search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரஞ்சிக் கோப்பை"

    • தமிழ்நாடு முதல் இன்னிங்சில் 674 ரன்கள் குவித்தது.
    • 3ம் நாள் முடிவில் டெல்லி அணி 8 விக்கெடுக்கு 264 ரன்கள் எடுத்தது.

    புதுடெல்லி:

    ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

    குரூப் டி பிரிவில் டெல்லியில் நடந்து வரும் லீக் ஆட்டத்தில் தமிழகம், டெல்லி அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி பீல்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய தமிழக அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 674 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. சாய் சுதர்சன் 213 ரன், வாஷிங்டன் சுந்தர் 152 ரன், பிரதோஷ் ரஞ்சன் பால் 117 ரன் எடுத்தனர். ஜெகதீசன் அரைசதம் அடித்து 65 ரன்னில் அவுட் ஆனார்.

    தொடர்ந்து ஆடிய டெல்லி அணி இரண்டாம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 43 ரன்கள் எடுத்திருந்தது.

    இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. அந்த அணியின் யாஷ் துல் பொறுப்புடன் ஆடி சதமடித்தார். பிரணவ் ராஜவன்ஷி 40 ரன்னும், சங்க்வான் 36 ரன்னும், தியாகி 35 ர்ன்னும் எடுத்தனர்.

    இறுதியில் மூன்றாம் நாள் முடிவில் டெல்லி அணி 8 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்துள்ளது, யாஷ் துல் 103 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    • முதலில் ஆடிய சவுராஷ்டிரா அணி முதல் இன்னிங்சில் 203 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
    • தமிழக அணி முதல் இன்னிங்சில் 367 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    புதுடெல்லி:

    ரஞ்சிக் கோப்பை தொடரின் முதல் சுற்று ஆட்டங்கள் நடந்து வருகிறது. குரூப் டி பிரிவில் தமிழக அணியும், சவுராஷ்டிரா அணியும் கோயம்புத்தூரில் விளையாடி வருகின்றது. டாஸ் வென்ற சௌராஷ்டிரா அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய சவுராஷ்டிரா அணி முதல் இன்னிங்சில் 203 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. வசவடா 62 ரன் எடுத்தார்.

    ஜிராங் ஜெனி 34 ,ஷெல்டோன் ஜாக்சன் மற்றும் கேப்டன் ஜெய்தேவ் உனத்கட் தலா 21 ரன்களை எடுத்ததனர்.

    தமிழக அணி சார்பில் சோனு யாதவ், முகமது, சாய் கிஷோர் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, தமிழக அணி களமிறங்கியது. சாய் சுதர்ஷன் 82, ஜெகதீசன் 100, புரதோஷ் பௌல் 49, இந்திரஜித் 40 என ரன்கள் எடுத்தனர். கடைசி கட்டத்தில் ஆண்ட்ரே சித்தார்த் 38, முகமது 26 ரன்களை எடுத்தனர்.

    இறுதியில், தமிழக அணி முதல் இன்னிங்சில் 367 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 164 ரன்கள் மெகா முன்னிலை பெற்றது.

    தொடர்ந்து, 2-வது இன்னிங்ஸ் களமிறங்கிய சவுராஷ்டிரா அணி விரைவில் விக்கெட்களை இழந்தது. முன்னணி வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர்.

    இறுதியில், மூன்றாம் நாள் முடிவில் சவுராஷ்டிரா அணி 5 விக்கெட்டுக்கு 35 ரன் எடுத்து திணறி வருகிறது. சவுராஷ்டிரா அணி இன்னும் 129 ரன்கள் பின்தங்கியுள்ளது.

    தமிழக அணி சார்பில் குஜ்ராப்னீட் சிங் 4 விக்கெட்களை கைப்பற்றினார்.

    • ரஞ்சி கிரிக்கெட்டில் முதல் ஓவரில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார் உனத்கட்.
    • முதல் இன்னிங்சில் உனத்கட் மொத்தம் 8 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

    புதுடெல்லி:

    ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

    ராஜ்கோட்டில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் யாஷ் துல் தலைமையிலான டெல்லி அணியும், ஜெய்தேவ் உனத்கட் தலைமையிலான சவுராஷ்டிரா அணியும் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்வதாக அந்த அணியின் கேப்டன் யாஷ் துல் அறிவித்தார்.

    அதன்படி, டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக துருவ் ஷோரே, ஆயுஷ் பதோனி களமிறங்கினர். ஆட்டத்தின் முதல் ஓவரை சவுராஷ்டிரா அணியின் கேப்டன் உனத்கட் வீசினார். டெல்லி அணியினர் முதல் 2 பந்துகளில் ரன் எதுவும் அடிக்கவில்லை.

