என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பெருமாள் கோவில்"
- வேக வைத்த காராமணி, கொண்டைகடலை சேர்க்கவும்.
- இவை அனைத்தையும் 5 முதல் 10 நிமிடம் சமைக்கவும்.
தேவையான அளவு:
பச்சரிசி சாதம் - 2 கப்
துவரம்பருப்பு - வேக வைத்தது 1 கப்
மிளகு - 1 1/2 ஸ்பூன்
வெந்தயம் - 1/2 ஸ்பூன்
தனியா - 1 ஸ்பூன்
கடலைபருப்பு - 1 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 1 ஸ்பூன்
வரமிளகாய் - 10
பரங்கிகாய் - 100 கி
கத்திரிக்காய் - 100 கி
அவரைக்காய் - 100 கி
சௌவ்சௌவ் - 100 கி
காராமணி - 100 கி
கொண்டைகடலை - 100 கி
பச்சை மிளகாய் - 2
கடுகு - தாளிக்க
கறிவேப்பிலை - தாளிக்க
புளி - ஒரு எலும்மிச்சை அளவு
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - தாளிக்க
நெய் - தேவையான அளவு
மசாலா தயாரிக்கும் முறை:
• ஒரு வாணலியில் மிளகு, வெந்தயம், தனியா மூன்றையும் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும், பின்னர் கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு, வரமிளகாய் ஆகியவற்றை வறுத்து எடுத்துக் கொள்ளவும். வறுத்த அனைத்தையும் நன்று ஆறியவுன் மிக்ஸியில் போட்டு பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.
செய்முறை:
• வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றவும். அடுத்து கடுகு சேர்க்கவும். கடுகு நன்கு பொரிந்தவுடன், வரமிளகாய் 3, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் போட்டு தாளிக்கவும்.
• பின்னர் நறுக்கி வைத்துள்ள பரங்கிகாய், கத்திரிக்காய், அவரைக்காய், சௌவ்சௌவ் ஆகிய காய்கறிகளை போட்டு 5 நிமிடம் நன்கு சமைக்கவும்.
• பின்னர் வேக வைத்த காராமணி, கொண்டைகடலை சேர்க்கவும்.
• அதன் பின் வேகவைத்த துவரம் பருப்பை சேர்க்கவும்.
• காய்கறி மற்றும் பருப்பு இரண்டையும் சேர்த்து 5 முதல் 8 நிமிடம் நன்கு வேக வைக்கவும்.
• இந்த நிலையில் புளி தண்ணீர் சேர்த்து 2 நிமிடம் சமைக்கவும்.
• இவையனைத்து நன்கு வெந்தவுடன் தயாரித்து வைத்துள்ள மசாலா பொடியை சேர்க்கவும்.
• இதனுடன் பெருங்காயம், வேகவைத்த பச்சரிசி சாதத்தை சேர்க்கவும்.
• பின்னர் ஒரு 1/2 கப் தண்ணீர், மற்றும் 2 ஸ்பூன் நெய் சேர்த்து நன்கு கிளறவும்.
• இவை அனைத்தையும் 5 முதல் 10 நிமிடம் சமைக்கவும்.
• இதோ சுவையான பெருமாள் கோவில் கதம்ப சாதம் ரெடி.
- கடந்த 2016-ம் ஆண்டு பெருமாள் கோவில் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
- பக்தர்கள் ஏராளமானோர் திரண்டு நெகழ்ச்சியுடன் சுவாமி தரிசனம் செய்தனர்.
தாடிக்கொம்பு:
திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பு பேரூராட்சிக்குட்பட்ட டி.அய்யம்பாளையத்தில் விநாயகர், காளியம்மன், பகவதியம்மன் கோவில்கள் உள்ளது. இந்த கோவில்களின் நகைப்பெட்டி ஒரு தரப்பினருக்கு சொந்தமான பெருமாள் கோவிலில் வைத்து வந்தனர்.
