுண்டா கரக்கம்பாடி வனப்பகுதியில் செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்றிரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது வனப் பகுதியில் ஒரு கார் நின்று கொண்டிருந்தது. அந்த காரின் பதிவு எண் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த காரின் பதிவு எண்ணை இணையதளத்தில் பார்த்த போது அது ஒரு பைக்கின் எண்ணாக இருந்தது.
இதையடுத்து போலீசாரை கண்ட கார்டிரைவர் காரை வனப்பகுதியில் இருந்து ரோட்டிற்கு ஓட்டி வந்தார். போலீசார் அந்த காரை மடக்கி பிடிக்க முயன்ற போது காரில் இருந்து ஒருவர் தப்பி ஓடிவிட்டார்.
கார் டிரைவர் மட்டும் போலீசாரிடம் சிக்கினார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் வேலூர் மாவட்டம் ரெட்டிபாளையத்தை சேர்ந்த பாண்டியன் மகன் மேகநாதன் (27) என்பதும், இவர் என்ஜினீயரிங் கல்லூரியில் ஆட்டோ மொபைல் என்ஜினீயரிங் 3-ம் ஆண்டு படித்து வந்ததாகவும் குடும்ப சூழ்நிலை காரணமாக படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வேலூரை சேர்ந்த ஷமீது என்பவரிடம் வேலை செய்து வருவதாக கூறி உள்ளார்.
மேலும் இந்த காரை திருப்பதியில் உள்ள சதீஷ் என்பவரிடம் ஒப்படைத்து விட்டு வந்தால் ஆயிரம் ரூபாய் தருவதாக கூறியதால் காரை ஓட்டி வந்ததாக போலீசாரிடம் தெரிவித்தார்.
இதையடுத்து தப்பிஓடிய சதிசை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மேலும் காரையும் காரில் கடத்திய 4 செம்மர கட்டைகளை பறிமுதல் செய்தனர். #RedSandersSmuggling #arrest
திருப்பதி சேஷாசலம் வனப்பகுதி அலிபிரி பகுதியில் செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்றிரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வன விலங்கு பூங்கா பகுதியில் ஒரு கார் நிற்பதை கண்ட செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அந்த காரை சுற்றி வளைக்க முயற்சி செய்தனர்.
போலீசாரை கண்ட மர்ம நபர் காரை வேகமாக ஓட்டி சென்றார். போலீசார் அந்த காரை விரட்டி சென்றனர். காரில் இருந்த மர்ம நபர் காரை நிறுத்தி விட்டு வனப்பகுதிக்குள் தப்பி ஓடிவிட்டார். காரை பறிமுதல் செய்த போலீசார் வனப்பகுதியில் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது வனப்பகுதியில் மறைந்திருந்த நபரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அந்த நபர் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலூகா மங்காபுரம் பகுதியை சேர்ந்த சுரேஷ் (35) என்பது தெரியவந்தது.
மேலும் அந்த நபர் சபரி மலை செல்ல மாலை அணிந்து இருந்தார். போலீசார் காரை சோதனை செய்த போது காரின் பின் பகுதியில் செம்மர கட்டைகள் அடுக்கி வைத்திருந்தனர். மேலும் போலியாக தயாரிக்கப்பட்ட ஆந்திர மாநில பதிவெண் போர்டுகளும் இருந்தது. செம்மர கடத்தலில் இவரை தவிர வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பதி அடுத்த ஸ்ரீவாரிமெட்டு பகுதியில் செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் 3 குழுக்களாகப் பிரிந்து கல்யாணி அணைக்கட்டு மற்றும் அதன் அருகில் உள்ள லோடிங் பாயிண்ட், சந்திரகிரி புறவழிச்சாலை ஆகிய இடங்களில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது புற வழிச்சாலையில் இருந்து சந்தேகப்படும்படியாக ஒரு கார் செல்வதைக் கண்டனர். அதன் எண்ணை உடனடியாக மற்ற குழுவினரிடம் தெரிவித்தனர்.
அந்த காரில் லோடிங் பாயிண்டில் செம்மரக் கட்டைகளை ஏற்றிச் செல்வதை கவனித்தனர். இதையடுத்து காரை மடக்கிப் பிடிக்க முயன்றனர்.
ஆனால் டிரைவர் காரை வேகமாக ஓட்டி போலீஸ் வாகனத்தின் மீது மோதி விட்டு காரை நிறுத்தாமல் வேகமாக ஓட்டி சென்றார். உடனே சுதாரித்த போலீசார் சோதனை சாவடிக்கு தகவல் தெரிவித்து காரை மடக்க முயன்றனர். போலீசார் சுற்றி வளைத்ததை உணர்ந்த டிரைவர் காரை நிறுத்தி விட்டு காட்டுப்பகுதிக்குள் தப்பியோடி விட்டார்.
இதையடுத்து போலீசார் அந்தக் காரையும், அதிலிருந்த 5 செம்மரக் கட்டைகளையும் பறிமுதல் செய்தனர்.
காரின் நம்பர் பிளேட்டில் இருந்த எண்ணை சரிபார்த்ததில் அந்த எண் கலெக்டருக்கு சொந்தமானது என தெரிய வந்தது. இது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கலெக்டரின் கார் எண்ணை போலியாக பயன்படுத்தி செம்மரக்கட்டைகளை அதில் கடத்தி வந்துள்ளனர்.
இதே போல் பல அரசு அதிகாரிகள், முக்கிய பிரமுகர்களின் கார் எண்ணை கடத்தல் காரர்கள் பயன்படுத்தி இருக்கலாம்.
இனி கூடுதல் கவனத்துடன் ரோந்துப் பணியில் ஈடுபட வேண்டும் என்று செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. காந்தாராவ் போலீசாருக்கு அறிவுறுத்தி உள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்