என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » தந்தை மரணம்
நீங்கள் தேடியது "தந்தை மரணம்"
பெற்ற தந்தை இறந்த தகவலை மறைத்து சகோதரியின் திருமணத்தை அண்ணன் நடத்தி முடித்த சம்பவம் அப்பகுதி பொது மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
லால்குடி:
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள நன்னிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் மதியழகன் மகன் ராஜகுரு. செம்பரை கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன் மகள் கனிமொழி. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராஜகுரு-கனிமொழி ஆகிய இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது.
நேற்று திருமணம் செய்ய இரு குடும்பத்தினரும் முடிவு செய்து, லால்குடி வடக்கு அய்யன்வாய்க்கால் அருகில் உள்ள திருமண மண்டபத்தை பதிவு செய்தனர். மணமகன், மணமகள் குடும்பத்தார் திருமண பத்திரிகை அடித்து அவர்களது உறவினர்கள், நண்பர்களுக்கு கொடுத்தனர்.
மணமகள் கனிமொழியின் தந்தை நடராஜனுக்கு தலையில் கட்டி ஏற்பட்டு பாதிக்கப்பட்டதால், அவர் திருச்சி மருத்துவமனையில் கடந்த ஒரு மாதமாக தங்கி சிகிச்சை பெற்று வந்தார். இதனிடையே திருமண ஏற்பாடுகளை இரு குடும்பத்தினரும் தடபுடலாக செய்து வந்தனர்.
இந்த நிலையில் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நடராஜன் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த விஷயம் மணமகளின் அண்ணன் உள்ளிட்ட சிலருக்கு மட்டுமே தெரியும். தந்தை இறந்த தகவலை தெரிவித்தால் தனது சகோதரியின் திருமணம் நின்று விடும் என்று கருதிய கனிமொழியின் அண்ணன், அந்த தகவலை மறைத்து, சகோதரியின் திருமணத்துக்கு செல்லாமல் மருத்துவமனையில் இருந்து விட்டார்.
நேற்று காலை ராஜகுரு- கனிமொழி திருமணம் நல்ல படியாக நடந்து முடிந்தது. அனைத்து திருமண சடங்குகளும் நிறைவடைந்தன. அந்த நேரத்தில் மணமகளின் உறவினர் ஒருவர் நடராஜன் இறந்த தகவலை அங்கிருந்த சிலரிடம் தெரிவிக்கவே, அந்த தகவல் திருமண மண்டபம் முழுவதும் பரவியது.
இதைக்கேட்ட மணமகள், அவரது தாய், சகோதரர் உள்ளிட்ட உறவினர்கள் அனைவரும் கதறி அழுதனர். மணமகன் குடும்பத்தினர் அனைவரும் பெரும் அதிர்ச்சியடைந்தனர். திருமணத்திற்கு வந்த அனைவரும் சோகத்தில் மூழ்கினர்.
இதையடுத்து அனைவரும் மருத்துவமனை சென்று உடலை ஊருக்கு கொண்டு சென்றனர். நேற்று மாலை நடராஜன் இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் மணக்கோலத்துடன் மணமகள் கலந்து கொண்டார். காலையில் மகள் திருமணம் நடந்த நிலையில், மாலையில் தந்தையின் இறுதிச் சடங்கு நடைபெற்றது.
பெற்ற தந்தை இறந்த தகவலை மறைத்து சகோதரியின் திருமணத்தை அண்ணன் நடத்தி முடித்த சம்பவம் அப்பகுதி பொது மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள நன்னிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் மதியழகன் மகன் ராஜகுரு. செம்பரை கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன் மகள் கனிமொழி. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராஜகுரு-கனிமொழி ஆகிய இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது.
நேற்று திருமணம் செய்ய இரு குடும்பத்தினரும் முடிவு செய்து, லால்குடி வடக்கு அய்யன்வாய்க்கால் அருகில் உள்ள திருமண மண்டபத்தை பதிவு செய்தனர். மணமகன், மணமகள் குடும்பத்தார் திருமண பத்திரிகை அடித்து அவர்களது உறவினர்கள், நண்பர்களுக்கு கொடுத்தனர்.
