search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லாரி டிரைவர் தற்கொலை"

    தவளக்குப்பம் அருகே நோய் கொடுமையால் அவதிப்பட்டு வந்த லாரி டிரைவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    பாகூர்:

    தவளக்குப்பம் அருகே தானம்பாளையம் குபேரன் வீதியை சேர்ந்தவர் தங்கவேலு (வயது 54). லாரி டிரைவர். இவருக்கு மனைவி  மற்றும் 2 மகன்கள் உள்ளனர். 

    இதற்கிடையே தங்கவேலு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் டிரைவர் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். மேலும் நோய் கொடுமையால் தினமும் அவதி அடைந்து வந்தார். 

    இந்த நிலையில் நேற்று தங்கவேலுவுக்கு நோய் கொடுமை அதிகமானதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த தங்கவேலு தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின் விசிறி கொக்கியில் நைலான் கயிற்றால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தங்கவேலுவின் மகன் தமிழ்ச்செல்வன் கொடுத்த புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் கணபதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    குடி பழக்கத்தில் இருந்து விடுபட முடியாத விரக்தியில் லாரி டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை

    கோவை:

    உடுமலை அருகே உள்ள செல்லப்பம்பாளையத்தை சேர்ந்தவர் நடராஜ். இவரது மகன் முத்துக்குமார் (வயது 33). லாரி டிரைவர். திருமணமாகவில்லை. குடிபழக்கத்துக்கு அடிமையான முத்துக்குமார் அதில் இருந்து விடுபடுவதற்காக கடந்த 2 வருடங்களாக சிகிச்சை பெற்று வந்தார்.

    ஆனால் குடி பழக்கத்தில் இருந்து விடுபட முடியவில்லை. இதனால் மனவேதனை அடைந்த முத்துக்குமார் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தான் தங்கி இருந்த அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து கோட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து முத்துக்குமாரின் உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சம்பள பணத்தை வீட்டுக்கு கொடுக்காத மகனை தந்தை திட்டியதால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டார்.

    கவுண்டம்பாளையம்:

    மதுரை வாடிப்பட்டியை சேர்ந்தவர் ஜெய்சந்திரன். இவரது மகன் பாலாஜி (வயது 24). இவர் கோவை வெள்ளகிணர் பிரிவு வன்னி நகரில் தங்கி தண்ணீர் லாரி ஓட்டி வந்தார்.

    சமீபத்தில் வாங்கிய சம்பளம் அனைத்துக்கும் புதுத்துணி வாங்கினார். இதை அறிந்த அவரது தந்தை உனது தாய் உடல் நலம் சரியில்லாமல் உள்ளார். அவருக்கு மருந்து, மாத்திரைக்கு கூட பணம் அனுப்பாமல் சம்பளம் முழுவதும் துணியே வாங்கினால் எப்படி என்று சத்தம்போட்டதாக கூறப்படுகிறது. இதனால் பாலாஜி மனவேதனையில் இருந்தார். 

    இந்நிலையில் சம்பவத்தன்று ஜி.என். மில்ஸ் பகுதியில் லாரியை நிறுத்தி விட்டு லாரியிலேயே வி‌ஷம் குடித்தார். மயங்கி கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை பாலாஜி பரிதாபமாக இறந்தார். 

    இது குறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்கொலை செய்து கொண்ட பாலாஜிக்கு திருமணமாகவில்லை.

    வாழப்பாடி அருகே லாரி டிரைவர் தற்கொலை செய்து கொண்டது குறித்து அவரது அண்ணன் போலீசில் புகார் செய்தார்.போலீசார் இறுதிச்சடங்கு நேரத்தில் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள சிங்கிபுரம் காலனி பகுதியை சேர்ந்த உலகளந்தான் (வயது 47). இவர் லாரி டிரைவர். இவரது மனைவி இந்துராணி, மகள்கள் சரணியா, சவுந்திகா இரண்டு மகள்கள் உள்ளனர். இவர் வாழப்பாடியில் உள்ள அடுக்குமாடி  குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். 

