search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Boat traffic"

    • மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் 36 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
    • பொதுமக்கள், தொழிலாளர்கள் மாணவ-மாணவிகள் சுமார் 15 கிலோ தூரம் சுற்றி சாலை மார்க்கமாக பஸ்களில் சென்று வருகிறார்கள்.

    அம்மாபேட்டை:

    கர்நாடகா மாநிலம் மற்றும் கேரளா மாநிலங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பலத்த மழை கொட்டியது. இதனால் சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணை நிரம்பியது. இதையடுத்து அணையில் இருந்து 1.70 லட்சம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

    இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை, கருங்கல்பாளையம், கொடிமுடி காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள நெரிஞ்சிபேட்டை - பூலாம்பட்டிக்கு காவடிரி ஆற்றில் படகு போக்குவரத்து இருந்து வருகிறது. காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் படகு போக்குவரத்து நிறத்தப்பட்டது.

    இதை தொடர்ந்து காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக குறைந்தது. இதையடுத்து நெரிஞ்சிபேட்டை - பூலாம்பட்டிக்கு மீண்டும் படகு போக்குவரத்து தொடங்கி நடந்து வந்தது.

    இந்த நிலையில் நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து மீண்டும் அதிகரித்து வருகிறது. தற்போது அணையில் இருந்து காவிரி ஆற்றில் 36 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதனால் ஈரோடு மாவட்ட காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதையடுத்து பாதுகாப்பு கருதி நெரிஞ்சிபேட்டை - பூலாம் பட்டிக்கு செல்லும் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு மீண்டும் நிறுத்தப்பட்டது.

    இதை தொடர்ந்து படகுகள் நெரிஞ்சிபேட்டை காவிரி கரையோரங்களில் நிறுத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    காவிரி ஆற்றில் மீண்டும் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. பாதுகாப்பு கருதி படகு போக்குவரத்து நிறுத்தபட்டு உள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை படகு போக்குவரத்து ரத்து செய்யப்படுகிறது. காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்தால் மீண்டும் படகு போக்குவரத்து தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதனால் அம்மா பேட்டை, நெரிஞ்சிபேட்டை மற்றும் சுற்று வட்டார பகுதி பொதுமக்கள், தொழிலாளர்கள் மாணவ-மாணவிகள் சுமார் 15 கிலோ தூரம் சுற்றி சாலை மார்க்கமாக பஸ்களில் சென்று வருகிறார்கள்.

    • ஐயப்ப பக்தர்களும் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் குடை பிடித்தபடி சுற்றுலா தலங்களை சுற்றி பார்த்தனர்.
    • கடல் சீற்றமும் தணிந்த பிறகு தான் படகு போக்குவரத்து தொடங்கப்படும் என்று பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் சபரிமலை சீசன் தொடங்கிய 3-வது நாளான இன்று கன்னியாகுமரிக்கு வந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வழக்கத்தைவிட அதிகமாக காணப்பட்டது.

    இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதாலும், வெளியூர் சுற்றுலா பயணிகள் வருகையும் அதிகரித்து காணப்பட்டது. இதனால் கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. மேலும் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலிதுறை கடற்கரை பகுதியில் சூரியன் உதயமாகும் காட்சியை காண இன்று அதிகாலை 5 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் குவிய தொடங்கினார்கள். ஆனால் மழை மேக மூட்டம் காரணமாக வானம் மப்பும் மந்தாரமாக காட்சி அளித்தது. இடையிடையே விட்டுவிட்டு மழை பெய்துகொண்டே இருந்தது. தொடர்ந்து மழை மேகம் சூழ்ந்து சூரிய வெளிச்சம் வெளியே தெரியாமல் இருந்தது. இதனால் கன்னியாகுமரி கடற்கரைக்கு சூரிய உதயம் காண வந்த சுற்றுலா பயணிகள் சூரியன் உதயமாகும் காட்சியை பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    அதேபோல கன்னியாகுமரியில் கடல் சீற்றம் காரணமாக ஏற்பட்ட ராட்சத அலைகளால் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். அதையும் மீறி கன்னியாகுமரி முக்கடல் சங்கத்தில் ஐயப்ப பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் கடலில் புனித நீராட சுற்றுலா போலீசார் தடை விதித்தனர். மழை தொடர்ந்து பெய்து கொண்டிருந்த போதும் சுற்றுலா பயணிகளும், அய்யப்ப பக்தர்களும் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் குடை பிடித்தபடி சுற்றுலா தலங்களை சுற்றி பார்த்தனர். கொட்டும் மழையிலும் சுற்றுலா பயணிகளும், அய்யப்ப பக்தர்களும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்துவிட்டு சென்றனர்.