இந்த பெருமாள் கோவில் உரிமை சம்மந்தமாக கடந்த 2012-ம் ஆண்டு இரு தரப்பினருக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து திண்டுக்கல் ஆர்.டி.ஓ. தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் கடந்த 2016-ம் ஆண்டு பெருமாள் கோவில் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
கடந்த 8 ஆண்டுகளாக கோவில் திறக்கப்படாததால் பக்தர்கள் வேதனையடைந்தனர். தற்போது திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் தலைமையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடந்தது. அதில் பெருமாள் கோவில் குறிப்பிட்ட சமுதாயத்துக்கு பாத்தியப்பட்டது என்றும் நகைபெட்டியை வைத்து பாதுகாக்கவும், பராமரிக்கவும் திருவிழா காலங்களில் எடுத்து சென்று வழிபடவும் அவர்களுக்கு மட்டும் உரிமை உண்டு என முடிவானது. இதனை அனைத்து தரப்பினரும் ஏற்றுக் கொண்டனர்.
இதனால் கடந்த 8 ஆண்டுகளாக திறக்கப்படாத கோவிலை திறப்பது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி தாசில்தார் வில்சன் தேவதாஸ் முன்னிலையில் சீல் அகற்றப்பட்டது. அதன் பின்னர் கோவில் திறக்கப்பட்டதால் பக்தர்கள் ஏராளமானோர் திரண்டு நெகழ்ச்சியுடன் சுவாமி தரிசனம் செய்தனர்.
- தருமபுரி அருகே திம்மராய பெருமாள் கோவிலில் மணியை திருடி சென்ற திருடன்
- சி.சி.டிவி. பதிவுகளை வைத்து போலீசார் விசாரணை
தருமபுரி அருகே உள்ள சோகத்தூரில் திம்மராய பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலை வழக்கம்போல் நேற்று முன்தினம் பூசாரி பூஜை முடித்து விட்டு பூட்டிவிட்டு சென்று விட்டார். மீண்டும் கோவிலை திறக்க நேற்று காலை வந்து கோவிலுக்கு வந்தார்.
அப்போது கதவு பூட்டு உடைக்கப்பட்டு கதவுகள் திறந்த நிலையில் இருந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பூசாரி ஊர் பொதுமக்களிடம் தகவல் கூறினார். இதனை அடுத்து கிராம நிர்வாகிகள், பொதுமக்கள் வந்து கோவிலில் உள்ள சிசிடிவி கேமரா பதிவை பார்த்தபோது கோவிலில் அதிகாலை புகுந்த திருடன் கோவில் கேட்டின் பூட்டை உடைத்து உண்டியலை உடைக்க முயன்றுள்ளான்.
உண்டியலை உடைக்க முடியாத நிலையில் ஆத்திரமடைந்த திருடன் வந்ததற்கு ஏதாவது எடுத்துச் செல்ல வேண்டும் என்று நோக்கத்தில் சாவகாசமாக கோவிலில் இருந்த தீபாராதனை தட்டு, தீர்த்தவட்டல், சடாரி, மணி, மற்றும் உற்சவர் வைக்கும் செம்புத்தகடு ஆகிய பொருட்களை திருடி சென்றது தெரியவந்தது.
மேலும் கோவிலில் சி.சி.டி.வி., இருப்பது கூட தெரியாததால் பதற்றமில்லாமல் பூட்டை உடைத்து கோயிலில் உள்ள பொருட்களை திருடி செல்கின்ற வீடியோ வெளியாகி உள்ளன. கோவில் திருட்டு சம்பவம் குறித்து தருமபுரி நகர போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- இந்து தர்ம பேரவை தமிழக அரசுக்கு மனு
- ஒரு வேளை பூஜை கூட சரியாக நடைபெறவில்லை என்று பக்தர்கள் வேதனை
இரணியல் :
குமரி மாவட்டம் வில்லுகுறி அருகே மாம்பழத்துறையாறு அணையில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆலச்சுவடி என்னும் பகுதியில் 164 சென்ட் நிலப்பரப்பில் மலையாண்ட பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இது மன்னர் காலத்தில் கட்டப்பட்ட மிகவும் பழமையான கோவில் ஆகும். இந்த கோவில் இப்போது அறநிலையத்துறையை கட்டுபாட்டில் உள்ளது. ஆனால் இங்கு ஒரு வேளை பூஜை கூட சரியாக நடைபெறவில்லை என்று பக்தர்கள் வேதனை அடைகின்றனர்.
