search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சோதனைச் சாவடி"

    • கேரளா-நீலகிரி மாவட்ட எல்லைச் சோதனைச் சாவடிகளில் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    • கூடலூர் வனப்பகுதி தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய 3 மாநில எல்லை பகுதியில் வருவதால் அங்கு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    ஊட்டி:

    கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்ட வனப்பகுதியில் அதிரடிப்படை போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது மறைந்திருந்த மாவோயிஸ்டுகள் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

    அதிரடிப்படை வீரர்களும் துப்பாக்கியால் சுட்டு பதிலடி கொடுத்தனர். இரு தரப்புக்கும் இடையே நீண்டநேரம் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் மாவோயிஸ்டுகள் சிலர் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.

    இதேபோல கடந்த வாரமும் அதிரடிப்படை வீரர்களுக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்து சிலர் கைது செய்யப்பட்டனர். இவ்வாறு கேரள மாநில எல்லைப்பகுதியில் மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் இருப்பதால் அதனை ஒட்டிய நீலகிரி மாவட்ட போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.

    கேரளா-நீலகிரி மாவட்ட எல்லைச் சோதனைச் சாவடிகளில் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஓவேலி, நாடுகாணி, சோலாடி, நம்பியார்குன்னு, பாட்டவயல் ஆகிய சோதனைச் சாவாடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர். அவர்கள் கேரளாவில் இருந்து தமிழகத்துக்குள் நுழையும் வாகனங்களை தீவிர சோதனை நடத்தி அனுமதிக்கின்றனர்.

    கூடலூர் வனப்பகுதி தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய 3 மாநில எல்லை பகுதியில் வருவதால் அங்கு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த சோதனைச்சாவடிகளில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் நேற்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு பாதுகாப்பு பணிகளை உஷார்படுத்தினார். பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

    • போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு
    • போலீசார் பந்தல் அமைத்து கண்காணிப்பு

    வாணியம்பாடி,

    திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், மாவட்டத்தில் குற்றங்களை தடுக்கவும், வாகன விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்.

    அதைத்தொடர்ந்து நேற்று வாணியம்பாடி தாலுகா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட செட்டியப்பனூர் கூட்ரோட்டில் வாகன சோதனை சாவடியில் போலீசார் பந்தல் அமைத்து வாகன தணிக்கை செய்து வருகின்றனர்.

    தேசிய நெடுஞ்சாலை பகுதியில் இத்தகைய சோதனைகளில் ஈடுபடுவதால் குற்றங்கள் தடுக்க முடியும் என போலீசார் தெரிவித்தனர்.

    ஆப்கானிஸ்தான் நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள பரா மாகாணத்தில் சோதனைச் சாவடி மீது தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 30 போலீசார் உயிரிழந்தனர். #Talibankill #30policemenkill
    காபுல்:

    ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 45 சதவீதம் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவரும் தலிபான் பயங்கரவாதிகள் ஏராளமான பொதுமக்களை கொன்று குவித்து வருகின்றனர். அவர்களை வேட்டையாடும் நோக்கத்தில் ராணுவமும், விமானப் படையும் தாக்குதல் நடத்தி வருகிறது.

    இந்நிலையில், அந்நாட்டின் மேற்கு பகுதியில் தலிபான்களின் ஆதிக்கம் நிறைந்த ஃபரா மாகாணத்திற்குட்பட்ட காக்கி சஃபெட் மாவட்டத்தில் உள்ள ஒரு சோதனைச் சாவடி மீது நேற்று தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அம்மாவட்ட போலீஸ் கமிஷனர் உள்பட 30 போலீசார் உயிரிழந்தனர். 

    சுமார் 4 மணிநேரம் நீடித்த இந்த சண்டைக்கு பின்னர் அங்கிருந்து ஏராளமான ஆயுதங்களையும், வெடிப் பொருட்களையும் பயங்கரவாதிகள் அள்ளிச் சென்றதாகவும் எதிர் தாக்குதலில் 17 தலிபான்கள் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Talibankill #30policemenkill
    ஈராக் நாட்டின் பைஜி மாவட்டத்தில் உள்ள சோதனைச் சாவடியில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். #Iraq #ISattack
    பாக்தாத்:

    ஈராக் மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு தங்கள் ஆதிக்கத்தை முன்னிறுத்த முயன்று வருகிறது. ஈராக்கின் மொசூல் நகரை ஐ.எஸ் பயங்கரவாதிகள் கைப்பற்றி இருந்தனர். பின்னர் அரசுப்படை நடத்திய தாக்குதலில் ஐ.எஸ் அமைப்பினர் அங்கிருந்து விரட்டப்பட்டு அப்பகுதி மீண்டும் அரசின்வசம் வந்தது.

    இதையடுத்து, அவ்வப்போது மக்கள் கூடும் இடங்களிலும், தங்களுக்கு எதிரான போராட்டக்காரர்கள் மற்றும் ராணுவத்தின்மீது தாக்குதல் நடத்துவதுமாய் ஐ.எஸ் பயங்கரவாதிகள் தொடர்ந்து வருகின்றனர்.

    இந்நிலையில், ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள ஆல்பு ஜுவாரி என்ற கிராமத்தில் சோதனை சாவடி ஒன்று அமைந்துள்ளது. இந்த சோதனைச் சாவடியில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    மேலும், படுகாயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கொல்லப்பட்டவர்கள் அனைவரும் அல் ஷாபி எனும் பயங்கரவாதத்துக்கு எதிரான அமைப்பைச் சேர்ந்தவரகள் என்பது குறிப்பிடத்தக்கது. #Iraq #ISattack
    ×