search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டாஸ்மாக் கொள்ளை"

    பெரியகுளம் அருகே டாஸ்மாக் கடையில் பணம், மதுபாட்டில்கள் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

    தேவதானப்பட்டி:

    பெரியகுளம் அருகே தேவதானப்பட்டி கெங்குவார்பட்டி புஷ்பராணி நகரில் டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு வழக்கம் போல் வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டி சென்றனர்.

    நள்ளிரவு சமயத்தில் வாலிபர் ஒருவர் கடையின் பின்பக்கம் இருந்த சுவரில் துளையிட்டு உள்ளே புகுந்தார். பின்னர் அங்கிருந்த பணம் ரூ.6,800 மற்றும் மதுபாட்டில்களை எடுத்துக் கொண்டு தப்பி சென்றார்.

    மறுநாள் காலை விற்பனையாளர்கள் கடையை திறக்க வந்தபோது பின்னால் சுவரில் துளை போட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    உள்ளே சென்று பார்த்தபோது பணம் மற்றும் மதுபாட்டில்கள் கொள்ளைபோனது தெரிய வந்தது. இது குறித்து தேவதானப்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர் காமக்காபட்டியை சேர்ந்த ஞானசேகரன் என தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார் ஞானசேகரனிடம் இருந்து பணம் மற்றும் மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    பெருங்குடி அருகே டாஸ்மாக் கடைக்குள் புகுந்து மதுபாட்டில்கள், பணத்தை கொள்ளையடித்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    பேரையூர்:

    மதுரை, பெருங்குடி போலீஸ் சரகத்திற்குட்பட்ட வலையப்பட்டியில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு திருமங்கலம் கொடி மரத்தெருவைச் சேர்ந்த அப்துல் ரகு (வயது 44) என்பவர் மேலாளராகவும், முருகேசன் என்பவர் உதவியாளராகவும் பணிபுரிந்து வருகின்றனர்.

    நேற்று இரவு வழக்கம் போல் வியாபாரத்தை முடித்துக் கொண்டு இருவரும் கடையை மூடிவிட்டுச் சென்றனர்.

    வலையப்பட்டியைச் சேர்ந்த இப்ராகிம்ஷா (48) என்பவர் இரவு நேர காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். நேற்று இரவு இவர் டாஸ்மாக் கடைக்கு எதிரே உள்ள கட்டிடத்தில் தூங்கச் சென்றதாக கூறப்படுகிறது.

    நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.11 ஆயிரம் ரொக்கம், 144 மது பாட்டில்களை திருடினர்.

    அப்போது சத்தம் கேட்டு எழுந்த இப்ராகிம்ஷா திருடன்.... திருடன்... என கூச்சலிட்டார். இதையடுத்து உஷாரான கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பினர்.

    இது குறித்த புகாரின் பேரில் பெருங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து டாஸ்மாக் கடையில் பணம், மதுபாட்டில்களை திருடியவர்களை தேடி வருகின்றனர்.

    திருநின்றவூரில் டாஸ்மாக் கடையில் ரூ.2 லட்சம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருநின்றவூர்:

    திருநின்றவூர் கலர் காலனியில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. சூப்பர் வைசராக திருவள்ளூரை சேர்ந்த ரகுபதி பணியாற்றி வருகிறார்.

    மதியம் மதுக்கடையை திறக்க வந்தபோது ‌ஷட்டர் பூட்டு உடைந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பணப் பெட்டியில் இருந்த ரூ. 2 லட்சத்து 9 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது. நள்ளிரவில் வந்த மர்ம கும்பல் தரையில் புதைத்து வைக்கப்பட்டு இருந்த பணப் பெட்டியை உடைத்து பணத்தை அள்ளிச் சென்று இருந்தனர்.

    இது குறித்து திருநின்றவூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் அங்கு பதிந்து இருந்த ரேகைகளை பதிவு செய்தனர். இது தொடர்பாக மதுக்கடை ஊழியர்களிடமும் விசாரணை நடக்கிறது.

    திருத்துறைப்பூண்டி அருகே 2 டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்கள்- பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை அடுத்த ராயநல்லூர் புழுதிக்குடி சாலையில் அருகருகே 2 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதில் ஒரு கடையில் திருக்களாரை சேர்ந்த முருகானந்தம்(வயது 46) என்பவர் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார். பள்ளிவர்த்தியை சேர்ந்த அருள்ஜோதி(40), மீனம்பநல்லூரை சேர்ந்த ராஜா ஆகிய 2 பேரும் விற்பனையாளர்களாகவும் உள்ளனர். இதே போல் மற்றொரு கடையில் ஆதிச்சபுரத்தை சேர்ந்த ஜீவா(47) மேற்பார்வையாளராகவும், ஓவரூரை சேர்ந்த கரிகாலன்(41), பாமணியை சேர்ந்த லெனின்(43) ஆகியோர் விற்பனையாளர்களாகவும் பணியாற்றி வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் விற்பனையை முடித்துவிட்டு 2 டாஸ்மாக் கடைகளையும் பூட்டி வீட்டுக்கு சென்று விட்டனர். நேற்று பகலில் கடையை திறக்க ஊழியர்கள் வந்தபோது டாஸ்மாக் கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உள்ளே சென்று பார்த்தபோது 2 கடைகளிலும் ரூ. 1 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களும், ரூ. 11 ஆயிரமும் திருட்டு போனது தெரிய வந்தது.

