என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "டிரைவர் காயம்"
திருப்பூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து நேற்று நள்ளிரவு 1 மணிக்கு திருச்சிக்கு அரசு பஸ் புறப்பட்டு சென்றது. இந்த பஸ்சை கரூரை சேர்ந்த டிரைவர் வெள்ளைச்சாமி ஓட்டி சென்றார்.
இதில் 40 பயணிகள் பயணம் செய்தனர். பஸ் நல்லூர் அருகே உள்ள பள்ளக்காட்டு புதூர் பகுதியில் சென்று கொண்டு இருந்தது.
அப்போது அங்கு நின்று கொண்டிருந்த வாலிபர் திடீரென பஸ் மீது கல் வீசினார். இதில் முன் பக்க கண்ணாடி உடைந்து சிதறியது. இந்த கண்ணாடி டிரைவர் வெள்ளைச்சாமி மற்றும் பஸ்சில் பயணம் செய்த ஒரு பெண், இரு குழந்தைகள் மீது விழுந்தது.
இதில் அவர்கள் படுகாயம் அடைந்தனர். கண்ணாடி டிரைவர் மீது விழுந்ததும் பஸ் கட்டுப்பாட்டை இழந்தது. சுமார் 500 அடி தூரம் தாறுமாறாக ஓடியது. டிரைவர் சுதாரித்து கொண்டு பஸ் விபத்தில் சிக்காமல் சாதுர்யமாக செயல்பட்டு நிறுத்தினார்.
இதனால் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் உயிர் தப்பினார்கள். கண்ணாடி உடைந்ததில் காயம் அடைந்த டிரைவர் உள்பட 4 பேரும் ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை பெற்றனர்.
விபத்து குறித்து நல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அங்கு விரைந்து வந்தனர். பஸ் கல் வீசப்பட்ட பகுதியில் ஒரு திருமண மண்டபம் உள்ளது. அங்கு திருமணம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள ஏராளமானோர் வந்து இருந்தனர்.
அவர்கள் தான் கல் வீசி இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். இது தொடர்பாக திருமணத்திற்கு வந்த 10 பேரை பிடித்து விசாரித்தனர்.
அப்போது பஸ் மீது கல் வீசியது திருப்பூர் ராக்கியா பாளையத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் மனோஜ் குமார் (20) என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
அவர் எதற்காக பஸ் மீது கல்வீசினார். குடிபோதையில் வீசினாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஒரத்தநாடு:
மன்னார்குடி ராதாகிருஷ்ணன் நகர் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 40). இவர் கோழி ஏற்றி செல்லும் லோடு வேன் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று இரவு ஒரத்தநாட்டில் கோழி ஏற்றுவதற்காக மன்னார்குடியில் இருந்து புறப்பட்டார். அப்போது ஒரத்தநாடு அருகே உள்ள கக்கரை கிராமம் கீழரோடு அருகே அவர் சென்று கொண்டிருந்த போது அவர் ஓட்டி சென்ற லோடு வேன் நிலை தடுமாறி அந்த பகுதியில் இருந்த பயணிகள் நிழற்குடையின் மீது மோதியது.
இதில் சசிகுமார் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் லோடு ஆட்டோவின் முன்பகுதியில் சேதமானது. உடனே அக்கம் பக்கத்தினர் அங்கு வந்து சசிகுமாரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து ஒரத்தநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
சென்னையை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 48). லாரி டிரைவர். இவர் நேற்று மாலை பொருட்களை ஏற்றுவதற்காக காரைக்காலில் இருந்து புதுவை நோக்கி லாரியில் புறப்பட்டார்.
கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள சிதம்பரம் சாலையில் இன்று அதிகாலை லாரி வந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவர் மீது திடீரென லாரி மோதியது.
இந்த விபத்தில் லாரியின் முன்பக்கம் பலத்த சேதம் அடைந்தது. டிரைவர் ஆறுமுகம் காயம் அடைந்தார். தகவல் அறிந்த திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டனர். விபத்தில் சிக்கிய லாரியை ராட்சத கிரேன் மூலம் மீட்டனர்.
இந்த விபத்தால் கடலூர்-சிதம்பரம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர். விபத்து குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் சிதம்பரம் சாலையில் உள்ள கோஆப்டெக்ஸ் அலுவலகம் அருகே சாலையின் நடுவே கடந்த சில நாட்களுக்கு முன்பு தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பாக புதிதாக தடுப்பு சுவர் அமைக்கப்பட்டது. ஆனால் இந்த தடுப்பு சுவர் மீது எந்த ஒரு பிரதிபலிப்பானும் பொருத்தப்படவில்லை. இதனால் இந்த தடுப்பு சுவரால் ஏராளமான விபத்துக்கள் நடைபெற்று வருகிறது. நேற்று ஒரு லாரியும் தடுப்புசுவர் மீது மோதியது.
இந்த விபத்துக்களை தடுக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் புதிதாக கட்டப்பட்ட தடுப்பு சுவர் மீது பிரதிபலிப்பான் பொருத்த வேண்டும். கடலூர்- சிதம்பரம் சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு தடுப்பு கட்டை இருப்பதை அறிவுறுத்தவேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்