search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செல்போன் பறிப்பு"

    • ஆகாசை வழிமறித்து செல்போனை பறித்துக் கொண்டு அவரை கீழே தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொருக்குப்பேட்டை ஜீவா நகரை சேர்ந்தவர் ஆகாஷ் (வயது 25). இவர் கடந்த 1-ந் தேதி வேலைக்குச் சென்று வீட்டிற்கு செல்வதற்காக மின்ட்பஸ் நிறுத்தத்தில் இறங்கி கொருக்குப்பேட்டை ரெயில் நிலையத்திற்கு வந்தார். அப்போது பென்சில் பேக்டரி ரெயில்வே தண்ட வாளத்தில் நடந்து சென்ற போது 3 மர்ம வாலிபர்கள் ஆகாசை வழிமறித்து செல்போனை பறித்துக் கொண்டு அவரை கீழே தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

    இது பற்றி ஆகாஷ் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகலா வழக்கு பதிவு செய்து கொருக்குப்பேட்டை ஜீவா நகரை சேர்ந்த சஞ்சய் (23) வண்ணாரப்பேட்டை ஹவுசிங் போர்டை சேர்ந்த ராமச்சந்திரன் (29) ஆகியோரை கைது செய்தனர்.

    • 6 பேர் கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம் கொண்டகுப்பம் கிராமம்,சிலோன் காலனி அண்ணா நகரை சேர்ந்தவர்கள் ரவிகுமார் (வயது42), மணிகண்டன்(40).

    இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் இரவு பள்ளேரி- வசூர் சாலையில் பொன்னை ஆற்று பாசன கால்வாய் பாலத்தில் அமர்ந்து மது குடித்தனர்.

    அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத 6பேர் கொண்ட கும்பல் ரவிக்குமார் மற்றும் மணிகண்டனை தாக்கிவிட்டு ரவிக்குமார் வைத்திருந்த ரூ.20ஆயிரம் பணம், மற்றும் 2 பேரின் செல்போன்களை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர்.

    இதில் ரவிக்குமாருக்கு வலது கையில் காயம் ஏற்பட்டு பூட்டுதாக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து ரவிக்குமார் சிப்காட் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கொண்டலாம்பட்டி ரவுண்டானா அருகே இன்று காலை 9.30 மணியளவில் ராஜேஷ் கண்ணா என்பவர் செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார்.
    • போலீசாரின் விசாரணையில் பிடிபட்ட வாலிபர் ஒடிசா மாநிலம் ஜாக்பூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரிய வந்தது.

    சேலம்:

    சேலம் கொண்டலாம்பட்டி ரவுண்டானா அருகே இன்று காலை 9.30 மணியளவில் ராஜேஷ் கண்ணா என்பவர் செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு வாலிபர் திடீரென ராஜேஷ்கண்ணா கையில் இருந்த செல்போனை பறித்து கொண்டு ஓட்டம் பிடித்தார்.

    இதை பார்த்த ரவுண்டானா பகுதியில் நின்றிருந்த சேலம் மாநகர துணை கமிஷனரின் (தெற்கு) அதிவிரைவு படை போலீசார் செல்போனை பறித்துக் கொண்டு ஓடிய வாலிபரை விரட்டிச் சென்று மடக்கி பிடித்தனர்.

    பின்னர் அந்த வாலிபரை கொண்டலாம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசாரின் விசாரணையில் பிடிபட்ட வாலிபர் ஒடிசா மாநிலம் ஜாக்பூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரிய வந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பரபரப்பான ரவுண்டானா பகுதியில் காலை நேரத்தில் போலீ சார் சிறுவனை விரட்டி சென்று பிடித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • இன்று அதிகாலை 4.30 மணி அளவில் புதிய பஸ் நிலையத்தில் பஸ்சில் செல்வதற்காக நின்று கொண்டிருந்தார்.
    • ஒரு வாலிபர் திடீரென சுகவனேஷ் கையில் வைத்திருந்த செல்போனை பறித்துக் கொண்டு ஓடினார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் புதுப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் சுகவனேஷ் (வயது 18).

