search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "birthday"

    • ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்றனர்.
    • தொழில்நுட்ப கோளாறு காரணமாக பூமிக்கு திரும்புவதில் சிக்கல் உருவானது.

    இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் (வயது 58) மற்றும் மற்றொரு வீரரான புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த மாதம் 5-ந்தேதி ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்றனர். அங்கு அவர்கள் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    அவர்கள் திட்டமிட்டபடி கடந்த மாதம் 22-ந்தேதி பூமிக்கு திரும்பி இருக்க வேண்டும். ஆனால் ஸ்டார் லைனர் விண்கலத்தில் ஹீலியம் வாயு கசிவு மற்றும் உந்து விசை கருவியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பூமிக்கு திரும்புவதில் சிக்கல் உருவானது. இதனால் நாசா விஞ்ஞானிகள் கவலை அடைந்துள்ளனர்.

    தொழில்நுட்ப கோளாறுகள் சரிசெய்து இவர்கள் பூமி திரும்ப அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஆகும் என தெரியந்துள்ளது.

    இதற்கிடையே, சுனிதான வில்லியம்ஸ் 2வது முறையாக விண்வெளியில் தனது பிறந்தநாளை கொண்டாட உள்ளார்.

    அதன்படி, சுனிதா வில்லியம்ஸ் செப்டம்பர் 19 ஆம் தேதி தனது 59 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

    இதற்கு முன்பு, கடந்த 2012 ஜூலை முதல் நவம்பர் வரை அவர் விண்வெளியில் இருந்தபோது தன்னுடைய பிறந்தநாளை முதல்முறையாக அங்கு கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • புலித்தேவரின் 309-வது பிறந்த நாள்.
    • வீரம் செறிந்த அவரது வரலாற்றைத் தமிழ்நிலம் எந்நாளும் போற்றும்.

    சென்னை:

    சுதந்திரப் போராட்ட வீரர் புலித்தேவரின் 309-வது பிறந்த நாளையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலை தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    ஆங்கிலேய ஆட்சியை வேரறக் களையப் போர்க்கொடி உயர்த்திய பூலித்தேவரின் 309-வது பிறந்தநாள்!

    மண்ணின் மானம் காக்க வாழ்ந்த வீரம் செறிந்த அவரது வரலாற்றைத் தமிழ்நிலம் எந்நாளும் போற்றும்!

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் 'மேஜர் ஜெனரல்' எனப் பாராட்டப்பட்டவர்.
    • கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அன்புக்குரிய உடன்பிறப்பு.

    விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்ததில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    அதில், "சமூகக் கொடுமை, ஆதிக்க மனப்பான்மை, வறுமை ஒழிந்த சமத்துவச் சமுதாயம் காணும் நம் பயணத்தில் தோளோடு தோள் நிற்கும் தோழமை, சகோதரர் 'எழுச்சித் தமிழர்' திருமாவளவன்

    அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    தொடர்ந்து, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், " விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் அண்ணன் திருமாவளவன் எம்.பி.-ன் பிறந்த நாளான இன்று அவரை நேரில் வாழ்த்தி மகிழ்ந்தோம்.

    முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் 'மேஜர் ஜெனரல்' எனப் பாராட்டப்பட்டவர்.

    கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அன்புக்குரிய உடன்பிறப்பு.

    சமத்துவம் - சமூகநீதி கோட்பாட்டின் அடிப்படையில் நம்மோடு கரம் கோர்த்து நிற்கும் அன்பு அண்ணன்.

    பாசிஸ்ட்டுகளின் பிரித்தாளும் சூழ்ச்சிகளுக்கு இடந்தராமல், எல்லாத் தரப்பு மக்களையும் உள்ளடக்கிய மானுட விடுதலைக்காக கொள்கை உரத்தோடுக் களமாடும் அண்ணனின் பயணத்தில் எப்போதும் உடன் நிற்போம். அவரின் பணிகள் சிறக்கட்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    • ராயன் படம் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது.
    • தனுஷ் பிறந்தநாளை ஒட்டி ரசிகர்கள் அவர் வீட்டிற்கு முன்பு நேற்று குவிந்தனர்.

    தனுஷ் தனது 50-வது திரைப்படமான 'ராயன்' படத்தை இயக்கி நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், சந்தீப் கிஷான், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    இந்த படத்துக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

    ராயன் படம் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. முதல் நாள் வசூல் மட்டும்13 கோடி ரூபாயை தாண்டியுள்ளது.

