என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "திருவாரூர் இடைத்தேர்தல்"
திருவாரூர் சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்துவது தொடர்பாக மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
மேலும் தகுதியிழப்பு செய்யப்பட்டவர்களுக்கு தங்களது கருத்து பொருந்தாது என்றும் தெரிவித்த அவர்கள் விசாரணையை 18-ந்தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டனர். #MadrasHCBench
பழனி:
பழனியில் அ.தி.மு.க. சார்பில் வீரவணக்கநாள் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது:-
மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கநாள் பொதுக்கூட்டம் நடத்த தி.மு.க.வுக்கு எந்த தகுதியும் கிடையாது.
இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு கருணாநிதி தலைமை தாங்கினார். ஆனால் அவரது மகன், மகள், பேரன்கள் என அனைவரும் இந்தி பேசி வருகின்றனர்.
மு.க.ஸ்டாலின் வடமா நிலத்திற்கு சென்று இந்தியில் பேசுகிறார். எனவே மொழிப் போர் தியாகிகளுக்காக தி.மு.க. கூட்டம் நடத்துவது வேதனையான செயல்.
திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தலை நிறுத்த மு.க.ஸ்டாலின் கெஞ்சினார். அது குறித்த ஆடியோ எங்களிடம் உள்ளது. ஆனால் எங்களை பார்த்து இடைத்தேர்தலை சந்திக்க பயப்படுவதாக பிரசாரம் செய்து வருகின்றார்.
எப்போது தேர்தல் வந்தாலும் அதனை சந்திக்க அ.தி.மு.க. தயங்காது. பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி இந்த அரசை கலைக்க நினைக்கும் ஸ்டாலின், தினகரனின் கனவு ஒருபோதும் நிறைவேறாது.
உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது மக்களை சந்திக்காத மு.க.ஸ்டாலின் தற்போது கிராமம் கிராமமாக கூட்டம் நடத்தி வருகிறார். தரையில் அமர்ந்தாலும், உருண்டு புரண்டாலும் அவரால் முதல்வர் ஆக முடியாது.
சசிகலாவின் அக்கா மகன் என்ற தகுதியை தவிர தினகரனுக்கு வேறு எந்த தகுதியும் கிடையாது. சசிகலாவால் போயஸ் தோட்டத்திற்குள் புகுந்து பல கோடி சொத்துக்களை கொள்ளையடித்தார். தற்போது அந்த பணத்தை வைத்து அரசியல் நடத்தி வருகிறார். அவரது முதல்வர் கனவு பலிக்காது.
இவ்வாறு அவர் பேசினார். #dindigulsrinivasan #thiruvarurelection #mkstalin
மதுரை மாவட்டம், திருமங்கலம், மதிப்பனூரைச் சேர்ந்த தாமோதரன் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-
முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதி மறைவால் காலியாக உள்ள திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற 28-ந்தேதி நடக்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதையடுத்து கஜா புயல் நிவாரணப்பணிகள் முடியாத நிலையில் இப்போதைக்கு இடைத்தேர்தல் தேவையில்லை என்று அரசியல் கட்சிகள் வலியுறுத்தின. இதைத் தொடர்ந்து திருவாரூர் தொகுதிக்கான இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
அறிவிக்கப்பட்ட தேர்தலை ரத்து செய்ய தலைமை தேர்தல் ஆணையருக்கு அதிகாரம் இல்லை. இதற்கு மத்திய அரசுடன் ஆலோசித்து ஒப்புதல் பெற வேண்டும்.
இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது இடைத்தேர்தல் அறிவிப்பை ரத்து செய்வதற்கு மத்திய அரசிடம் தேர்தல் ஆணையம் முறையான அனுமதி பெற்றதா? என்பதற்கு வருகிற 30-ந் தேதி தேர்தல் ஆணையம் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
மேலும் வழக்கு விசாரணையை அன்றைய தேதிக்கு ஒத்திவைத்தனர். #MaduraiHCBench #ThiruvarurByElection
சென்னை:
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிஇருப்பதாவது:-
ஜனவரி 28-ந்தேதி நடை பெறுவதற்குத் திட்டமிடப்பட்டிருந்த திருவாரூர் சட்ட மன்ற இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்திருப்பது மனிதநேய மக்கள் கட்சி வரவேற்கிறது. திருவாரூர் இடைத்தேர்தலை நிறுத்துவதற்குத் தேர்தல்ஆணையம் ஒன்பது காரணங்களை கூறியிருக்கிறது.
இந்தக் காரணங்கள் அனைத்தும்நியாயமானவை. ஆனால் புதியவை அல்ல. திருவாரூர் தொகுதிக்கு மட்டும் இடைத்தேர்தலை அறிவிப்பதற்கு முன்பும் இதே காரணங்கள் இருந்தன. அப்போது ஏன் இந்தக் காரணங்களை தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வில்லை என்ற நியாயமான கேள்வி எழும்புகிறது.
இந்திய தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை நிறுத்திய அறிவிப்பு வெளியிடும் வரையில் ஆளும் அதிமுக வேட்பாளரை அறிவிக்காதது ஒரு பெரும் சந்தேகத்தை எழுப்புகிறது.
வருகின்ற பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து தமிழகத்தில் காலியாகஉள்ள 20 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை நடத்த வேண்டுமென மனித நேய மக்கள் கட்சி கேட்டுக் கொள்கிறது. இதன்மூலம் தேர்தல் செலவினங்களும் பெருமளவில் குறைவதற்கான வாய்ப்புள்ளது அது மட்டுமல்ல இந்தியாவில் எந்த ஒரு மாநிலத்திலும் 20 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடை பெற்றது இல்லை எனவே பாராளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டமன்றத்திற்கான இடைத்தேர்தலை நடத்துவது தான் அறிவுடைமையாகும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார். #ThiruvarurByElection
திருவாரூர் தொகுதிக்கு வருகிற 28-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து கடந்த 3-ந்தேதி வேட்புமனுதாக்கல் தொடங்கியது. 10-ந் தேதி வேட்பு மனுதாக்கல் கடைசி நாளாகும். பலர் மனுதாக்கல் செய்திருந்தனர்.
இந்த நிலையில் திருவாரூர்தொகுதி இடைத்தேர்தல் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
இன்று காலை அமைச்சர் சி.வி.சண்முகம் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் பொங்கல் பரிசு வழங்க சென்றார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்வியும், அவர் அதற்கு அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி: திருவாரூர் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதே?
பதில்: திருவாரூர் கஜா புயலால் பாதிக்கப்பட்டு உள்ளது. அங்கு நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. அங்கு சகஜநிலை திரும்பியபிறகு தேர்தல் நடந்தால் நல்லதுதான்.
திருவாரூரில் எப்போது தேர்தல் வந்தாலும் சந்திக்க அ.தி.மு.க. தயாராக உள்ளது.
கேள்வி: பாராளுமன்ற தேர்தலோடு சேர்த்து இடைத்தேர்தல் நடக்குமா?
பதில்: அவ்வாறு நடந்தாலும் நல்லதுதான்.
இந்தியாவில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் எதனை பற்றியும் கேட்கும் உரிமை உண்டு. இது பெரியார் பிறந்த மண். இது ஹிட்லர் நாடு அல்ல.
ஆனால் தேவையின்றி அமைச்சர்களை கட்டுப்படுத்துங்கள் என்று பேசுவது தவறு. அம்மா வீட்டுக்கு வேலை செய்ய வந்தவர்கள், அம்மா மரணத்துக்கு காரணமான தினகரன் குடும்பத்தினர் இன்று வாய்க்கு வந்ததை பேசி வருகின்றனர்.