மிகவும் பழமையான இந்தக் கோவில் மற்றும் கோபுரங்கள் இடியும் தருவாயில் உள்ளதால் அதனை புனரமைப்பு செய்ய வேண்டும். இது தொடர்பாக இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆலயத்தை திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்தி குமரி மாவட்டம் மட்டும் இல்லாமல் வெளி மாவட்டம் மற்றும் மாநில பக்தர்களும் இங்கு வந்து சாமி தரிசனம் செய்ய வழிவகைகள் செய்து தர வேண்டும். மேலும் ஆலயத்திற்கு சொந்தமான நிலங்கள் இருந்தால் அதையும் மீட்டு எடுக்க வேண்டும் என ஹிந்து தர்ம பேரவை வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக அரசுக்கும் அறநிலையத்துறைக்கும் மனு அனுப்பி உள்ளது.
- சா்ப்ப விநாயகா் விற்றிருக்கும் தலமாகவும் தாளக்கரை லட்சுமி நரசிம்மப் பெருமாள் கோவில் விளங்குகிறது.
- சனிக்கிழமை தொடங்கப்பட்டு வாரந்தோறும் சிறப்பு பூஜைகள், ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடேசப் பெருமாள் சுவாமி திருவீதி உலா உள்ளிட்டவை நடைபெற்றன
அவிநாசி:
பழமை வாய்ந்ததும், திருப்பூா் மாவட்டத்திலேயே தனி சன்னிதியாய் நரசிம்மருக்கு இடதுபுறம் மகாலட்சுமி நின்ற நிலையில் அருள்பாலிக்கும் சிறப்புக்குரியதும், சா்ப்ப விநாயகா் விற்றிருக்கும் தலமாகவும் தாளக்கரை லட்சுமி நரசிம்மப் பெருமாள் கோவில் விளங்குகிறது. இந்து சமய அறநிலையத் துறையின்கீழ் உள்ள இக்கோவிலில் புரட்டாசி திருவிழா செப்டம்பா் 23-ந் தேதி தொடங்கி 5 வார சனிக்கிழமைகளிலும் ஒவ்வோரு வாரம் அப்பகுதியைச் சுற்றியுள்ள கிராமத்தினா் உபயதாரா்களாக பங்கேற்று சிறப்பு பூஜைகளும், இரவு உற்சவமும் நடைபெற்றது.
இதேபோல மேலத் திருப்பதி எனப் போற்றப்படும், சேவூா் அருகேயுள்ள மொண்டிபாளையம் பெருமாள் கோவிலில் புரட்டாசி திருவிழா செப்டம்பா் 16-ந் தேதி சனிக்கிழமை தொடங்கப்பட்டு வாரந்தோறும் சிறப்பு பூஜைகள், ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடேசப் பெருமாள் சுவாமி திருவீதி உலா உள்ளிட்டவை நடைபெற்றன.
இந்நிலையில் பிரசித்தி பெற்ற இரு கோவில்களிலும் இந்த வாரம் சனிக்கிழமையுடன் புரட்டாசி திருவிழா நிறைவு பெற்றது.
- மழைக்காலங்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர்.