    இதையடுத்து வீசிய 3-வது பந்தில் தொடக்க ஆட்டக்காரர் துருவ் ஷோரேவை உனத்கட் போல்டாக்கினார். அடுத்த பந்தில் ராவலை வீழ்த்தினார். இதனால் அவருக்கு ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தும் வாய்ப்பு கிடைத்தது.

    ஹாட்ரிக் பந்தை எதிர்கொள்ள வந்த டெல்லி அணியின் கேப்டன் யாஷ் துல்லை உனத்கட் எல்பிடபிள்யூ முறையில் வீழ்த்தினார். இதன்மூலம் உனத்கட் ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்தார்.

    ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியதோடு மட்டுமின்றி, தனது பந்துவீச்சில் எதிரணி பேட்ஸ்மேன்களின் விக்கெட்டை மளமளவென எடுத்தார் உனத்கட். ஒரு கட்டத்தில் 53 ரன்னுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 9-வது விக்கெட்டுக்கு இணைந்த ஹிரித்திக் ஷோக்கீன், ஷிவ்னாக் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். நிதானமாக ஆடிய ஷோக்கின் அரைசதம் அடித்தார். மறுபக்கம் பொறுமையாக ஆடி வந்த ஷிவ்னாக் 38 ரன்னில் ஆட்டம் இழந்தார். இறுதியில் டெல்லி அணி 35 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 133 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

    ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய உனத்கட் மொத்தமாக 8 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஷிராக் ஜானி, ப்ரேராக் மன்கட் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதன்மூலம் 88 ஆண்டுகால ரஞ்சி கிரிக்கெட் வரலாற்றில் ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய சாதனையை உனத்கட் படைத்தார்.

    • ரஞ்சி கோப்பையை வென்றது தனது வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு தருணம் என மத்தியபிரதேச அணியின் கேப்டன் கூறினார்.
    • 41 முறை சாம்பியனான மும்பையை தோற்கடித்ததால் இந்த வெற்றியை அவர்கள் திருவிழா போல் கொண்டாடுகிறார்கள்.

    பெங்களூரு:

    87-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் மும்பை- மத்தியபிரதேச அணிகள் இடையிலான இறுதி ஆட்டம் கடந்த 22-ந்தேதி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே மும்பை 374 ரன்களும், மத்தியபிரதேசம் 536 ரன்களும் குவித்தன. 162 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய மும்பை அணி 4-வது நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 113 ரன்கள் எடுத்திருந்தது. இந்த நிலையில் 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நேற்று நடந்தது. இதில் மும்பை அணி 57.3 ஓவர்களில் 269 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் மத்தியபிரதேச அணிக்கு 108 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து மத்திய பிரதேச அணி 2-வது இன்னிங்சில் 29.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 108 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று மகுடம் சூடியது.

    1934-35-ம் ஆண்டு முதல் நடந்து வரும் ரஞ்சி கிரிக்கெட்டில் மத்தியபிரதேச அணி கோப்பையை உச்சிமுகர்வது இதுவே முதல்முறையாகும். அதுவும் பலம் வாய்ந்த 41 முறை சாம்பியனான மும்பையை தோற்கடித்ததால் இந்த வெற்றியை அவர்கள் திருவிழா போல் கொண்டாடுகிறார்கள். முதல் இன்னிங்சில் சதம் அடித்த மத்திய பிரதேச வீரர் சுபம் ஷர்மா ஆட்டநாயகன் விருதையும், 6 ஆட்டத்தில் 4 சதம் உள்பட 982 ரன்கள் குவித்த மும்பை வீரர் சர்ப்ராஸ்கான் தொடர்நாயகன் விருதையும் பெற்றனர்.

    இந்த வெற்றி குறித்து மத்தியபிரதேச கேப்டன் ஆதித்யா ஸ்ரீவஸ்தவா கூறியதாவது;- "எல்லையில்லா மகிழ்ச்சியில் திளைக்கிறோம். அனைவரும் பரவசத்துடன் உணர்ச்சி மயமாக இருக்கிறோம். எனது வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு தருணம் இது. மத்தியபிரதேச அணி ரஞ்சி கோப்பையை முதல்முறையாக வென்றதன் மூலம் காலம் காலமாக ஒரு குறிப்பிட்ட அணி தான் வெல்லும் என்ற நிலைமை போய் விட்டது. கேப்டனாக இது தான் எனது முதல் ரஞ்சி தொடர். பயிற்சியாளர் சந்திரகாந்திடம் நிறைய கற்று இருக்கிறேன். இந்த கூட்டணி தொடர வேண்டும் என்று விரும்புகிறேன்" என்றார்.

    • மத்திய பிரதேச அணியில் 3 வீரர்கள் சதம் அடித்து முத்திரை பதித்தனர்.
    • 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தி மத்திய பிரதேசம் முதல் முறையாக ரஞ்சிக் கோப்பையை வென்றது.