    இவர் இன்று அதிகாலை 4.30 மணி அளவில் புதிய பஸ் நிலையத்தில் பஸ்சில் செல்வதற்காக நின்று கொண்டிருந்தார். அப்போது ஒரு வாலிபர் திடீரென சுகவனேஷ் கையில் வைத்திருந்த செல்போனை பறித்துக் கொண்டு ஓடினார். இதனால் அதிர்ச்சி அடைந்த சுகவனேஷ் கூச்சலிட்டார்.

    இதை பார்த்த ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பள்ளப்பட்டி போலீஸ் ஏட்டு திருப்பதி செல்போனை பறித்துக் கொண்டு ஓடிய வாலிபரை விரட்டிச் சென்று பிடித்து பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

    விசாரணையில் அவர் கிச்சிப்பாளையம் சுந்தர் தெருவை சேர்ந்த பாபு என்கிற பக்ருதீன் (34) என்பது தெரிய வந்தது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதிகாலை நேரத்தில் புதிய பஸ் நிலையத்தில் போலீஸ் ஏட்டு வாலிபரை துரத்தி பிடித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ரெயிலில் ஏறி விக்னேசை தாக்கி அவர் கையில் வைத்திருந்த ஐபோனை பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனர்.
    • விக்னேஷ் கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசில் புகார் செய்தார்.

    சென்னை:

    சென்னை கொரட்டூர் வாகைநகர் பகுதியை சேர்ந்தவர் ஜெய் விக்னேஷ். இவர் ஆந்திர மாநிலம் தெனாலிக்கு சென்றுவிட்டு ரெயிலில் சென்னை திரும்பினார். ரெயில் கொருக்குப்பேட்டைக்கும், பேசின் பிரிட்ஜ்க்கும் இடையே மெதுவாக சென்றபோது 3 பேர் ரெயிலில் ஏறி விக்னேசை தாக்கி அவர் கையில் வைத்திருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள ஐபோனை பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனர்.

    இதுகுறித்து விக்னேஷ் கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசில் புகார் செய்தார். அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் போலீசார் கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் எம்.கே.பி. நகர் மீனாம்பாள் சாலை தரைப்பாலத்தில் பதுங்கி இருப்பதாக வந்த தகவலை தொடர்ந்து போலீசார் சுற்றி வளைத்தனர். விசாரணையில் பழைய வண்ணாரப்பேட்டை போகராஜன் நகரை சேர்ந்த சார்லஸ் (21), கார்த்தி என்கிற காந்தி (20), அசோக்குமார் என தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

    • முகவரி கேட்பது போல் நடித்து திருடர்கள் கைவரிசை
    • மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கோவை,

    கோவை சுந்தராபுரத்தை சேர்ந்தவர் சதீஸ் (வயது 48). இவர் எல்.அண்டு.டி பைபாஸ் ரோட்டில் ரெஸ்டாரண்ட் வைத்து நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று இரவு 11.30 மணியளவில் சதீஸ் கடையை மூடி விட்டு அவரது மொபட்டில் வீட்டிற்கு புறப்பட்டு சென்றார். மொபட் போடிபாளையம் பிரிவை தாண்டி சென்று கொண்டு இருந்த போது அவைர பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். அப்போது பின்னால் இருந்தவர் சதீசிடம் முகவரி கேட்டார். இதனையடுத்து மொபட்டின் வேகத்தை குறைத்த அவர் முகவரி கூறிக்கொண்டு இருந்தார்.

    கண்இமைக்கும் நேரத்தில் அந்த வாலிபர்கள் மொபட்டின் மீது மோட்டார் சைக்கிளை மோதினர். இதில் நிலைதடுமாறிய சதீஸ் மொபட்டில் இருந்து கீழே விழுந்தார். பின்னர் அந்த வாலிபர்கள் கத்தியை காட்டி மிரட்டி சதீசின் மொபட் மற்றும் செல்போனை பறித்து அங்கு இருந்து தப்பிச் சென்றனர்.

