search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "90 எம் எல்"

    ஓவியா நடிப்பில் வெளியாகி இருக்கும் 90 எம் எல் படத்தில் ரவுடி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தேஜ்ராஜ், இப்படம் எனக்கு நல்ல அடையாளத்தை கொடுத்திருக்கிறது என்று கூறியிருக்கிறார். #90ML
    90 எம்.எல் படத்தில் ரவுடி என்ற வேடத்தில் ஹீரோவாக நடித்திருந்தவர் தேஜ்ராஜ். இவர் பிரபல நடிகரான சரண்ராஜின் மகன். அப்பாவின் அடையாளத்தை வெளிக்காட்டாமல் நடித்து இன்று வெள்ளித்திரையில் தானும் ஜெயிக்க முடியும் என்கிற நம்பிக்கையை விதைத்திருக்கிறார்.

    நடிப்பு பயணம் பற்றி தேஜ்ராஜ் கூறும்போது, ‘எனக்கு சின்ன வயதிலிருந்தே சினிமா மீது பற்று உண்டு. நிறைய படங்களைப் பார்த்து சினிமா ஆர்வத்தை வளர்த்துக் கொண்டேன். அதோடு இல்லாமல் எஸ்.ஆர்.எம் காலேஜில் விஸ்காம் முடித்தேன். ரகுராம் மாஸ்டரிடமும், ஸ்ரீதர் மாஸ்டரிடமும் டான்சை முறைப்படி கற்றுக் கொண்டேன். பாண்டியன் மாஸ்டரிடம் ஸ்டண்ட் கற்றுக் கொண்டேன். கூத்துபட்டறை, பாலுமகேந்திரா இன்ஸ்டிட்யூட் மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள நடிப்பு பள்ளி ஆகியவற்றில் நடிப்பை கற்றுக் கொண்டேன்.



    90 எம்.எல் பட வாய்ப்பு கிடைத்தது. நடித்து படமும் வெளி வந்து எனக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. இன்று என்னை பார்க்கிற பல பேருக்கு அடையாளம் தெரியுது. ஆட்டோகிராப் வாங்குறாங்க, கை கொடுக்கிறாங்க எனக்கு சந்தோஷமா இருக்கு. இன்னும் சாதிக்கனும்னு வெறி இருக்கு. அதற்கான முயற்சியில் இருக்கிறேன்.

    நிறைய பேர் வில்லனா நடிப்பீங்களான்னு கேட்கிறாங்க. வில்லனா ஹீரோவாங்கிறது முக்கியமில்லை, பேர் வாங்கனும். அப்பா மாதிரி சினிமாவில நிலைச்சி நிக்கனும். அது தான் என் ஆசை.

    நடிக்க நிறைய வாய்ப்பு வருது. கதை கேட்டுட்டு இருக்கேன். கூடிய சீக்கிரம் எந்த படத்துல நடிக்கிறேன் என்பதை சொல்றேன்’ என்றார்.
    பிக்பாஸ் படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகை ஓவியாவை கைது செய்ய வேண்டும் என்று மீண்டும் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. #Oviya
    களவாணி படம் மூலம் அறிமுகமானவர் ஓவியா. பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களிடம் பிரபலம் அடைந்தார். அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர் அவர் நடித்த படம் 90 எம்.எல். அனிதா உதீப் இயக்கிய இந்த படத்தில் ஆபாச காட்சிகள், இரட்டை அர்த்த வசனங்கள் இடம்பெற்று இருப்பதாக சர்ச்சைகள் எழுந்தன. ஓவியா மீதும் இயக்குனர் மீதும் போலீசில் புகார்கள் கொடுக்கப்பட்டன.

    90 எம்.எல். படத்துக்காக ஓவியா மீது நேற்று கமி‌ஷனர் அலுவலகத்தில் இன்னொரு புகார் கொடுக்கப்பட்டுள்ளது. திருவேற்காட்டை சேர்ந்த தமிழ்வேந்தன் என்பவர் அந்த புகாரை கொடுத்துள்ளார். புகாரில் கூறப்பட்டுள்ளதாவது:-

    பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் உள்பட 100க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் ரீதியாக சித்தரவதை செய்யப்பட்டுள்ளனர். முகநூல், டுவிட்டர் மூலமாக அவர்களுக்கு காதல் வலை வீசி திருமண ஆசை காட்டி அந்த பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு உள்ளிட்டோர் நடந்து கொண்ட விதம் மனித இனத்திற்கே அவமானம்.

