search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவி மீட்பு"

    ஒரத்தநாடு அருகே கடத்தப்பட்ட கல்லூரி மாணவியை போலீசார் மீட்டனர். எதற்காக கடத்தப்பட்டார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஒரத்தநாடு:

    ஒரத்தநாடு அருகே பாப்பாநாடு காவல் சரகம் தொண்டராம்பட்டு கிழக்கு கிராமம் புதுத் தெருவை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது45). விவசாயி இவரது மகள் பிரதிக்ஷா(19). இவர் பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு பிரதிக்ஷாவை மர்மநபர்கள் சிலர் கடத்தி சென்று விட்டதாக பாலமுருகன் பாப்பாநாடு போலீசில் புகார் கொடுத்தார். இதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஹேமலதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

    இந்நிலையில் கடத்தப்பட்ட மாணவி பிரதிக்ஷா குறித்து இன்ஸ் பெக்டர் ஹேமலதாவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசாருடன் சென்று பட்டுக்கோட்டையில் இருந்து பிரதிக்ஷாவை மீட்டு போலீஸ நிலையம் அழைத்து வந்தார். அவரிடம் யார் கடத்தி சென்றனர்?. எதற்காக கடத்தப்பட்டார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டுக்கல்லில் தாயுடன் ஏற்பட்ட தகராறில் மாயமான கல்லூரி மாணவி பிணமாக மீட்கப்பட்டார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மேற்கு அசோக்நகர் பகுதியை சேர்ந்தவர் தனசேகரன் மகள் வாழைசிவந்தி (வயது19). தந்தை இறந்து விட்டதால் தாய் ஈஸ்வரி பராமரிப்பில் இருந்து வந்துள்ளார். திண்டுக்கல்லில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.

    கடந்த சில நாட்களாகவே குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இதனால் வாழைசிவந்தி அடிக்கடி கோபித்துக் கொண்டு வெளியே சென்று விடுவார். சம்பவத்தன்றும் தாயுடன் தகராறு ஏற்பட்டதால் மன உளைச்சலில் இருந்த வாழைசிவந்தி வீட்டை விட்டு வெளியே சென்றார்.

    இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்ப வில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாய் திண்டுக்கல் நகர் மேற்கு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வாழைசிவந்தியை தேடி வந்தனர்.

    இன்று காலை ஆர்.எம். காலனி 12-வது கிராஸ் பகுதியில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான கிணற்றில் இளம்பெண் ஒருவர் பிணமாக கிடப்பதாக நகர் மேற்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் விரைந்து சென்று விசாரித்தபோது அந்த இளம்பெண் மாயமான வாழைசிவந்தி என தெரிய வந்தது.

    உடலை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் செவ்வந்தி கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது மர்ம நபர்கள் அவரை கொன்று கிணற்றில் வீசி சென்றனரா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    டி.கல்லுப்பட்டி அருகே கடத்தப்பட்ட மாணவியை மீட்ட போலீசார் காதலனை கைது செய்தனர்.

    பேரையூர்:

    மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள டி.கல்லுப்பட்டியை அடுத்த கொல்லவீரன்பட்டியைச் சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன். இவரது மகள் மகேஸ்வரி (வயது 17), பிளஸ்-2 மாணவி.

    அதே ஊரைச் சேர்ந்த விஜயபாண்டியன் மகன் கோடீஸ்வரன் (26) பி.காம். பட்டதாரி. இவரும் மகேஸ்வரியும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

    இந்த நிலையில் மகேஸ்வரி திடீரென மாயமானார். இது குறித்து டி.கல்லுப்பட்டி போலீசில், முத்துக்கிருஷ்ணன் புகார் செய்தார்.

    அதில், மகேஸ்வரி கடத்தப்பட்டுள்ளதாகவும், கோடீஸ்வரன் மற்றும் குடும்பத்தினர் இதனை செய்திருப்பதாகவும் தெரிவித்து இருந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் காதலனுடன் மகேஸ்வரி ஊருக்கு வந்த போது போலீசார் அவரை மீட்டனர். கோடீஸ்வரன் கைது செய்யப்பட்டார். அவரது பெற்றோர் விஜயபாண்டியன்-வசந்தி, தம்பி கருப்பசாமி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    நாகையில் இருந்து சென்னைக்கு காதலருடன் வந்த பிளஸ்-2 மாணவியை போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
    போரூர்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் கண்ணி கோவில் தெருவைச் சேர்ந்த கேட்டரிங் மாணவரும், அதே பகுதி சோழம்பேட்டை காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவியும் காதலித்து வந்தனர்.

    நேற்று இருவரும் சென்னை வந்தனர். அதிகாலை 5.30 மணி அளவில் வடபழனியில் இருந்து மயிலாப்பூர் செல்வதற்காக பஸ் நிலையத்தில் இருவரும் காத்து இருந்தனர். பள்ளி சீருடையில் இருந்த மாணவியை கண்டு சந்தேகம் அடைந்த வடபழனி போலீசார் இருவரிடமும் விசாரணை செய்தனர்.

    அப்போது அவர்கள் இருவரும் காதலிப்பதும் பெற்றோர்கள் எதிர்த்ததால் வீட்டை விட்டு வெளியேறி சென்னை வந்து இருப்பதும் விசாரணையில் தெரிந்தது. போலீசார் அவர்களை பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.
    ×