    பெங்களூரு:

    பெங்களூரில் நடைபெற்று வரும் ரஞ்சிக் கோப்பை இறுதிப்போட்டியில் மும்பை, மத்திய பிரதேச அணிகள் மோதின.

    மும்பை அணி முதல் இன்னிங்சில் 374 ரன் குவித்தது. சர்பிராஸ் கான் சதமடித்து 134 ரன் எடுத்தார்.

    மத்திய பிரதேசம் சார்பில் கவுரவ் யாதவ் 4 விக்கெட், அகர்வால் 3 விக்கெட், சரன்ஷ்ஜ் ஜெயின் 2 விக்கெட் வீழ்த்தினர்.

    அதன்பின், முதல் இன்னிங்சை ஆடிய மத்திய பிரதேசம் முதல் இன்னிங்சில் 536 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ரஜத் படிதார், யாஷ் துபே 133 ரன்னும், ரஜத் படிதார் 122 ரன்னும், சுபம் சர்மா 116 ரன்னும் குவித்தனர். சரன்ஷ் ஜெயின் 57 ரன்கள் எடுத்தார்.

    மும்பை அணி சார்பில் ஷாம்ஸ் முலானி 5 விக்கெட்டும், துஷார் தேஷ்பாண்டே 3 விக்கெட்டும், மோஹித் அவஸ்தி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய மும்பை 2வது இன்னிங்சில் 269 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. சுவேத் பார்கர் 51 ரன்னும், சர்ப்ராஸ் கான் 45 ரன்னும், பிரித்வி ஷா 44 ரன்னும் எடுத்தனர்.

    மத்திய பிரதேசம் சார்பில் குமார் கார்த்திகேயா 4 விக்கெட்டும், கவுரவ் யாதவ், சஹானி தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 108 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மத்திய பிரதேசம் களமிறங்கியது. 29.3 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அத்துடன் வலுவான மும்பை அணியை வீழ்த்தி முதல் முறையாக ரஞ்சிக் கோப்பையை கைப்பற்றியுள்ளது.

    மத்திய பிரதேச வீரர் சுபம் சர்மா ஆட்ட நாயகன் விருதும், மும்பையை சேர்ந்த சர்ப்ராஸ் கான் தொடர் நாயகன் விருதும் வென்றனர்.

    • 795 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய உத்தரகாண்ட் அணி 69 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
    • 92 ஆண்டு கால உலக சாதனையை பிரித்வி ஷா தலைமையிலான மும்பை அணி முறியடித்துள்ளது.

    ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் காலிறுதி ஆட்டங்கள் பெங்களூரு மற்றும் அதன் சுற்றுப்புறபகுதியில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் ஒரு ஆட்டத்தில் மும்பை அணி, உத்தரகாண்டை சந்தித்தது. முதலில் பேட்டிங் செய்த பிரித்வி ஷா தலைமையிலான மும்பை அணி முதல் இன்னிங்சில் 166.4 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 647 ரன்கள் குவித்து 'டிக்ளேர்' செய்தது. சுவேத் பார்கர் இரட்டை சதம் அடித்து அசத்தினார்.

    அதை தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆடிய உத்தரகாண்ட் அணி 114 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 2-வது இன்னிங்க்ஸை தொடங்கிய மும்பை அணி 3 விக்கெட் இழப்பிற்கு 261 ரன்கள் குவித்து மீண்டும் 'டிக்ளேர்' செய்தது.

    இதையடுத்து 795 ரன்கள் என்ற மிக இமாலய இலக்குடன் உத்தரகாண்ட் அணி களமிறங்கியது. ஆனால் அந்த அணி இன்று 69 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆட்டமிழந்தது. இதன் மூலம் மும்பை அணி 725 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

    அதுமட்டுமின்றி முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் மிகப்பெரிய வெற்றி (ரன்கள் அடிப்படையில்) என்ற உலக சாதனையை மும்பை அணி படைத்துள்ளது. 92 ஆண்டுகளுக்கு முன்பு, குயின்ஸ்லாந்து அணியை 685 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூ சவுத் வேல்ஸ் அணி வெற்றி பெற்றதே இதுவரை சாதனையாக இருந்தது. அந்த சாதனையை பிரித்வி ஷா தலைமையிலான மும்பை அணி முறியடித்துள்ளது.

    ரஞ்சி டிராபியை பொருத்தவர, 1953-54ல் பெங்கால் அணி ஒடிசாவை 540 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்ததே முந்தைய சாதனையாக இருந்தது.

    நடப்பு ரஞ்சி டிராபி தொடரில், மும்பை அணி அரையிறதியில் உத்தர பிரதேச அணியுடன் விளையாட உள்ளது.

    ×