என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "திமுக தொண்டர் மரணம்"
தி.மு.க தலைவர் கருணாநிதி நேற்று மாலை 6.10 மணிக்கு காலமானார். இந்த செய்தியை அறிந்து நாகை மாவட்டத்தில் 3 தி.மு.க தொண்டர்கள் மரணம் அடைந்தனர்.
நாகை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள நெய்குப்பை தெற்கு தெருவைச் சேர்ந்தவர் தங்கவேலு. இவரது மகன் சுப்பிரமணியன் (வயது 68). தி.மு.க ஒன்றிய பிரதிநிதி ஆவார். இவர் நேற்று இரவு அவரது வீட்டில் டி.வி பார்த்து கொண்டிருந்தார். அப்போது கருணாநிதி மறைந்த செய்தி வந்தது. உடனே அதிர்ச்சி அடைந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதேபோல் பெரம்பூர் மேலத்தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 64). தி.மு.க மேடை பாடகர் ஆவார்.
இவரும் நேற்று தி.மு.க தலைவர் கருணாநிதி இறந்த செய்தி அறிந்து அவரது வீட்டில் மயங்கி விழுந்தார். அவரை அப்பகுதியில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக கூறினர்.
மயிலாடுதுறை அருகே கொற்கை அம்பேத்கார் நகரைச் சேர்ந்தவர் கொஞ்சான். இவரது மகன் நாகராஜ். தி.மு.க தொண்டர் ஆவார். இவர் நேற்று மாலையில் டி.வி பார்த்து கொண்டிருந்தார். அப்போது கருணாநிதி மறைந்த செய்தி வந்தது. இதை கேட்ட நாகராஜிக்கு மாரடைப்பு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். #RIPKarunanidhi #Karunanidhi #DMK
தி.மு.க தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு மற்றும் வயோதிகம் காரணமாக சென்னை காவேரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று முன்தினம் அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதால் தமிழகம் முழுவதும் பல தி.மு.க. தொண்டர்கள் தற்கொலை செய்தும், அதிர்ச்சியிலும் பலியானார்கள்.
துத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள கான்சாபுரத்தை சேர்ந்த தி.மு.க. தொண்டரும், வார்டு உறுப்பினருமான செல்வக்குமார் (வயது 42) என்பவர் நேற்று முன்தினம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். நெல்லை மாவட்டம் குருவிகுளம் அருகே உள்ள பிச்சை தலைவன் பட்டியைச் சேர்ந்த தி.மு.க. தொண்டரும், முன்னாள் கிளை செயலாளருமான கோயில்பிள்ளை (75) என்பவர் கருணாநிதிக்கு உடல்நலக்குறைவு என்று கேள்விபட்டதும் அதிர்ச்சியில் மரணம் அடைந்தார்.
பாளை என்.ஜி.ஓ. காலனியை அடுத்த திருநகரை சேர்ந்தவர் சங்கர் (50). தீவிர தி.மு.க. தொண்டரான இவர் சமையல் வேலை செய்து வந்தார். கருணாநிதிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது முதல் வேலைக்கு செல்லாமல் எப்போதும் டி.வியையே பார்த்துக்கொண்டு இருந்தார்.
மனைவி பேச்சியம்மாள் மற்றும் உறவினர்களிடம், என்தலைவருக்கு இப்படி ஆகிவிட்டதே இனி அவரது பேச்சை கேட்க முடியாது என்று கண்கலங்கி கூறி வந்துள்ளார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் மாலை திடீரென்று அவர் தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீவைத்தார். வேதனையிலும், தி.மு.க. வாழ்க, கலைஞர் வாழ்க என்று கத்தினார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு ஓடிவந்த அவரது மனைவி பேச்சியம்மாள் மற்றும் அருகில் உள்ளவர்கள், சங்கரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். 90 சதவீதத்திற்கு மேல் தீக்காயம் ஏற்பட்டதால் கவலைக்கிடமான நிலையில் இருந்த சங்கருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலன் அளிக்காமல் சங்கர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பெருமாள்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மரணம் அடைந்த சங்கர் உடலுக்கு இன்று நெல்லை மாவட்ட தி.மு.க பிரமுகர்கள் சென்று அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். முன்னாள் அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான் எம்.எல்.ஏ, மத்திய மாவட்ட கழக செயலாளர் அப்துல் வகாப், மாநகர செயலாளர் ஏ.எல்.எஸ் லட்சுமணன் எம்.எல்.ஏ மற்றும் ஏராளமான நிர்வாகிகளும் அஞ்சலி செலுத்தினர். மரணம் அடைந்த சங்கரின் மனைவி பேச்சியம்மாளை சந்தித்தும் அவர்கள் ஆறுதல் கூறினர். #DMK
ஈரோடு:
தி.மு.க தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவால் சென்னை காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தி.மு.க தொண்டர்கள் கருணாநிதி உடல் நலம் பெற வேண்டி கொண்டிருக்கிறார்கள்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள ஆயிகாரன்பாளையம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ஜனார்த்தனன் (வயது 47). தீவிர தி.மு.க. தொண்டர்.
கருணாநிதி உடல்நிலை பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டதிலிருந்தே இவர் சரியாக சாப்பிடாமல் இருந்தார். மேலும் சகநண்பர்களிடம் கூறி வருத்தப்பட்டு கொண்டே இருந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் படுத்து தூங்கிய ஜனார்த்தனன் இன்று எழுந்திருக்கவே இல்லை.
அருகே சென்ற அவரை பார்த்தபோது மாரடைப்பு ஏற்பட்டு ஜனார்த்தனன் இறந்தது தெரியவந்தது.
ஈரோடு கனிராவுத்தர் குளம் காந்தி நகர் முதல் வீதியை சேர்ந்தவர் கணேஷ் இவரது மனைவி ராஜேஸ்வரி (33). கூலி தொழிலாளியாக வேலை பார்க்கிறார்.
இவர்களுக்கு நந்தினி, செம்பருத்தி என்ற 2 மகள்களும் குருமூர்த்தி என்ற ஒரு மகனும் உள்ளனர்.
ராஜேஸ்வரி தி.மு.க. மகளிர் அணியில் உறுப்பினராக உள்ளார். தி.மு.க. தலைவர் கருணாநிதி மீது மிகுந்த பற்று கொண்டவர் கடந்த 2 நாட்களாக கருணாநிதி உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததை டி.வி.யில் பார்த்து ராஜேஸ்வரி மிகவும் வேதனையுடன் காணப்பட்டார்.
நேற்று இரவு கருணாநிதி உடல்நிலை திடீர் பின்னடைவு என்ற செய்தியை கேட்டதும் மிகவும் உடைந்து போனார்.
கலைஞர் ஐயா.. நம்மை விட்டு போய் விடுவாரோ. என சத்தம் போட்டபடி நேற்று இரவு மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே ராஜேஸ்வரி பரிதாபமாக இறந்தார். #karunanidhi #dmk
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்