search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மும்பை பங்குச்சந்தை"

    • இன்று காலை 2 மணி நேரத்திற்குள் சென்செக்ஸ் 1,100-க்கு அதிக புள்ளிகள் சரிவு.
    • வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பனை செய்தது சரிவுக்கு முக்கிய காரணம்.

    மும்பை பங்குச்சந்தை வர்த்தகம் சென்செக்ஸ் இன்று மிகப்பெரிய அளவில் சரிவை சந்தித்து வர்த்தகம் ஆனதால் பங்கு முதலீட்டாளர்கள் சுமார் 7.37 லட்சம் கோடி ரூபாயை காலை 2 மணி நேரத்திற்குள் இழந்துள்ளனர்.

    மும்பை பங்குச்சந்தை வர்த்தகம் சென்செக்ஸ் இன்று காலை 9.15 மணிக்கு தொடங்கியதில் நேர் தலைகீழாக இறங்கிய வண்ணமாகவே இருந்தது.

    வெள்ளிக்கிழமை சிறப்பு வர்த்தகம் சென்செக்ஸ் 79724.12 புள்ளிகளுடன் நிறைவடைந்தது. இன்று காலை 79713.14 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது.

    அதன்பின் தொடர்ந்து சரிவை சந்தித்தது. இன்று காலை 11.26 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 78.400.46 புள்ளிகளுடடன் வர்த்தகம் ஆகியது. சுமார் 1323.66 புள்ளிகள் சரிவை சந்தித்தது.

    இதனைத் தொடர்ந்து 7.37 கோடி ரூபாய் அளவிற்கு பங்கு முதலீட்டாளர்கள் இழப்பை சந்தித்துள்ளனர். ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் மற்றும் வெளிநாட்டு முதலீட்டார்கள் தங்களுடைய பங்குகளை தடையின்றி விற்பனை செய்ததும், மெரிக்க அதிபர் தேர்தல் மற்றும் அடுத்த வாரம் அமெரிக்க ரிசர்வ் வங்கி வட்டி விகிதம் குறித்து முடிவு எடுக்க இருப்பது ஆகிய காரணிகள் இந்த வீழ்ச்சிக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

    சன் ஃபார்மா, என்.டி.பி.சி., ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், அதானி போர்ட்ஸ், பவர் கிரிட், டாடா மோட்டார்ஸ், டைடன் மற்றும் டாடா ஸ்டீல் போன்றவை மிகப்பெரிய அளவில் சரிவை சந்தித்துள்ளது.

    அதேவேளையில் மகிந்திரா அண்டு மகிந்திரா, டெக் மகிந்திரா, ஹெ.சி.எல். டெக்னாலாஜிஸ் மற்றும் இந்தூஸ் இண்ட் பேங்க் பங்குகள் உயர்வை சந்தித்துள்ளன. வெளிநா்டு நிறுவன முதலீட்டாளர்கள் சுமார் 211.93 கோடி ரூபாய் அளவில் கடந்த வெள்ளிக்கிழமை பங்குகளை விற்றனர். அக்டோபர் மாதம் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சுமார் 94 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு பங்குகளை விற்றுள்ளனர்.

    • சென்செக்ஸ் 2400 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 78,580.46 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
    • முதலீட்டாளர்களின் சந்தை மதிப்பில் சுமார் ரூ.15 லட்சம் கோடி குறைந்துள்ளது

    மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தையானது வாரத்தின் முதல் நாளிலேயே வீழ்ச்சியுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது.

    மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 2400 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 78,580.46 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.மேலும் தேசிய பங்குச்சந்தையின் குறியீடான நிஃப்டி 698 புள்ளிகள் சரிந்து 24,019.40 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

    வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவை ஒப்பிடுகையில் திங்கட்கிழமை வர்த்தகத்தில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களின் சந்தை மதிப்பு ரூ. 457.16 கோடியாக இருந்த நிலையில், அதில் சுமார் ரூ.15 லட்சம் கோடி குறைந்துள்ளது.

