என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பெட்ரோல் விலை உயர்வு"
- காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் 1,200-க்கும் மேற்பட்ட விசைப்படகு, 800-க்கும் மேற்படட பைபர்படகுகளில் மீனவர்கள் மீன்படி தொழில் செய்து வருகின்றனர்.
- விசைப்படகில் சென்று ஆழ்கடலில் மீன்பிடிக்க குறைந்தபட்சம் ரூ.6 லட்சம் வரை செலவாகும்.
ராயபுரம்:
தமிழகத்தில் மீன்கள் இனப்பெருக்கத்திற்காக கடந்த ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜுன் 14-ந்தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் ஆண்டுதோறும் இருந்து வருகிறது. இந்த ஆண்டு மீன்பிடி தடைகாலம் இன்றுடன் (14-ந்தேதி) முடிவடைகிறது.
இதைத்தொடர்ந்து ஆழ்கடலுக்கு செல்லும் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க தயாராகி வருகிறார்கள்.
காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் 1,200-க்கும் மேற்பட்ட விசைப்படகு, 800-க்கும் மேற்படட பைபர்படகுகளில் மீனவர்கள் மீன்படி தொழில் செய்து வருகின்றனர். மீன்பிடி தடைகாலத்தையொட்டி விசைப்படகு மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை. அவர்கள் தங்களது படகுகளை சரிபார்ப்பது, வர்ணம் பூசுவது, வலைகளை சரி பார்ப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே மீன்பிடி தடைகாலம் இன்றுடன் முடிவதால் இன்று நள்ளிரவு முதல் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப் படகுகளில் மீனவர்கள் செல்ல தயார் நிலையில் உள்ளனர்.
ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்லும் விசைப்படகுகள் ஒரு வாரம் முதல் 15 நாட்கள் வரை நடுக்கடலில் தங்கி மீன் பிடித்து வருவவது வழக்கம். இதனால்மீனவர்கள் தங்களுக்கு தேவையான டீசல், ஐஸ் கட்டிகள், ரேஷன் பொருட்கள், தண்ணீர் கேன்கள் உள்ளிட்டவற்றை விசைப்படகுகளில் ஏற்றும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர்.
டீசல் விலை உயர்வு காரணமாக காசிமேட்டில் இருந்து 25 சதவீத விசைப்படகுகளில் மட்டுமே மீனவர்கள் மீன்பிடிக்க செல்வார்கள் என்று தெரிகிறது. 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்குள் செல்ல தயார் நிலையில் உள்ளது. இதற்கிடையே விசைப்படகுகளில் கொண்டு செல்லும் ஐஸ்கட்டிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதாக மீனவர்கள் தெரிவித்து உள்ளனர்.
விசைப்படகில் சென்று ஆழ்கடலில் மீன்பிடிக்க குறைந்தபட்சம் ரூ.6 லட்சம் வரை செலவாகும். கடுமையான டீசல் விலை உயர்வால் தொடர்ந்து இந்த தொழிலை நடத்துவதற்கு சிரமமாக உள்ளது. எதிர்பார்த்த அளவு மீன் சிக்க வில்லை என்றால் அதிக நஷ்டத்தை சந்திக்க வேண்டும். இதனால் பெரும்பாலான விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை. 25 சதவீதம் அளவில் சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மட்டும் இன்று கடலுக்குள் மீன்பிடிக்க செல்கின்றன என்றார்.
மீன்பிடி தடைகாலத்தில் மீன்விலை அதிகஅளவு உயர்ந்து இருந்தது. தற்போது விசைப்படகுகள் கடலுக்குள் செல்ல உள்ளதால் அடுத்த வாரம் முதல் மீன் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- குறைந்த கட்டணம், இலவச பயணம் போன்றவற்றால் மாநகர பஸ்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை 25 லட்சமாக உயர்ந்தது.
- ஏ.சி. பஸ்கள் முழு அளவில் தற்போது இயக்கப்படுகிறது. கூடுதலாக இயக்க வேண்டும் என்று பொது மக்களிடம் இருந்து கோரிக்கை வந்துள்ளது.