    மழை பெய்து கொண்டிருந்தபோதும் சுற்றுலா பயணிகளும், ஐயப்ப பக்தர்களும் மழையில் நனைந்தபடியும், குடைபிடித்தபடியும் கன்னியாகுமரியில் உள்ள மற்ற சுற்றுலா தலங்களை சுற்றி பார்வையிட்டனர். இதனால் காந்திநினைவு மண்டபம், காமராஜர் மணி மண்டபம், மியூசியம், அரசு அருங்காட்சியகம், கலங்கரை விளக்கம், சுற்றுச்சூழல் பூங்கா உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    கன்னியாகுமரியில் இன்று காலையில் திடீர் என்று மழை பெய்தது. இதனால் கடல் சீற்றமாகவும், கொந்தளிப்பாகவும் காணப்பட்டது. இதனால் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இன்று காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து தொடங்கப்படவில்லை. மழை நின்று, கடல் சீற்றமும் தணிந்த பிறகு தான் படகு போக்குவரத்து தொடங்கப்படும் என்று பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

    இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் கன்னியாகுமரி, சின்னமுட்டம், வாவத்துறை, கோவளம், கீழமணக்குடி, மணக்குடி போன்ற கடற்கரை கிராமங்களிலும் மழையின் காரணமாக கடல் சீற்றமாக காணப்பட்டது.

    இங்கு சுமார் 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழும்பி வீசின. இதனால் இன்று காலை கன்னியாகுமரியில் இருந்து வட்டக் கோட்டைக்கு உல்லாச படகு சவாரி நடத்தப்படவில்லை. 

    • விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள வங்க கடல் பகுதி நீர்மட்டம் தாழ்ந்து காணப்பட்டது.
    • 1 மணி நேரம் தாமதமாக காலை 9 மணிக்கு விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது.

    கன்னியாகுமரி:

    அமாவாசை தினம் என்பதால் கன்னியாகுமரியில் ஒரு புறம் கடல் சீற்றமாகவும், கொந்தளிப்பாகவும் காணப்படுகிறது.

    இன்னொரு புறம் கடல் உள்வாங்கி காணப்படுகிறது. இதனால் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள வங்க கடல் பகுதி நீர்மட்டம் தாழ்ந்து காணப்பட்டது. அதே வேளையில் இந்திய பெருங்கடல் மற்றும் அரபிக் கடல் பகுதியில் கடல் கொந்தளிப்புடனும் சீற்றமாகவும் காணப்பட்டது. இதனால் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இன்று காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து தொடங்கப்படவில்லை.

    இதற்கிடையில் காலை 9 மணிக்கு கடல் சகஜ நிலைக்கு திரும்பியது. இதைத்தொடர்ந்து 1 மணி நேரம் தாமதமாக காலை 9 மணிக்கு விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது.

    அதன்பிறகு சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று ஆர்வமுடன் பார்த்து வந்தனர். கன்னியாகுமரி முக்கடல் சங்கத்தில் கடல்சீற்றம் காரணமாக சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்க சுற்றுலா போலீசார் தடை விதித்தனர். மேலும் கன்னியாகுமரி, சின்னமுட்டம், வாவத்துறை, கோவளம், கீழமணக்குடி, மணக்குடி போன்ற கடற்கரை கிராமங்களில் கடல் சீற்றமாக காணப்பட்டது.

