என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "திருமண மண்டபம்"
- மாரண்டஅள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
- மண்டபத்தில் உள்ள பொருட்களை சேதப்படுத்திய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
பாலக்கோடு:
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியத்திற்குட்பட்ட நல்லூர் ஊராட்சி சென்னப்பன் கொட்டாய் கிராமத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் ரூ.85 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய திருமணம் கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்க்கு திறக்கப்பட்டது.
மண்டபத்திற்க்கு அடிப்படை தேவைகளான சமையல் பாத்திரம், நாற்காலி, கேஸ் அடுப்பு, மணமக்கள் நாற்காலிகள் உள்ளிட்ட ரூ.5 இலட்சத்து 75 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில் மர்ம நபர்கள் சிலர் திருமன மண்டபத்தில் புகுந்து நாற்காலி, எலக்ட்ரிக் சுவிட்ச், கழிவறை பைப்புகள், ஜன்னல் கண்ணாடி, சாமிபடம் உள்ளிட்ட பொருட்களை அடித்து உடைத்து சேதபடுத்தி சென்றுள்ளனர்.
அவ்வழியாக சென்றவர்கள் மண்டபம் திறந்து கிடப்பதையும், பொருட்கள் சேதமாகி உள்ளதையும் கண்டு மாரண்டஅள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்த மாரண்ட அள்ளி போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து மண்டபத்தில் உள்ள பொருட்களை சேதப்படுத்திய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
- வருகின்ற நாடாளு மன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற பாடுபட வேண்டும்.
- சாந்தி ஏழுமலை மற்றும் பாக முகவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் வடக்கு மாவட்டம் ஆரணி நாடாளுமன்றத் தொகுதி மற்றும் மயிலம் சட்டமன்றத் தொகுதி பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம் மயிலம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் ஜெரால்டு தலைமையில் ரெட்ட ணையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பா ளராக விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளரும், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமை ச்சருமான செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசும் போது ,
இளைஞர்களை அதிக அளவில் உறுப்பினர்களாக சேர்த்து, வருகின்ற நாடாளு மன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற பாடுபட வேண்டும். திருவ ண்ணாமலையில் நடைபெற இருக்கின்ற பாக முகவர்கள் மண்டல மாநாட்டிற்கு வருகின்ற 22 -ந்தேதி வருகை தரும் தி.மு.க. தலைவர், தமிழக முதல் அமைச்சர் ஸ்டாலினுக்கு விழுப்புரம் வடக்கு மாவட்டத்தின் சார்பில் திண்டிவனம், மயிலம், செஞ்சி ஆகிய இடங்களில் சிறப்பாக வரவேற்பு அளிக்க வேண்டும் என பேசினார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சேதுநாதன், மாசிலாமணி செந்தமி ழ்செல்வன்,தீர்மான குழு உறுப்பினர் செஞ்சி சிவா, மாவட்ட அவை தலைவர் சேகர், ஒன்றிய செயலாள ர்கள் மணிமாறன், செழியன், அண்ணாதுரை, ராஜாராம், துரை, இளம்வழுதி, ஒன்றிய குழு தலைவர்கள் அமுதா ரவிகுமார், யோகேஸ்வரி மணிமாறன், தலைமை செயற்குழு உறுப்பினர் சீனி.சின்னசாமி ,பொதுக்குழு உறுப்பினர் வீடுர் ரவி, மாவட்ட விவசாய அணி துணை தலைவர் நெலி சுப்பிரமணி, சாந்தி ஏழுமலை மற்றும் பாக முகவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- விக்கிரமங்கலத்தில் அ.ம.மு.க. ஆலோசனை கூட்டம் நடந்தது.