    இது குறித்து சதீஸ் மதுக்கரை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகவரி கேட்பது போல நடித்து மொபட் மற்றும் செல்போனை பறித்து சென்ற வாலிபர்களை தேடி வருகின்றனர்.

    • செங்கல் சூளை வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.
    • இளங்கோ என்பது தெரியவந்தது.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே ஆனத்தூர் பகுதியை சேர்ந்தவர் வைத்தேஸ். இவரது மனைவி வரலட்சுமி (வயது 32). இவர் கடந்த 3-ந்தேதி இரவு 7 மணியளவில் அந்த பகுதியில் உள்ள செங்கல் சூலை வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் வரலட்சுமியை வழிமறித்து நகை, பணத்தை தருமாறு மிரட்டினார். உடனே சுதாரித்து கொண்ட வரலட்சுமி அங்கிருந்து ஓடினார். ஆனால் அவரை விடாமல் பின்தொடர்ந்து ஓடிவந்து அவரை மடக்கிய மர்ம நபர் அவரிடமிருந்த தங்க வளையல், செல்போனை பறித்துகொண்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து வரலட்சுமி திருவெண்ணைநல்லூர் போலீசில் புகார் செய்தார். 

    புகாரின்பேரில் திருவெண்ணைநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குபதிவு செய்து வரலட்சுமியை வழிமறித்து தங்க வளையல், செல்போனை திருடி சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வந்த நிலையில் வரலட்சுமியின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு போன் சிக்னல் மூலம் தேடியபோது திருவெண்ணைநல்லூர் அருகே டி.குமாரமங்கலம் பகுதியை சேர்ந்த இளங்கோ என்பது தெரியவந்தது. உடனே அங்கு விரைந்த போலீசார் அவரை பிடித்து விசாரித்தபோது வரலட்சுமியிடம் சென்போன் மற்றும் தங்க வளையலை திருடியதை ஒப்பு கொண்டார். உடனே இளங்கோவை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து தங்க வளையல், செல்போனை பறிமுதல் செய்தனர்.

    • கல்லூரி மாணவர்களை குறிவைத்து அடிக்கடி செல்போன் பறிப்பு சம்பவம் நடந்து வந்தது.
    • 6 பேரிடம் இருந்து 18 செல்போன்கள், 2 மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

    கேளம்பாக்கம்:

    கேளம்பாக்கம் அருகே கல்லூரி மாணவர்களை குறிவைத்து அடிக்கடி செல்போன் பறிப்பு சம்பவம் நடந்து வந்தது.

    இது தொடர்பாக கண்காணிப்பு கேமரா பதிவை வைத்து செல்போன் பறிப்பில் ஈடுபட்ட வண்டலூர் அருகே உள்ள வெங்கப்பாக்கம் பகுதியை சேர்ந்த அபினேஷ், செல்வகுமார், மோகன், சூரியா, வெங்கடமங்களத்தை சேர்ந்த தமிழ்செல்வன், சூரியா ஆகிய 6 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 18 செல்போன்கள், 2 மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்தபடி வந்த 2 வாலிபர்கள் கைவரிசை
    • மகாலிங்கபுரம் போலீசார் வழக்கு பதிந்து தீவிர விசாரணை

    கோவை,

    பொள்ளாச்சி கோட்டூர் அருகே உள்ள நெல்லித்துறையை சேர்ந்தவர் திவ்யா (வயது 25). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று இவர் அந்த பகுதியில் உள்ள அய்யப்பன் கோவில் அருகே செல்போனில் பேசிக் கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்தபடி 2 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் கண்இமைக்கும் நேரத்தில் திவ்யாவிடம் இருந்து செல்போனை பறித்து தப்பிச் சென்றனர்.

    வள்ளியம்மாள் லே-அவுட்டை சேர்ந்த மேகனா (17). சம்பவத்தன்று இவர் தெப்பக்குளம் வீதியில் நின்று கொண்டு செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர்கள் மேகனாவிடம் இருந்து செல்போனை பறித்து சென்றனர்.