- வெள்ளகோவில் நகர தி.மு.க. செயலாளர் சபரி எஸ்.முருகானந்தன் உட்பட உள்ளாட்சி பிரதிநிதிகள், திருப்பணி குழு உறுப்பினர்கள், பக்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
வெள்ளகோவில்:
திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் வரதராஜ பெருமாள் கோவில் மிகவும் பழமையான கோவிலாகும். இந்த கோவிலில் ஸ்ரீதேவி, பூதேவி, சமேத வரதராஜ பெருமாள், ஆஞ்சநேயர், மகாலட்சுமி, கருடாழ்வார், விநாயகர் ஆகிய தெய்வங்கள் உள்ளன. இந்த கோவில் தரை மட்டத்தில் இருந்து தாழ்வான நிலையில் இருப்பதால் மழை நீர் மற்றும் கழிவு நீர் கோவில் கருவறை வரை செல்கிறது. இதனால் மழைக்காலங்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். இதனால் கோவிலை புனரமைப்பு செய்ய முடிவு செய்யப்பட்டு, கோவிலை முற்றிலும் அகற்றப்பட்டு இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 10-ந்தேதி பாலாலயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ரூ.1 கோடியே 50 லட்சம் செலவில் கோவில் கட்ட பூமி பூஜை மற்றும் கால்கோள் விழா நடைபெற்றது. கோவில் கட்டும் பணியை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் கலந்து கொண்டு தொடக்கி வைத்தார். இதில் திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டல தலைவர் இல.பத்மநாபன், திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ராசி கே.ஆர்.முத்துக்குமார், திருப்பணி குழு தலைவர் ஏ.எம்.சி. செல்வராஜ், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் எஸ்.என்.முத்துக்குமார், கோவில் செயல் அலுவலர் எஸ்.ராமநாதன், வெள்ளகோவில் நகர தி.மு.க. செயலாளர் சபரி எஸ்.முருகானந்தன் உட்பட உள்ளாட்சி பிரதிநிதிகள், திருப்பணி குழு உறுப்பினர்கள், பக்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
- பெண்கள் கூட்டம் அலைமோதியது
- இன்று புரட்டாசி கடைசி சனிக்கிழமை
நாகர்கோவில்,
புரட்டாசி சனிக்கிழமை களில் விரதம் இருந்து பெருமாளை வழிபட்டால் துன்பங்கள் நீங்கி ஆனந்தம் கிடைக்கும், நினைத்த காரி யங்கள் கைகூடும் என்பது ஐதீகம்.
இதனால் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்களில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகிறார் கள். புரட்டாசி கடைசி சனிக்கிழமையான இன்று குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. கோவி லில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
வடிவீஸ்வரம் இடர் தீர்த்த பெருமாள் கோவிலில் இன்று காலை யில் பெருமா ளுக்கு சிறப்பு தீபாராதனை கள் நடந்தது. பெருமாளை தரிசிப்ப தற்காக பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பெருமாளை தரிச னம் செய்தனர். பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப்பட்டது.
கன்னியாகுமரி விவேகானந்தர் கேந்திர கடற்கரை வளாகத்தில் அமைந்துள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான வெங்கடாஜலபதி கோவிலி லும் இன்று காலையில் சுப்ரபாத தரிசனம், விசேஷ பூஜைகளும், சிறப்பு வழி பாடுகளும், தீபாராதனை களும் நடந்தது. திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலிலும் இன்று காலையில் சிறப்பு பூஜைகள் நடந்தது. கோவிலில் காலை முதலே பக்தர்கள் வந்து பெருமாளை தரிசனம் செய்துவிட்டு சென்றனர்.
திருப்பதி சாரம் திருவாழ் மார்பன் கோவில், பறக்கை மதுசூதன பெருமாள் கோவில், சுசீந்திரம் துவா ரகை கிருஷ்ணன் கோவில், நாகர்கோவில் கிருஷ்ணன் கோவிலில் உள்ள கிருஷ்ண சாமி கோவில், கோட்டார் வாகையடி தெருவில் உள்ள ஏழாகரம் பெருமாள் கோவில், வட்ட விளை தென்திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் உள்பட அனைத்து பெருமாள் கோவில்களிலும் இன்று காலையில் பெருமாளுக்கு சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் நடந்தது.
பெருமாளை தரிசிப்பதற்காக காலை முதலே பக்தர்கள் கூட்டம் கோவில் களில் நிரம்பி வழிந்தது.
- மாலை 6.30 மணிக்கு சேஷ வாகனத்தில் பெருமாள் அருள்பாலிக்கிறார்.
- பிரம்மோற்சவத்தின் கடைசி நாளான 23-ந் தேதி காலை சக்ரஸ்நானம் நடக்கிறது. அன்று மாலை 6.30 மணிக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது.
சென்னை:
தி.நகர் வெங்கட் நாராயண சாலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது.
