search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண்களிடம் நகை பறிப்பு"

    சென்னையில் செயின்- செல்போன் பறிப்பு சம்பவங்கள் தொடர் கதையாகி கொண்டே இருக்கிறது. ஒரே நாளில் 3 பெண்களிடம் நகை பறிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    சென்னையில் செயின்- செல்போன் பறிப்பு சம்பவங்கள் தொடர் கதையாகி கொண்டே இருக்கிறது.

    நேற்று 3 பெண்களிடம் செயின் பறிக்கப்பட்டுள்ளது. நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த சினிமா டான்சரான சவிதா தனது தாலி செயினை வீட்டில் கழற்றி வைத்து விட்டு தூங்கினார். காலையில் கண்விழித்த போது அதனை காணவில்லை. அவரது 15 பவுன் தாலி செயினை யாரோ திருடிச் சென்று உள்ளனர்.

    கொளத்தூர் சாந்தி நகரைச் சேர்ந்த ரூபா என்ற பெண்ணிடம் 8 பவுன் செயினும், வில்லிவாக்கத்தில் அகிலா என்பவரிடம் 25 பவுன் தாலி செயினும் பறிக்கப்பட்டுள்ளது.

    கரூர் காகித ஆலையில் முதுநிலை மேலாளராக பணிபுரிந்து வரும் முருகேசன் சென்னையில் தனது நண்பரை பார்க்க வந்தார். பாண்டி பஜாரில் அவரிடம் மோட்டார்சைக்கிளில் வந்த கொள்ளையர்கள் செல்போனை பறித்து சென்றனர்.
    நெய்வேலி பகுதியில் பெண்களிடம் நகை பறித்த வழக்கில் 2 வாலிபர்களுக்கு 20 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பு அளித்தார்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் நெய்வேலி இந்திரா நகரை சேர்ந்தவர் சித்ரா. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.

    இவர் கடந்த 2007-ம் ஆண்டு ஜூன் மாதம் 6-ந் தேதி அந்த பகுதியில் நடைபயிற்சியில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் சித்ரா கழுத்தில் கிடந்த 3½ பவுன் நகையை பறித்து சென்றனர்.

    அதேபோல் நெய்வேலி டவுன்ஷிப் பகுதியை சேர்ந்த மணிபாலா (வயது 31) என்பவர் நடைபயிற்சி சென்ற போது அவரது கழுத்தில் கிடந்த 3½ பவுன் நகை பறிக்கப்பட்டது.

    அதுபோல் நெய்வேலி டவுன்ஷிப்பில் தேவகி என்ற பெண்ணிடம் 5 பவுன் நகையும், நெய்வேலி 12-வது வட்டம் ஜானகி என்பவரிடம் 1½ பவுன் நகையும், 20-வது வட்டத்தை சேர்ந்த தனலட்சுமி என்பவரிடம் 4 பவுன் நகையும் பறிக்கப்பட்டது. நெய்வேலி பகுதியில் மொத்தம் 10 பெண்களிடம் 50 பவுன் நகைகள் பறிக்கப்பட்டது.

    இது குறித்து அவர்கள் நெய்வேலி போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

    அவர்கள் நடத்திய விசாரணையில் பெண்களிடம் நகை பறித்தது நெய்வேலி மாற்று குடியிருப்பு பகுதியை சேர்ந்த வசந்தராஜா (24) மற்றும் நெய்வேலியை சேர்ந்த செந்தில்குமார் (22) என்பதும் தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் அவர்களை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை நெய்வேலி கோர்ட்டில் நடந்து வந்தது.