    ராயன் வெளியாகி வரவேற்பை பெற்று வரும் நேரத்தில் நேற்று தனது பிறந்தநாளை தனுஷ் கொண்டாடினார். பிறந்தநாளை ஒட்டி ரசிகர்கள் தனுஷ் வீட்டிற்கு முன்பு நேற்று குவிந்தனர். தனது வீட்டிற்கு முன்பு திரண்டிருந்த ரசிகர்கள் அனைவருக்கும் தனுஷ் நன்றி தெரிவித்தார். அந்த வீடியோ நேற்று இணையத்தில் வைரலானது.

    இந்நிலையில், ஆடி கிருத்திகையை ஒட்டி, திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலில் நடிகர் தனுஷ் கையில் ருத்ராட்ச மாலையுடன் மகன்களோடு உருகி நின்று சாமி தரிசனம் செய்தார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தனுஷ் தனது 50-வது திரைப்படமான 'ராயன்' படத்தை இயக்கி நடித்துள்ளார்.
    • ராயன் படத்துக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

    தனுஷ் தனது 50-வது திரைப்படமான 'ராயன்' படத்தை இயக்கி நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், சந்தீப் கிஷான், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    இந்த படத்துக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

    ராயன் படம் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. முதல் நாள் வசூல் மட்டும்13 கோடி ரூபாயை தாண்டியுள்ளது. இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் தனுஷுக்கு திரைப்பிரபலங்கள் அவர்களது வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.

    சமூக வலைத்தளங்களில் ராயன் படத்தின் நடித்த துஷரா விஜயன், சந்தீப் கிஷன், அபர்னா முரளி, மற்றும் பலர் அவர்களது வாழ்த்துகளை பகிர்ந்தனர்.

    ரசிகர்கள் அவர்களது அன்பை மற்றும் வாழ்த்தை தெரிவிக்க இன்று தனுஷின் வீட்டை சூழ்ந்தனர், அங்கு தனுஷ் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். இந்த வீடியோ தாற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சாக்லேட்டுகள் வாங்கிய கடையில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
    • கார்கோனில் உள்ள மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்தில் புகார் செய்தார்.

    உணவு பொருட்களில் புழுக்கள், பூச்சிகள் கிடந்ததாக புகார்கள் அவ்வப்போது வீடியோவுடன் சமூகவலைதளங்களில் வைரலாகும். இந்நிலையில், மத்திய பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு, ஒரு குழந்தையின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கிடைத்த சாக்லேட்டில் செயற்கை பற்கள் கிடந்துள்ளது.

    மத்தியபிரதேசத்தின் கர்கோன் பகுதியில் உள்ள ஓய்வுபெற்ற பள்ளி முதல்வர் மாயாதேவி. இவர் ஒரு அரசு சாரா நிறுவனத்தில் தன்னார்வத் தொண்டு செய்து வருகிறார். அங்குள்ள ஒரு மாணவியின் பிறந்த நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு இவருக்கு ஒரு பெரிய சாக்லேட் கிடைத்துள்ளது. அதில் தான் 4 செயற்கை பற்கள் கிடந்துள்ளது.

    இதுகுறித்து மாயாதேவி கூறுகையில், எனக்கு ஒரு பிரபலமான நிறுவனத்தின் காபி சுவையுடைய சாக்லேட் கிடைத்தது. அந்த சாக்லேட்டை சாப்பிட்டதும், ஏதோ ஒரு மொறுமொறுப்பான சாக்லேட் போல உணர்ந்தேன். ஆனால் மீண்டும் ஒரு முறை மென்று சாப்பிட முயற்சித்த போது அது மிகவும் கடினமாக இருப்பதாக உணர்ந்தேன். இதனால் சாக்லேட்டை வெளியே எடுத்து பார்த்த போது அதில் 4 செயற்கை பற்களின் தொகுப்பு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தேன் என்றார்.

    இதுகுறித்து அவர் கார்கோனில் உள்ள மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்தில் புகார் செய்தார். அதன்பேரில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த சாக்லேட்டுகள் வாங்கிய கடையில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    • பள்ளிகளில் காமராஜரின் பிறந்தநாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது.
    • எங்கள் உறுதிப்பாட்டை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்.

    பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 122வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. தமிழக அரசு சார்பில் முதல்வர், அமைச்சர்கள் காமராஜருக்கு மரியாதை செலுத்தினார். பள்ளிகளில் காமராஜரின் பிறந்தநாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது.

    இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

    காமராஜரின் பிறந்தநாளான இன்று அவரது தொலைநோக்கு தலைமை மற்றும் ஏழைகளை மேம்படுத்துவதற்கான முயற்சிகளுக்காக அவர் பரவலாக மதிக்கப்படுகிறார். கல்வி போன்ற துறைகளில் அவரது பங்களிப்பு ஈடு இணையற்றது. அவரது இலட்சியங்களை நிறைவேற்றவும், நீதியும் கருணையும் கொண்ட சமுதாயத்தை உருவாக்குவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம் என்று கூறியுள்ளார்.

    • மலர் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி வணங்கினோம்.
    • மாவீரன் அழகுமுத்துக்கோனுக்கு தபால் தலை வெளியிட்டுப் புகழ் சேர்த்தது பெருமைக்குரியது.

    சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகு முத்துக்கோனின் 314-வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது,

    தேச விடுதலைக்காக, இறுதிவரை துணிச்சலுடன் போராடி, தன்னுயிரையே தியாகம் செய்த மாவீரன் அழகுமுத்துக்கோன் அவர்கள் பிறந்த தினம் இன்று.

    சென்னை எழும்பூரில் உள்ள மாவீரன் அழகுமுத்துக்கோன் திருவுருவச் சிலைக்கு, தமிழக பாஜக மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் சென்று, மலர் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி வணங்கினோம்.

    நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, 2015 ஆம் ஆண்டு, மாவீரன் அழகுமுத்துக்கோனுக்கு தபால் தலை வெளியிட்டுப் புகழ் சேர்த்தது பெருமைக்குரியது. ஆங்கிலேயர்களுக்கு எதிரான போரில், இறுதிவரை பின்வாங்காமல், அச்சமின்றிப் போரிட்ட மாவீரன் அழகுமுத்துக்கோன் அவர்களது வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறோம் என்று கூறியுள்ளார்.

    • விசாரணையின் போது மிச்செல் கூறிய காரணம் போலீஸாரை வியப்பில் ஆழ்த்தியது.
    • வழக்கு பதிவு செய்து மிச்செல்லை விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அமெரிக்காவில் உள்ள லெபனாவை சேர்ந்த 47 வயதான மிச்செல் என்பவரின் கணவர் தன்னை கொலை செய்ய முயற்சித்ததாக மனைவி மீது போலீசில் புகாரளித்ததுள்ளார்.

    மிச்செல் தனது கணவர் குடிக்க வைத்திருந்த சோடாவில் பூச்சிக்கொல்லி மருத்தை கலந்து குடிக்க வைத்துள்ளார். மிச்செல் கணவர் அந்த சோடாவை குடிக்க ஆரம்பித்தார். வித்தியாசமான சுவையை அலட்சியப்படுத்திவிட்டு சோடாவைக் குடித்துக்கொண்டே இருந்தார். இரண்டு வாரங்களுக்குப் பிறகு, அவர் தொண்டை புண், குமட்டல், வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டதை அடுத்து கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து சிசிடிவி கேமிரா பதிவுகளை சோதனை செய்த போது மிச்செல் அவர் குடிக்க வைத்திருந்த சோடாவில் பூச்சிக்கொல்லி மருந்தை கலப்பது போல் காட்சிகள் பதிவாகி இருந்ததை பார்த்து அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் மிச்செல் கைது செய்யப்பட்டார்.

    சிசிடிவி கேமிரா பதிவை சோதனை செய்த போலீசார் விசாரணையை தீவிரபடுத்தினர்.

    விசாரணையின் போது மிச்செல் கூறிய காரணம் போலீஸாரை வியப்பில் ஆழ்த்தியது.

    மிச்செல் தனது கணவருக்கும் 50 வது பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பாக கொண்டாடி இருக்கிறார். தான் பிறந்தநாளுக்கு பார்ட்டி கொடுத்ததை குறித்து தனது கணவர் பாராட்டவில்லை ஆகவே கொலை செய்ய முடிவு எடுத்தேன் என்று கூறியுள்ளார்.

    அதையடுத்து வழக்கு பதிவு செய்து மிச்செல்லை விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருவள்ளூர் மாவட்டத்திற்கு சென்று ஆற்காடு சுரேஷின் படத்தில் ரத்தக்கறை கத்தியை கும்பல் வைத்துள்ளது.
    • 3 நாட்டு வெடிகுண்டுகள், 5 பட்டாக்கத்திகளை சம்பவ இடத்திலேயேவிட்டு சென்றதும் தெரிய வந்துள்ளது.

    பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்த கத்தியை ஆற்காடு சுரேஷின் உருவப்படத்தில் கொலை கும்பல் வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ஆம்ஸ்ட்ராங்கை நேற்றிரவு கொலை செய்ததும் திருவள்ளூர் மாவட்டத்திற்கு சென்று ஆற்காடு சுரேஷின் படத்தில் ரத்தக்கறை கத்தியை கும்பல் வைத்துள்ளது.

    நேற்று ஆற்காடு சுரேஷின் பிறந்தநாள் என்பதால் ஆம்ஸ்ட்ராங்கை கொன்றுவிட்டு கத்தியை வைத்ததகாக தகவல் வெளியாகியுள்ளது .

    கத்தியை வைத்தபின் திருவள்ளூர் நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவருடன் சென்னை அண்ணாநகர் காவல் நிலையத்திற்கு வந்து சரணடைந்தார்.

    கொலை செய்த பிறகு பதற்றத்தில் 3 நாட்டு வெடிகுண்டுகள், 5 பட்டாக்கத்திகளை சம்பவ இடத்திலேயேவிட்டு சென்றதும் தெரிய வந்துள்ளது.

    • முன்னாள் பிரதமர் வி.பி.சிங் திருவுருவ சிலைக்கு முதலமைச்சர் மரியாதை செலுத்தினார்.
    • அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், மேயர் பிரியா உள்ளிட்டோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    சென்னை:

    சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மாநில கல்லூரி வளாகத்தில் உள்ள முன்னாள் பிரதமர் வி.பி.சிங் திருவுருவ சிலைக்கு முதலமைச்சர் மரியாதை செலுத்தினார்.

    முன்னாள் பிரதமர் நீதி காவலர் வி.பி.சிங்-கின் 94-வது பிறந்தநாளான இன்று அவரது திருவுருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    அவருடன் அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், மேயர் பிரியா உள்ளிட்டோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    வி.பி.சிங் சிலை நிறுவப்பட்ட பிறகு அரசு சார்பில் முதல் பிறந்தநாளான இன்று மரியாதை செலுத்தப்பட்டது.

    • உதயநிதி ஸ்டாலின் கூட விஜய்க்கு வாழ்த்து சொல்லவில்லை.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் அன்று விஜய் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

    தமிழக வெற்றிக் கழகம் தலைவரும், நடிகருமான விஜய் தனது பிறந்த நாளுக்கு வாழ்த்துக்கூறிய அனைவரும் நன்றி கூறும் விதத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில், புதுச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமி, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஒ. பன்னீர்செல்வம், தமிழிசை சௌந்தரராஜன், சீமான், தொல். திருமாவளவன், அன்புமணி இராமதாஸ், டி.டி.வி. தினகரன், கமல்ஹாசன் உள்ளிட்ட பலருக்கும் விஜய் நன்றி தெரிவித்துள்ளார்.

    தமிழக வெற்றிக் கழகம் தலைவரான விஜய்க்கு தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், தமிழகத்தை ஆளும் திமுகவிலிருந்து யாரும் வாழ்த்து சொல்லவில்லை. குறிப்பாக தமிழ் திரைத்துறையில் நடிகராக தயாரிப்பாளராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் கூட விஜய்க்கு வாழ்த்து சொல்லவில்லை.

    நடிகர் விஜய் கட்சி தொடங்கியதில் இருந்து பல்வேறு அரசியல் தலைவர்களுக்கு வாழ்த்து சொல்லி வருகிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் அன்று நடிகர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருந்தார். ஆனால் அதற்கு மு.க.ஸ்டாலின் எந்த பதிலும் அளிக்கவில்லை.

    ஆனால் விஜயின் இந்த வாழ்த்து செய்திகளே ஒருகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் கிண்டலுக்கு உள்ளானது.

    இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் நடந்த கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பாக விஜய் அவரது எக்ஸ் பக்கத்தில் திமுக அரசிற்கு எதிராக பதிவிட்டதும் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் நேரில் சந்தித்து பேசியதும் திமுக அரசிற்கு நெருக்கடியை உருவாக்கியது.

    இதனால் தான் விஜய்க்கு திமுகவிலிருந்து யாரும் பிறந்தநாள் வாழ்த்து சொல்லவில்லை என்று கூறப்படுகிறது.

    ×