என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சேலம் மத்திய சிறை"
தாரமங்கலம்:
சேலம் மாவட்டம் தாரமங்கலத்தை அடுத்த ராமிரெட்டிபட்டி உட்டண்டி வளவு பகுதியை சேர்ந்தவர் சின்னக்கவுண்டர் (வயது 26).
விசைத்தறி தொழிலாளியான இவர் தனது உறவினரான செல்லத்துரை என்பவருடன் கடந்த 4-ந் தேதி ராமிரெட்டிப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழா பார்க்க சென்றார். அப்போது அரை டவுசர் அணிந்த படி அங்குள்ள பாலத்தில் ஒரு வாலிபர் அமர்ந்திருந்தார்.
இதனை பார்த்த 2 பேரும் அந்த வாலிபரை கல்லால் தாக்கியதாக கூறப்படுறது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் கல்லால் திருப்பி தாக்கினார். இதில் சின்னக்கவுண்டர் படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் பரிதாபமாக இறந்தார்.
தப்பியோடிய அந்த வாலிபரை மடக்கி பிடித்த சின்னக்கவுண்டரின் உறவினர்கள் தாரமங்கலம் போலீசில் அவரை ஒப்படைத்தனர். போலீசார் அவரிடம் விசாரித்த போது பென்னாகரத்தை அடுத்த மருத்துவம் பட்டியை சேர்ந்த செங்கோட்டையன் (29) என்பதும், உறவினர் வீட்டிற்கு வந்த இடத்தில் ஏற்பட்ட தகராறில் சின்னக்வுண்டரை கொலை செய்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து ஓமலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் அவரை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
சேலம் மத்திய சிறையில் 800-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் 200-க்கு மேற்பட்டோர் குண்டர் தடுப்பு கைதிகள் ஆவர்.
இந்த கைதிகளில் பலர் கஞ்சா மற்றும் செல்போன் பயன்படுத்துவதாக எழுந்த புகாரின் பேரில் சிறைத்துறை டி.ஐ.ஜி. அறிவுடை நம்பி மற்றும் சிறை அதிகாரிகள் சோதனை நடத்தி செல்போன்களை பறிமுதல் செய்தனர். மேலும் தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.
இந்த நிலையில் இன்று அதிகாலை போலீஸ் உதவி கமிஷனர் சேகர் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட போலீசார் சேலம் மத்திய சிறைக்குள் அதிரடியாக புகுந்தனர். பின்னர் அங்குள்ள ஒவ்வொரு அறைகள் மற்றும் ஜெயில் வளாகத்திலும் அங்குலம், அங்குலமாக சோதனை செய்தனர்.
3 மணி நேரம் நடந்த இந்த சோதனையில் ஏதாவது பொருட்கள் சிக்கியதா? என்பது குறித்து போலீசார் கூற மறுத்து விட்டனர்.
காரிமங்கலம்:
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் காரிமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
அப்போது பழைய தருமபுரியை சேர்ந்த ராஜா என்பவரது மகன் குமார் (வயது 29) என்பவரும் அதே பள்ளியில் ஆசிரியராக பணி புரிந்துள்ளார். மாணவியிடம் அவ்வப்போது பேச்சு கொடுத்து அவருக்கு தெரியாமலேயே சாப்பிடும் போதும், தண்ணீர் குடிக்கும் போதும் புகைப்படம் எடுத்துள்ளார்.
இதே போல் பல மாணவிகளிடம் பேசி புகைப்படம் எடுத்து வந்துள்ளார். மாணவிகள் இது குறித்து தங்கள் பெற்றோரிடம் புகார் கூறி உள்ளனர். அவர்களும் பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளனர். அப்போதே குமாரை வேலையை விட்டு பள்ளி நிர்வாகம் துரத்தி உள்ளது.
பின்னர் மாணவியும் அந்த பள்ளியில் இருந்து விலகி தற்போது காரிமங்கலம் அருகேயுள்ள அரசு மாதிரிப் பள்ளியில் பிளஸ்-1 வகுப்பில் சேர்ந்து படித்து வருகிறார்.
இந்த நிலையிலும் குமார் விடாமல் வாட்ஸ் அப் செய்திகளில் மாணவியின் படத்தை போட்டு மோசமாக சித்தரித்து செய்திகள் அனுப்பி உள்ளார். அத்துடன் மாணவியின் தந்தைக்கு வெவ்வேறு எண்களில் இருந்து போன் செய்து மாணவியை பற்றி தரக்குறைவாக பேசி திட்டியும் வந்து உள்ளார்.
பின்னர் மாணவியின் தந்தை மாதிரிப் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் முறையிட்டு உள்ளார். அதனால் தலைமை ஆசிரியர் காரிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க முற்பட்டு உள்ளார்.
இதை அறிந்த குமாரின் உறவினர்கள் அவரை அணுகி ஒரு முறை மன்னித்து விடுமாறும், இது போல் மீண்டும் நடக்காது என்றும் வாக்குறுதி அளித்துள்ளனர். அதனால் தலைமை ஆசிரியர் புகாரை வாபஸ் வாங்கியுள்ளார்,
தனது பெயர் காவல் நிலையம் வரை போய் விட்டதால் மிகவும் ஆத்திரம் அடைந்த குமார், சிம் கார்டுகள் விற்கும் தனது நண்பன் பாலக்கோடு, சோமனஅள்ளி பகுதியை சேர்ந்த காவேரி மகன் கோவிந்தசாமி என்பவரின் துணையோடு வெவ்வேறு சிம் கார்டுகள் மூலம் மாணவியின் தந்தையை அழைத்து அசிங்கமாகவும், ஆபாசமாகவும் மாணவியை பற்றி தொடர்ச்சியாக பேசி உள்ளனர்.
