என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நடவு பணி"
- தாவரவியல் பூங்காவில் ஏற்காடு ரோஜா என்று அழைக்கப்படும் டேலியா மலர்கள் நடவு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
- 675 வகையான ரோஜா செடிகள் என மொத்தம் 6,750 எண்ணிக்கையில் நடவு செய்யப்பட்டு வருகிறது
ஏற்காடு:
ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் ஆண்டுதோறும் மே மாதத்தில் கோடை விழா மலர் கண்காட்சி நடத்தப்படும். தமிழகத்தில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டுக்கு வருகை தருவார்கள். சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தாவரவியல் பூங்காவில் ஏற்காடு ரோஜா என்று அழைக்கப்படும் டேலியா மலர்கள் நடவு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து தோட்ட கலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
ஏற்காடு கோடை விழாவில் மலர் கண்காட்சிக்கு தேவைப்படும் மலர்ச்செடிகளை இப்போதே நடவு செய்ய தொடங்கியுள்ளோம். அண்ணா பூங்காவில் பால்சம், ஜீனியா, சால்வியா, டெல்பினியம், ஆஸ்டர், மேரிகோல்டு, சூரியகாந்தி ஆகிய மலர் விதைகள் 25 ஆயிரம் முதல் கட்டமாக விதைக்கப்பட்டுள்ளன. ஏற்காடு ரோஜா என்று அழைக்கப்படும் டேலியா கட்டிங்ஸ், 3ஆயிரம் எண்ணிக்கைக்கு மேல் மேட்டுப்பாத்திகளில் நடவு செய்யப்பட்டுள்ளன. மேலும், ரோஜா பூங்கா, அண்ணா பூங்கா, முதலாவது அரசு தாவரவியல் பூங்கா ஆகியவற்றில் 675 வகையான ரோஜா செடிகள் என மொத்தம் 6,750 எண்ணிக்கையில் நடவு செய்யப்பட்டு வருகிறது.
ஏற்காட்டில் பருவமழை சீராக பெய்துள்ளதால், தற்போது தட்பவெப்ப நிலை சீராக உள்ளது. இதன் காரணமாக, தோட்டங்களில் வைத்துள்ள பூச்செடிகள் செழித்து வளர தொடங்கியுள்ளன. கோடை விழா தொடங்கும் போது, பூச்செடிகள் முழுமையாக வளர்ச்சியடைந்து, பூத்துக் குலுங்கி, சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமையும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- சம்பா நெல் நடவு பணிகள் விறுவிறுப்பு நடைபெற்று வருகிறது.
- தொடர் மழை விவசாயி களை மட்டுமின்றி பொது மக்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ராமநாதபுரம்
தமிழகம் முழுவதும் கோடை காலம் முடிவடைந்த பின்னரும் வழக்கத்தைவிட வெயில் கொளுத்தி வந்தது. பகல் நேரங்களில் வெளியில் நடமாடக்கூட முடியாத அளவுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதன் காரணமாக வைகை அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்தது.
மதுரை, ராமநாதபுரம் உள்பட 5 மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாக திக ழும் வைகை அணை வறண்டதால் விவசாயம் கேள்விக்குறியானது. வழக்க மாக விவசாயிகள் சம்பா நெல் நடவு பணிகளை தொடங்காமல் இருந்தனர். மேலும் பருவ மழையை எதிர்பார்த்தும் காத்திருந்தனர்.
இந்தநிலையில் தென் மேற்கு பருவமழை நிறைவ டைய உள்ள நிலையில், வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத் தின் பல்வேறு மாவட்டங்க ளில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது.
இந்த தொடர் மழையால், ராமநாத புரம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், குறிப் பாக திருவாடானை மற்றும் ஆர்.எஸ்.மங்கலம் வட்டா ரங்களில் உள்ள விவசாயி கள், நேரடி விதைப்பு முறை யில் சம்பா பருவ சாகுப டியை தொடங்கியுள்ளனர்.