- செல்லம்பட்டி வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
சோழவந்தான்
மதுரை புறநகர் தெற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் செல்லம்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் அறிமுக கூட்டம் மற்றும் ஆலோசனைக்கூட்டம் விக்கிரமங்கலம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு செல்லம்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் மெடிக்கல் பாண்டி தலைமை வகித்தார். தெற்கு மாவட்ட செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஐ.மகேந்திரன் சிறப்புரையாற்றினார். தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளரும் உசிலம்பட்டி நகர்மன்ற உறுப்பினருமான பிரகதீஸ்வரன், அம்மா தொழிற்சங்க செயலாளர் பாண்டியன், மாவட்டத் துணைச் செயலாளர் நிலையரசி, மாவட்ட பேரவை தலைவர் செந்தில், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் தமிழ்ச்செல்வன், பால்சாமி, ராஜா, வாலிப்பாண்டி, மணிகண்டன், சீர்காளன், மலேசியா பாண்டியன், குணசேகர பாண்டியன், ராமகிருஷ்ணன், ரகுபதி, ஜெயக்கொடி, பெரியகருப்பன், மணிமாறன், முத்தையா, பிரபு, பாலசுப்பிரமணியன் மற்றும் செல்லம்பட்டி வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- பொதுமக்கள் சுற்றி வளைத்து மடக்கி பிடித்து திருவட்டார் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
- போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து எட்வின்சிங் கைது
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூர் அருகே புதுக்காட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் ஸ்டான்லி (வயது 33). அரசு ஒப்பந்ததாரர். இவருக்கும், ஆற்றூர் வட்ட விளை பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவரது மகன் எட்வின்சிங் (32) என்பவருக்கும் முன்விரோதம் காரணமாக குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது.
எட்வின்சிங் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளிநாட்டிலிருந்து சொந்த ஊருக்கு வந்திருந்தார். இந்நிலையில் நேற்று இரவு ஆற்றூர் மங்களாநடை பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு திருமண மண்டபத்தில் இளைஞர் ஒருவருடைய திருமணம் நடைபெற்றது.
இந்த திருமணத்தில் கலந்துகொள்ள வந்த ஸ்டான்லியை மண்டபத்தினுள் வைத்து திடீரென எட்வின்சிங் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஸ்டான்லியின் தலை மற்றும் கையில் சரமாரியாக வெட்டினார். பின்னர் அங்கிருந்து தப்பி ஓட முயன்ற எட்வின்சிங்கை அப்பகுதி பொதுமக்கள் சுற்றி வளைத்து மடக்கி பிடித்து திருவட்டார் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
மேலும் பலத்த காயமடைந்த ஸ்டான்லி ஆற்றூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டார். இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட திருவட்டார் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து எட்வின்சிங்கை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருமண நிகழ்ச்சிக்கு வந்த இளைஞரை திருமண மண்டபத்தினுள் வைத்து அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- பச்சாபாளையம் கோவில் திருமண மண்டபத்தில் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது.
- பல்லடம் போலீசில் புகார் அளித்துள்ளார்.
பல்லடம் :
பல்லடத்தில் உள்ள பச்சாபாளையம் கோவில் திருமண மண்டபத்தில் நேற்று திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. திருமணத்திற்காக வந்த கோவையைச் சேர்ந்த கார்த்திகா(வயது 28) என்பவர் மணமகனது அறையில் அவரது கைப்பை வைத்துவிட்டு சென்றுள்ளார்.
அதில் அவர் அணிந்திருந்த சுமார் 12 சவரன் தங்க நகை, ரொக்கம் ரூ. 24 ஆயிரம் ஆகியவற்றை கைப்பையில் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், திருமண வேலைகளில் மும்முரமாக இருந்தவர் சிறிது நேரம் கழித்து சென்று பார்த்தபோது கை பையை காணவில்லை. இதுகுறித்து திருமண மண்டபத்தில் உள்ளவர்களிடம் கூறியுள்ளார். யாரும் எடுக்கவில்லை எனக் கூறியதாக கூறப்படுகிறது .இதையடுத்து அவர் பல்லடம் போலீசில் புகார் அளித்துள்ளார்.புகாரின் பேரில் போலீசார் அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருமண மண்டபத்தில் நகை மற்றும் பணம் காணாமல் போனது திருமண வீட்டாருக்கு அதிர்ச்சி- சோகத்தை ஏற்படுத்திஉள்ளது.
- திருமணத்தின் போது கோவில்களில் சாமி தரிசனம் செய்துவிட்டு மணமகன் மற்றும் மணமகள் அழைப்பு நடைபெறும்.
