search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நெல்லையப்பர் கோவில்"

    • நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டும்.
    • ஆயிரங்கால் மண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த மணமேடையில் மணக்கோலத்தில் காந்திமதி அம்பாள் அருகே சுவாமி நெல்லையப்பர் எழுந்தருளினார்.

    நெல்லை:

    தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் நெல்லை டவுன் நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவிலும் ஒன்றாகும். இங்கு ஐப்பசி திருக்கல்யாண திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டும்.

    இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 15 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் சிகர நிகழ்ச்சிகளில் ஒன்றான திருக்கல்யாண உற்சவம் இன்று அதிகாலை கோவிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் பிரம்ம முகூர்த்தத்தில் நடைபெற்றது.

    முன்னதாக கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து சுவாமி நெல்லையப்பர் தங்கப்பல்லக்கில் மாப்பிள்ளை கோலத்தில் அம்பாள் சன்னதிக்கு பஞ்ச வாத்தியங்கள் மற்றும் மேள, தாளங்கள் முழங்க எழுந்தருளினார்.

    பின்னர் சுவாமி நெல்லையப்பரை மைத்துனர் நெல்லை கோவிந்தர் கோவில் ஆயிரங்கால் மண்டபம் முன்பு வரவேற்று அவருக்கு பாத பூஜை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் ஆயிரங்கால் மண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த மணமேடையில் மணக்கோலத்தில் காந்திமதி அம்பாள் அருகே சுவாமி நெல்லையப்பர் எழுந்தருளினார்.

    தொடர்ந்து பிரம்ம முகூர்த்தத்தில் சுவாமி-அம்பாளுக்கு மாலை மாற்றபட்டு திருமாங்கல்யம் பூட்டப்பட்டது. அதன்பின்னர் சுவாமி-அம்பாளுக்கு திருமண சடங்குகள் செய்யப்பட்டு மகா தீபாரதனை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா நோய் தொற்று காரணமாக திருக்கல்யாணம் உற்சவத்தின்போது பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில் இன்றைய தினம் நடைபெற்ற விழாவில் தளர்வுகள் காரணமாக திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவையொட்டி காலை 9.30 மணிக்கு சுவாமி-அம்பால் பூம்பல்லக்கில் பட்டிணப்பிரவேசம் வீதி உலா சென்றனர். மேலும் இன்று முதல் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) வரையிலும் 3 நாட்கள் ஊஞ்சல் விழா நடக்கிறது.

    பரணி மகா தீபத்தை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்தபடி ஊர்வலமாக எடுத்து வந்து, சுவாமி சன்னதி தெருவில் உள்ள சொக்கப்பனை முக்கு பகுதிக்கு கொண்டு வந்து மகாருத்ர தீபம் எனும் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறும்.
    கார்த்திகை தீபத்திருவிழாவிற்கு முந்தைய நாள் பரணி நட்சத்திரத்தில் பரணி மகா தீபம் ஏற்றப்படும். அதன்படி நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் நேற்று பரணி தீபம் ஏற்றப்பட்டது.

    சுவாமி நெல்லையப்பர் சன்னதி மகாமண்டபத்தில் அமைந்திருக்கும் நந்தி முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பரணி தீபத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து மகா ஹோமங்கள் செய்து சுவாமி நெல்லையப்பருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

    பின்னர் சுவாமி மூலஸ்தானத்தில் இருந்து தீபம் எடுத்து வரப்பட்டு பரணி மகா தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து தீபத்திற்கு சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இன்று (வெள்ளிக்கிழமை) கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி, பரணி மகா தீபத்தை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்தபடி ஊர்வலமாக எடுத்து வந்து, சுவாமி சன்னதி தெருவில் உள்ள சொக்கப்பனை முக்கு பகுதிக்கு கொண்டு வந்து மகாருத்ர தீபம் எனும் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறும்.