சென்னை:
சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் தினமும் 3,200 பஸ்கள் இயக்கப்படுகின்றன. கொரோனாவிற்கு முன்பு வரை தினமும் 32 லட்சம் பயணிகள் தினமும் மாநகர பஸ்களில் பயணித்தனர்.
கொரோனா காலத்தில் இந்த எண்ணிக்கை பல மடங்கு சரிந்தது. 10 லட்சமாக குறைந்த பயணிகள் எண்ணிக்கை பின்னர் படிப்படியாக உயரத் தொடங்கியது.
கடந்த சில மாதங்களாக 25 லட்சம் வரை உயர்ந்தது. மாநகர பஸ்களில் இலவசமாக பெண்கள் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவதால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்தது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஆட்டோ, ஷேர் ஆட்டோ, மேஜிக் வேன் போன்றவற்றில் கட்டணம் அதிகரித்தது.
இதனால் அரசு பஸ்களை மக்கள் தற்போது நாடி வருகிறார்கள். குறைந்த கட்டணம், இலவச பயணம் போன்றவற்றால் மாநகர பஸ்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை 25 லட்சமாக உயர்ந்தது.
இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறும்போது, 'சென்னையில் மாநகர பஸ்களில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இருப்பினும் பழைய நிலைக்கு திரும்பவில்லை. கொரோனா காலத்தில் பலர் பஸ் பயணத்தை தவிர்த்து மாற்று பயணத்திற்கு மாறினார்கள். இரு சக்கரம், கார் போன்ற வாகனங்களுக்கு மாறி விட்டனர்.
இதனால் கொரோனாவுக்கு முந்தைய பயணிகள் அளவு வரவில்லை. ஆனாலும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பஸ் பயணத்திற்கு மக்கள் மாறி வருகிறார்கள். இன்னும் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
ஏ.சி. பஸ்கள் முழு அளவில் தற்போது இயக்கப்படுகிறது. கூடுதலாக இயக்க வேண்டும் என்று பொது மக்களிடம் இருந்து கோரிக்கை வந்துள்ளது. ஆனால் புதிதாக பேருந்துகள் வாங்கும் போது அதனை நிறைவேற்ற முடியும் என்றனர்.
சென்னை:
தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழக அரசு தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி பெட்ரோல்-டீசல் விலையை குறைக்கவில்லை.
மேலும் மத்திய அரசு டீசலுக்கு ரூ.10-ம், பெட்ரோலுக்கு ரூ.5-ம் குறைத்து மக்களுக்கு ஏற்பட்ட கஷ்டத்தை குறைத்தது. அதே சமயம் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் அவர்களது மாநில அளவிலான வாட் வரியை குறைத்து பெட்ரோல்-டீசல் விலையை தங்கள் பங்கிற்கு குறைத்துள்ளது.
தமிழகத்தை விட மற்ற மாநிலங்களில் பெட்ரோல்-டீசல் விலை குறைவாக இருந்து வருகிறது. எனவே தமிழக அரசு பெட்ரோல்-டீசல் விலையை குறைக்க கோரியும், கேஸ் சிலிண்டர் விலையை தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி சிலிண்டருக்கு ரூ.100 குறைக்க கோரியும் தமிழக அரசை வலியுறுத்தி இன்று (திங்கட்கிழமை) முதல் அடுத்த மாதம் 3-ந்தேதி வரை தொடர் போராட்டங்கள் நடைபெறும்.
மக்களுக்கான இந்த போராட்டங்களுக்கு தமிழக மக்கள் நல்ஆதரவை தந்து தாங்களும் அறப்போராட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும்.
இன்று (திங்கட்கிழமை) இளைஞர் அணி, மகளிர் அணி சார்பில் மாவட்ட அளவில் கண்டன ஆர்ப்பாட்டம்.
