என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மனைவியை கொல்ல முயற்சி"
ஆத்தூர்:
திண்டுக்கல் அருகே சித்தையன்கோட்டை பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தங்கமணி (வயது32). இவரது மனைவி முனீஸ்வரி (27). இவர்களுக்கு சந்தோஷ் (7) என்ற மகனும், ஹர்சவர்த்தினி (5) என்ற மகளும் உள்ளனர்.
கணவன்-மனைவி 2 பேரும் அதே பகுதியில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தனர். கருத்துவேறுபாடு காரணமாக இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு பெரியவர்கள் தம்பதியை சமரசம் செய்து வைத்தனர். இருந்தபோதும் பிரச்சினை தொடர்ந்து கொண்டே போனது.
கணவன்-மனைவி 2 பேரும் மில் வேலைக்கு செல்வதால் குழந்தைகளை முனீஸ்வரியின் தாய் வீட்டில் விட்டு செல்வது வழக்கம். நேற்று இரவு வேலை முடிந்து வந்த தங்கமணி மற்றும் முனீஸ்வரி ஹர்சவர்த்தினியை மட்டும் தங்கள் வீட்டுக்கு அழைத்து சென்றனர்.
வீட்டில் நுழைந்ததும் கணவன்-மனைவிக்கு இடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரம் அடைந்த தங்கமணி அருகில் இருந்த சுத்தியலை எடுத்து முனீஸ்வரியின் தலையில் பயங்கரமாக தாக்கினார். இதில் அவர் நிலைகுலைந்து போனார். மனைவி இறந்து விட்டதாக நினைத்த தங்கமணி அவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.
குழந்தையை விட்டு சென்றால் கஷ்டப்படும் என எண்ணிய தங்கமணி மகள் என்றும் பாராமல் ஹர்சவர்த்தினியின் கழுத்தை அறுத்தார். இதில் அந்த குழந்தை துடிதுடித்து இறந்தது.
பின்னர் தூக்குபோட்டு தங்கமணி தற்கொலை செய்து கொண்டார். முனீஸ்வரியின் முனங்கல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்தனர். அவர்கள் முனீஸ்வரியை திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முனீஸ்வரிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து செம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து தங்கமணி மற்றும் ஹர்சவர்த்தினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.
குடும்ப பிரச்சினையில் மகளை கொன்று தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
செய்யாறு:
செய்யாறு அருகே கீழ்புதுப்பாக்கத்தை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 40). இவரது மனைவி நதியா (33). இவர்களுக்கு திருமணமாகி 12 வருடங்கள் ஆகிறது. தம்பதிக்கு குழந்தை இல்லை. இதன் காரணமாக குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் நேற்று பார்த்திபன் தனது மனைவி நதியாவிடம் உனக்கு இனிமேலும் குழந்தை பிறக்காது. எனவே இந்த வெள்ளை காகிதத்தில் கை எழுத்து போடுமாறு கேட்டு சண்டை போட்டுள்ளார். அதற்கு நதியா மறுப்பு தெரிவித்தார். இதனால் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த பார்த்திபன் வீட்டில் இருந்த மண்எண்ணையை எடுத்து நதியாவின் மீது ஊற்றி தீவைத்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் நதியாவை மீட்டு செய்யாறு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்ைக்காக சென்னை அரசு ஆபத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து நதியாவின் உறவினர்கள் செய்யாறு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து பார்த்திபனை கைது செய்தனர்.
சோழிங்கநல்லூரை அடுத்த கண்ணகி நகரை சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மனைவி சரண்யா.
கடந்த 3 மாதத்துக்கு முன்பு ஒரு வழக்கில் ராஜேசை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரை மனைவி சரண்யா ஜெயிலுக்குள் பார்க்க செல்லவில்லை என்று தெரிகிறது. கணவரை ஜாமீனில் வெளியே எடுக்க முயற்சி செய்யவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று காலை ராஜேஷ் ஜெயிலில் இருந்து வெளியே வந்தார். தன்னை பார்க்க வராததால் மனைவி சரண்யா மீது கோபமும் அவரது நடத்தையில் சந்தேகமும் அடைந்தார்.
இதையடுத்து மனைவி சரண்யாவை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். நேற்று மாலை பெசன்ட்நகர், சிவசுந்தர அவென்யூ பகுதியில் நடந்து சென்ற சரண்யாவை ராஜேசும், அவரது நண்பர்களும் சரமாரியாக வெட்டி தப்பி ஓடிவிட்டனர்.
பலத்த காயம் அடைந்த சரண்யாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இது குறித்து திருவான்மியூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக கண்ணகிநகரை சேர்ந்த ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராஜேஷ் உள்ளிட்ட அவரது நண்பர்களை தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்