திருமலையில் நடப்பது போல இந்த கோவிலிலும் ஆண்டு தோறும் பிரம்மோற்சவம் விமரிசையாக நடத்தப்படும். இந்த ஆண்டிற்கான பிரம்மோற்சவம் வரும் 15-ந் தேதி தொடங்குகிறது.
அன்று மாலை 6.30 மணிக்கு சேஷ வாகனத்தில் பெருமாள் அருள்பாலிக்கிறார். அடுத்தநாள் ஹம்சவாசனத்திலும், 17-ந் தேதி முத்து பந்தலிலும் 15-ந் தேதி கல்ப விருட்சத்திலும் உலா வருகிறார். வரும் 19ந் தேதி இரவு 7 மணிக்கு கருட சேவை உற்சவம் நடக்கிறது. 20-ந்தேதி காலை 9 மணிக்கு ஹனுமந்த வாகனத்திலும் மாலை 6.30 மணிக்கு கஜ வாகன புறப்பாடும் நடக்கிறது.
வரும் 21-ந் தேதி காலை சூரிய பிரபையிலும், மாலை சந்திர பிரபையிலும் உலா வருகிறார். அஷ்வ வாகனத்தில், 22-ந் தேதி மாலை 6.30 மணிக்கு வலம் வந்து பெருமாள் அருள்பாலிக்கிறார். பிரம்மோற்சவத்தின் கடைசி நாளான 23-ந் தேதி காலை சக்ரஸ்நானம் நடக்கிறது. அன்று மாலை 6.30 மணிக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது.
இந்த தகவலை திருமலை திருப்பதி தேவஸ்தான தமிழக, புதுச்சேரி ஆலோசனைக்குழு தலைவர் சேகர் தெரிவித்தார். இக்கோவிலில் 3 நாட்களாக நடந்த பவித்ர உற்சவம் நேற்றுடன் முடிந்தது.
- பெருமாளுக்கு துளசி மாலைகளும், வண்ண மலர்களையும் பக்தர்கள் அணிவித்தனர்.
- தொடர்ந்து பக்தர்களுக்கு துளசி தீர்த்தம் வழங்கப்பட்டது.
காங்கயம்:
திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே உள்ள பெருமாள் மலை மீது குடி கொண்ட ஸ்ரீதேவி சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத வழிபாடு நடந்து வருகிறது. இந்நிலையில் 3-வது சனிக்கிழமை விழா வெகு சிறப்பாக நடந்தது. இதையொட்டி பெருமாளுக்கு துளசி மாலைகளும், வண்ண மலர்களையும் பக்தர்கள் அணிவித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிபாடு செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு துளசி தீர்த்தம் வழங்கப்பட்டது. முடிவில் விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் காங்கயம் நண்பர்கள் அன்னதான கமிட்டி சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
- கல்யாண வரதராஜ பெருமாளுக்கு வெண்பட்டாடை உடுத்தி ராஜ அலங்காரம் செய்யப்பட்டு 7 நிறங்களில் விஷேச புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
- பவழ வண்ண பெருமாள் ஸ்ரீ தேவி பூதேவி தாயார் ஆண்டாள் நாச்சியாருக்கு 20 கிலோ எடையிலான லவங்கம் மாலை அணிவிக்கப்பட்டது.
திருவொற்றியூர்:
சென்னையில் உள்ள பெருமாள் கோவில்களில் புரட்டாசி 2-வது சனிக்கிழமையையொட்டி இன்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர்.