- ஆந்திர திருமண மண்டபத்தில் இருதரப்பினர் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.
திருப்பதி:
திருமணத்தின் போது கோவில்களில் சாமி தரிசனம் செய்துவிட்டு மணமகன் மற்றும் மணமகள் அழைப்பு நடைபெறும்.
ஆனால் தற்போது சினிமா குத்து பாடல்களுக்கு நடனமாடியபடி மணமகன் மற்றும் மணமகளை அழைத்து வருகின்றனர்.
வரவேற்பு நிகழ்ச்சிகளில் மணமகன் மணப்பெண்களை நடனமாட வைத்து வீடியோ எடுக்கின்றனர்.
இது போன்ற ஒரு சம்பவத்தால் ஆந்திர திருமண மண்டபத்தில் இருதரப்பினர் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் ராமச்சந்திரபுரத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவருக்கும் தல்லாகுடி அடுத்த கஜ்ரம் பகுதியை சேர்ந்த பூஜிதாவுக்கும் திருமணம் நேற்று முன்தினம் நடந்தது.
இரவு மணமக்களின் உறவினர்கள் நண்பர்கள் ஏராளமானோர் திருமண மண்டபத்தில் குவிந்து இருந்தனர்.
பிரம்மாண்டமாக திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. திருமண வரவேற்பின் போது பாட்டு கச்சேரியுடன் ஆடல் பாடல் நிகழ்ச்சியுடன் திருமண மண்டபம் களை கட்டியது.
நேற்று காலை மணமகன் மணமகள் கழுத்தில் தாலி கட்டினார். விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
அப்போது மணமகன் வீட்டார் மணப்பெண்ணை சினிமா பாடலுக்கு ஏற்றவாறு நடனம் ஆட வேண்டும் என தெரிவித்தனர். மணப்பெண் தனக்கு நடனமாட தெரியாது என கூறினார்.
மணமகள் வீட்டாரும் மணமகளுக்கு நடனமாட தெரியாது என்றனர்.
இதனால் மணமகன் மணமகள் வீட்டாருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. மணமகன் வீட்டார் மணமகள் மற்றும் அவரது உறவினர்களை அங்கிருந்த சேர்களை தூக்கி வீசி எரிந்து தாக்கினர். இதில் மணமகளின் உறவினர் பெண் ஒருவருக்கு தலை மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. ஒருவருக்கு கை முறிந்தது.
மேலும் 3 பேர் காயமடைந்தனர். கொடு கொண்ட போலீசார் சம்பவம் இடத்திற்கு வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இரு தரப்பை சேர்ந்தவர்களும் ஒருவர் மீது ஒருவர் புகார் கொடுக்க போலீஸ் நிலையம் முன்பு குவிந்தனர்.
இதனால் அங்கும் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் இருதரப்பினரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
- அரசு பள்ளி மாணவிகளுக்கான செயல் விளக்க கருத்தரங்கு பஸ் நிலையம் பின்புறம் உள்ள மங்கலட்சுமி திருமண நிலையத்தில் இன்று நடைபெற்றது.
- மின்கசிவு ஏற்பட்டு மின் சாதன பொருட்களில் தீ விபத்து ஏற்பட்டது.
புதுச்சேரி:
செயற்கைக்கோளின் செயல்பாடு மற்றும் அதை விண்ணில் ஏவுவது குறித்து மாணவர்களுக்கு நேரடியாக விளக்க பயிற்சியை அப்துல்கலாம் அறக்கட்டளை நடத்தி வருகிறது.
புதுவை அரசு பள்ளி மாணவிகளுக்கான செயல் விளக்க கருத்தரங்கு பஸ் நிலையம் பின்புறம் உள்ள மங்கலட்சுமி திருமண நிலையத்தில் இன்று நடைபெற்றது.
சுயேச்சை எம்.எல்.ஏ. நேரு தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் பெருமளவில் கலந்து கொண்டனர்.
கணினி மற்றும் எல்.இ.டி. ஸ்கிரீன் மூலம் மாணவர்களுக்கு விளக்கம் செய்யப்பட்டு கொண்டிருந்த போது திடீரென மின்கசிவு ஏற்பட்டு மின் சாதன பொருட்களில் தீ விபத்து ஏற்பட்டது.