தினகரன் உல்லாச விடுதியில் இருந்து போதையில் பேசுவதுபோல் பேசி வருகின்றார். அம்மா வீட்டிற்கு வேலை செய்ய வந்தவர்கள் தமிழகத்தை ஆளவேண்டும் என்று நினைப்பது தவறு. தினகரன் இதோடு நிறுத்தி கொள்ளவேண்டும்.
அதுபோலவே அ.தி.மு.க. தொண்டன் என்ற முறையில் எனக்கு தோன்றிய சந்தேகங்களை தெரிவித்திருந்தேன். ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சங்கத்தினர் நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லியிருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #MinisterCVshanmugam
கரூர் சதாசிவ பிரம்மேந்திராள் கோவிலில் பா.ஜ.க. பிரமுகரும், நடிகருமான எஸ்.வி.சேகர் இன்று சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் அன்பழகனை சந்தித்து விட்டு வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பேஸ்புக்கில் பெண் பத்திரிகையாளரை அவதூறாக விமர்சித்ததாக என் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. எனக்கு ஒருவர் அனுப்பிய தகவலை வேறொருவருக்கு நான் அனுப்பினேன். அது எனது கருத்தோ, எழுத்தோ இல்லை என்பதை தெளிவுபடுத்திவிட்டேன். இந்த பிரச்சனை தொடர்பாக என் மீது 7,8 வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்குகளை ஒரே இடத்தில் நடத்தும் வகையில் வக்கீல்கள் மூலம் நடவடிக்கை எடுத்து வருகிறேன்.
மதசார்பற்றவராக காட்டி கொள்ளும் கேரள முதல்வர் பினராயி விஜயன், மத வெறி பிடித்தவராக உள்ளார். சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துகிறேன் என்று சொல்லும் அவர், முல்லை பெரியாறு விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏன் அமல்படுத்தவில்லை. மதவெறி பிடித்த அரசாக கேரள அரசு செயல்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார். #SVShekher #TNGovt #Edappadipalaniswami
அ.ம.மு.க. கட்சி துணை பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறி இருப்பதாவது:-
தேர்தல் அறிவிக்கை வெளியிட்டு தேர்தல் நடைமுறைகள் தொடங்கிய பிறகு கருத்து கேட்பு என்ற பெயரில் ஒரு நாடகத்தை நடத்தி திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை ரத்து செய்திருக்கிறது தேர்தல் ஆணையம். இது ஜனநாயக நடை முறைகளை கேலிக்கூத் தாக்குவதாகும்.
திருவாரூரில் அ.ம.மு.க. வெற்றிபெறும் என்ற கள யதார்த்தத்தை உணர்ந்தே இந்த விஷயத்தில் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் கைகோர்த்துள்ளன. இதற்கு சரியான தண்டனையை எப்போது தேர்தல் வந்தாலும் இந்த 2 கட்சிகளுக்கும் வழங்க திருவாரூர் மக்கள் தயாராகவே இருக்கிறார்கள்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார். #ElectionCommission #TTVDinakaran
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் கும்பகோணத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை தேர்தல் கமிஷன் ரத்து செய்ததை இந்திய கம்யூனிஸ்டு கட்சி வரவேற்கிறது.
5 மாநிலங்களுக்கு தேர்தல் நடைபெற்ற போது தமிழகத்தில் பருவமழையை காரணம் காட்டி இடைத்தேர்தலை தமிழக அரசு நிறுத்தி விட்டது.
திருவாரூர் மாவட்ட மக்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் பல இடங்களில் நிவாரண உதவிகள் வழங்கப்படவில்லை. இதேபோல் ஏராளமான பேர் ஆதார் கார்டு, வாக்காளர் அட்டை இல்லாமல் உள்ளனர். இதனால் திருவாரூர் தேர்தலை ரத்து செய்ய கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் டி.ராஜா எம்.பி. கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
மேலும் தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி திருவாரூர் கலெக்டர் அனைத்து கட்சிகள் கூட்டத்தை கூட்டி தேர்தல் நடைபெறுவது குறித்து கருத்துகள் கேட்டார்.