மேலும், அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வெளி யான அதிகாரப்பூர்வ தக வல்களால் சம்பா நடவு பணியில் விவசாயிகள் முழு வீச்சில் இறங்கியுள்ள னர். இந்த பருவத்தில் மாவட்டத் தில் 1.3 லட்சம் ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின்படி, ராமநாத புரம் மாவட்டத்தில் செப்டம் பர் மாதத்தில் 5.4 மி.மீ. மழை பெய்யும் என்று எதிர் பார்க்கப்பட்ட நிலையில், இதுவரை சராசரியாக 13.3 மி.மீ. மழை பெய்துள்ளது. இதனை அடிப்படையாக கொண்டு நூற்றுக்கணக்கான ஹெக்டேர்களில் விதைப்பு பணிகள் தொடங்கியுள்ளது.
மீதமுள்ள பகுதிகளில் சாகுபடிக்கான ஆயத்த பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இதுகுறித்து ஆர்.எஸ்.மங்கலம், திருவா டானை விவசாயிகள் சங்க அமைப்பாளரும், விவசாயி யுமான கவாஸ்கர் கூறுகை யில், சம்பிரதாயப்படி, சில விவசாயிகள் தமிழ் மாத மான ஆவணி (ஆகஸ்ட்–-செப்டம்பர்) மற்றும் புரட் டாசி (செப்டம்பர்-ஆகஸ்ட்) ஆகிய மாதங்களில் சாகுபடி பணிகளை தொடங்கினர்.
தொடர்ந்து பல நாட்க ளாக பெய்த மழையால், ஆவணி மாதத்தில், விதைப்பு பணிகளை துவக்கியுள்ள விவசாயிகள், 15, 20 நாட்களில் பயிர்களுக்கு தண்ணீர் வரவில்லை என்றால், மீண்டும் விதைக்க வேண்டிய நிலை ஏற்படும். ஒரு ஏக்க ருக்கு சராசரியாக 25,000 முதல் 26,000 வரை செலவ ழிக்க வேண்டும் என்றார். தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை விவசாயி களை மட்டுமின்றி பொது மக்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
- பெரம்பலூர் பகுதியில் சின்ன வெங்காய நடவு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது
- இப்பகுதி விவசாயிகள் வெங்காயத்தின் விலை அதிகரித்தாலும் அல்லது குறைந்தாலும் பயிர் சாகுபடி செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் சின்ன வெங்காயம் பயிர் சாகுபடி செய்வோர் அதிகம் உள்ளனர். தற்போது அதற்கான பருவகாலம் என்பதால் நடவு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்காக விவசாயிகள் முதலில் வயலை நன்கு உழுது இயற்கை உரமான எரு உள்ளிட்டவற்றை நிலத்தில் இட்ட பின்னரே விதை வெங்காயத்தை வயலில் நடவு செய்கின்றனர். இப்பகுதி விவசாயிகள் வெங்காயத்தின் விலை அதிகரித்தாலும் அல்லது குறைந்தாலும் பயிர் சாகுபடி செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
- மேலும் ஒரு வீடு இடிந்தது
- மேலும் ஒரு வீடு இடிந்தது
மேலும் ஒரு வீடு இடிந்ததுநாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை நீடித்து வருவதால் குளு குளு சீசன் நிலவுகிறது.
மாவட்டம் முழுவதும் நேற்று பரவலாக மழை பெய்தது. நாகர்கோவில் அடையா மடை பகுதிகளில் இடி மின்னலுடன் இரவு கனமழை கொட்டி தீர்த் தது. அடையாமடையில் அதிகபட்சமாக 19 மில்லி மீட்டர் மழை பதிவாகி யுள்ளது.
கொட்டாரம், தக்கலை, இரணியல், கோழிப்போர் விளை பகுதிகளிலும் மழை நீடித்தது. மலையோர பகுதி களிலும் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் பெய்து வரும் மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை களுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது.