இதனால் ஆசிரியர்களும் மாணவியரும் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். அதற்குள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மின் கசிவு, தீ விபத்தையும் தடுத்தனர்.
இதனால் அப்பகுதியில் 10 நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது. மின்துறைக்கு தகவல் தெரிவித்தவுடன், அதிகாரிகள் நேரில் வந்து மின் இணைப்பை சரி செய்தனர். 15 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் நிகழ்ச்சி தொடர்ந்தது.
- புதுக்கடை போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- புதுக்கடை போலீசில் இருவர் மீதும் பல வழக்குகள் பதிவாகியுள்ளது.
கன்னியாகுமரி:
புதுக்கடை அருகே கீழ்குளம் பகுதி பரவை என்ற இடத்தை சேர்ந்தவர் ஜஸ்டின் கிறிஸ்டோபர் (வயது65). ஓய்வு பெற்ற பேராசிரியர். தற்போது அங்குள்ள ஒரு கிறிஸ்தவ சபை தலைவராக உள்ளார்.
அதே பகுதியை சேர்ந்தவர் ஜெகன்குமார். இவர் டெல்லியில் ராணுவ வீரராக உள்ளார். தற்போது விடுமுறைக்காக ஊருக்கு வந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் ஏற்கனவே முன் விரோதம் உள்ளது. இது சம்மந்தமாக புதுக்கடை போலீசில் இருவர் மீதும் பல வழக்குகள் பதிவாகியுள்ளது.
இந்த நிலையில் சம்ப வத்தன்று அங்குள்ள திரு மண மண்டபம் ஒன்றில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருவரும் சென்று ள்ளனர். அப்போது ஜெகன் குமார் தகாத வார்த்தை கள் பேசி ஜஸ்டின் கிறிஸ்டோ பரை இரும்பு கம்பியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததுள்ளார்.
இதில் காயம் அடைந்த ஜஸ்டின் கருங்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது போன்று ஜெகன்குமார் அளித்துள்ள புகாரில் ஜஸ்டின் தன்னை தகாத வார்த்தைகள் பேசி, தாக்கி கொலை மிரட்டல் விடு த்துள்ளதாக தெரிவித்து ள்ளார். மேலும் அவர் தேங்கா ப்பட்டணம் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- குறிப்பிட்ட தேதியில் திருமணம் நடத்தப்படாமல் தள்ளிப் போய் உள்ளது. எனவே வேறு ஒரு தேதியில் பதிவு செய்வதற்கு முயற்சி செய்த போது அந்த தேதி யில் திருமண மண்டபம் காலியாக இல்லை.
- எனவே முன்பணத் தொகையை திரும்ப தருமாறு மண்டபத்தின் செயலாளரிடம் அய்யப்பன் விண்ணப்பித்து உள்ளார். ஆனால் பணம் திரும்ப கிடைக்கவில்லை.
நாகர்கோவில்,
குமரி மாவட்டம் கோட்டாரைச் சேர்ந்த அய்யப்பன், கோட்டாரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் ரூ. 19 ஆயிரம் முன்பணம்செலுத்தி திருமணத்திற்காக பதிவு செய்துள்ளார்.
ஆனால் சில காரணங்க ளால் குறிப்பிட்ட தேதியில் திருமணம் நடத்தப்படாமல் தள்ளிப் போய் உள்ளது. எனவே வேறு ஒரு தேதியில் பதிவு செய்வதற்கு முயற்சி செய்த போது அந்த தேதி யில் திருமண மண்டபம் காலியாக இல்லை.
எனவே முன்பணத் தொகையை திரும்ப தருமாறு மண்டபத்தின் செயலாளரிடம் அய்யப்பன் விண்ணப்பித்து உள்ளார். ஆனால் பணம் திரும்ப கிடைக்கவில்லை.
எனவே மன உளைச்சலுக்கு ஆளான அய்யப்பன் குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறை தீர் ஆணைய தலை வர் சுரேஷ், உறுப்பினர் ஆ. சங்கர் ஆகியோர் விசாரித்த னர்.