26-ந்தேதி- விவசாய அணி சார்பில் தமிழகம் முழுவதும் மாட்டு வண்டிப் பயண ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
27-ந்தேதி- சிறுபான்மையினர் அணி, வழக்கறிஞர் பிரிவு சார்பில் முக்கிய பிரமுகர்களை சந்தித்து நம் கோரிக்கையின் நியாயத்தை விளக்குதல்.
28-ந்தேதி- எஸ்.சி. எஸ்.டி. அணி சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முற்றுகை போராட்டம்.
30-ந்தேதி- ஓ.பி.சி. அணி, அமைப்பு சாரா தொழிலாளர்கள் பிரிவு சார்பில் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம்.
அடுத்த மாதம் (டிசம்பர்) 1-ந்தேதி- மகளிர் அணி சார்பில் வீடுகளின் முன்பாக கோரிக்கை அட்டையை ஏந்தும் போராட்டம்.
2-ந்தேதி- கல்வியாளர் பிரிவு சார்பில் மக்களுக்கு கோரிக்கையை வலியுறுத்தி துண்டு பிரசுரங்கள் விநியோகித்தல்.
3-ந்தேதி- பிரசாரப்பிரிவு, தமிழ் வளர்ச்சி பிரிவு சார்பில் தெருமுனை கூட்டங்கள் நடத்துதல்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள்...இந்திய விமானப்படை குரூப் கேப்டன் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்கி கவுரவம்
திருவனந்தபுரம்:
நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசு தீபாவளி பண்டிகையையொட்டி பெட்ரோல் மற்றும் டீசல் விலையை முறையே 5 மற்றும் 10 ரூபாயை வரி குறைப்பு மூலம் குறைத்தது.
இந்த நிலையில் கேரளாவில் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதாவினர் பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின் வரியை குறைக்க வேண்டும். என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி இதற்கு மறுப்பு தெரிவித்து வருகிறது.
இதற்கிடையே கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் மாநில நிதி மந்திரி பாலகோபால் கூறியதாவது:-
நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கு மத்திய அரசே காரணமாகும். இதில் அதிக அளவில் மத்திய அரசே வரி விதிக்கிறது. மாநில அரசுகளுக்கு பெரிய பங்கு இல்லை. எனவே கேரள அரசு மேலும் வரியை குறைக்க முடியாது. இது தொடர்பான எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்க முடியாது.
கேரளாவில் விற்கப்படும் ஒரு லிட்டர் பெட்ரோலில் 31.8 ரூபாய் வரி மூலம் மத்திய அரசு பெறுகிறது. இது போல் டீசல் மூலம் 32.9 ரூபாய் மத்திய அரசுக்கு கிடைக்கிறது. மாநில அரசுக்கு டீசல் வரி மூலம் 30.8 சதவீதமும், பெட்ரோலில் 20.76 சதவீதமும் கிடைக்கிறது.
எனவே பெட்ரோலின் விலையை குறைக்க வேண்டும் என்றால் மத்திய அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். கேரள அரசு வரியை குறைக்க முடியாது. இது தொடர்பாக நாங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை:
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில், தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாயும் குறைக்கப்படும் என்ற வாக்குறுதியை அளித்தது. ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு பெட்ரோல் மீதான வரியை லிட்டருக்கு 3 ரூபாய் மட்டும் குறைத்தது.டீசல் மீதான வரியை குறைக்கவே இல்லை.
தற்போது மத்திய அரசு பெட்ரோல் மீதான கலால் வரியை 5 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியை 10 ரூபாயும் குறைத்துள்ள நிலையில், இதன் தொடர்ச்சியாக புதுச்சேரி உட்பட இந்தியாவில் உள்ள பெரும்பாலான மாநிலங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை கணிசமாக குறைத்துள்ள நிலையில், அதனைப் பின்பற்றி தமிழ்நாடு அரசும் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியை லிட்டருக்கு 7 ரூபாய் குறைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது.