திருவொற்றியூர் காலடிப்பேட்டையில் மிகவும் பழமையான கல்யாண வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சுமார் ரூ.2 கோடி செலவில் புனரமைக்கப் பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த கோவிலில் புரட்டாசி மாதம் 2-வது சனிக்கிழமையான இன்று மூலவர் கல்யாண வரதராஜ பெருமாளுக்கு வெண்பட்டாடை உடுத்தி ராஜ அலங்காரம் செய்யப்பட்டு 7 நிறங்களில் விஷேச புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இதனையடுத்து உற்சவர் பவழ வண்ண பெருமாள் ஸ்ரீ தேவி பூதேவி தாயார் ஆண்டாள் நாச்சியாருக்கு 20 கிலோ எடையிலான வாசனை நிறைந்த, லவங்கம் மற்றும் அலங்கார பொருட்கள் கொண்டு தயாரிக்கபட்ட மாலை அணிவிக்கப்பட்டது. மேலும் ஜடை, கிரீடங்கள் அணிந்து பிரமாண்ட அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இந்த கோவிலில் புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் விதவிதமான மலர்கள், பழங்கள் என மாலை அணிவித்து பெருமாளுக்கு அலங்காரம் செய்வதால் வெளிப்பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் புரட்டாசி 2-வது சனிக்கிழமையான இன்று அதிகாலை 4.30 மணிக்கே நடை திறக்கப்பட்டது. இதனால் காலை முதலே சாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் திரண்டனர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தினார்கள்.
சென்னை தி.நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான பெருமாள் கோவிலில் இன்று ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக குவிந்தனர். அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டதால் பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். காலையிலேயே ஏராளமான பக்தர்கள் வந்ததால் சாலை வரை பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. இதே போல் புரசைவாக்கம் சீனிவாச பெருமாள் கோவில், வளசரவாக்கம் பெருமாள் கோவில் என அனைத்து பெருமாள் கோவில்களிலுமே பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது.
- ஜெனக நாராயண பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.
- இதைத்தொடர்ந்து சிறப்பு பூஜை நடைபெற்று பிரசாதம் வழங்கப்பட்டது.
சோழவந்தான்
சோழவந்தான் ஜெனகநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதம் முதல் வார சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. ஸ்ரீதேவி பூதேவி சமேத ஜெனக நாராயண பெருமாளுக்கு 21 திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து சிறப்பு பூஜை நடைபெற்று பிரசாதம் வழங்கப்பட்டது. மாலையிலும் சிறப்பு அர்ச்சனை, பூஜைகள் நடந்தது.
இதேபோல் அரசு பஸ் பணிமனை அருகே உள்ள ஆஞ்சநேயர் கோவிலிலும் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சனீஸ்வர பகவான் கோவிலிலும் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது.திரவுபதி அம்மன் கோவிலில் உள்ள மகா விஷ்ணுவிற்கு பால், தயிர் உள்பட 12 பொருட்களை கொண்டு அபிஷேகம் நடந்தது. குருவித்துறை சித்திர ரத வல்லபபெருமாள் கோவிலில் புரட்டாசி மாத முதல் சனி வாரத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றது.
- தி.நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தானம் கோவிலில் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
- புரசைவாக்கம் வெள்ளாளல் தெருவில் உள்ள சீனிவாச பெருமாள் கோவிலில் மூலவருக்கு புஷ்ப அங்கி சேவை நடைபெற்றது.
சென்னை:
புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகும். பெருமாளை வழிபடுபவர்கள் சனிக்கிழமைகளில் விரதமிருந்து வணங்குவார்கள்.
அதிலும் புரட்டாசி சனிக்கிழமைகள் பெருமாளுக்கு கூடுதல் விசேஷமாகும். அதிலும் இன்று புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை என்பதால் சென்னையில் உள்ள பெருமாள் கோவில்களில் பக்தர்கள் அதிக அளவில் காணப்பட்டனர். இதையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தி.நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தானம் கோவிலில் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பிரசாதங்களும் வழங்கப்பட்டன.
புரசைவாக்கம் வெள்ளாளல் தெருவில் உள்ள சீனிவாச பெருமாள் கோவிலில் மூலவருக்கு புஷ்ப அங்கி சேவை நடைபெற்றது. கருட வாகனத்தில் உற்சவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் பங்கேற்ற பக்தர்கள் கோவிந்தா.... கோவிந்தா... என கோஷம் எழுப்பி வழிபட்டனர். கோவில் சார்பாக பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் கங்காதரன் செய்திருந்தார்.
இதேபோன்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்கள் அனைத்திலும் பக்தர்கள் திரண்டு பெருமாளை தரிசித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்