    உலகளவில் பங்குச்சந்தைகளில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியின் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தையிலும் இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.  மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள்ள போர் பதற்றமும்  வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாகும். மேலும் நிஃப்டி குறியீட்டில் டாடா மோட்டார்ஸ், மாருதி சுசுகி, ஹிண்டால்கோ, டைட்டன் கம்பெனி மற்றும் டாடா ஸ்டீல் ஆகிய பங்குகள் சரிவுடன் வர்த்தகமானது. 

    • நேற்றைய சாதனைகளை தகர்த்தெறிந்து இன்று [ஜூலை 3] வரலாறு காணாத ஏற்றத்துடன் இன்றைய இந்திய பங்குச்சந்தை தொடங்கியுள்ளது.
    • இன்றைய நிஃப்டி லாபத்தில் HDFC வங்கி முன்னிலையில் உள்ளது.

    நேற்று [ஜூலை 2] மும்பை பங்குச் சந்தை குறியீட்டு [BSE] சென்செக்ஸ் 79,856 என்று சாதனையை எட்டிய பின்னர் 31 புள்ளிகள் குறைந்து 79,441 என்ற புள்ளிகணக்கில் முடிவடைந்தது. மேலும் நேற்றைய தினம் தேசிய பங்குச் சந்தை குறியீடு எண் [NSE] நிஃப்டி குறியீடு 24,124 என்ற புள்ளிகணக்கில் நிலைபெற்று முடிவடைந்தது.

    இந்நிலையில் நேற்றைய சாதனைகளை தகர்த்தெறிந்து இன்று [ஜூலை 3] வரலாறு காணாத ஏற்றத்துடன் இந்திய பங்குச்சந்தை தொடங்கியுள்ளது. சென்செக்ஸ் 574 புள்ளிகள் அதிகரித்து 80,015 புள்ளிகணக்கிலும் நிஃப்டி 172 புள்ளிகள் அதிகரித்து 24,296 என்ற புள்ளிகணக்கிலும் தற்போது வர்த்தகமாகி வருகிறது. 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 80,000 புள்ளிகளைக் கடப்பது இதுவே முதல் முறை ஆகும்.

     

    HDFC வங்கியால் இந்த உயர்வு ஏற்பட்டு உள்ளதாக பங்குச் சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இன்றைய நிஃப்டி லாபத்தில் HDFC வங்கி முன்னிலையில் உள்ளது. அதனைத்தொடர்ந்து ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, கோட்டக் மஹிந்திரா வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ், இண்டஸ்இண்ட் வங்கி, பார்தி ஏர்டெல் மற்றும் நெஸ்லே ஆகியவை அதிக லாபத்தைப் பெற்றுள்ளன.  

     

    • விப்ரோ, இன்போசிஸ், டாடா கல்சல்டன்சி சர்வீஸ், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் போன்றவை ஏற்றம் கண்டன.
    • மகிந்திரா அண்டு மகிந்திரா, மாருதி, ஆக்சிஸ் வங்கி, இந்துஸ்தான் யுனிலிவர் போன்றவை சரிவை சந்தித்தன.

    மும்பை பங்குச்சந்தை கடந்த சில தினங்களாக உயர்ந்த வண்ணமே உள்ளது. இந்த நிலையில் இன்று காலை பங்குச்சந்தை தொடங்கியதும் சிறிது நேரத்தில் மளமளவென உயர்ந்து 71,913.07 புள்ளியில் வர்த்தகமானது. மும்பை பங்கு சந்தையில் இந்த உச்சம் இதுவரை இல்லாததாகும். நேற்று 71.437.19 புள்ளிகள் முடிவடைந்து, இன்று காலை 71,647.66 புள்ளிகளில் தொடங்கியது.

    இதுபோல் இந்திய பங்கு சந்தை நிஃப்டி இன்று காலை 138.8 புள்ளிகள் உயர்ந்து 21,591.90-ல் வர்த்தகமானது. இதுவும் புதிய உச்சமாகும். நேற்று 21453.10 புள்ளிகளில் முடிவடைந்து இன்று காலை 21,477.65 புள்ளிகளில் தொடங்கியது.

    விப்ரோ, இன்போசிஸ், டாடா கல்சல்டன்சி சர்வீஸ், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், டெக் மகேந்திரா, என்.டி.பி.சி, மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கி போன்றவை ஏற்றத்தை கண்டன.

