என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "திருமணம் நிச்சயம்"
நாகர்கோவில்:
கருங்கல் பகுதியில் பெற்றோரை இழந்த 23 வயது இளம்பெண் ஒருவர் உறவினர் பாதுகாப்பில் வசித்து வந்தார். இளம்பெண்ணுக்கு உறவினர்கள் சென்னையில் டிரைவர் வேலை பார்க்கும் வாலிபரை திருமணம் பேசி நிச்சயம் செய்தனர். திருமண நிச்சயத்திற்கு பிறகு இளம்பெண்ணும், டிரைவரும் அடிக்கடி செல்போனில் பேசிக்கொண்டனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் வசிக்கும் டிரைவரை பார்க்க இளம்பெண் தனியாக சென்றார்.
சென்னை சென்ற இளம்பெண் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இது பற்றி சென்னையில் உள்ள டிரைவரை உறவினர்கள் தொடர்பு கொண்டு கேட்டனர். அதற்கு அவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பெண், சென்னை கோயம்பேட்டில் நிற்பதாக எனக்கு போன் செய்தார்.
அன்று நான், வெளியூர் சவாரி சென்றிருந்தேன். இதனால் அந்த பெண்ணை உடனடியாக ஊருக்கு புறப்பட்டு செல்லும்படி கூறினேன், என்றார். அந்த பெண் ஊர் திரும்பாததால் அவர், சென்னையில் மாயமாகி இருக்கவேண்டும் என்று உறவினர்கள் கருதினர்.
மாயமான பெண்ணை கண்டுபிடித்து தரக்கோரி உறவினர்கள் குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத்திடம் மனு கொடுத்தனர். அவர், மாயமான பெண்ணை கண்டுபிடிக்க தனிப்படை அமைத்தார்.
தனிப்படை போலீசார் பெண்ணுக்கு நிச்சயம் செய்யப்பட்ட டிரைவரை அழைத்து விசாரித்தனர். அவரிடம் பெண் பேசிய செல்போன் எண்ணை கைப்பற்றினர். அந்த எண்ணுக்கு சொந்தமான நபரை கண்டுபிடிக்க முயன்றனர்.
இதில் அந்த எண்ணுக்குரிய நபர் சென்னையைச் சேர்ந்த பெண் என தெரிய வந்தது. அந்த பெண்ணின் பின்னணி குறித்து தனிப்படை போலீசார் விசாரித்தனர். இதில் அந்த சென்னை பெண் விபசார கும்பலுடன் தொடர்புடையவர் என தெரிய வந்தது. இதன் மூலம் டிரைவரை தேடி சென்னை சென்ற குமரி பெண் விபசார கும்பலிடம் சிக்கி இருக்கலாம் என்ற சந்தேகம் தனிப்படை போலீசாருக்கு ஏற்பட்டது.
அவர்கள், சென்னையிலேயே தங்கியிருந்து விபசார கும்பலுடன் தொடர்புடைய பெண்ணை கண்டுபிடித்தனர். அவரிடம் விசாரித்தபோது, அவர், குமரி பெண்ணை சென்னையில் பணிபுரியும் போலீஸ்காரர் ஒருவரிடம் ஒப்படைத்தது தெரிய வந்தது.
குமரி தனிப்படை போலீசார் சென்னை போலீஸ்காரரையும் கண்டுபிடித்து விசாரித்தனர். இதில், குமரி பெண்ணை கடத்தி சென்றது விபசார கும்பலைச் சேர்ந்த பெண்ணும், சென்னை போலீஸ்காரரும்தான் என தெரிய வந்தது. அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் நேற்று குமரி பெண், கண்டுபிடிக்கப்பட்டார்.
மீட்கப்பட்ட குமரி பெண்ணையும், அவரை கடத்திச் சென்ற விபசார கும்பலைச் சேர்ந்த பெண், சென்னை போலீஸ்காரர் ஆகியோரை தனிப்படை போலீசார் இன்று நாகர்கோவில் அழைத்து வந்தனர். இங்கு வந்ததும் மீட்கப்பட்ட பெண், தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி போலீசாரிடம் கூறியதாவது:-
எனக்கு நிச்சயம் செய்யப்பட்ட டிரைவரை தேடி சென்னைக்கு சென்றேன். கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து டிரைவரின் வீட்டிற்கு செல்ல வழி தெரியாமல் நின்றேன். அப்போது பெண் ஒருவர் என்னிடம் வந்து விவரம் கேட்டார். அவரிடம் என்னைப்பற்றி கூறினேன். அந்த பெண், என்னை டிரைவர் வீட்டிற்கு அழைத்துச் செல்வதாக கூறினார்.