திருவாரூர் தேர்தல் ஒருவேளை நடைபெற்று இருந்தால் தி.மு.க. வேட்பாளர் தான் வெற்றி பெறுவார். அ.தி.மு.க. டெபாசிட் இழந்திருக்கும். இதற்கு பயந்து தான் பா.ஜனதா துணையுடன் தேர்தலை நிறுத்தி விட்டனர். திருவாரூர் தொகுதியில் இதுவரை அ.தி.மு.க. வெற்றி பெற்றதே கிடையாது.
கடந்த 2017-18-ம் ஆண்டுக்கான விவசாயிகளுக்கு பயிர்காப்பீடு தொகை வழங்கப்படாமல் உள்ளது. இதற்கு நாங்கள் தொடர் போராட்டங்களை நடத்தியதால் விரைவில் வழங்குவதாக கூறுகிறார்கள்.
8,9-ந் தேதிகளில் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என அரசு ஊழியர்கள் அறிவித்துள்ளனர். இதற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆதரவு தெரிவிக்கிறோம். ஆனால் போராட்டம் நடத்தினால் அவர்களது சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என தலைமை செயலாளர் தெரிவித்துள்ளார். மேலும் தற்காலிக பணியாளர்கள் வேலைக்கு வராவிட்டால் பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என்றும் அறிவித்துள்ளார். இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார். #ThiruvarurByElection #Mutharasan #ADMK #BJP
சென்னை:
கருணாநிதி மரணம் காரணமாக 7-8-2018 முதல் திருவாரூர் சட்டசபை தொகுதி காலி இடமாக உள்ளது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி காலியாக உள்ள தொகுதிக்கு 6 மாதங்களுக்குள் அதாவது 6-2-2019க்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
அதன் அடிப்படையில் தேர்தல் ஆணையம் ஜனவரி 3-ந்தேதி அறிவிக்கை வெளியிட்டது. 28-ந்தேதி ஓட்டுப்பதிவு நடத்துவதற்கு ஏற்ப தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டது.
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கடந்த 3-12-2018 அன்று தேர்தல் ஆணையத்துக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தார். அதில் அவர் கஜா புயல் காரணமாக டெல்டா மாவட்டங்களில் கடும் பேரிழவு ஏற்பட்டு இருப்பதாக குறிப்பிட்டு இருந்தார். விவசாய பயிர்கள், தோட்டக்கலை பயிர்கள் அழிந்ததோடு 6 லட்சம் வீடுகள், 1½ லட்சம் மின் கம்பங்கள் சேதம் அடைந்து இருப்பதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.
கஜா புயல் பாதித்த 12 மாவட்டங்களில் திருவாரூர் மாவட்டமும் ஒன்று என்றும், அங்கு நிவாரணப் பணிகள் முடிந்து முழுமையான இயல்பு நிலை திரும்ப குறைந்தது 3 மாதங்கள் ஆகும் என்றும் கூறி இருந்தார். எனவே திருவாரூர் தொகுதிக்கு 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு முன்பு இடைத்தேர்தல் நடத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டு இருந்தார்.
மேலும் தலைமைச் செயலாளர் தனது கடிதத்தில், காலி இடமாக உள்ள மேலும் 18 தொகுதிகளுக்கு ஏப்ரல் மாதத்திற்கு முன்பு இடைத்தேர்தல் நடத்த வேண்டாம் என்று கோரிக்கை விடுத்து இருந்தார். தமிழக அரசு தலைமை செயலாளரின் இந்த கடிதத்தை மத்திய உள்துறைக்கு தேர்தல் ஆணையம் அனுப்பி கருத்து கேட்டது.