தொடர்ந்து திருமண மண்டபத்தின் சேவை குறை பாட்டினை சுட்டிக் காட்டி பாதிக்கப்பட்ட அய்யப்ப னுக்கு நஷ்ட ஈடாக ரூ. 5 ஆயிரம், முன்பணத் தொகை ரூ. 19 ஆயிரம் மற்றும் வழக்கு செலவு தொகை ரூ. 2 ஆயிரத்து 500 ஆக மொத்தம் ரூ. 26 ஆயிரத்து 500-ஐ ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என அவர்கள் உத்தரவிட்டனர்.
- ரூ. 3.70 கோடி மதிப்பில் குளிரூட்டப்பட்ட திருமண மண்டபம் அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
- திருமண மண்டபம் கட்டுவதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.
திருமங்கலம்
இந்து சமய அறநிலை யத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருமங்கலம் வேங்கடசமுத்திரம் காட்டு பத்திரகாளியம்மன் கோவிலுக்கு சொந்தமான 12 ஏக்கர் நிலம் திருமங்கலம் பாண்டியன் நகர் அருகே உள்ளது.
இந்த இடத்தில் பொது மக்கள் பயன்படுத்தும் விதமாக திருமண மண்டபம் கட்டுவதற்கான ஏற்பாடுகள் குறித்து தமிழக இந்து சமய அறநிலையத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது இதையடுத்து மண்டபம் கட்டுவதற்கான திட்ட அறிக்கை தயார் செய்ய ப்பட்டு அனுப்பி வைக்க ப்பட்டது.
தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் பேரில் காட்டு பத்திரகாளியம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் இரண்டு ஏக்கர் பரப்பளவில் ரூபாய் 3.70 கோடி மதிப்பீட்டில் குளிரூட்டப்பட்ட திருமண மண்டபம் கட்டுவதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.
மண்டபத்தில் ஒரே நேரத்தில் 268 பேர் அமர்ந்து பார்க்கக் கூடிய வசதியுடன் 238 பேர் ஒரே நேரத்தில் சாப்பிடும் விதமாகவும் 15,000 சதுர அடியில் மண்டபம் கட்டப்படவுள்ளது. இந்த பூமி பூஜையில் திருமங்கலம் நகர் மன்ற தலைவர் ரம்யா முத்துக்குமார், துணைத் தலைவர் ஆதவன் அதியமான், கவுன்சிலர்கள் திருக்குமார், வீரக்குமார், வினோத் மற்றும் நிர்வாக அதிகாரி ரம்யா சுபாஷினி, தக்கார் சக்கரை அம்மாள், திருமங்கலம் அறநிலைய துறை ஆய்வாளர் சாந்தி, கோவில் உதவி அலுவலர் தண்டபாணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- ராஜபாளையம் சேக்கிழார் மன்ற அறக்கட்டளையின் சார்பில் சொற்பொழிவுக் கூட்டம் மறக்கண்ணுச் செட்டியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
- மன்றத்தலைவர் பூமிநாதன் தலைமை தாங்கினார்.
ராஜபாளையம்
ராஜபாளையம் சேக்கிழார் மன்ற அறக்கட்டளையின் சார்பில் சொற்பொழிவுக் கூட்டம் மறக்கண்ணுச் செட்டியார் திருமண மண்டபத்தில் நடந்தது. மன்றத்தலைவர் பூமிநாதன் தலைமை தாங்கினார். செயலாளர் கல்யாணவெங்கட்ராமன் வரவேற்றார். சுதா, தீபா ஆகியோர் தேவார பண்ணிசை பாடல் பாடினர்.
நெல்லை சிவ காந்தி "திருமுறைத்தமிழ்" என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார். கூட்டத்தில், கிருஷ்ணகிரி மாவட்ட சிவனடியார் திருக்கூட்டத் தலைவர் சிவசங்கர் வாழ்த்துரை வழங்கினார். ஏழை-எளிய மாணவர்களுக்கு இலவச சீருடைகள் வழங்கப்பட்டன. சிவனடியார்கள், இலக்கிய ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
மன்றத்தின் துணைத்தலைவர் சங்கரலிங்கம் நன்றி கூறினார். கூட்ட ஏற்பாடுகளை இணைச்செயலர்கள் முத்தையா, கணேசன் உட்பட மன்ற உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்