    தமிழகத்தில் மீண்டும் மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும் வகையில் படங்கள் எடுக்கப்படுவது அதைவிட கேவலம். கடந்த மார்ச் 1-ந் தேதி அனிதா உதீப் இயக்கிய 90 எம்.எல். படம் வெளியானது. அந்த படத்தில் நடிகை ஓவியா அருவருக்கத்தக்க வகையில் நடித்து இருந்தார்.



    புகைப்பது, ஆண் நண்பருடன் உதட்டோடு உதடு முத்தமிடுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதுதான் பெண்ணியம் என்றும் கற்பிக்கப்பட்டுள்ளது.

    தமிழக கலாசாரத்தை சீர்குலைக்கும் விதமாகவும் பெண்களை தவறாக வழி நடத்தக்கூடிய வகையிலும் 90 எம்.எல். படத்தை இயக்கிய அனிதா உதீப், அதில் நடித்த ஓவியா உள்ளிட்டோரை கைது செய்ய வேண்டும்’.

    இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது.
    தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஓவியா, நல்லவராக நடித்து ஆட்சியை பிடிக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். #Oviya #90ML #TNPolitical
    ஓவியா நடிப்பில் சமீபத்தில் வெளியான 90 எம்.எல் படத்தில் அவர் சில ஆபாச வசனங்களை பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. படத்தில் ஆபாசம் அதிகமாக இருப்பதாகவும் எதிர்ப்புகள் தோன்றின. பிக்பாஸ் மூலம் கிடைத்த புகழை கெடுத்துக்கொண்டார் என்று விமர்சனங்கள் பரவின. 

    இதுபற்றி ஓவியாவிடம் கேட்டோம். ’சமூகத்தில் இருப்பவர்களின் பிரதிபலிப்பு தான் படத்தில் இடம்பெறும் கதாபாத்திரங்கள். படத்தில் நடிப்பதற்கும் தனிப்பட்ட ஒருவரின் தன்மைக்கும் தொடர்பு இல்லை.



    தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது? சினிமாவில் நல்லவர்களாக நடிப்பார்கள். பின்னர் அதையே வைத்து அரசியலுக்கு வந்து ஆட்சியை பிடிப்பார்கள். இது சினிமா. சினிமாவை சினிமாவாக மட்டுமே பார்க்க தொடங்குங்கள். என்னை ஓவியாவாக பாருங்கள். படத்தில் வரும் கதாபாத்திரங்களோடு சேர்த்து குழப்பி கொள்ளாதீர்கள்’.

    இவ்வாறு அவர் கூறினார்.
    பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான நடிகை ஓவியா, சமீபத்தில் அளித்த பேட்டியில் கல்யாணம் எனக்கு பொருந்தாது என்று கூறியிருக்கிறார். #Oviya #90ML
    பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ஓவியா நடிக்கும் படம் 90 எம்.எல். இந்த படம் பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கி இருக்கும் சூழலில் ஓவியா அளித்த பேட்டி:

    சர்ச்சையான கதையை தேர்ந்தெடுத்தது ஏன்?

    பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று பல கட்டுப்பாடுகள் இருக்கின்றன. அந்த கட்டுப்பாடுகளை மீறவேண்டும் என்பதே இந்த படத்தின் ஒருவரி கதை. படத்தில் வயது வந்தோருக்கான வி‌ஷயங்கள் இருப்பதால் தான் ஏ சான்றிதழ் கொடுத்து இருக்கிறார்கள். யூடியூப்களில் எல்லாம் இதைவிட ஆபாசம் இருக்கிறது. படத்தில் பேசப்படும் வசனங்கள் எல்லாவற்றையும் ஓவியா பேசியதாக பார்க்க வேண்டாம். படத்தில் வரும் ரீட்டா கதாபாத்திரம் பேசியதாக பாருங்கள்.