அப்பொழுதுதான் தமிழ்நாட்டில் அத்தியாவசியப் பொருட்கள் கட்டுமானப்பொருட்கள், வாகன வாடகை ஆகியவை பிற மாநிலங்களுக்கு சமமாக குறைய வாய்ப்பிருக்கும் என்றும், இல்லையெனில், கூடுதல் சுமையை சுமக்கக் கூடிய நிலைக்கு தமிழ்நாடு மக்கள் தள்ளப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது. இது மட்டுமல்லாமல் புதுச்சேரியை ஒட்டியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், தமிழ்நாட்டில் எரி பொருளை நிரப்புவதற்கு பதிலாக புதுச்சேரியில் நிரப்பக்கூடிய சூழ்நிலை உருவாகி அதன்மூலம் தமிழ்நாட்டிற்கு வரும் வருவாயும் குறையும் நிலை ஏற்படும்.
பிற மாநிலங்களுக்கு இணையாக பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மதிப்புப் கூட்டு வரியை லிட்டருக்கு 7 ரூபாய் குறைக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தமிழ்நாடு மக்களிடையே மேலோங்கி இருந்தாலும், தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதியான பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாய், டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாய் குறைக்கப்படும் என்பதற்கேற்ப, ஏற்கனவே பெட்ரோல், டீசல் லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்ட நிலையில், குறைந்தபட்சம் பெட்ரோல் மீதான மதிப்புக் கூட்டு வரியை லிட்டருக்கு 2 ரூபாயும், டீசல் மீதான வரியை லிட்டருக்கு 4 ரூபாயும் குறைக்க தி.மு.க. அரசு கண்டிப்பாக முன்வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
இவ்வாறு குறைக்கப்படும் பட்சத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.99.40 காசாகவும், டீசல் விலை ரூ.87.43 காசாகவும் விற்பனையாகும். இதன் மூலம் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கணிசமாக குறையும்.
எனவே நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டும், அனைத்து தரப்பு மக்களின் நலனை கருத்தில் கொண்டும், முதல்-அமைச்சர் இதில் உடினடியாக தலையிட்டு, பெரும்பாலான மாநிலங்களில் பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரி லிட்டருக்கு ரூ.7 குறைக்கப்பட்டதை போல் குறைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குறைந்தபட்சம் தேர்தல் வாக்குறுதியினை நிறைவேற்றும் வகையிலாவது பெட்ரோல் மீதான மதிப்பு கூட்டு வரியினை லிட்டருக்கு 2 ரூபாயும், டீசல் மீதான வரியை லிட்டருக்கு 4 ரூபாய் குறைக்கவும் வழிவகை செய்ய வேண்டும் என்று அ.தி.மு.க. சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள்...தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய கனமழை எச்சரிக்கை
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்திற்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் மாற்றியமைத்து வருகின்றன. அதன்படி கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்தது. இடையிடையே சிறிதளவு மட்டுமே குறைக்கப்பட்டது. ஒரு சில பகுதிகளில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 90 ரூபாயை எட்டியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில் 5 மாநில தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று பெட்ரோல் விலை சிறிதளவு உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 12 காசுகள் அதிகரித்துள்ளது. நேற்று 72.82-க்கு விற்கப்பட்ட பெட்ரோல் இன்று ரூ.72.94 ஆக அதிகரித்துள்ளது. ஆனால் டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 3 நாட்களாக எந்த மாற்றமும் இன்றி டீசல் லிட்டருக்கு ரூ.68.26-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
டெல்லியில் பெட்ரோல் ரூ.70.20, டீசல் ரூ.64.66, மும்பையில் பெட்ரோல் ரூ.75.91, டீசல் ரூ.67.66, கொல்கத்தாவில் பெட்ரோல் ரூ.72.38, டீசல் ரூ.66.40, ஐதராபாத்தில் பெட்ரோல் ரூ.74.55, டீசல் ரூ.70.26, பெங்களூருவில் பெட்ரோல் ரூ.70.86, டீசல் ரூ.65.00 என்ற அளவில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை மாற்றம் இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. #PetrolPriceHike
பிரான்ஸ் நாட்டில் பெட்ரோல் விலை சமீப காலமாக உயர்த்தப்பட்டு வந்தது. ஒரு லிட்டருக்கு 1.24 யூரோ பணம் முதல் 1.53 யூரோ வரை உயர்ந்துள்ளது. அதாவது கடந்த ஒரு ஆண்டில் 23 சதவீதம் வரை உயர்த்தப்பட்டிருக்கிறது.