மணமகள் கனிமொழியின் தந்தை நடராஜனுக்கு தலையில் கட்டி ஏற்பட்டு பாதிக்கப்பட்டதால், அவர் திருச்சி மருத்துவமனையில் கடந்த ஒரு மாதமாக தங்கி சிகிச்சை பெற்று வந்தார். இதனிடையே திருமண ஏற்பாடுகளை இரு குடும்பத்தினரும் தடபுடலாக செய்து வந்தனர்.
நேற்று காலை ராஜகுரு- கனிமொழி திருமணம் நல்ல படியாக நடந்து முடிந்தது. அனைத்து திருமண சடங்குகளும் நிறைவடைந்தன. அந்த நேரத்தில் மணமகளின் உறவினர் ஒருவர் நடராஜன் இறந்த தகவலை அங்கிருந்த சிலரிடம் தெரிவிக்கவே, அந்த தகவல் திருமண மண்டபம் முழுவதும் பரவியது.
இதைக்கேட்ட மணமகள், அவரது தாய், சகோதரர் உள்ளிட்ட உறவினர்கள் அனைவரும் கதறி அழுதனர். மணமகன் குடும்பத்தினர் அனைவரும் பெரும் அதிர்ச்சியடைந்தனர். திருமணத்திற்கு வந்த அனைவரும் சோகத்தில் மூழ்கினர்.
இதையடுத்து அனைவரும் மருத்துவமனை சென்று உடலை ஊருக்கு கொண்டு சென்றனர். நேற்று மாலை நடராஜன் இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் மணக்கோலத்துடன் மணமகள் கலந்து கொண்டார். காலையில் மகள் திருமணம் நடந்த நிலையில், மாலையில் தந்தையின் இறுதிச் சடங்கு நடைபெற்றது.
பெற்ற தந்தை இறந்த தகவலை மறைத்து சகோதரியின் திருமணத்தை அண்ணன் நடத்தி முடித்த சம்பவம் அப்பகுதி பொது மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
அதிமுக முன்னாள் அமைச்சரும் தற்போது அதிமுக அமைப்புச் செயலாளராகவும் உள்ள கோகுல இந்திராவின் தந்தை சுப்பிரமணியன் (வயது 86) இன்று மரணம் அடைந்தார். #GokulaIndira
திருவொற்றியூர்:
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும் தற்போது அ.தி.மு.க. அமைப்புச் செயலாளராகவும் உள்ள கோகுல இந்திராவின் தந்தை சுப்பிரமணியன் (வயது 86) இன்று மரணம் அடைந்தார்.
மரணம் அடைந்த சுப்பிரமணிக்கு இரண்டு மகள்கள் ஒரு மகன் உள்ளனர். மகன் ஏற்கனவே சாலை விபத்தில் மரணம் அடைந்ததால் சுப்பிரமணி கோகுல இந்திரா வீட்டில் வசித்து வந்தார்.
சமீப காலமாக உடல் நலக்குறைவில் இருந்த அவர் இன்று அதிகாலை 5 மணிக்கு மரணம் அடைந்தார். அவரது இறுதிச் சடங்குகள் அண்ணாநகர் ஐயப்பன் கோயில் அருகில் உள்ள கோகுல இந்திரா இல்லத்தில் தொடங்கி மாலை 5 மணிக்கு வேலாங்காடு சுடுகாட்டில் நடைபெறுகிறது. அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் அதிமுகவினரும் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். #GokulaIndira

சாத்தான்குளம் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து மகன்கள் இறந்த சோகத்தில் தந்தையும் உடல்நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சாத்தான்குளம்:
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை அடுத்த தட்டார்மடம் அருகேயுள்ள மணிநகர் புதூரை சேர்ந்தவர் கோயில்மணி(60). இவர் ஐதராபாத்தில் தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி குணசீலி. இவர்களுக்கு 3 மகன்கள், 2 மகள்கள். இவர்களில் நான்கு பேருக்கு திருமணமாகிவிட்டது. கடைசி மகன் விஜய். இவருக்கு திருமணமாகவில்லை.
விஜய் கோவையில் தனியார் கடையில் வேலை பார்த்து வந்தார். விஜயின் அண்ணன் ராஜா புதூரில் சொந்தமாக டெம்போ வைத்து தொழில் செய்து வந்தார். விஜய் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். அந்த காதல் தோல்வியில் முடிந்ததாக கூறப்படுகிறது. இதனால் வெறுப்படைந்த விஜய் கோவையிலிருந்து புதூருக்கு வந்து கடந்த 20-ம் தேதி மதுவில் விஷம் கலந்து குடித்துவிட்டு மயங்கி விழுந்துவிட்டார்.