    மகிந்திரா அண்டு மகிந்திரா, மாருதி, ஆக்சிஸ் வங்கி, இந்துஸ்தான் யுனிலிவர் போன்றவை சரிவை சந்தித்தன.

    ஆசியாவில் ஷாங்காய் பங்கு சந்தை சரிவை சந்தித்த போதிலும் சியோர், டோக்கியோ, ஹாங்காங் போன்ற சந்தைகள் உயர்ந்து காணப்பட்டன. 

    பாராளுமன்றத் தேர்தல் முடிவு குறித்த கருத்துக் கணிப்பு பாஜகவுக்கு சாதகமாக இருந்ததால், இந்திய பங்குச்சந்தைகள் இன்று அபாரமாக உயர்ந்தன.
    மும்பை:

    பாராளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் ஆளும் பாஜகவுக்கு சாதகமாக அமைந்துள்ளன. மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சியமைக்கும் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. 

    இந்த கருத்துக் கணிப்பால் இந்திய பங்குச்சந்தைகள் உற்சாகமடைந்தன. காலை முதலே பங்கு வர்த்தகம் விறுவிறுப்பாக இருந்தது. மதிய நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 1090 புள்ளிகள் உயர்ந்து வர்த்தகம் ஆனது. இதேபோல் தேசிய பங்குச்சந்தையில் நிப்டி 320 புள்ளிகள் உயர்ந்தது. முன்னணி நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்தன. பங்குச்சந்தைகளில் ஒரே நிமிடத்தில் ரூ. 3. 2 லட்சம் கோடி அளவிற்கு முதலீடு குவிந்தது. இதனால் முதலீட்டாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    பாஜகவுக்கு ஆதரவான கருத்துக் கணிப்புக்களால் ஏற்பட்ட உற்சாகம் காரணமாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் சற்று உயர்ந்தது. காலை வர்த்தகத்தின்போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 79 காசுகள் உயர்ந்து, ரூ.69.44 என்ற அளவில் இருந்தது.
    ரூபாய் மதிப்பு வீழ்ச்சியை தொடர்ந்து பங்குச்சந்தை ஆட்டம் கண்டு வரும் நிலையில், கடந்த 2 நாட்களில் மட்டும் முதலீட்டாளர்கள் ரூ.2.72 லட்சம் கோடியை இழந்துள்ளனர். #Sensex #ShareMarket #Rupee
    மும்பை:

    சர்வதேச அளவில் அமெரிக்க டாலருக்கு நிகரான நாணய மதிப்பில் பல்வேறு நாட்டு நாணையங்கள் சரிவினை சந்தித்து வருகின்றன. ஈரான் ரியால் மதிப்பு ஒரு டாலருக்கு நிகராக 1 லட்சத்து 20 ஆயிரம் என்ற அளவில் உள்ளது. அதுபோலவே, இந்திய ரூபாய் மதிப்பும் இதுவரை இல்லாத வகையில் வீழ்ச்சி கண்டது. 

    சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பாதிப்பு மற்றும் இந்திய ரூபாய் மதிப்பு சரிவு போன்ற காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகள் கடந்த வாரம் கடும் சரிவைச் சந்தித்தன. அதன் பின் சற்று தேக்க நிலை நீடித்து வந்தது.

    இந்த நிலையில், இந்திய பங்குச்சந்தைகள் கடந்த இரண்டு நாட்களாக மீண்டும் சரிவை சந்தித்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 295 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து 37,290 புள்ளிகளில் நிறைவடைந்தது. தேசிய பங்குச்சந்தை நிப்டி 98.85 புள்ளிகள் சரிந்து 11,278 புள்ளிகளாக வீழ்ச்சியடைந்தது.

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, இந்திய ரூபாய் மதிப்பு சரிவு போன்ற காரணங்களால் பங்குச்சந்தைகள் பெரும் சரிவைச் சந்தித்துள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 

    மேலும் டாலர் மதிப்பு உயர்வால், முதலீட்டு நிறுவனங்கள் பலவும் லாபத்தைப் பதிவு செய்யும் நோக்கத்துடன் தங்கள் பங்குகளை விற்பனை செய்தன. இதன் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் அதிகஅளவில் சரிவைச் சந்தித்தது. 
    ×