பின்னர் முகநூல் பக்கத்தில் மாணவியின் புகைப்படத்தை அப்லோடு செய்து ’கால் கேர்ள்’ என்று ஆங்கிலத்தில் குறிப்பிட்டு, தொடர்பு கொள்ள வேண்டிய எண் என்று தலைமை ஆசிரியரின் எண்ணையே பதிவேற்றி உள்ளார்.
இதன் பிறகு தலைமை ஆசிரியருக்கு ஏராளமான தொலை பேசி அழைப்புக்கள் வந்த வண்ணம் இருந்தது. இதனால் தலைமை ஆசிரியர் காரிமங்கலம் சப்-இன்ஸ் பெக்டர் இளவரசனிடம் புகார் செய்தார்.
பின்னர் போலீசார் மாணவியின் தந்தைக்கும், தலைமை ஆசிரியருக்கும் வந்த அழைப்புகளின் சிக்னல் டவர் உள்ள இடங்களை கண்டு பிடித்து சென்ற போது குமாரும் அவர் நண்பர் கோவிந்தசாமியும் பிடிபட்டனர்.
குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். அவரது நண்பர் கோவிந்தசாமி மீது இந்திய தொலைத்தொடர்பு தண்டனை சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
கைதான 2 பேரும் தருமபுரி மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
சென்னை புழல் மத்திய சிறையில் கைதிகள் சொகுசு வாழ்க்கை நடத்தியது தொடர்ந்து தமிழகத்தில் உள்ள பல்வேறு சிறைகளில் சிறை அதிகாரிகள் மற்றும் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். அப்போது கைதிகளிடம் இருந்து தடை செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
சேலம் மத்திய சிறையில் சுமார் 850-க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று சிறை அதிகாரிகள் டவர் பிளாக்கில் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ள அறையில் திடீரென சோதனை நடத்தினர். அப்போது ஒரு கைதியிடம் 2 செல்போன்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த செல்போன் அவருக்கு எப்படி கிடைத்தது? என்பது குறித்து சிறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் நவதி பகுதியைச் சேர்ந்தவர் ராஜா, கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி ராணி (வயது 45). இவர்களுக்கு பூவரசன் என்ற மகனும், பூஜா என்ற மகளும் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு நவதி அருகில் ராணியின் முகம், கை, கால்கள் என பல இடங்களில் சரமாரியாக அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் ராணி கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள மேல ஆசாரப்பள்ளியை சேர்ந்த விவசாயி தேவராஜ் (60) என்பவரை நேற்று போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-
கைது செய்யப்பட்ட தேவராஜிக்கும், ராணிக்கும் நீண்ட காலமாக கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது. ராஜா பெங்களூருவில் தங்கி கூலி வேலை செய்து வந்ததால் தேவராஜ் அடிக்கடி ராணி வீட்டுக்கு சென்று வந்துள்ளார். தேவராஜ் 3 செண்ட் நிலம் வாங்கி உள்ளார். அந்த நிலத்தை தனது பெயருக்கு எழுதி தருமாறு ராணி கேட்டுள்ளார். மேலும் ராணிக்கு வேறு ஒரு நபருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதை தேவராஜ் கண்டித்தும் ராணி கள்ளத்தொடர்பை கைவிடவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த தேவராஜ், சம்பவத்தன்று இரவு நிலத்தை எழுதி தருகிறேன். அதற்காக ஆதார் அட்டையை எடுத்து வருமாறு போனில் கூறி உள்ளார். இதனால் ராணி ஆதார் அட்டையுடன் நவதி பகுதிக்கு சென்ற போது வேறு நபருடனான கள்ளத்தொடர்பு குறித்து 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த தேவராஜ் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ராணியை சரமாரியாக வெட்டிக்கொலை செய்ததாக அவர் வாக்குமூலம் அளித்ததுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். கைதான தேவராஜ் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்தவர் என்ஜினீயர் கோகுல்ராஜ் (வயது 23). இவர் கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் 24-ந்தேதி நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தை அடுத்த கிழக்கு தொட்டிப்பாளையம் அருகே ரெயில் தண்டவாளத்தில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த வழக்கில் சங்ககிரியை சேர்ந்த தீரன்சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், அவரது சகோதரர் தங்கதுரை, அருள்செந்தில், செல்வகுமார், குமார் என்கிற சிவக்குமார், கார் டிரைவர் அருண், சங்கர், செல்வராஜ், ஜோதிமணி, ரவி என்கிற ஸ்ரீதர், ரஞ்சித், சதீஸ்குமார், சுரேஷ், பிரபு, கிரி, அமுதரசு, சந்திரசேகர் ஆகிய 17 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 14 பேர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 19-ந்தேதி விசாரணை நீதிமன்றமான நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட யுவராஜ் நீதிபதியை நோக்கி ஆவேசமாக பேசினார். இதனால், ஜாமீனில் விடுவிக்கப்பட்ட 14 பேரும் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். இதில் 12 பேர் மட்டும் கோர்ட்டில் ஆஜரானார்கள். அவர்களது ஜாமீனை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து 12 பேரும் உடனடியாக சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் 4 பேர் திடீரென உணவு சாப்பிட மறுத்தனர். பின்னர் அதிகாரிகள் அவர்ளை சமாதானப்படுத்தி உணவு சாப்பிட செய்தனர். இதனால் சேலம் மத்திய ஜெயிலில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்