என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தமிழ்நாடு பிரீமியர் லீக்"
- இன்று சேலம் ஸ்பார்டன்ஸ் - திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதின.
- திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் குவித்தது.
8 அணிகள் பங்கேற்றுள்ள 8-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சேலத்தை அடுத்த வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் ஸ்டேடியத்தில் கடந்த 5-ம் தேதி தொடங்கியது.
இங்கு அரங்கேறிய முதல் 9 லீக் ஆட்டங்கள் கடந்த 11-ம் தேதி நிறைவடைந்ததை அடுத்து தற்போது 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிமைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இன்று சேலம் ஸ்பார்டன்ஸ் - திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற சேலம் ஸ்பார்டன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன் படி முதலில் களமிறங்கிய திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் குவித்தது. அதிரடியாக விளையாடிய சஞ்சய் யாதவ் 33 பந்துகளில் 68 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். சேலம் அணி தரப்பில் பொய்யாமொழி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
அடுத்ததாக களமிறங்கிய சேலம் ஸ்பார்டன்ஸ் அணி வீரர்கள் திருச்சி அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 163 ரன்களை மட்டுமே சேலம் அணி எடுத்தது.
இதன் மூலம் 35 ரன்கள் வித்தியாசத்தில் திருச்சி அணி அபார வெற்றி பெற்றது. சேலம் அணி தரப்பில் அதிகபட்சமாக முகமது அட்னான் கான் 40 ரன்களும் விவேக் 33 ரன்களும் எடுத்தனர். திருச்சி அணி தரப்பில் சரவண குமார் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
திருச்சி, தூத்துக்குடி அணிகள் பெற்ற வெற்றி எந்த பலனையும் தரவில்லை. ரன்ரேட்டில் அந்த அணிகள் ‘பிளேஆஃப்’ வாய்ப்பை இழந்தன. கோவை கிங்ஸ், காரைக்குடி காளை அணிகள் ‘பிளேஆஃப்’ சுற்றுக்கு நுழைந்தன.
திண்டுக்கல் டிராகன்ஸ், மதுரை பாந்தர்ஸ் அணிகள் தலா 10 புள்ளிகள் பெற்றன. ரன்ரேட்டில் முன்னிலையில் இருந்ததால் திண்டுக்கல் முதல் இடத்தையும், மதுரை 2-வது இடத்தையும் பிடித்தன.
கோவை கிங்ஸ், காரைக்குடி காளை, டூட்டி பேட்ரியாட்ஸ், திருச்சி வாரியர்ஸ் ஆகிய 4 அணிகள் தலா 8 புள்ளிகள் பெற்றன. இதில் கோவை கிங்ஸ், காரைக்குடி காளை ரன்ரேட்டில் முன்னிலை பெற்று முறையே 3-வது, 4-வது இடங்களை பிடித்து ‘பிளேஆஃப்’ சுற்றுக்கு தகுதி பெற்றன
இன்று ஓய்வு நாளாகும். ‘பிளேஆஃப்’ சுற்று நாளை (7-ந்தேதி) தொடங்குகிறது. நெல்லை சங்கர்நகர் ஐ.சி.எல். மைதானத்தில் நாளை இரவு 7.15 மணிக்கு ‘குவாலிபையர் 1’ ஆட்டம் தொடங்குகிறது. இதில் முதல் இடத்தை பிடித்த திண்டுக்கல் டிராகன்ஸ்- இரண்டாவது இடத்தை பிடித்த மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன.
இதில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். திண்டுக்கல் அணி ஏற்கனவே ‘லீக்’ ஆட்டத்தில் மதுரையை வீழ்த்தி இருந்தது. தோற்கும் அணி வெளியேறாது ‘குவாலிபையர் 2’ ஆட்டத்தில் விளையாடும்.
மதுரை பாந்தர்ஸ்
எலிமினேட்டர் ஆட்டம் 8-ந்தேதி திண்டுக்கல் அடுத்த நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடக்கிறது. இதில் 3-வது இடத்தை பிடித்த கோவை கிங்ஸ்- நான்காவது இடத்தை பிடித்த காரைக்குடி காளை அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றிபெறும் அணி ‘குவாலிபையர் 2’ ஆட்டத்தில் குவாலிபையர் 1-ல் தோல்வியடைந்த அணியுடன் விளையாடும். தோற்கும் அணி போட்டியில் இருந்து வெளியேற்றப்படும்.
கோவை அணி ‘லீக்’ ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் காரைக்குடி காளையை வீழ்த்தி இருந்தது. ‘குவாலிபையர் 2’ ஆட்டம் நத்தத்தில் வருகிற 10-ந்தேதியும், இறுதிப் போட்டி சென்னையில் 12-ந்தேதியும் நடக்கிறது.
பின்னர் 137 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருச்சி வாரியர்ஸ் அணி களம் இறங்கியது. பரத் ஷங்கர், மணி பாரதி தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். அணி பாரதி 6 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து பாபா இந்ரஸித் 26 ரன்னிலும், சுரேஷ் குமார் 7 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஆனால் பரத் ஷங்கர் 43 பந்தில் 69 ரன்கள் குவித்தார்.