    இது உங்கள் இமேஜை பாதிக்குமே?

    பிக்பாஸ் உள்பட எங்குமே எதையுமே நான் பெயருக்காகவோ புகழுக்காகவோ செய்யவில்லை. அப்படி இமேஜ் பார்த்து நான் நடந்துகொண்டு இருந்தால் இந்த பெயரோ புகழோ எனக்கு கிடைத்து இருக்காது. எனவே பெயர் போய்விடுமோ என எனக்கு எந்த பயமும் இல்லை. ஒரே மாதிரி என்னால் நடிக்க முடியாது. அது போரடிக்கும். பெயர், புகழ் பற்றி கவலை இல்லை. காரணம் எனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை.

    இதில் முத்த காட்சிகள் அதிகமாக இருக்கிறதாமே?

    ஆமாம். எனக்கு முத்தம் கொடுப்பது மிகவும் பிடிக்கும். இதிலும் நிறைய முத்தக்காட்சிகளில் நடித்து இருக்கிறேன்.

    அந்த காட்சிகளில் நடித்தது கடினமாக இருந்ததா?

    இல்லை. சிகரெட் பிடிக்கும் காட்சிகள் தான் கடினமாக இருந்தன. நாங்களும் கஷ்டப்பட்டு தான் நடிக்கிறோம். இதுபோன்ற படங்களுக்கும் விருது கொடுக்க வேண்டும்.



    மீடூ இயக்கம் பற்றி உங்கள் கருத்து என்ன?

    உங்கள் மனைவியாக இருந்தாலும் அவர் அனுமதி இல்லாமல் தொடக்கூடாது. இதுதான் என் கருத்து.

    கல்யாணத்தின் மீது ஏன் நம்பிக்கை இல்லை?

    எனக்கு கல்யாணத்துல நம்பிக்கை கிடையாது. அது வேண்டாம் என்று நினைக்கிறேன். ஆனா வாழ்க்கை நம்மை எங்கே கொண்டுபோய் சேர்க்கும் என்று தெரியாது. நான் சின்ன வயசுல இருந்தே சுதந்திரமாக வளர்ந்த பெண். தன்னிச்சையாக செயல்படுவேன். அதனால் கல்யாணம் எனக்கு எந்தவிதத்துல பொருந்தும் என்று தெரியவில்லை. தவிர எனக்கு ஒருவரின் ஆதரவு வேண்டும் என்று இப்போது வரை தோணவில்லை.

    நயன்தாரா உங்களுக்கு போட்டியா?

    எனக்கு நான் மட்டும்தான் போட்டி. எல்லா தரப்பு கதாபாத்திரங்களிலும் நடிக்க வேண்டும். சவாலான வேடங்களில் நடிக்க தான் விரும்புகிறேன்.

    இவ்வளவு துணிச்சலான நீங்கள் பிக்பாசில் தற்கொலைக்கு முயற்சி செய்தது ஏன்?

    அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற வேண்டும் என்று தோன்றியது. எனக்கு அப்போது வேறு வழி தெரியவில்லை. எனவே அப்படி செய்தேன்.
    பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஓவியா நடிப்பில் வெளியாக இருக்கும் 90 எம்.எல். படத்தின் அதிகாலை சிறப்பு காட்சியை ரசிகர்களுடன் சேர்ந்து பார்க்கவிருப்பதாக ஓவியா தெரிவித்துள்ளார். #90ML #Oviyaa
    பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஓவியா பிரபலம் ஆனார். ஓவியா ஆர்மி என்ற பெயரில் சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் பல பக்கங்களை வைத்துள்ளனர். ஆனால் அந்த புகழை பயன்படுத்தி சில படங்களை ஒப்புக்கொண்டு திரையுலகில் மீண்டும் ஒரு ரவுண்டு வராமல் தனக்கு பிடித்த கதாபாத்திரத்துக்காகக் காத்திருந்தார்.

    தற்போது 90 எம்.எல் என்ற அடல்ட் ஒன்லி படத்தில் ஒவியா நடித்துள்ளார். டிரெய்லரில் இடம்பெற்ற காட்சிகளுக்கும், வசனங்களுக்கும் விமர்சனங்கள் அதிக அளவில் வர அதற்கான பதிலையும் அதே பாணியில் கூறினார்.