ஏற்கனவே 4 மாதங்களுக்கு முன்பு திருமணமான அவரது சகோதரர் ராஜா குடும்ப பிரச்சனையால் மதுவிற்கு அடிமையாகி இருந்துள்ளார். அவர் தம்பி குடித்துவிட்டு மீதம் வைத்திருந்த விஷம் கலந்திருந்த மதுவை சாதாரண மது என நினைத்து குடித்து விட்டார். சாத்தான்குளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராஜா 20-ந் தேதி இறந்தார். பாளை ஹைகிரவுண்ட் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட விஜய் 22-ந் தேதி இறந்தார்.
இரண்டு மகன்களும் இறந்த சோகத்தில் இருந்த கோயில்மணி வேலைக்கு சென்றார். அங்கு அவருக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. மேலும் சரியாக சாப்பிடாமல் இருந்துவந்தாராம். சம்பவத்தன்று அவர் தங்கியிருந்த அறையில் மயங்கி கிடந்தார். இது குறித்து அக்கம்பக்கத்தினர் புதூருக்கு தகவல் கொடுத்தனர்.
உறவினர்கள் சென்று அவரை மீட்டு வந்து உடன்குடி தனியார் மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளித்தனர். அங்கு அவரது உடல்நிலை மோசமானது. இதையடுத்து அவரை தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே கோயில்மணி பரிதாபமாக இறந்தார். ஒரே வீட்டில் 10 நாட்களுக்குள் 2 மகன்கள், தந்தை இறந்தது அந்த கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

திரைப்பட இயக்குனர் கவுதமனின் தந்தை மறைவுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். #DMK #MKStalin
சென்னை:
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
திரைப்பட இயக்குனர் கவுதமனின் தந்தை வடமலை உடல்நலக்குறைவு காரணமாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது இன்று இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து மிகுந்த துயரமுற்றேன்.
அவரது மறைவிற்கு திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டு, தந்தையை இழந்து வாடும் கவுதமனுக்கும், அவரது உறவினர்களுக்கும் அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். சமுதாய ஏற்றத்தாழ்வுகளை அறவே நீக்கிவிடும் வகையில் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே தாழ்த்தப்பட்ட மக்களின் அடிப்படை உரிமைகளுக்காக கடுமையாகவும், உறுதியாகவும் போராடிய அவரின் மறைவு சமத்துவ போராளிகளுக்கு பேரிழப்பாகும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #DMK #MKStalin

தவளக்குப்பம் அருகே தந்தை இறந்த சோகத்தில் மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி:
புதுவை தவளக்குப்பம் அருகே உள்ள நல்லவாடு கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி கல்பனா. இவர்களது மகள் புவனேஸ்வரி (வயது 15) இவர் 10-ம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று இருந்தார். இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடும்ப தகராறில் சரவணன் தற்கொலை செய்து கொண்டார்.
தந்தை மீது அதிகளவு பாசம் வைத்திருந்த புவனேஸ்வரிக்கு தந்தையின் மரணம் தாங்கி கொள்ள முடியவில்லை. எப்போதும் தந்தையின் நினைவிலேயே புவனேஸ்வரி இருந்து வந்தார். சோகத்தை மறைக்க குருசுகுப்பத்தில் உள்ள அவரது பாட்டி சரோஜினி வீட்டில் தங்கவைத்து இருந்தனர். எனினும் புவனேஸ்வரி பாட்டி சரோஜினியிடம் தனது தந்தை இறப்பு குறித்து அடிக்கடி கூறி வருத்தப்பட்டு வந்தார். அவரை சரோஜினி சமாதானம் செய்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று மாலை சரோஜினி கடைக்கு சென்றிருந்த வேளையில் புவனேஸ்வரி வீட்டின் குளியல் அறையில் துப்பட்டாவால் தூக்குபோட்டு தொங்கினார். பொருட்கள் வாங்கி கொண்டு சரோஜினி வீடு திரும்பிய போது பேத்தி புவனேஸ்வரி தூக்கில் தொங்குவதை கண்டு அலறினார். பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் புவனேஸ்வரியை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே புவனேஸ்வரி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் சோலைநகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
×

X