    பாளையங்கோட்டை அழகிய மன்னர் ராஜகோபாலசுவாமி கோவிலில் திருக்கார்த்திகை உற்சவத்தையொட்டி நேற்று காலையில் ராஜகோபாலசாமி மற்றும் தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனமும், தீபாராதனையும் நடந்தது. மாலையில் கோவில் முழுவதும் 5,008 தீபம் ஏற்றப்பட்டது. இரவில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. இதேபோல் பெருமாள் கோவில்களில் நேற்று சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.
    நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் நேற்று இரவில் சுவாமி, அம்பாள் ரிஷப வாகனங்களில் அலங்கரிக்கப்பட்ட சப்பரங்களில் மறுவீடு பட்டினப்பிரவேச வீதி உலா நடந்தது.
    நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் நடைபெறுகின்ற திருவிழாக்களில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். நேற்று இரவில் சுவாமி, அம்பாள் ரிஷப வாகனங்களில் அலங்கரிக்கப்பட்ட சப்பரங்களில் மறுவீடு பட்டினப்பிரவேச வீதி உலா நடந்தது.

    இந்த வீதி உலா நெல்லை டவுன் 4 ரத வீதிகளிலும் நடந்தது. இதனால் போலீசார் போக்குவரத்தை மாற்றிவிட்டனர்.
    நெல்லையப்பர் கோவில் ஐப்பசி திருவிழாவில், சுவாமி நெல்லையப்பர் -காந்திமதி அம்பாள் திருக்கல்யாண வைபவம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    தென் தமிழகத்தில் பிரசித்திபெற்ற நெல்லை டவுன் நெல்லையப்பர் -காந்திமதி அம்பாள் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. இதில் ஐப்பசி திருக்கல்யாண விழாவும் சிறப்பாக நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான ஐப்பசி திருக்கல்யாண விழா கடந்த மாதம் 22-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 15 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் காலை, மாலையில் அம்பாள் சன்னதி ஊஞ்சல் மண்டபத்தில் வைத்து காந்திமதி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகளும், அபிஷேகமும் நடைபெற்றது.

    நேற்று முன்தினம் தவக்கோலத்தில் இருந்த காந்திமதி அம்பாளுக்கு, சுவாமி நெல்லையப்பர் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து சுவாமி, அம்பாள் இருவரும் கோவிலுக்கு வந்தனர்.

    நேற்று அதிகாலை கோவில் ஆயிரங்கால் மண்டபத்தில் சுவாமி நெல்லையப்பர் -காந்திமதி அம்பாள் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையிலேயே கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்களும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.

    பின்னர் பஞ்ச வாத்தியங்கள் இசைக்க மாப்பிள்ளை திருக்கோலத்தில் சுவாமி நெல்லையப்பர், தங்கப்பல்லக்கில் சுவாமி சன்னதியில் இருந்து ஆயிரங்கால் மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டார். தொடர்ந்து நெல்லை கோவிந்தசுவாமி, நெல்லையப்பருக்கு பாதபூஜை செய்யும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    ஆயிரங்கால் மண்டபத்தில் திருமண கோலத்தில் எழுந்தருளி இருந்த காந்திமதி அம்பாளுக்கும், சுவாமி நெல்லையப்பருக்கும் சிறப்பு பூஜைகளும், மாலை மாற்றும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    யாகசாலையில் பூஜை செய்யப்பட்ட திருமாங்கல்யம், சுவாமி நெல்லையப்பர் கைகளில் வைத்து பூஜை செய்யப்பட்டு காந்திமதி அம்பாளுக்கு அணிவிக்கப்பட்டு திருக்கல்யாணம் நடைபெற்றது. தொடர்ந்து திருமண சடங்குகள் நடத்தப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இன்று (புதன்கிழமை) முதல் 3 நாட்களுக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது.

    இதேபோல் நெல்லையில் உள்ள பல்வேறு சிவன் கோவில்களிலும் ஜப்பசி திருக்கல்யாண விழா கோலாகலமாக நடைபெற்றது.
    நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் இந்த ஆண்டுக்கான ஐப்பசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவை முன்னிட்டு அம்மன் சன்னதியில் உள்ள கொடி மரத்துக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு, சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஐப்பசி திருவிழா வருகிற 7-ந் தேதி வரை நடக்கிறது. விழா நாட்களில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு வழிபாடு மற்றும் வீதி உலா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை நெல்லையப்பர் கோவில் செயல் அலுவலர் ரோஷினி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர். 
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவரான தனுஷ் இன்று காலை நெல்லையப்பர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். #Dhanush
    நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்ததாக `வட சென்னை', ‘மாரி-2’ உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து ரிலீசாக இருக்கிறது. தனுஷ் படத்தின் படப்பிடிப்பு நெல்லை, தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடந்து வருகிறது.