    பின்னர் இந்த வழக்கு விசாரணை பண்ருட்டி குற்றவியல் நடுவர் நீதி மன்றத்துக்கு மாற்றப்பட்டது. விசாரணை நீதிபதி கணேஷ் முன்னிலையில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது. அரசு வக்கீலாக தேவசுந்தரி ஆஜரானார். இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட வசந்தராஜா, செந்தில்குமார் ஆகியோருக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1½ லட்சம் அபராதம் விதித்து நீதிபதி கணேஷ் இன்று உத்தரவிட்டார்.
    பண்ருட்டியில் பெண்களிடம் நகை பறித்த 2 வாலிபர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து தங்க சங்கிலி, மோட்டார் சைக்கிள் மற்றும் கத்தி, செல்போன்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
    பண்ருட்டி:

    சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர்கள் அருண்குமார் (வயது 23), நவீன்குமார் (20). இவர்கள் 2 பேரும் பல திருட்டு வழக்குகளில் கைதாகி சிறை சென்றவர்கள்.

    இவர்கள் இருவரும் சென்னையிலிருந்து பண்ருட்டி வந்தனர். பண்ருட்டி அடுத்த கண்டரக்கோட்டை அருகே வந்து கொண்டு இருந்த போது கண்டரக்கோட்டை- சென்னை சாலையில் நடந்து சென்ற சத்துணவு பெண் ஊழியர் ஆதிலட்சுமி (55) என்பவரிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்த செல்போனை பறித்து சென்றனர்.

    பண்ருட்டி எல்.என்.புரம் பகுதியில் வசித்து வரும் தனியார் கம்பெனி ஊழியர் சிவசங்கர் என்பவரின் மனைவி நந்தினி (28). இவர் தனது குழந்தையை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல ஆட்டோவுக்காக ரோட்டோரம் நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த இவர்கள் இருவரும் கையில் வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி நந்தினிடமிருந்து தங்க சங்கிலியையும், செல்போனையும் பறித்து சென்றனர்.

    நந்தினியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் மற்றும் அந்த பகுதியில் ரோந்து பணியிலிருந்த போலீசார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு திருடர்களை விரட்டி சென்று மடக்கி பிடித்து பண்ருட்டி போலீசில் ஒப்படைத்தனர்.

    பண்ருட்டி இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ், சப்- இன்ஸ்பெக்டர்கள் விஷ்ணுப் பிரியா, அண்ணாமலை, கோவிந்தசாமி, குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் லூயிஸ் ராஜ் ஆகியோர் பிடிபட்ட திருடர்களிடம் விசாரணை நடத்தினர்.

    அதில் அவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் சென்னையில் இருந்து திருடி வந்தது என்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்கள் மறைத்து வைத்து இருந்த 5 பவுன் தங்க சங்கிலி, மோட்டார் சைக்கிள் மற்றும் கத்தி, செல்போன்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

    கொள்ளையர்களை துணிச்சலாக துரத்தி பிடித்து சென்று பிடித்த பண்ருட்டி, புதுப்பேட்டை போலீசாரை துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் பாராட்டினார்.

    கோவையில் நேற்று இரவு 2 பெண்களிடம் மர்ம நபர்கள் நகையை பறித்து சென்றனர். இந்த இரு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை:

    கோவை ஆனைமலையை சேர்ந்தவர் ஜான் கிருபாகரன். இவருடைய மனைவி ரூத்குணசீலி (வயது 53).

    இவரது சகோதரி சிங்காநல்லூரில் வசித்து வருகிறார். அவரை பார்ப்பதற்காக நேற்று சிங்காநல்லூர் வந்த ரூத்குணசீலி இரவு 8.30 மணி அளவில் அம்மன் கோவில் தெருவில் நடந்து சென்றார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் ரூத்குணசீலி கழுத்தில் அணிந்திருந்த 5½ பவுன் எடை கொண்ட 2 தங்கசெயின்களை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்று விட்டனர். புகாரின் பேரில் சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த காதர் பாட்ஷா என்பவரது மனைவி பிர்தோஸ்(44). இவர் நேற்று இரவு தனது மகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த 2 பேர் பிர்தோஸ் அணிந்திருந்த 6 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனர். புகாரின் பேரில் ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சாம்பவர் வடகரையில் நள்ளிரவில் வீடு புகுந்த மர்ம நபர்கள் படுத்து தூங்கிய 2 பெண்களிடம் நகையை பறித்து சென்றனர்.
    சுரண்டை:

    சுரண்டை அருகேயுள்ள சாம்பவர்வடகரை தேரடி தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி(வயது50). விவசாயி. இவரது மகள் ராமலட்சுமியை, அப்பகுதி லட்சுமிபுரத்தை சேர்ந்த இசக்கிமுத்து என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்திருந்தனர். இந்த நிலையில் ராமலட்சுமி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இதனால் கருப்பசாமி அவருக்கு வளைகாப்பு நடத்தி ஊருக்கு அழைத்து வந்திருந்தார். 