இதை எதிர்த்து கடந்த 3 வாரமாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் ஆங்காங்கே வன்முறையில் ஈடுபட்டனர்.
இதனால் பிரான்ஸ் நாட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு தொடர்ந்து கலவரம் நடந்து வந்தது. எனவே பெட்ரோல் விலை உயர்த்தியதை 6 மாதத்திற்கு நிறுத்தி வைக்க முடிவு செய்தது. இதனால் போராட்டம் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்த்தனர்.
ஏற்கனவே சனிக்கிழமை (நாளை) மிகப்பெரிய போராட்டத்தை நாடு முழுவதும் நடத்தப்போவதாக போராட்டக்காரர்கள் அறிவித்து இருந்தனர். மஞ்சள் சட்டை அணிந்து போராட்டக்காரர்கள் இதில் பங்கேற்பதை வழக்கமாக கொண்டு வந்தனர்.
எனவே இதற்கு மஞ்சள் ஜாக்கெட் போராட்டம் என்று பெயர் சூட்டி இருக்கிறார்கள். அவர்கள் திட்டமிட்டபடி நாளை மஞ்சள் ஜாக்கெட் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளனர்.
இதனால் பிரான்சில் மிகப்பெரிய கலவரம் ஏற்படலாம் என்ற அச்சம் உருவாகி இருக்கிறது. இதன் காரணமாக பிரான்ஸ் முழுவதும் 89 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
தலைநகரம் பாரீசில் மட்டும் 8 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். இவர்களுடன் ராணுவத்தினரும் பாதுகாப்பு பணிக்கு வரவழைக்கப்பட்டு உள்ளனர். தலைநகரில் ஆங்காங்கே ராணுவ வாகனம் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்சின் முக்கிய வீதிகளில் உள்ள கடைகளை நாளை அடைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த வாரமும் இதே போல ஒரு போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது பிரான்சில் உலகப்புகழ் பெற்ற ஆர் டி ட்ரோம் சேதப்படுத்தப்பட்டது.
அதேபோல நாளை போராட்டம் நடக்கும்போது பாரீசில் உள்ள உலகப்புகழ் பெற்ற ஈபிள் கோபுரத்தை தாக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஈபிள் கோபுரம் நாளை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. #EiffelTower #Yellowvestprotests
கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில், மத்திய மாவட்ட பா.ம.க. சார்பில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தாத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் அக்னி சுப்பிரமணி தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பு செயலாளர் பரசுராமர் வரவேற்று பேசினார்.