    இந்த நிலையில், இன்று அதிகாலை 6.30 மணியளவில் நடிகர் தனுஷ், துணை நடிகைகள் உள்ளிட்ட படக்குழுவினர் நெல்லையப்பர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். கோவிலில் இன்று காலை ‘‘சுவாமி திருப்பள்ளி எழுச்சி’’ சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் தனுஷ் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    அதன் பிறகு நடிகர் தனுஷ் நெல்லையப்பர் கோவிலில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கும் சென்று சுற்றி பார்வையிட்டார். நடிகர் தனுஷ் கோவிலுக்கு வந்தது பற்றிய தகவல் அறிந்த ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். இதனால் அசம்பாவிதம் ஏற்படாதவாறு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.



    இதை தொடர்ந்து தனுஷ், நெல்லையப்பர் கோவிலில் இருந்து, படப்பிடிப்பு நடக்கும் தென்காசிக்கு புறப்பட்டு சென்றார். இது தனுஷ் இயக்கி நடிக்கும் படம் என்றும், மாரி-2 படத்தின் சில காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. #Dhanush

    நெல்லையப்பர் கோவிலில் உடைந்த சாமி சிலையை வைத்து வழிபாடு நடத்தியதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
    நெல்லை:

    நெல்லையப்பர் கோவிலில் கொடிமரத்தின் வலப்புறமாக நவக்கிரக சன்னதி உள்ளது. இங்குள்ள சந்திரன் சிலையின் கை பகுதி சேதமடைந்து காணப்படுகிறது. கடந்த ஏப்ரல் 27-ந்தேதி கும்பாபிசேகத்தின்போது இந்த சிலை சேதமாகியிருக்கலாம் என தெரிகிறது.

    சிலை சேதமடைந்த நிலையில் இருப்பதை அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளவில்லை. இதனால் கோவில் அர்ச்சகர்கள் சேதமான கை பகுதி வெளியில் தெரியாத வகையில் பூ வைத்து அலங்காரம் செய்கின்றனர்.

    உடைந்த சிலையை கும்பாபிஷேகத்திற்கு முன்பாக சீரமைத்திருக்க வேண்டும், சேதமடைந்த சிலையுடன் வழிபாடு தொடர்வது முறையானது அல்ல என பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.

    இந்த சந்திரன் சிலை 2004-ம் ஆண்டுக்கு முன்பே உடைந்துவிட்டதாகவும், கும்பாபிசேகத்தின்போது மற்ற பணிகள் இருந்ததால் கவனிக்கவில்லை எனவும் கோவில் பணியாளர்கள் கூறுகின்றனர். எனினும் சேதமடைந்த சிலையுடன் வழிபாடு செய்வது தெய்வகுற்றம் என பக்தர்கள் குறை கூறியுள்ளனர்.

    எனவே புதிய சிலையை வரவழைத்து அதற்கு உரிய பூஜைகள் நடத்தி வழிபாட்டுக்கு வைக்கவேண்டும் என்கின்றனர் பொதுமக்கள்.
    நெல்லையப்பர் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    நெல்லை டவுனில் உள்ள நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவிலில் ஆண்டு தோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. இதில் ஆவணி மாதம் நடைபெறும் ஆவணி மூலத்திருவிழா கருவூர் சித்தருக்கு காட்சி கொடுக்கும் முக்கிய திருவிழா ஆகும். இந்த ஆண்டு ஆவணி மூலத்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதையொட்டி நேற்று அதிகாலை சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம், அலங்கார பூஜை நடைபெற்றது. அதை தொடர்ந்து காலை 11 மணிக்கு சுவாமி சன்னதியில் உள்ள கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் பக்தி கோஷம் எழுப்பினர். இந்த திருவிழா மொத்தம் 11 நாட்கள் நடைபெறுகிறது.