    இரவில் ராமலட்சுமி வீட்டின் ஒரு அறையில் படுத்து தூங்கினார். அப்போது நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர் திடீரென ராமலட்சுமி படுத்திருந்த அறைக்குள் நுழைந்தான். பின்னர் ராமலட்சுமி கழுத்தில் கிடந்த 6 பவுன் நகையை பறித்து சென்றுவிட்டான். சத்தம் கேட்டு திடுக்கிட்டு விழித்த ராமலட்சுமி திருடன் திருடன் என கத்தினார். அதற்குள் மர்ம நபர் தப்பி சென்றுவிட்டான். 

    இந்த சம்பவம் நடைபெற்ற சிறிது நேரத்தில் அதே பகுதி புளியம்பட்டி தெருவை சேர்ந்த ராமகிருஷ்ணன் மனைவி களஞ்சியம்(55) என்பவரது வீட்டுக்குள் மர்ம நபர் புகுந்தார். அங்கு தூங்கிக்கொண்டிருந்த களஞ்சியம் கழுத்தில் கிடந்த 25 கிராம் நகையை பறித்தான். திடுக்கிட்டு விழித்த களஞ்சியம் கொள்ளையனிடம்  நகை சிக்காமல் இருக்க போராடினார். 
    இதில் நகை அறுந்து பாதி நகை கொள்ளையனிடம் சிக்கியது. அந்த நகையுடன் மர்ம நபர் ஓட்டம் பிடித்தார். 

    அடுத்தடுத்த இந்த சம்பவங்கள் சாம்பவர் வடகரை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாகவே இப்பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. மின்வெட்டை பயன்படுத்தி மர்ம நபர் இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டுள்ளான். இதுதொடர்பாக சாம்பவர் வடகரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சின்னதுரை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    சென்னையில் கே.கே.நகர், சாலி கிராமம், வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் நடந்து சென்ற பெண்களிடம் நகை பறிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    போரூர்:

    கே.கே நகர் பிருந்தாவனம் குடியிருப்பில் வசித்த சந்திரா (வயது67). இன்று காலை 7 மணி அளவில் மருமகளுடன் வீட்டிற்கு அருகே உள்ள ராஜமன்னார் சாலையில் நடைபயிற்சி சென்று கொண்டிருந்தார்.

    அப்போது எதிரே இரு சக்கர வாகனத்தில் வந்த இரு மர்ம நபர்கள் சந்திரா அணிந்திருந்த 6 சவரன் தாலி செயினை பறித்து சென்றனர். இதுகுறித்து கே.கே.நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சாலிகிராமம் சாந்தி காலனியை சேர்ந்தவர் மேகலை (வயது65). அவர் தினமும் காலையில் அருணாச்சலம் சாலையில் உள்ள குபேர சாய் பாபா ஆலயத்திற்கு வந்து செல்வது வழக்கம்.

    இன்று காலை 7 மணி அளவில் மேகலை கோவில் அருகே நடந்து வரும் போது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த இரு மர்ம நபர்கள் மேகலை அணிந்திருந்த 6 சவரன் செயினை பறித்து சென்றனர்.

    இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வடபழனி ஆற்காடு சாலையில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்த ராணி (வயது46). இன்று காலை நடைபயிற்சிக்கு சென்றார். அப்போது மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேர் அவரிடம் அணிந்திருந்த 3 பவுன் செயினை பறித்து சென்றனர்.

    பட்டப்பகலில் நடைபெற்ற இந்த 3 செயின் பறிப்பு சம்பவம் அப்பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews
    ×