என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மகள் மரணம்"
தூத்துக்குடி ராஜீவ்நகர் 8-வது தெருவை சேர்ந்தவர் மகேஸ்வரன் (வயது40). இவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி கங்கா (36) தூத்துக்குடி குடிசை மாற்று வாரிய அலுவலகத்தில் ஒப்பந்த தொழிலாளராக வேலை பார்த்து வருகிறார். இவர்களது மகள் சன்விகா (7) அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்தாள்.
மகேஸ்வரன் கடந்த ஆண்டு வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்தார். அப்போது, தான் வெளிநாட்டில் இருந்து அனுப்பிய பணத்தை கங்காவிடம் கேட்டுள்ளார். அதற்கு கங்கா கணவன் அனுப்பிய பணம் முழுவதும் செலவாகி விட்டது என கூறியுள்ளார்.
இதனால் மகேஸ்வரனுக்கு மனைவி நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டது. இது தொடர்பாகவும் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்றிரவு மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
இந்நிலையில் மகேஸ்வரன் இன்று அதிகாலை தனது மகள் சன்விகாவுக்கு விஷத்தை கொடுத்து, தானும் விஷம் குடித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த தந்தை, மகளை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சன்விகா இன்று காலை பரிதாபமாக இறந்தாள்.
மகேஸ்வரனுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மனைவி மீதான நடத்தை சந்தேகத்தில் 7 வயது மகளை விஷம் குடித்து கொன்றுவிட்டு, தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews
அணைக்கட்டு:
ஒடுகத்தூர் அடுத்த வரதலம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது35). இவருக்கு சுதா (28) என்ற மனைவியும். கஸ்தூரி (9), காயதிரி (7) என 2 மகள்களும் உள்ளனர். முருகேசன் மைசூரில் வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று சுதா, கணவர் முருகேசனை ஊருக்கு வரவேண்டும் என்று கூறியுள்ளார். இதற்கு முருகேசன் 2 பெண் பிள்ளைகளை வளர்க்க வேண்டும். அதனால் மாதம் ஒரு முறை வீட்டுக்கு வருகிறேன் என்று கூறியுள்ளார்.
இதனால் மனமுடைந்த சுதா கடந்த 25-ந்தேதி 2 மகள்களுக்கும் விஷத்தை கொடுத்துவிட்டு தானும் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மயங்கி கிடந்தவர்களை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
சிகிச்சை பலனின்றி சுதா பரிதாபமாக உயிரிழந்தார். கஸ்தூரி, காயத்திரி ஆகியோருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் கஸ்தூரி இன்று அதிகாலை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வேப்பங்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொண்டலாம்பட்டி:
சேலம் இரும்பாலை, பெருமாப்பட்டி அருகே உள்ள வெள்ளையங்காடு பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மனைவி சின்னபொண்ணு (வயது 35). இவரின் மகள் கிருத்திகா கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதை நினைத்து மனவேதனையுடன் இருந்த சின்னபொண்ணு நேற்று மதியம் வீட்டில் தனியாக இருந்த போது தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்த தகவல் அறிந்த எஸ்.கொல்லப்பட்டி அருகே உள்ள பட்டமுத்தாம்பட்டி காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த சின்னபொண்ணுவின் தந்தை தங்கவேல் (58), இரும்பாலை போலீசில் புகார் கொடுத்தார்.
புகாரின் பேரில் போலீசார் உடலை கைப்பற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்