    4-வது நாளான 14-ந் தேதி இரவு 8 மணிக்கு சுவாமி, அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்திலும், விநாயகர் வெள்ளி மூஞ்சூறு வாகனத்திலும், சுப்பிரமணியர் மர மயில் வாகனத்திலும், சண்டிகேசுவரர் சப்பரத்திலும், பஞ்ச மூர்த்திகளுடன் 4 ரதவீதிகளிலும் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    19-ந் தேதி நெல்லையில் இருந்து கருவூர் சித்தர் புறப்பட்டு மானூர் அம்பலவாண சுவாமி கோவிலை சென்றடைகிறார். 10-வது நாளான 20-ந் தேதி இரவு 1 மணிக்கு சுவாமி சந்திரசேகரர், பவானி அம்பாள், பாண்டியராஜ, சண்டிகேசுவரர், தாமிரபரணி, அகஸ்தியர், குங்குலிய கலய நாயனார் ஆகிய மூர்த்திகள் பல்லக்கிலும், சப்பரத்திலும் மானூருக்கு புறப்பட்டு செல்கின்றனர். மறுநாள் 21-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு மானூர் கோவிலை சென்றடைகின்றனர்.

    அங்கு காலை 7 மணிக்கு கருவூர் சித்தருக்கு சுவாமி காட்சி தந்து சாப விமோசனம் நிவர்த்தி செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதை தொடர்ந்து வரலாற்று புகழ் மிக்க, புராண பாடல் பாடப்பெற்ற ஆவணி மூல மண்டபத்தில் வைத்து சுவாமி-அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது. 
    நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா நாளை (சனிக்கிழமை) காலை 11 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    நெல்லை டவுனில் உள்ள நெல்லையப்பர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மூலத்திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான திருவிழா நாளை (சனிக்கிழமை) காலை 11 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 4-ம் திருவிழாவான வருகிற 14-ந் தேதி இரவு 8 மணிக்கு சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்திலும், விநாயகர் வெள்ளி மூஞ்சுறு வாகனத்திலும், சுப்பிரமணியர் மயில் வாகனத்திலும், சண்டிகேசுவரர் சப்பரத்திலும் நெல்லை டவுன் ரதவீதிகளில் வீதி உலா வருதல் நடக்கிறது.

    வருகிற 19-ந் தேதி இரவு 9 மணிக்கு கருவூர் சித்தர் நெல்லை டவுன் நான்கு ரதவீதிகளிலும் வீதி உலா சென்று சங்கரன்கோவில் சாலை வழியாக மானூர் அம்பலவாண சுவாமி கோவிலை சென்றடைகிறார். வருகிற 20-ந் தேதி இரவு 1 மணிக்கு நெல்லையப்பர் கோவிலில் இருந்து சுவாமி நெல்லையப்பர் சந்திரசேகரராகவும், காந்திமதி அம்பாள் பவனி அம்பாளாகவும் சப்பரத்தில் பாண்டியராஜா, தாமிரபரணி, அகஸ்தியர், குங்குலிய கலயநாயனார், சண்டிகேசுவரர் ஆகிய மூர்த்திகளுடன் புறப்பட்டு நெல்லை டவுன் நான்கு ரதவீதிகளையும் சுற்றி சங்கரன்கோவில் சாலை வழியாக ராமையன்பட்டி ரஸ்தாவை கடந்து மானூர் சென்றடைகிறார்கள்.