சத்தியமூர்த்தி சரவணன் அவுட்டாகாமல் 16 பந்தில் 23 ரன்கள் அடிக்க திருச்சி வாரியர்ஸ் 17.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் நான்கு வெற்றிகள் திருச்சி வாரியம் 8 புள்ளிகள் பெற்றுள்ளது. ஆனால் காரைக்குடி காளை, கோவை கிங்ஸ் 8 புள்ளிகளுடன் அதிக ரன்ரேட் வைத்திருப்பதால் பிளேஆஃப் சுற்றை இழந்தது. #TNPL2018 # RTWvVKV
அதன்படி காரைக்குடி காளையின் வி ஆதித்யா, ஸ்ரீகாந்த் அனிருதா தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ஆதித்யா 16 பந்தில் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அனிருதா 43 பந்தில் 48 ரன்கள் எடுத்து அரைசதம் வாய்ப்பை இழந்தார்.
அதன்பின் வந்த ஷாஜகான் 1 ரன்னில் வெளியேறினார். 6-வது வீரராக களம் இங்கிய ராஜ்குமார் 9 பந்தில் 20 ரன்களும், ஸ்ரீனிவாசன் 20 பந்தில் 23 ரன்கள் அடிக்க காரைக்குடி காளை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 158 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. மதுரை பாந்தர்ஸ் அணியின் கிரண் ஆகாஷ், வருண் சக்ரவர்த்தி, கவுசிக், தன்வர் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.
அடுத்து களமிறங்கிய சந்திரன் 38 ரன்கள் அடித்து யோ மகேஷ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். 18.2 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 162 ரன்கள் குவித்து மதுரை பாந்தர்ஸ் வெற்றி பெற்றது.
சிறப்பாக விளையாடிய கார்த்திக் 50 பந்துகளில் 10 பவுண்டரிகள், 2 சிக்சர்களுடன் 85 ரன்கள் குவித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆட்ட நாயகனாகவும் கார்த்திக் தேர்வு செய்யப்பட்டார். #TNPL2018 #IKKVSMP
அதன்படி காரைக்குடி காளையின் வி ஆதித்யா, ஸ்ரீகாந்த் அனிருதா தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ஆதித்யா 16 பந்தில் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அனிருதா 43 பந்தில் 48 ரன்கள் எடுத்து அரைசதம் வாய்ப்பை இழந்தார்.
அதன்பின் வந்த ஷாஜகான் 1 ரன்னில் வெளியேறினார். 6-வது வீரராக களம் இங்கிய ராஜ்குமார் 9 பந்தில் 20 ரன்களும், ஸ்ரீனிவாசன் 20 பந்தில் 23 ரன்கள் அடிக்க காரைக்குடி காளை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 158 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. மதுரை பாந்தர்ஸ் அணியின் கிரண் ஆகாஷ், வருண் சக்ரவர்த்தி, கவுசிக், தன்வர் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.
அதன்படி எஸ் கார்த்திக், கங்கா ஸ்ரீதர் ராஜூ ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஸ்ரீதர் ராஜூ 5 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து கோபிநாத் களம் இறங்கினார். எஸ் கார்த்திக் - கோபிநாத் ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் ஸ்கோர் 11.1 ஓவரில் 110 ரன்னாக இருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. கோபிநாத் 22 பந்தில் 31 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் விளையாடிய எஸ் கார்த்தி 44 பந்தில் 11 பவுண்டரி, 2 சிக்சருடன் 76 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இவர் அவுட்டாகும்போது சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 14.3 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் சேர்த்திருந்தது. அதன்பின் வந்த உதிரசாமி சசிதேவ் 11 ரன்னிலும், ஸ்ரீஹரிஸ்குமார் 3 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். முருகன் அஸ்வின் அதிரடியாக விளையாடி 17 பந்தில் 34 ரன்கள் விளாச சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் குவித்துள்ளது.
டாஸ் வென்ற காரைக்குடி காளை பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி வி. ஆதித்யா, ஸ்ரீகாந்த் அனிருதா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஆதித்யா நிதானமாக ஆட்டத்தை வெளிப்படுத்த, அனிருதா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆதித்யா 19 பந்தில் 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அனிருதா 28 பந்தில் தலா நான்கு பவுண்டரி, சிக்சருடன் 56 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த மான் பஃவ்னா அதிரடியாக விளையாடி 23 பந்தில் 31 ரன்கள் சேர்த்தார். 6-வது வீரரான களம் இறங்கிய ஷாஜகான் ருத்ர தாண்டவம் ஆடினார். அவர் 20 பந்தில் 43 ரன்கள் விளாச காரைக்குடி காளை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் குவித்தது.
பின்னர் 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் சேஸிங் செய்து வருகிறது. #PattaiyaKelappu
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்