    தற்போது படத்தில் இடம்பெற்றுள்ள காட்சி ஒன்றைத் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். 90 எம்.எல் திரைப்படம் பிப்ரவரி 22-ம் தேதி வெளியாக உள்ளது.

    அன்று தான் ரசிகர்களுடன் சேர்ந்து அதிகாலை சிறப்பு காட்சியைப் பார்க்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த படத்துக்கு சிம்பு இசையமைத்திருக்கிறார். யோகி பாபு, சிம்பு, பிரபுதேவா ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் வலம் வருகின்றனர். #90ML #Oviyaa #STR #AnitaUdeep

    பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தில் ஓவியா நடிக்கும் 90 எம்.எல். படத்தில், அவருக்கு துணிச்சலான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் அனிதா உதீப் தெரிவித்துள்ளார். #90ML #Oviyaa
    பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஓவியாவுக்கு பெரிய ரசிகர் கூட்டம் கிடைத்தது. அவர் முதன்மை கதாநாயகியாக நடித்துள்ள படம் 90 எம்.எல். இந்த படத்தில் ஓவியாவின் கதாபாத்திரம் பற்றி படத்தின் இயக்குனர் அனிதா உதீப்பிடம் கேட்டபோது,

    ‘இங்கே ஒரு ஆண் நினைப்பதுபோல வாழ்க்கையை வாழ முடியும். ஆனால் பெண் அப்படி வளர்வதில்லை.

    ஒரு குறிப்பிட்ட கட்டமைப்புக்குள் பெண்கள் வளர்வதால் பல வி‌ஷயங்களை வெளியே அவர்களும் சொல்வதில்லை. அந்த மாதிரி வி‌ஷயங்களை உடைத்து அவர்கள் நிஜ வாழ்க்கையில் என்ன நினைக்கிறாங்க? எப்படி வாழணும்னு ஆசைப்படுறாங்க? அவங்களோட நட்பு எப்படி இருக்கணும்? காதல், திருமண வாழ்க்கை உள்ளிட்ட எதிர்பார்ப்பு இதையெல்லாம் கருத்தாக இல்லாமல் வெளிப்படையாக சொல்கிற களம்தான் இந்த ‘90 எம்.எல்’. சிலருக்கு இது பிடிக்கும். சிலருக்கு பிடிக்காமலும் போகலாம். ஆனால் இதுதான் நிஜம். ஓவியா அழகு நிலையத்தில் வேலை பார்க்கும் துணிச்சலான ஒரு பெண்ணாக வருகிறார். அதுக்காக எல்லாவற்றுக்கும் சண்டைபோடும் நபர் இல்லை.



    ஒரு மிடில் கிளாஸ் அபார்ட்மென்ட் வீட்டில் வசிக்கும் 4 பெண்களை அவர் சந்திக்கிறார். தினம் தினம் தங்களுடைய எண்ணங்களை அந்த வீட்டின் மொட்டை மாடியில் நின்று ஒவ்வொருவரும் பகிர்கிறார்கள். படம் முழுக்க காமெடி, துணிச்சல், சில இடங்களில் இரட்டை அர்த்த வசனங்கள்கூட இருக்கும்’. இவ்வாறு அவர் கூறினார். #90ML #Oviyaa #AnitaUdeep #STR

    அனிதா உதுப் இயக்கத்தில் ஓவியா நடிப்பில் உருவாகி வரும் 90 எம்.எல் படத்திற்கு சிம்பு இசையமைக்கும் நிலையில், அந்த படத்தில் இருந்து சிங்கிள் ஒன்றை படக்குழு புத்தாண்டு விருந்தாக வெளியிடுகிறது. #STR #Oviya #90ML
    பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நடிகை ஓவியா `காஞ்னா-3', `களவாணி-2', `90 எம்.எல்' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதில் `90 எம்.எல்' படத்தை அனிதா உதுப் இயக்குகிறார். சிம்பு இசையமைக்கிறார். 

    படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், புத்தாண்டை முன்னிட்டு படத்தில் இருந்து பாடல் வரிகள் அடங்கிய வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட இருக்கிறது. `பீர் பிரியாணி' என தொடங்கும் இந்த பாடல் இன்று மாலை வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

    இந்த படத்திற்கு அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். அந்தோணி படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். விஸ் என்டர்டெயின்மெண்ட் இந்த படத்தை தயாரிக்கிறது. #STR #Oviya #90ML #BeerBiryani

    நான் சின்ன சின்ன வேடங்களில் நடித்த படங்களுக்கு கூட என் பெயரை சொல்லி விளம்பரம் தேடுகிறார்கள். வியாபார பொருட்களிலும் என் பெயரை பயன்படுத்துகிறார்கள். இது வருத்தம் அளிப்பதாக ஓவியா கூறினார். #Oviyaa
    களவாணி-2, 90 எம்.எல், காஞ்சனா என்று சினிமாவில் பிசியாக இருக்கும் ஓவியா அளித்த பேட்டி:

    சின்ன வயசிலிருந்தே ரொம்ப சுதந்திரமா இருக்கணும்னு நினைக்கிற பொண்ணு நான். யாருகிட்டயும் எந்த உதவியும் கேட்கமாட்டேன். என் செலவைக்கூட நானே பார்த்துக்குவேன். அந்த வயசுல பணம் சம்பாதிக்க என்ன பண்ணலாம்னு யோசிச்சப்பதான் மாடலிங் வாய்ப்பு வந்துச்சு. மாடலிங், சின்னச் சின்ன விளம்பரங்கள் பண்ண ஆரம்பிச்சேன். என் பாக்கெட் மணிக்கு அது சரியா இருந்துச்சு. அப்போதான் என் மாடலிங் போட்டோஸ் பார்த்துட்டு ‘களவாணி’ படத்தின் டைரக்டர் சற்குணம் கூப்பிட்டார். ‘களவாணி’ படத்திலிருந்து ஹெலன் ஓவியாவா மாறியாச்சு.

    புத்தாண்டு திட்டம் என்ன?

    எப்போதும் போல நண்பர்களுடன் கொண்டாட திட்டமிட்டுள்ளேன். அதன் பின்னர் எனக்கு மிகவும் பிடித்த பயணம் மேற்கொள்ள இருக்கிறேன். அனேகமாக இமயமலைக்கு செல்லலாம்.

    உங்கள் வாழ்க்கையை பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின், முன் என இரண்டாக பிரிக்கலாமா?

    நிறைய பேர் நான் ஒரே இரவில் பெரிய ஆளாக, பிரபலமாக மாறிவிட்டதாக நினைக்கிறார்கள். அது ஓரளவு உண்மை தான். அந்த நிகழ்ச்சி மூலம் தான் எனக்கு இவ்வளவு புகழ் கிடைத்தது. ஆனால் பெரிய கஷ்டங்கள், சிரமங்களுக்கு பிறகே இந்த இடத்திற்கு வந்துள்ளேன். பல ஆண்டுகளுக்கு முன்பே சினிமாவுக்கு வந்துவிட்டேன். ஆனால் இந்த புகழ் கிடைக்கவில்லை. பதிலாக போராடிக்கொண்டே இருந்தேன். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து ஒரு ஆண்டுக்கு மேல் ஆகியும் கூட மக்கள் என்னை மறக்காமல்நேசிக்கிறார்கள். அது ஆச்சர்யப்படுத்துகிறது.



    இணையதளமோ, நேரிலோ என்னை ரசிகர்கள் அவர்கள் குடும்பங்களில் ஒருவராக தான் பார்க்கிறார்கள். இது என் வாழ்க்கையின் மிக முக்கிய தருணம். சிலர் என்னுடைய ரசிகர்களை தவறாக பயன்படுத்தி முறைகேடுகளில் ஈடுபடுத்தி சம்பாதிக்கிறார்கள். நான் சின்ன சின்ன வேடங்களில் நடித்த படங்களுக்கு கூட என் பெயரை சொல்லி விளம்பரம் தேடுகிறார்கள். வியாபார பொருட்களிலும் என் பெயரை பயன்படுத்துகிறார்கள். இது வருத்தம் அளிக்கிறது.

    கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க ஆர்வமா?

    ஆமாம். ஆனால் அறம் போன்ற சீரியசான படங்கள் அல்ல. என்னுடைய படங்கள் வித்தியாசமானதாக இருக்கும். மாஸ் மற்றும் பொழுதுபோக்கு படங்களாக இருக்கும். என் ரசிகர்களும் என்னை போலவே இருக்க வேண்டும். கருத்து சொல்லி போரடிக்க விரும்பவில்லை. #Oviyaa #Kanchana3 #Kalavani2 #90ML

    ஒகேனக்கல் பஸ் நிலையத்தில் 90 வயது மூதாட்டியை உறவினர்கள் விட்டு சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஒகேனக்கல்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த காமன்தொட்டி பகுதியை சேர்ந்தவர் வெங்கட்டம்மாள் (வயது 90). இவர் வீட்டில் தவறி விழுந்ததில் காலில் அடிபட்டது. கட்டு போடுவதாக கூறி ஒரு ஆட்டோவில் இவரை பேரன் சிவராஜ், அவரது மனைவி உஷா ஆகியோர் பென்னாகரத்தை அடுத்த நல்லாம்பட்டிக்கு அழைத்து வந்தனர். ஆனால் கட்டு போடாமால் ஒகேனக்கல் பஸ் நிலையத்தில் இறக்கி விட்டு சென்றுவிட்டனர்.

    கடந்த 10 நாட்களாக அங்கு தவித்து வரும் மூதாட்டி வெங்கட்டம்மாளுக்கு சுற்றுலா வரும் பயணிகள் உணவு வாங்கி கொடுக்கிறார்கள்.

    இந்த மூதாட்டி குறித்து ஒகேனக்கல் போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் மூதாட்டியின் உறவினர்களுக்கு தகவல் கொடுத்து உள்ளனர். அந்த மூதாட்டியை அவர்கள் அழைத்து செல்லாவிட்டால் உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

    இது குறித்து மூதாட்டி வெங்கட்டம்மாள் கூறியதாவது:-

    கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு எனது கணவர் இறந்துவிட்டார். அதன்பிறகு எனது 2 மகன்களும் இறந்தனர். இதனால் எனது மகள் முனிரத்தினம் வீட்டில் தங்கி இருந்தேன். அங்கு 2 மாதங்களுக்கு முன்பு கீழே விழுந்ததில் காலில் அடிபட்டது. கட்டு போடுவதாக கூறி என்னை பேரனும், பேத்தியும் அழைத்து வந்து ஒகேனக்கல்லில் விட்டு சென்றுவிட்டனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    தமிழகத்தில் விவசாயிகளுக்கு 90 சதவீத மானியத்தில் சூரிய சக்தி மோட்டார் பம்ப் செட்டுகள் நிறுவப்படும் என சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். #TNAssembly #EPS #SolarPumpSets
    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்று 110-வது விதியின்கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமாகவும், விவசாயப் பெருமக்களின் வளமான வாழ்வுக்கு முக்கியமாக விளங்கும் வேளாண்மை தொழிலை மேம்படுத்துவதற்கும், விவசாயப் பெருமக்களின் வாழ்வு வளம் பெறச் செய்வதற்கும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    அவ்வகையில், தமிழ்நாட்டில் அபரிமிதமாகக் கிடைக்கும் சூரிய சக்தியை, பல்வேறு வழிகளில் பயன்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு “சூரிய சக்திக் கொள்கை” ஒன்றை 2012-ஆம் ஆண்டில் உருவாக்கி செயல்படுத்தி வருகிறது. இதுவரை, தமிழ்நாட்டில் 3,112 சூரிய சக்தி பம்ப் செட்டுகளும், 181 சூரிய உலர்ப்பான்களும், 117 கோடியே 24 லட்சம் ரூபாய் மானியத்தில்
    நிறுவப்பட்டுள்ளன. இலவச மின் இணைப்பை ஏற்கனவே பெற்றுள்ளவர்களும், இலவச மின் இணைப்பு வேண்டி விண்ணப்பித்தவர்களும், மின் இணைப்பை துறப்பதற்கு முன்வந்தால், இத்திட்டத்தின் கீழ், 90 சதவீத மானியத்தில் சூரிய சக்தி மோட்டார் பம்ப் செட்டுகள் அமைத்து தரப்படும்.