12-வது நாளாக தடை
பேச்சிப்பாறை அணை யில் இருந்து தொடர்ந்து உபரி நீர் வெளி யேற்றப் பட்டு வருகிறது. இதனால் கோதை ஆற்றில் வெள் ளம் கரைபுரண்டு ஓடு கிறது. கோதை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள் ளப்பெருக்கின் காரண மாக திற்பரப்பு அருவி யில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
இதனால் 12-வது நாளாக அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர் மழைக்கு பாசன குளங்கள் வேகமாக நிரம்பி வரு கின்றன.
மாவட்டம் முழுவதும் ஆயிரத்திற்கு மேற்பட்ட குளங்கள் முழு கொள்ள ளவை எட்டி நிரம்பி வழிகிறது. இதனால் விவசாயிகள் கும்பப்பூ சாகுபடி பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். அருமநல்லூர், ெதரிசனங் கோப்பு, ஈசாந்திமங்கலம், சுசீந்திரம், தக்கலை பகுதி களில் வயல் உழவுப் பணி மற்றும் நடவு பணி நடந்து வருகிறது.
மழையின் காரண மாக ரப்பர் பால் உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட் டுள்ளது. தடிக்காரன் கோணம், கீரிப்பாறை, குலசேகரம் பகுதிகளில் உள்ள ரப்பர் மரங்களில் உள்ள சிரட்டைகளில் மழை நீர் தேங்கி உள்ளதால் ரப்பர் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
பேச்சிப்பாறை அணை யின் நீர்மட்டம் இன்று காலை 41.34 அடியாக உள்ளது. அணைக்கு 570 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 122 கன அடி தண்ணீர் மதகுகள் வழியாகவும், 536 கன அடி தண்ணீர் உபரிநீராகவும், வெளியேற்றப்பட்டு வருகிறது.
பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 69.73 அடியாக உள்ளது அணைக்கு 432 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை யில் இருந்து 300 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது. சிற்றார்-1 அணையின் நீர்மட்டம் 15.28 அடியாக உள்ளது. அணைக்கு 211 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 150 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது. சிற்றார்-2 அணையின் நீர்மட்டம் 15.38 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 15.90 அடியாகவும், மாம்ப ழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 44.80 அடியாகவும் உள்ளது.
மழைக்கு ஏற்கனவே 15-க்கு மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்து உள்ள நிலையில் நேற்று கிள்ளியூர் தாலுகாவில் வீடு ஒன்று இடிந்து விழுந்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
- தெற்குத்தரவை ஊராட்சியில் பனை விதைகள் நடவு செய்யும் பணி கலெக்டர் தொடங்கி வைத்தார்
- 36 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வழங்கினார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம் தெற்குத்தரவை ஊராட்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி துறையின் மூலம் பனை விதைகள் நடவு செய்யும் பணி தொடக்க விழா நடந்தது. கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெற்குத்தரவை ஊராட்சியில் அம்மன் கோவில் ஊரணி மற்றும் வைரவன் கோவில் பகுதியில் பனை விதைகள் நடவு செய்யும் பணிகளை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து தெற்குத்தரவை ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் மூலம் அனைத்து துறையின் திட்டங்கள் ஒருங்கிணைத்து செயல்படுத்தி வருவதை பார்வையிட்டு, ஊராட்சி யின் வளர்ச்சிக்காக இத்தகைய திட்டங்களை முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.
அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு கலெக்டர் பரிசு வழங்கினார். பின்னர் ஊரக வளர்ச்சித் துறை, குழந்தைகள் வளர்ச்சித்துறை, மீன்வளத் துறை, வேளாண்மை துறை, விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஆகிய துறைகள் மூலம் 36 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பிரவீன் குமார், ஊரக வளர்ச்சித் துறை உதவி திட்ட அலுவலர் குமரேசன், பழனி, வட்டார வளர்ச்சி அலுவலர் சேவுகப் பெருமாள், தெற்குத்தரவை ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி சாத்தையா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்