search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விஜய் வசந்த் எம்.பி."

    • அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன.
    • வாழை விவசாயிகளும், ரப்பர் விவசாயிகளும் மழைநீர் சூழ்ந்துள்ளதால் மிகுந்த பாதிப்படைந்துள்ளனர்.

    நாகர்கோவில்:

    விஜய் வசந்த் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- கடந்த சில நாட்களாக குமரி மாவட்டத்தில் எதிர்பாராதவிதமாக கடும் மழை பெய்து வருகிறது. இந்த மழையால் விவசாயிகள் தங்கள் பயிர்களை இழந்து தவிக்கின்றனர். அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன. நெற்பயிர் அறுவடை நடந்து கொண்டிருந்தபோது இந்த மழை பெய்துள்ளதால் முழுமை யான அறுவடை செய்ய முடியாமல் பயிர்களை விவசாயிகள் இழந்துள்ளனர்.

    அதனை போன்று வாழை விவசாயிகளும், ரப்பர் விவசாயிகளும் மழைநீர் சூழ்ந்துள்ளதால் மிகுந்த பாதிப்படைந்துள்ளனர். வேளாண் துறை அதிகாரி கள் நேரில் சென்று ஆய்வு செய்து சேத விபரங்களை மதிப்பீடு செய்ய வேண்டும்.மத்திய, மாநில அரசுகள் இந்த விவசாயிகளுக்கு தேவையான இழப்பீடு தொகையை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    • காங்கிராசார் திடீர் போராட்டம்
    • மாவட்டத்தில் உள்ள பல்வேறு போலீஸ் நிலையங்களிலும் இது தொடர்பாக புகார்கள் அளிக்கப்பட்டது.

    கன்னியாகுமரி:

    விஜய் வசந்த் எம் பி குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்தை பரப்பிய வாலிபரை கைது செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் மனு அளித்தனர்.

    மேலும் மாவட்டத்தில் உள்ள பல்வேறு போலீஸ் நிலையங்களிலும் இது தொடர்பாக புகார்கள் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் உண்ணா விரத போராட்டம் அறி விக்கப்பட்டது. காங்கிரஸ் நிர்வாகியிடம் போலீசார் உடனடியாக அந்த வாலி பரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.

    இதைத்தொடர்ந்து போராட்டம் ஒத்தி வைக் கப்பட்டது. இந்த நிலை யில் நேற்று மாலை மீண்டும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் காங்கிரசார் மனு அளித்த னர். ஆனால் இன்று காலை வரை அந்த வாலிபரை கைது செய்யப்படவில்லை.இந்த நிலையில் கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர்பினு லால்சிங், மாநகர் மாவட்ட தலைவர் நவீன் குமார் தலைமையில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஏராளமானோர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் திரண்ட னர். காங்கிரஸ் கட்சியினர் போலீஸ் சூப்பிரண்டு அலு வலகத்தை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட் டத்தில் காங்கிரஸ் நிர்வாகி கள் முன்னாள் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், லாரன்ஸ், டைசன்,செல்வன் மற்றும் பெண்கள் உள்பட நூற்றுக்கணக்கான நிர்வாகி கள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட நிர்வாகிகளிடம் டிஎஸ்பி நவீன் குமார் பேச்சுவார்த்தை நடத்தினார். சம்பந்தப்பட்ட நபரை விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.ஆனால் போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து செல்லவில்லை. சம்பந்தப் பட்ட நபரை உடனே கைது செய்ய வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டது

    • விழாவிற்கு கல்லூரி செயலர் ஜெசு ஜெகன் தலைமை தாங்கினார்.
    • கல்லூரி முதல்வர் வில்சன் வரவேற்று பேசினார்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் அருகே நல்லூர் சி.எஸ்.ஐ. ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரியில் 26-வது ஆண்டு விளையாட்டு விழா நடந்தது. கல்லூரி செயலர் ஜெசு ஜெகன் தலைமை தாங்கினார். கல்லூரியின் பல்கலைக்கழக பிரதிநிதி பேராசிரியர் முத்து, காங்கிரஸ் கட்சி மாநில செயலாளர் காமராஜ், மாநில தொழிற்சங்க ஐ.என்.டி.யூ.சி.வைகுண்ட ராஜா, வடசென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் திரவியம் , மாநில பேச்சாளர் ஆலடி சங்கரையா,தென்காசி மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவரும் , மாயமான்குறிச்சி ஊராட்சி மன்ற துணைத் தலைவருமான கண்ணன், ரூபன் தேவதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கல்லூரி முதல்வர் வில்சன் வரவேற்றார்.நல்லூர் சேகர குரு பிரே ஜேம்ஸ் தொடக்க ஜெபம் செய்தார்.

    விழாவில் சிறப்பு அழைப்பாளராக விஜய் வசந்த் எம்.பி. கலந்து கொண்டு கல்லூரியில் விளையாட்டு விழாவை தொடங்கி வைத்தார். விழாவில் நெல்லை திரும ண்டல பெருமன்ற உறுப்பி னர்கள் பால் நேசன் ஆண்டனி, ஜெயராஜ், கல்லூரி ஆட்சி மன்ற உறுப்பி னர்கள் பால்ராஜ், தேவ தாஸ் மற்றும் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், கல்லூ ரியின் பேராசிரி யர்கள், மா ணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் ஜூலியன்ஸ் ராஜாசிங் செய்து, விளையாட்டு விழா விற்கான ஆண்டறிக்கையை சமர்பித்து நன்றி கூறினார்.