மேலும் டிரைவர் சென்னையில் வேலை பார்ப்பதால் எனக்கும், சென்னையிலேயே வேலை வாங்கி தருவதாக கூறினார். இதற்காக அவருக்கு தெரிந்த போலீஸ்காரர் ஒருவரிடம் என்னை ஒப்படைத்தார். அந்த போலீஸ்காரர் அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அங்கு என்னை பாலியல் பலாத்காரம் செய்தார்.
அவரிடமிருந்து தப்பி வெளியே வந்தேன். சாலையில் நடந்து சென்றபோது, இன்னொரு வாலிபரும் என்னை கடத்திச் சென்று செக்ஸ் தொல்லை கொடுத்தார். பின்னர் ஊருக்கு வர ரெயில் நிலையம் வந்தபோது, குமரி மாவட்ட போலீசார் என்னை கண்டுபிடித்து இங்கு அழைத்து வந்தனர்.
இவ்வாறு அவர் போலீசாரிடம் கூறினார்.
பின்னர் மேலும் பல தகவல்களை முன்னுக்குப் பின் முரணாக கூறினார். இதனால் போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுபற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் கூறும்போது, பெண்ணிடம் விசாரணை நடந்து வருகிறது. அவர், கூறும் தகவலின்பேரில் தவறு செய்தவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
புதுச்சேரி:
புதுவை முத்திரையர் பாளையம் சேரன் நகர் கம்பன் வீதியை சேர்ந்தவர் பூங்காவனம். இவரது மனைவி சுதா. இவர்களது மகள் சூர்யா (வயது 18). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பூங்காவனம் இறந்து விட்டார். இதனால் சுதா கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்தார். இதற்கிடையே சூர்யாவுக்கு திருமண வயது எட்டியதால் அவருக்கு ஒரு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்தார்.
இன்னும் சில நாட்களில் திருமணம் நடைபெற இருந்ததால் திருமண செலவுக்காக சுதா பல இடங்களில் பணம் கடன் கேட்டார். ஆனால், அவர் கேட்ட இடங்களில் எல்லாம் பணம் இல்லை என்று கூறி விட்டனர்.
சம்பவத்தன்று இதுபற்றி சுதா தனது மகள் சூர்யாவிடம் உனது ராசி என்ன ராசியோ கேட்ட இடங்களில் எல்லாம் பணம் தர மறுக்கிறார்கள் என கூறினார்.
தாய் இதுபோன்று கூறியதால் சூர்யா மன முடைந்தார். இதனால் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டில் இருந்த எலி மருந்தை (விஷம்) தின்று விட்டார்.
இதில், மயங்கி விழுந்த சூர்யாவை அவரது தாய் சுதா மீட்டு சிகிச்சைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சூர்யா நேற்று இரவு பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இனியன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வடமதுரை:
திருச்சி மாவட்டம் வையம்பட்டியைச் சேர்ந்தவர் சண்முக வள்ளி (வயது 22). பி.எஸ்.சி. பட்டதாரி, வேடசந்தூரில் உள்ள ஒரு தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார். இதே மில்லில் வேலை பார்த்த தென்னம்பட்டியைச் சேர்ந்த ரமேஷ் (22) என்பவரும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்துள்ளனர்.
இவர்கள் காதல் விபரம் சண்முகவள்ளி குடும்பத்துக்கு தெரியவரவே வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமண ஏற்பாடுகள் செய்தனர். பத்திரிகை அச்சடித்து உறவினர்களுக்கு கொடுத்து வந்த நிலையில் சண்முகவள்ளி வீட்டை விட்டு வெளியேறி தனது காதலனிடம் நடந்த விபரங்களை கூறினார்.
இதனையடுத்து இன்று வேலாயுதம்பாளையத்தில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டு ரமேஷ் தனது காதல் மனைவியுடன் வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தார்.
திண்டுக்கல் மேட்டுப்பட்டியைச் சேர்ந்த பாலசுப்பிரமணி மகன் சாரங்கா (வயது 23). இவர் திண்டுக்கல்லில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரும் அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணி மகள் ஜீவராஜாத்தி (18) என்பவரும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்துள்ளனர்.
இவர் தற்போது திண்டுக்கல் தாலுகா அலுவலகத்தில் கம்ப்யூட்டர் பிரிவில் பணிபுரிந்து வருகிறார். இவர்கள் காதல் விபரம் வீட்டுக்கு தெரிய வரவே 2 பேரும் திண்டுக்கல்லில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
பின்னர் வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். போலீசார் அவர்களது பெற்றோர்களை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்