அதை ஏற்று கடந்த 31-12-2018 அன்று மத்திய உள்துறை அமைச்சகம் பதில் அளித்து இருந்தது. அதில், “தமிழ்நாட்டில் நவம்பர் 15-ந்தேதி தாக்கிய கஜா புயலில் நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. அந்த பகுதிகளில் மாநில அரசு மூலம் நிவாரணப் பணிகள் நடந்து வருகிறது” என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் கடந்த 2-1-2019 அன்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் தேர்தல் ஆணையத்துக்கு இ.மெயில் மூலம் ஒரு வேண்டுகோள் விடுத்து இருந்தார். திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று கேட்டு இருந்தார். மறுநாள் 3-1-2019 அன்று அவர் தேர்தல் கமிஷனரை நேரில் சந்தித்து இது தொடர்பாக மனு அளித்தார்.
மேலும் கஜா புயல் தாக்குதல் காரணமாக மாநில அரசு அதிகாரிகள் அனைவரும் நிவாரணப் பணிகளில் தீவிரமாக உள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்கள் தற்காலிகமாக மற்றொரு மாவட்டத்துக்கு இடம் பெயர்ந்து உள்ளனர். இதுபற்றி தலைமை தேர்தல் ஆணையம் தமிழக தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்டது. சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு செய்யலாம் என்று கூறி இருந்தார்.
இதையடுத்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் திருவாரூரில் தேர்தல் நடத்த உகந்த சூழ்நிலை உள்ளதா? என்று கேட்கப்பட்டது. அதன் அடிப்படையில் மாவட்ட தேர்தல் அதிகாரி திருவாரூரில் கடந்த 5-1-2019 அன்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை அழைத்து கருத்து கேட்டார்.
பா.ஜனதா, காங்கிரஸ், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, தேசியவாத காங்கிரஸ், அ.தி.மு.க., தி.மு.க., தே.மு.தி.க. ஆகியவை உள்பட பல்வேறு கட்சிகள் திருவாரூர் இடைத்தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டன. கஜா புயல் நிவாரப்பணிகள் நடந்து வருவதால் இடைத்தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று இந்த கட்சிகள் கோரிக்கை விடுத்து இருந்தன.
இது தொடர்பாக கடந்த 6-1-2019 அன்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கமான அறிக்கை ஒன்றை இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி இருந்தார். அதில் கூறி இருந்ததாவது:-
1. கஜா புயலால் இடம் பெயர்ந்துள்ள பட்டியலை தயாரிக்க மாநில நிர்வாகத்துக்கு கூடுதல் அவகாசம்.
2. கஜா புயல் நிவாரணப் பணிகள் பாதிதான் முடிந்து உள்ளன. முழுமையாக முடிக்க அவகாசம் வேண்டும். நிவாரணப் பணிகளில் உள்ள அதிகாரிகள்தான் தேர்தல் பணிகளை செய்ய வேண்டி உள்ளது.
3. தமிழ்நாட்டின் முக்கிய பண்டிகையான பொங்கல் திருநாள் தேர்தல் சமயத்தில் வருகிறது.
4. டெல்டா மாவட்டங்களில் சம்பா அறுவடை நடைபெற உள்ளது. அந்த சமயத்தில் நேரடி நெல் கொள்முதல் மையங்கள் அமைக்கப்பட வேண்டி உள்ளது. அந்த சமயத்தில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீற வாய்ப்பு உள்ளது.
5. கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னமும் முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.
6. இந்த சூழ்நிலையில் வியாபாரிகளும் இடைத்தேர்தல் நடத்தப்படுவதை விரும்பவில்லை.
7. தமிழ்நாட்டில் பள்ளிகளில் பொதுத்தேர்தவு 2 வாரங்களில் நடைபெற உள்ளது. இந்த சமயத்தில் ஆசிரியர்களை தேர்தல் அதிகாரிகளாக பணியாற்ற வைப்பதில் இடையூறு உள்ளது.