    • கால்வாயில் நீர் கசிவு உள்ளது
    • விரிவாக்க பணிக்காக கிளை கால்வாய் பாலம் ஒரு ஆண்டுக்கு முன்னர் துண்டிக்கப்பட்டது.

    கன்னியாகுமரி:

    இரணியல் ரெயில் நிலையம் அருகில் நெய்யூர் -பரம்பை பகுதியில் விரிவாக்க பணிக்காக கிளை கால்வாய் பாலம் ஒரு ஆண்டுக்கு முன்னர் துண்டிக்கப்பட்டது.

    தொடர்ந்து தண்ட வாளத்தின் குறுக்கே தொட்டி போன்று கட்டி கால்வாய் பாலம் சீரமைப்பு செய்யப்பட்டு தண்ணீர் விட்டு பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது கால்வாயில் நீர் கசிவும் கால்வாய் தொட்டி போன்று இருப்பதால் தண்ணீர் வால் முனை  கடை வரம்பு வரை செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டது.

    இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் கோல்டன் மெல்பா , பாராளு மன்ற உறுப்பினர் விஜய் வசந்திடம் தெரிவித்தார். இதனை தொடர்ந்து அவர் நேரில் வந்து ஆய்வு செய்தார். இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்தார்.

    ஆய்வின் போது இளைஞர் காங்கிரஸ் ஒருங்கி ணைப்பாளர் லாரன்ஸ், மாவட்ட விவசாய பிரிவு தலைவர் ஜான்சவுந்தர், திங்கள் நகர் பேரூராட்சி தலைவர் சுமன், நெய்யூர் பேரூ ராட்சி தலைவர் பிரதீபா, ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் கோல்டன் மெல்பா, மாவட்ட இளை ஞர் காங்கிரஸ் தலைவர் டைசன், மாவட்ட விவசாய காங்கிரஸ் துணைத் தலைவர் ஜேக்கப் அருள் பால், குளச்சல் சட்ட மன்ற தொகுதி தலைவர் ஜேக்கப் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகளும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.

    • கடந்த 14ந் தேதி அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றார்.
    • அவரது இல்லத்தில் சந்தித்து பொன்னாடை வழங்கி விஜய் வசந்த் எம்.பி. வாழ்த்து தெரிவித்தார்.

    தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் கடந்த 14ந் தேதி பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் புதிய அமைச்சராக பதவி ஏற்றிருக்கும் உதயநிதி ஸ்டாலினை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் இன்று நேரில் சந்தித்து பொன்னாடை வழங்கி வாழ்த்து தெரிவித்தார் இந்த சந்திப்பின் போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச்செயலாளர் எம் எஸ் காமராஜ் உடன் இருந்தார்

    • நமது உரிமைகள் பறிக்கப்படும் சூழ்நிலைகள் உருவாகும் போது அதைப் பேணி காக்க ஒன்றிணைந்து நாம் போராட வேண்டும்
    • நமது சுதந்திரத்திற்காக உயிர்த் தியாகம் உள்பட பல தியாகங்களைச் செய்த சுதந்திரப் போராட்ட வீரர்களை இன்று நினைவு கூர்வோம்

    நாகர்கோவில்:

    விஜய் வசந்த் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அனைவருக்கும் எனது 75-வது சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் . 1947-ம் ஆண்டில் தாய்திருநாட்டிற்குச் சுதந்திரம் கிடைக்கப்பெற்றது . நமது சுதந்திரத்திற்காக உயிர்த் தியாகம் உள்பட பல தியாகங்களைச் செய்த சுதந்திரப் போராட்ட வீரர்களை இன்று நினைவு கூர்வோம் .

    சுதந்திர இந்தியாவின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்ட தலைவர்களையும் இந்நாளில் நன்றியுடன் நினைத்துப் பார்ப்போம் . முன்னாள் பிரதமர்கள் நேரு, இந்திரா காந்தி, நரசிம்ம ராவ், மன்மோகன்சிங் போன்ற பிரதமர்கள் உலகமே உற்றுப் பார்க்கும் வகையில் இந்தியாவை வளர்ச்சியின் உச்சிக்கு எடுத்துச் சென்றனர் .

    இந்தியாவின் சுதந்திரத்தைப் பேணி காக்க உயிர் கொடுத்த காந்தியடிகள், இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி ஆகியோரையும் இந்நாளில் போற்ற வேண்டியது நமது கடமை . இன்று நமது நாடு பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது .

    இந்தியாவின் தனித்தன்மை கேள்விக்குறி ஆகி வருகிறது . சரிந்து வரும் நமது நாட்டின் புகழை மீண்டும் உச்சிக்கு எடுத்துச் செல்வதற்கு நம் அனைவரது பங்களிப்பு இன்றியமையாதது . நமக்குக் கிடைத்த சுதந்திரத்தைப் பேணி காக்க வேண்டியது குடி மக்களாகிய நமது அனைவரின் கடமை , நமது உரிமைகள் பறிக்கப்படும் சூழ்நிலைகள் உருவாகும் போது அதைப் பேணி காக்க ஒன்றிணைந்து நாம் போராட வேண்டிய தருணம் இது .

    சாதி மத வேற்றுமைகள் இன்றி ஒன்றாகக் கூடி இந்த சுதந்திர தினத்தில் இந்தியாவை ஒரு வல்லரசாக மாற்றச் சபதம் ஏற்போம் . இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

    ×