    இதனால் இந்த கடற்கரை கிராமங்களில் சுமார் 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழும்பி ஆக்ரோஷமாக வீசின. இதனால் இந்த கடற்கரை கிராமங்களில் பெரும்பாலான கட்டுமரம் மற்றும் வள்ளம் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

    • நெரிஞ்சிப்பேட்டை கதவணையில் பராமரிப்பு பணிக்காக தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
    • இதனால் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

    அம்மாபேட்டை:

    காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள செக்கானூர், நெரிஞ்சிப்பேட்டை, கோனேரிப்பட்டி, ஊராட்சி கோட்டை உள்ளிட்ட கதவணை மின் நிலையங்களில் வருடாந்திர பராமரிப்பு பணி வருடத்திற்கு ஒரு முறை ஏப்ரல், மே மாதங்களில் நடப்பது வழக்கம்.

    இந்த வருடம் கடந்த மாதத்தில் ஊராட்சி கோட்டை, கோனேரிப்பட்டி ஆகிய கதவணை மின் நிலையங்களில் பராமரிப்பு நிறைவுற்ற பின் நெரிஞ்சிப்பேட்டை கதவணையில் பராமரிப்பு பணிக்காக தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

    இதனால் ஈரோடு மாவட்டம் நெரிஞ்சிப்பேட்டை மற்றும் சேலம் மாவட்டம் பூலாம்பட்டி ஆகிய ஊர்களுக்கு இடையேயான படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

    தொடர்ந்து 15 நாட்கள் முதல் 20 நாட்கள் வரை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பொதுமக்கள் நெரிஞ்சிப்பேட்டை கதவணை பாலம் வழியாக சுமார் 8 கி.மீ. சுற்றி செல்கின்றனர்.

    மேலும் கதவணையின் மேல் நீரேற்று நிலையம் அமைந்துள்ள பகுதியில் தண்ணீர் வறண்டதால் நீரேற்ற முடியாமல் பொதுமக்களுக்கான குடிநீர் விநியோகம் செய்ய சில நாட்கள் ஆகும் என தெரிகிறது.

    • நெரிஞ்சிப்பேட்டை, கோனேரிபட்டி கதவணை பாலம் வழியாக எட்டு கிலோமீட்டர் சுற்றிச் சென்று வந்த நிலையில் தற்போது படகு போக்கு வரத்து தொடங்கப்பட்டு ள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    • மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மீண்டும் படகு போக்கு வரத்து நிறுத்த வாய்ப்பு உள்ளது.

    அம்மாபேட்டை:

    மேட்டூர் அணைக்கு கடந்த 50 நாட்களுக்கு மேல் நீர்வரத்து அதிகரித்து வந்ததால் கடந்த ஜூலை மாதம் 16-ந் தேதி அணை முழு கொள்ளளவை எட்டியது.

    இதனால் காவிரி ஆற்றில் அணையிலிருந்து உபரிநீர் திறக்கப்பட்டது. இதனால் கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்க ப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

    வெள்ள அபாயம் நிலவியதால் ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அடுத்துள்ள நெரிஞ்சிப்பேட்டைக்கும், சேலம் மாவட்டம், பூலாம்பட்டிக்கும் இடையே காவிரி ஆற்றில் நடைபெற்று வந்த பயணிகள் படகுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது.

    தற்போது ஆற்றில் 40 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்படுவதால் இன்று முதல் படகு போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.

    கடந்த 50 நாட்களாக நெரிஞ்சிப்பேட்டை, கோனேரிபட்டி கதவணை பாலம் வழியாக எட்டு கிலோமீட்டர் சுற்றிச் சென்று வந்த நிலையில் தற்போது படகு போக்கு வரத்து தொடங்கப்பட்டு ள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    மேலும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மீண்டும் படகு போக்கு வரத்து நிறுத்த வாய்ப்பு உள்ளது.

    ×