    இவர்கள் 2 பேரும் பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நர்சு உள்பட 2 பேரிடம் ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்து செல்போன்களை பறித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    இதேபோல புலியம்பட்டியை சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன் (31). இவர் மகாலிங்கபுரம் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இவர் எல்.ஐ.சி. காலனியில் உள்ள துணிக்கடை முன்பு நின்று கொண்டு செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் வெங்கடேஸ்வரனிடம் இருந்து செல்போனை பறித்து தப்பிச் சென்றனர். இது குறித்து அவர் மகாலிங்கபுரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீஸ்காரரிடம் செல்போனை பறித்து சென்ற வாலிபர்களை தேடி வருகின்றனர்.

    • சக பயணிகள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தினர்
    • போலீசார் மடக்கி பிடித்தனர்

    அரக்கோணம்:

    நாகர்கோவிலில் இருந்து மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று முன்தினம் இரவு 9.45 மணியளவில், அரக்கோணம் ரெயில் நிலையத்தில் உள்ள 6-வது பிளாட்பாரத்திற்கு வந்தது.

    அப்போது பயணிகள் சிலர் இறங்கினர். சிலர் ரெயிலில் ஏறியதும் சிறிது நேரம் கழித்து ரெயில் புறப்பட்டது.

    அந்த நேரத்தில் ரெயிலின் படியில் நின்று கொண்டிருந்த கன்னியாகுமரியை சேர்ந்த கண்ணன் என்பவரிடம் இருந்து செல்போனை பிளாட்பாரத்தில் இருந்த ஒரு வாலிபர் பறித்து கொண்டு ஓடினார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த கண்ணன் கூச்சலிட்டார். உடனடியாக சக பயணிகள் பெட்டியில் இருந்த அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தினர்.

    சத்தம் கேட்டு அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் உஸ்மான், ரெயில்வே இன்ஸ்பெக்டர் வடிவுக்கரசி மற்றும் போலீசார் அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர்.

    விசாரணையில், அவர் கர்நாடக மாநிலம், பங்காருபேட்டையைச் சேர்ந்த சக்திவேல் (வயது 24) என்பது தெரியவந்தது.

    இவர் ஏற்கனவே பலமுறை ரெயிலில் பயணிகளிடம் செல்போன் பறித்தது தெரியவந்தது. மேலும், இவர் மீது பங்கா ருபேட்டை, ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.

    இதுகுறித்து, அரக்கோணம் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து சக்திவேலை கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து ரூ.20,000 மதிப்பிலான செல்போனை பறிமுதல் செய்தனர்.

    • மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் திடீரென மணிபாலனின் விலை உயர்ந்த செல்போனை பறித்து தப்பி சென்றுவிட்டான்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    வானகரம், ரத்னா நகர் பகுதியை சேர்ந்தவர் மணிபாலன் (22). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் சொந்த ஊரான பாண்டிச்சேரிக்கு சென்றுவிட்டு நள்ளிரவு 1 மணி அளவில் சென்னை வந்தார்.

    பின்னர் வீட்டிற்கு செல்வதற்காக ஆண்டாள் நகர் வழியாக செல்போனில் பேசியபடி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் திடீரென மணிபாலனின் விலை உயர்ந்த செல்போனை பறித்து தப்பி சென்றுவிட்டான். இதுகுறித்து மதுரவாயல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாலிபர் திடீரென சுகுணாவை தலையில் தாக்கி அவரது விலை உயர்ந்த செல்போனை பறித்து தப்பி ஓடிவிட்டான்.
    • ராமாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    சென்னை ராமாபுரத்தில் உள்ள விடுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருபவர் சுகுணா. இவர் நேற்று இரவு பணி முடிந்து அதே பகுதி பூந்தமல்லி நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த வாலிபர் திடீரென சுகுணாவை தலையில் தாக்கி அவரது விலை உயர்ந்த செல்போனை பறித்து தப்பி ஓடிவிட்டான். இதுகுறித்து ராமாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×