8. இத்தகைய சூழ்நிலையில் பொதுமக்கள் தேர்தல் நடைமுறைகளில் ஆர்வமுடன் தீவிரமாக பங்கேற்கமாட்டார்கள்.
9. மேலும் திருவாரூர் இடைத்தேர்தல் குறித்து அனைத்து கட்சிகளிடமும் கருத்து கேட்டபோது அனைத்து கட்சிகளும் தேர்தலை நடத்த வேண்டாம் என்றும் ஒத்திவைக்க கோரியும் கருத்து தெரிவித்து உள்ளன.
இவ்வாறு தமிழக தேர்தல் அதிகாரியின் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
கஜா புயலால் திருவாரூர் மாவட்டத்தில் நிவாரணப் பணிகள் செய்ய வேண்டி இருப்பதை மாவட்ட கலெக் டர் மூலம் தெரிய வந்துள்ளது. இதை கருத்தில் கொண்டு தற்போது திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தலை சுமூகமாக நடத்த முடியாது என்ற முடிவுக்கு தேர்தல் ஆணையம் வந்தது.
எனவே மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் -1951 பிரிவு 150, 30, 56 மற்றும் அரசியல் சட்டப்பிரிவு 326, பொது காரணங்கள் சட்டப்பிரிவு 21 ஆகியவற்றின் அடிப்படையில் திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்படுகிறது. இதன் விளைவாக திருவாரூர் தொகுதி மாவட்ட தேர்தல் அதிகாரி இதுவரை மேற்கொண்டு இருந்த தேர்தல் தொடர்பான அனைத்து பணிகளும், நடவடிக்கைகளும் செல்லாது என்று அறிவிக்கப்படுகிறது.
தமிழக அரசின் கடிதம் மற்றும் கட்சிகளின் கருத்து அடிப்படையில் திருவாரூர் தொகுதி தேர்தல் ரத்து ஆகிறது. திருவாரூர் தொகுதியில் சுமூகமாக, நியாயமாக, அமைதியாக தேர்தல் நடத்த உகந்த சூழ்நிலை உருவான பிறகு மீண்டும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையர்களின் உத்தரவில் தெரிவிக்கபட்டுள்ளது.
இதுதொடர்பாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக சட்டமன்றத்தில், மொத்தம் காலியாக உள்ள 20 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் சேர்த்து, ஒரே நேரத்தில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் திருவாரூர் தொகுதிக்கு மட்டும் தனிமைப்படுத்தி இடைத்தேர்தல் நடத்துவதில், சூட்சுமமான உள்நோக்கம் இருக்கலாம் என்று ஏற்கனவே சொல்லி இருந்தேன்.
மேலும் திருவாரூரில் கஜா புயல் தொடர்பான நிவாரணப்பணிகள் இன்னும் முழுமையடையாத நிலையில், அத்தொகுதிக்கு மட்டும் இடைத்தேர்தல் என்பது, நிவாரணப்பணிகளில் பெரும் பின்னடைவு ஏற்பட்டு, பொதுமக்களின் அதிருப்தியும் கோபமும் அதிகமாகி, வாக்களிப்பதற்கு முழுவதும் எதிரான மனநிலை உருவாகிவிடும்; அப்படிப்பட்ட மனநிலை ஜனநாயகத்தை நிச்சயம் செழுமைப்படுத்தாது.
தேர்தலில் வெற்றி பெறுவது என்பதைவிட, கஜா புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள திருவாரூர் தொகுதி மக்களுக்கு உரிமையான நிவாரணப்பணிகள் தடைபட்டுவிடக்கூடாது என்பதுதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கருத்து.
வருகின்ற பாராளுமன்ற தேர்தலுடன் இணைத்து, “மினி சட்டமன்றத் தேர்தல்” என்று சொல்லுமளவுக்கு காலியாக உள்ள 20 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே நாளில் இடைத்தேர்தலை நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தைக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #MKStalin #TiruvarurByElection
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்