    21-ந் தேதி மானூரில் அம்பலவாண சுவாமி கோவிலில் கருவூர் சித்தருக்கு நெல்லையப்பர் காட்சி அளிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடக்கிறது. பின்னர் சுவாமிகள் அங்கு இருந்து புறப்பட்டு நெல்லையப்பர் கோவிலை வந்தடைகிறார். இதற்கான ஏற்பாடுகளை நெல்லையப்பர் கோவில் செயல் அலுவலர் ரோஷினி, கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர். 
    நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் பவித்ர உற்சவ விழா நடந்தது. இதையொட்டி நெல்லையப்பருக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் செய்யப்பட்டது.
    நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் பவித்ர உற்சவ விழா நேற்று நடந்தது. இதையொட்டி நெல்லையப்பருக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் பூணூல் மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. இரவில் சுவாமி, அம்பாள் பஞ்ச மூர்த்திகளுடன் வீதி உலா வருதல் நடந்தது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    ஏற்பாடுகளை நெல்லையப்பர் கோவில் செயல் அலுவலர் ரோஷினி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர். 
    நெல்லையப்பர் கோவிலில் திருவாடி சுவாதியை முன்னிட்டு சுந்தரமூர்த்தி, சேரமான் நாயனார்கள் வீதிஉலா நடந்தது.
    நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் சுந்தரமூர்த்தி நாயனார், சேரமான் நாயனார் குருபூஜை, திருவாடி சுவாதி விழா நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று காலை சுந்தரமூர்த்தி, சேரமான் நாயனார்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது.

    மாலையில் சுந்தரமூர்த்தி நாயனார் வெள்ளை யானை வாகனத்திலும், சேரமான் நாயனார் குதிரை வாகனத்திலும் வீதி உலா நடந்தது. அவர்களுக்கு பின்னால் 63 நாயன்மார்கள் அணிவகுத்து சென்றனர். வீதிஉலா முடிந்ததும் நெல்லையப்பர் கோவிலை சென்றடைந்தனர்.

    தொடர்ந்து சுந்தரமூர்த்தி நாயனார் கைலாசம் செல்லும் நிகழ்ச்சி நடந்தது. அவருக்கு மட்டும் கைலாசம் செல்வதற்கு அனுமதி உள்ளதாகவும், சேரமான் நாயனாரை நந்தி பகவான் தடுத்ததாகவும் புராண வரலாறு கூறுகிறது. இந்த நிகழ்ச்சி நெல்லையப்பர் கோவிலில் நடந்தது. தொடர்ந்து சுந்தரமூர்த்தி நாயனார், சேரமான் நாயனாரை கைலாசம் அழைத்து செல்லும் நிகழ்ச்சி நடந்தது.

    இரவில் சுவாமி சன்னதி பிரகாரத்தில் கைலாச மலையில் சுவாமி, அம்மாள் அமர்த்தப்பட்டு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. அந்த இடத்துக்கு சுந்தரமூர்த்தி நாயனார், சேரமான் நாயனாரை அழைத்து செல்லும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை நெல்லையப்பர் கோவில் செயல் அலுவலர் ரோஷினி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர். 
    நெல்லையப்பர் கோவிலில் காந்திமதி அம்பாளுக்கு ஆடிப்பூர முளைக்கட்டு திருவிழா நடந்தது. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான விழா கடந்த 8-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து விழா நாட்களில் நெல்லையப்பர், காந்திமதி அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனைகள் நடந்தன.

    கடந்த 11-ந் தேதி மதியம் 12 மணியளவில் காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் நடந்தது. அன்று இரவு காந்திமதி அம்பாள் 4 ரதவீதிகளையும் சுற்றி கோவிலை அடைந்தார்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியாக காந்திமதி அம்பாளுக்கு முளைகட்டு திருவிழா நேற்று இரவு நடந்தது. இதையொட்டி அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இரவு 7 மணியளவில் அம்பாள் ஊஞ்சல் மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டார்.

    அங்கு அம்பாளுடைய வயிற்றில் முளை கட்டிய பாசிப்பயிறு கட்டப்பட்டது. அம்பாள் முன்பு பலகாரங்கள் படைக்கப்பட்டு இருந்தது. தொடர்ந்து அம்பாளுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. அதன்பிறகு வயிற்றில் கட்டி வைக்கப்பட்டு இருந்த முளைகட்டிய பாசிப்பயிறு அங்குள்ள பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் ரோஷினி, கோவில் பணியாளர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நேற்றுடன் ஆடிப்பூர திருவிழா நிறைவடைந்தது. 
    ×