    இவர் நேற்று முன்தினம் வழக்கமாக வீட்டில் படுத்து தூங்கினார். நேற்று காலை வெகுநேரம் ஆகியும் கதவு திறக்காததால் அவரது மனைவி இந்துராணி அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை திறந்து பார்த்த போது உலகளந்தான் தூக்கில் பிணமாக தொங்கினார். அவரது உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதனர். 

    இதையடுத்து உறவினர்கள் உடலை மீட்டு நேற்று மாலை இறுதிசடங்கு செய்தனர். உலகளந்தான் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது அண்ணன் சீனிவாசன் வாழப்பாடி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு சென்று இறுதிசடங்குக்காக வைக்கப்பட்ட உலகளந்தான் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கா சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இவர் எதற்காக இறந்தார்? தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    பணத்தகராறில் மிரட்டல் விடுத்ததால் லாரி டிரைவர் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக அ.தி.மு.க. பிரமுகர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி அடுத்த மேல்நிம்மியம்பட்டை சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 52). லாரி டிரைவர். இவருக்கு தாமரை என்ற மனைவி, ஒரு மகள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர். கோவிந்தசாமிக்கு செக்குமேட்டில் 75 சென்ட் நிலம் உள்ளது.

    அந்த நிலத்தை விற்க கோவிந்தசாமி முடிவு செய்தார். அதன்படி, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகரான எம்.ஜி. என்ற ஜெய்சங்கரிடம் ரூ.7 லட்சம் விலை பேசினார்.

    முன் பணம் ரூ.2½ லட்சம் பெற்று கொண்டார். மீதித் தொகையை 3 மாதத்திற்குள் கொடுத்து நிலத்தை கிரயம் செய்வதாக அ.தி.மு.க. பிரமுகர் கூறினார். கடைசி வரை மீதி பணத்தை தந்து அவர் நிலத்தை கிரயம் செய்யவில்லை.

    இதனால், காலக்கெடு முடிந்ததையடுத்து வேறு நபருக்கு கோவிந்தசாமி தனது நிலத்தை விற்றுவிட்டார். இதனால் அ.தி.மு.க. பிரமுகர் ஜெய்சங்கர் ஆத்திரமடைந்தார். முன் பணமாக கொடுத்த ரூ.2½ லட்சத்தை திருப்பி கேட்டு நச்சரித்தார். பணத்தை கோவிந்தசாமி தராததால் அ.தி.மு.க. பிரமுகர் மிரட்டல் விடுத்தார். மேலும், தனது ஆதரவாளர்களுடன் சென்று தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.

    மேலும், வாணியம்பாடி தாலுகா போலீசிலும் கோவிந்தசாமி மீது அ.தி.மு.க. பிரமுகர் புகார் அளித்தார். போலீசார் விசாரித்து வந்தனர். கோவிந்தசாமி வரும் 20-ந் தேதிக்குள் 2½ லட்சம் ரூபாயையும் கொடுப்பதாக எழுதி கொடுத்தார்.

    இந்த நிலையில், நேற்று அ.தி.மு.க. பிரமுகர் ஜெய்சங்கர் ஆதரவாளர்களுடன் மீண்டும் கோவிந்தசாமியை அழைத்து மிரட்டினார். இதனால் மனமுடைந்த கோவிந்தசாமி தனது பைக்கில் பெட்ரோலை பிடித்து, உடலில் ஊற்றி தீக்குளித்தார்.

    உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. கட்டப்பஞ்சாயத்து பேசி மிரட்டல் விடுத்த அ.தி.மு.க. பிரமுகர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஓடி விட்டனர். அப்பகுதி மக்கள், கோவிந்தசாமி உடல் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.

    பலத்த தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிய அவரை மீட்டு வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கோவிந்தசாமி மாற்றப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பலனின்றி கோவிந்தசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து, ஆலங்காயம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு அ.தி.மு.க. பிரமுகர் ஜெய்சங்கரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×