இதில் பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் சுப.குமார் பங்கேற்று கண்டன உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. பல்வேறு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதித்துள்ள அரசு பெட்ரோல், டீசலை ஏன் ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வரவில்லை. இதில் மத்திய அரசின் செயல்பாட்டை வன்மையாக கண்டிப்பதோடு, தமிழக முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் பதவி விலக வேண்டும் என்றார். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
இதில், வன்னியர் சங்க மாநில துணைத் தலைவர் கணேசன், உழவர் பேரியக்க மாநில துணைத் தலைவர் சிவக்குமார், சட்ட பாதுகாப்பு தலைவர் இளங்கோ, மாவட்ட பொருளாளர் மாதேஸ்வரி, மாவட்ட இளைஞரணி தலைவர் செந்தில் உள்பட மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் தேன்கனிக்கோட்டை பழைய பஸ் நிலையத்தில் பெட்ரோல், டீசல், கியாஸ் விலையை கட்டுப்படுத்தாத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து பா.ம.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிறுபான்மை மாவட்ட செயலாளர் ஜார்ஜ் தலைமை தாங்கினார். நகர செயலாளர் பயாஸ் அகமது வரவேற்றார். மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் கந்தசாமி, மாவட்ட இளைஞரணி சோமு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ம.க. மாநில அமைப்பு செயலாளர் மாதேஸ்வரன், பசுமைதாயக மேற்கு மாவட்ட தலைவர் துரைசாமி மற்றும் நிர்வாகிகள் விஜயகுமார், முருகன் சங்கீதா, உஷா, ரஞ்சிதா மேரி, ராமகிருஷ்ணன், ராதாகிருஷ்ணன், பால்ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர். இதில் கட்சி, நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். #tamilnews
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே சிங்கார வேலர்நகர், லாஞ்சியடி, சோழியக்குடி ஆகிய பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். திங்கள், புதன், சனிக்கிழமைகளில் கடலுக்குச் சென்றுவிட்டு ஞாயிறு, செவ்வாய், வியாழன் ஆகிய கிழமைகளில் கரை திரும்புவர்.
கடந்த ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரையிலான மீன்களின் இனப்பெருக்க காலம் என்பதால் மீன்பிடி தடைக்காலத்திற்கு பிறகு மீன் பிடிக்கச் சென்று தொழிலில் எதிர்பார்த்தஅளவிற்கு மீன்வரத்து இல்லாத நிலையில் டீசல் விலை உயர்வு காரணமாக விசைப்படகு மீனவர்களுக்கு மேலும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு முறை கடலுக்குச் செல்ல 250 முதல் 300 லிட்டர் வரை டீசல் பிடித்துச் செல்ல வேண்டும்.
இந்த நிலையில் டீசலுக்கான மானியத்தையும் உயர்ந்ததால் கஷ்டப்பட்டு அதிக விலைக்கு டீசலை பிடித்து கடலுக்குச் சென்றால் எதிர்பார்த்த அளவிற்கு மீன் கிடைக்காததாலும், அப்படிகிடைத்தாலும் கரைதிரும்பினால் மீனவர்கள் உரிய விலைகிடைக்காததாலும் மீனவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.அதனால் தொண்டி பகுதி விசைப்படகு மீனவர்கள் டீசல் விலை உயர்வைக் கண்டித்தும், டீசலுக்கான மானிய விலையை உயர்த்தி தரக்கேட்டும் வேலை நிறுத்ததில் ஈடுபட்டுள்ளனர். #PetrolDieselPriceHike
எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றி அமைத்து வந்தன. 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்ட இந்த நடைமுறை கடந்த 2017-ம் ஆண்டு ஜூன்மாதம் கைவிடப்பட்டு நாள்தோறும் பெட்ரோல்-டீசல் விலை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது.
இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.85.69 ஆகவும் டீசலின் விலை லிட்டர் ரூ.78.10 ஆகவும் விற்கப்பட்டது. கடந்த 4 நாட்களாக டீசல் விலை உயர்த்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #PetrolDieselPrice #PetrolPriceHike
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றம் காரணமாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றங்கள் செய்யப்படுகின்றன.
கடந்த 7 வாரமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்து கொண்டே இருந்ததால் பெட்ரோல், டீசல் விலையை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் அதிகரித்தபடி உள்ளன.
பெட்ரோல் லிட்டருக்கு 10 காசுகள் உயர்ந்துள்ளது. இதனால் ஒரு லிட்டர் பெட்ரோல் சென்னையில் ரூ.85.58 ஆக உள்ளது.
டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. இதனால் நேற்று போல இன்றும் ஒரு லிட்டர் டீசல் ரூ.78.10க்கு விற்பனையாகி வருகிறது.
பெட்ரோல் விலை தொடர்ந்து அதிகரிப்பதால் சென்னையில் இன்று சில பங்குகளில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 86 ரூபாயை எட்டியுள்ளது. #PetrolPriceHike
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்