    இது தொடர்பாக 2 டாஸ்மாக் கடைகளின் மேற்பார்வையாளர்கள் திருத்துறைப்பூண்டி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுபாட்டில்கள், பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    சின்னமனூர் பகுதியில் டாஸ்மாக் கடையில் சுவரில் துளையிட்டு கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே காமாட்சிபுரத்தில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று கடையை திறக்க பணியாளர்கள் வந்தனர்.

    உள்ளே சென்று பார்த்தபோது கடையின் பக்கவாட்டு சுவரில் மிகப்பெரிய துளை இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து ஓடைப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் அழகுராஜன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

    கடைக்குள் துளையிட்டு நுழைந்த கும்பல் 15 மதுபான பாட்டில்களை மட்டும் எடுத்து சென்றது தெரிய வந்தது. ஞாயிற்றுக்கிழமை விற்பனை அதிகமாக இருக்கும்.

    அதனை மறுநாள் வங்கியில் கட்டுவதற்காக ரூ.1 லட்சத்திற்கும் அதிகமான பணத்தை பணியாளர்கள் எடுத்து சென்று விட்டனர். இதனால் பணம் தப்பியது. இது குறித்து ஓடைப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையரை தேடி வருகின்றனர்.

    சுசீந்திரத்தில் நள்ளிரவு டாஸ்மாக் சூப்பர் வைசரை தாக்கி ரூ.2½ லட்சம் பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    என்.ஜி.ஓ. காலனி:

    சுசீந்திரத்தை அடுத்த அக்கரை பகுதியில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது.

    புதுக்கிராமம் பகுதியைச் சேர்ந்த முருகன் (வயது 49) என்பவர் டாஸ்மாக் கடை சூப்பர் வைசராக பணி புரிந்து வருகிறார். அவருடன் இங்கு 2 விற்பனையாளர்களும் உள்ளனர். அவர்கள் தினமும் இரவு 10 மணிக்கு கடை மூடிய பின்பு வசூலான பணத்தை எண்ணி வீட்டிற்கு எடுத்துச் செல்வது வழக்கம்.

    நேற்றும் இதுபோல கடை மூடியதும், வசூல் பணம் முழுவதையும் எண்ணி பதிவேட்டில் குறிப்பிட்டனர். மொத்தம் ரூ.2 லட்சத்து 49 ஆயிரத்து 30 பணம் வசூலாகி இருந்தது.

    வசூலான பணம் ரூ.2½ லட்சத்தையும் ஒரு பையில் எடுத்துக் கொண்டு மூவரும் வீட்டிற்கு புறப்பட்டனர். சூப்பர் வைசர் முருகன், பணத்துடன் தனது மோட்டார் சைக்கிள் அருகே சென்றார். விற்பனையாளர்கள் இருவரும் கடையின் ‌ஷட்டரை அடைத்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது டாஸ்மாக் கடை அருகே மூடிக்கிடந்த பாருக்குள் இருந்து முனங்கல் சத்தம் கேட்டது. உடனே சூப்பர் வைசர் முருகன் அங்கு சென்று பார்த்தார். உள்ளே 4 மர்ம நபர்கள் இருந்தனர். கைகளில் அரிவாள், உருட்டுக்கட்டையுடன் இருந்த அவர்கள், முருகனை சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கினர்.

    முருகனின் அலறல் சத்தம் கேட்டு விற்பனையாளர்கள் இருவரும் ஓடி வந்தனர். அவர்களையும் மர்மநபர்கள் மடக்கிப்பிடித்து அடித்து உதைத்தனர். பின்னர் மூவருக்கும் கொலை மிரட்டல் விடுத்து விரட்டி அடித்தனர். அதன் பிறகு மர்மநபர்கள் 4 பேரும் டாஸ்மாக் கடையில் வசூலான மொத்த பணம் ரூ.2½ லட்சத்தையும் எடுத்துக் கொண்டு தலைமறைவாகினர்.

    இந்த கொள்ளை சம்பவம் பற்றி சூப்பர் வைசர் முருகன் சுசீந்திரம் போலீசில் புகார் செய்தார்.

    இன்ஸ்பெக்டர் செல்வம், சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் குமார் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து டாஸ்மாக் கடை ஊழியர்களை தாக்கி பணம் கொள்ளையடித்த மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.

    சம்பவம் நடந்த டாஸ்மாக் கடை அருகே உள்ள கட்டிடங்களில் கண்காணிப்பு கேமிரா உள்ளதா? என்பதை போலீசார் விசாரித்து வருகிறார்கள். மேலும் கொள்ளையரின் உருவப் படங்கள் கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருக்கிறதா? என்பதையும் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    சம்பவம் நடந்த டாஸ்மாக் கடையின் பின்புறம் 4 வழிச்சாலை உள்ளது. டாஸ்மாக் ஊழியரிடம் கொள்ளை அடித்த மர்மநபர்கள் அந்த வழியாகத்தான் தப்பிச் சென்றிருக்க வேண்டும் என்று போலீசார் கருதுகிறார்கள். அவர்களை தேடி கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    கொள்ளை நடந்த டாஸ்மாக் கடை அருகில்தான் சுசீந்திரம் போலீஸ் நிலையம் உள்ளது. அதன் அருகேயே துணிகர கொள்ளை நடந்தி ருப்பது அப்பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள் ளது.

    ஜாபர்கான்பேட்டையில் டாஸ்மாக் கடையில் ரூ.2 லட்சம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    சென்னை ஜாபர்கான் பேட்டையில் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

    இது தொடர்பாக கடை விற்பனையாளர் மதன் மோகன் எம்.ஜி.ஆர். நகர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×