    தற்போது விவசாயிகளிடையே, சூரிய சக்தி மோட்டார் பம்ப் செட்டுகளுக்கு அதிக தேவை இருப்பதை கருத்தில் கொண்டு, ஏற்கனவே டெல்டா மாவட்டங்களுக்கு குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டத்துடன் அறிவிக்கப்பட்ட 500 சூரிய சக்தி மோட்டார் பம்ப் செட்டுகள் போக, டெல்டா மாவட்டங்கள் அல்லாத பிற பகுதிகளுக்கும் 500 சூரிய சக்தி மோட்டார் பம்பு செட்டுகள் என மொத்தம் 1,000 சூரிய சக்தி மோட்டார் பம்பு செட்டுகள் 50 கோடி ரூபாய் செலவில் 90 சதவீத மானியத்தில் நிறுவப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார். #TNAssembly #EPS #SolarPumpSets 
    அரியலூர் அருகே வீட்டின் கதவை உடைத்து 90 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள நாகல்குழி கிராமம் கீழத் தெருவை சேர்ந்தவர் சின்னப்பா. இவரது மனைவி தில்லைநாயகி (வயது 45). இவர்களது மகன் தினேஷ் (21). சின்னப்பா சிங்கப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராக கடந்த 20 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். வருடத்திற்கு ஒரு முறை ஊருக்கு வந்து செல்வது வழக்கம். இதனால் தில்லைநாயகி அவரது மகனுடன் நாகல்குழியில் வசித்து வந்தார்.

    இந்தநிலையில் நேற்று அப்பகுதியில் உள்ள கோவில் திருவிழாவையொட்டி இன்னிசை கச்சேரி நடைபெற்றது. அதனை காண்பதற்காக தில்லைநாயகி மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டின் முன்பக்கம் மற்றும் பின்பக்க கதவுகளை பூட்டி விட்டு சென்றனர்.

    இன்னிசை கச்சேரி முடிந்ததையடுத்து நள்ளிரவில் இருவரும் வீடு திரும்பினர். வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது பல்வேறு பொருட்கள் சிதறி கிடந்தது. பின்பக்க கதவு உடைக்கப்பட்டும் கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த தில்லைநாயகி வீட்டின் அறையில் உள்ள பீரோவை பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 90 பவுன் நகை கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது. அவற்றின் மதிப்பு ரூ.20 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.


    இது குறித்து இரும்புலிக்குறிச்சி போலீசில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மோப்பநாய், கைரேகை நிபுணர்கள் மூலம் சோதனை நடத்தப்பட்டது.

    தில்லைநாயகி மற்றும் அவரது மகன் கோவில் திருவிழாவுக்கு சென்றதை நோட்டமிட்டு மர்மநபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த கொள்ளையில் ஈடுபட்டவர்கள் தெரிந்த நபர்களாகவே இருக்கலாம் என தெரிகிறது. அவர்கள் யாரென்று விசாரணை நடத்தி போலீசார் தேடி வருகின்றனர். மேலும் சம்பவ இடத்திற்கு அரியலூர் மாவட்ட எஸ்.பி. அபினவ்குமார், ஜெயங்கொண்டம் டி.எஸ்.பி. கென்னடி ஆகியோர் சென்று விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Tamilnews
    கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பெங்களூருவில் ராகுல் காந்தி ஓட்டுவேட்டையில் ஈடுபட்டார். அப்போது அவர் வங்கிகளில் உள்ள 90 சதவீத பணம் 15 பெரும் பணக்காரர்களுக்கு செல்வதாக கூறினார். #RahulGandhi
    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபை தேர்தல் வருகிற 12-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று பெங்களூருவில் திறந்த வாகனத்தில் சாலைகளில் சென்று ஓட்டு வேட்டையில் ஈடுபட்டார்.

    முன்னதாக ஓசூர் ரோட்டில் பிரசாரம் செய்த அவர், ஆயத்த ஆடை உற்பத்தி தொழிலாளர்களுடன் கலந்துரையாடல் நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது:-

    நாட்டில் 15 தொழில் அதிபர்களின் ரூ.2 லட்சம் கோடி கடனை மோடி அரசு தள்ளுபடி செய்தது. விவசாயிகள் மற்றும் சிறிய தொழில் செய்பவர்களின் கடனை தள்ளுபடி செய்ய பிரதமர் முன்வரவில்லை. விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வது என்பது தவறான சம்பிரதாயம் என்று மத்திய அரசை நடத்துபவர்கள் கூறுகிறார்கள். பெரிய தொழில் அதிபர்களின் கடனை மட்டும் தள்ளுபடி செய்வது சரியா?. வங்கிகளில் உள்ள 90 சதவீத பணம் 15 பெரும் பணக்காரர்களுக்கு செல்கிறது.

    கர்நாடகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் காங்கிரஸ் ஆட்சி சிறப்பான முறையில் செயலாற்றி உள்ளது. விவசாயிகளுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன. ஊழல்வாதிகளான எடியூரப்பா, ரெட்டி சகோதரர்களை அருகில் உட்கார வைத்துக்கொண்டு, மோடி ஊழல் ஒழிப்பு பற்றி பேசுகிறார்.

    நீதிபதி லோயா சம்பவத்தில் பா.ஜனதா தலைவர்களுக்கு தொடர்பு உள்ளது. இதை பற்றி மோடி பேசுவது இல்லை. மோடியின் நண்பர்கள் வங்கியில் கடன் பெற்று மோசடி செய்துவிட்டு நாட்டை விட்டு தப்பி சென்றுவிட்டனர். அதுபற்றியும் மோடி வாய் திறப்பது இல்லை.

    சித்தராமையா, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரை பற்றியும், என்னை பற்றியும் மோடி தனிப்பட்ட முறையில் தாக்கி பேசுகிறார். இது பிரதமர் பதவிக்கு நல்லதல்ல. ஆனால் நாங்கள் பிரதமர் பதவிக்கு மரியாதை கொடுக்கிறோம். பெங்களூருவின் வளர்ச்சிக்கு மோடி ரூ.550 கோடி மட்டுமே கொடுத்துள்ளார். இது வெட்கக்கேடானது. காங்கிரஸ் ஆட்சியில் பெங்களூரு வளர்ச்சிக்கு ரூ.10 ஆயிரம் கோடி வழங்கப்பட்டது. அரசியல் சாசனத்தை மாற்றுவதாக பா.ஜனதாவினர் சொல்கிறார்கள். தைரியம் இருந்தால் அரசியல் சாசனத்தை மாற்றி பாருங்கள்.

    பிரதமர் மோடிக்கு கர்நாடக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

    நிரவ் மோடி ரூ.35 ஆயிரம் கோடி கடன் பெற்று மோசடி செய்துவிட்டார். ரெட்டி சகோதரர்கள் ரூ.35 ஆயிரம் கோடிக்கு இரும்புதாது முறைகேடு செய்தனர். சரக்கு மற்றும் சேவை வரி திட்டம் மற்றும் பண மதிப்பிழப்பு திட்டம் ஆகியவற்றால் ஏராளமான ஆயத்த ஆடை உற்பத்தி தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன.

    மக்களின் வாழ்க்கையை எளிதாக்கவே ஆதார் திட்டத்தை முந்தைய மத்திய அரசு கொண்டு வந்தது. ஆனால் அதை மோடி அரசு கண்காணிப்பு பணிகளுக்கு பயன்படுத்தி கொண்டது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால், ஆதார் தொடர்பான பிரச்சினைகளை தடுப்போம். தற்போதைய நிலையில் பயன்படுத்தும் ஆதார் முறையை நாங்கள் எதிர்க்கிறோம். இது மக்களுக்கு பிரச்சினையை ஏற்படுத்துகிறது. அதனால் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இதை மாற்றுவோம்.

    இவ்வாறு ராகுல் காந்தி பேசினார். 
    ×