search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DY Chandrachud"

    • தலைமை நீதிபதி மோடியை அவரது இல்லத்தில் தனிப்பட்ட சந்திப்பிற்காகச் சந்திக்க அனுமதித்தது அதிர்ச்சியளிக்கிறது.
    • மதம் சார்ந்த நிகழ்ச்சியில் வெளிப்படையாக சந்தித்ததை ஏற்றுக்கொள்ள முடியாது.

    உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்து வருபவர் டி.ஒய். சந்திரசூட். டெல்லியில் உள்ள அவரது வீட்டில் நேற்று கணபதி பூஜை நடைபெற்றது. இந்த கணபதி பூஜையில் பிரதமர் மோடி நேரில் சென்று கலந்து கொண்டார்.

    பிரதமர் மோடியை நீதிபதி சந்திரசூட் மற்றும் அவரது மனைவி கல்பனா தாஸ் ஆகியோர் வரவேற்றனர். அப்போது பிரதமர் மோடி மகாராஷ்டிராவினர் அணியும் தொப்பியை அணிந்திருந்தார். அத்துடன் பூஜை செய்து வழிபட்டார். இது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலானது.

    இந்தநிலையில் சமூக ஆர்வலரான பிரசாந்த் பூஷன், பிரதமர் மோடி, உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் வீட்டிற்குச் சென்றது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

    இது தொடர்பாக பிரசாந்த் பூஷன் கூறியதாவது:-

    தலைமை நீதிபதி சந்திரசூட் மோடியை அவரது இல்லத்தில் தனிப்பட்ட சந்திப்பிற்காகச் சந்திக்க அனுமதித்தது அதிர்ச்சியளிக்கிறது. தலைமை நீதிபதி பிரதமர் மோடியை தனிப்பட்ட முறையில் சந்தித்தது ஏற்றுக்கொள்ள முடியாதது. அதுவும் மதம் சார்ந்த நிகழ்ச்சியில் வெளிப்படையாக சந்தித்ததை ஏற்றுக்கொள்ள முடியாது.

    இந்த சந்திப்பு குடிமக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் பொறுப்பு மற்றும் அரசமைப்புச் சட்டத்தின் வரம்புகளுக்குள் அரசு செயல்படுவதை உறுதி செய்யும் பொறுப்பில் உள்ள நீதித்துறைக்கு மிக மோசமான சமிக்ஞையை அனுப்புகிறது. அதனால்தான் நிர்வாகத்திற்கும் நீதித்துறைக்கும் இடையே இடைவெளி இருக்க வேண்டும். எனது பார்வையில் இந்த சந்திப்பு நீதிபதிகளுக்கான விதிமுறையை மீறியதாகவும்.

    இவ்வாறு பிரசாந்த் பூஷன் தெரிவித்துள்ளார்.

    • பட்டு நூலினால் ஆன பொருட்களையும், தோல் பொருட்களையும் வாங்குவது இல்லை
    • பிரியங்கா, மாஹி ஆகியோரை அவர்கள் மகள்களாக தத்தெடுத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

    உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தான் சமீபத்தில் சைவமாக மாறியுள்ளதகவும் மாறியதற்கான அதற்கான காரணத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். நேற்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அந்த வளாகத்தில் நரம்பியல் பிரச்சனை கொண்டவர்கள் தொடங்கிய கேன்டீனை திறந்து வைத்து சந்திரசூட் உரையாற்றினார்.

    அப்போது பேசிய அவர், எனக்குப் பிரியங்கா, மாஹி என்ற இரண்டு மாற்றுத்திறனுடைய குழந்தைகள் இருக்கின்றனர். நான் செய்யும் அனைத்து விஷயங்களுக்கும் அவர்கள் எனக்கு இனஷ்பிரேஷனாக உள்ளனர்.

     

    சமீபத்தில் நான் சைவமாக மாறினேன். எனது மகள் என்னிடம் வந்து, நாம் எதற்கும் கொடுமை செய்யாத வாழ்க்கையை வாழவேண்டும் என்று கூறியதே அதற்குக் காரணமாகும் என்று தெரிவித்தார், மேலும், தானும் தனது மனைவியும் பட்டு நூலினால் ஆன பொருட்களையும், தோல் பொருட்களையும் வாங்குவது இல்லை என்றும் சந்திரசூட் தெரிவித்தார்.

    சந்திரசூட் - ராஷ்மி தம்பதிக்கு அபினவ், சிந்தன் என்ற மகன்கள் உள்ள நிலையில் பிரியங்கா, மாஹி ஆகியோரை அவர்கள் மகள்களாக தத்தெடுத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது. 

    • தனது உரையில் இந்திய நீதித்துறையை மோடி புகழ்ந்து பேசினார்
    • தீர்ப்புகள் ஆங்கிலத்தில் இருந்ததால் அனைவராலும் புரிந்து கொள்ள முடியவில்லை

    இந்தியாவின் 77வது சுதந்திர தினத்தையொட்டி இந்திய பிரதமர் நரேந்திர மோடி, புது டெல்லியிலுள்ள செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

    2014ல் முதல் முறை பிரதமராக பதவியேற்றதில் தொடங்கி இவ்வருடம் 10-வது முறையாக பிரதமர் மோடி தேசிய கொடி ஏற்றி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    கொடியேற்றம் முடிந்ததும் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதன் பிறகு பிரதமர் மோடி சுதந்திர தின உரையாற்றினார். சுதந்திர தின விழாவில் கலந்து கொள்ள வந்திருந்த முக்கிய விருந்தினர்கள் மற்றும் பொது மக்கள் உரையை கேட்டனர்.

    அப்போது பேசிய பிரதமர் மாநில மொழியில் பாடத்திட்டங்களை அமைப்பது குறித்து தனது அரசு எடுத்து வரும் முயற்சிகள் குறித்து தெரிவித்தார். அத்துடன் நில்லாமல் இந்திய நீதித்துறையை புகழ்ந்து பேசினார். அப்போது பிரதமர் கூறியதாவது:

    "மாநில மொழிகளின் முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது. தீர்ப்புகளில் உள்ள செயலாக்க பாகம் (operating part) இனி மாநில மொழிகளிலும் மக்களுக்கு கிடைக்கும். இதற்காக, இந்த பணியை மேற்கொண்ட உச்ச நீதிமன்றத்தை நான் மிகவும் பாராட்டுகிறேன்," இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இதனை கேட்டதும் விருந்தினர்களில் ஒருவராக அமர்ந்திருந்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், மனம் நெகிழ்ந்து மோடிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அவரை நோக்கி கும்பிட்டார். பின்னர் இது குறித்து பேசிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறியதாவது:

    "ஜனவரி 26 குடியரசு தினத்தையும், உச்ச நீதிமன்றத்தின் தொடக்க நாளான ஜனவரி 28-ஐ கொண்டாடும் விதமாகவும் இந்த வருடம் இந்த மொழிபெயர்ப்பு முயற்சி தொடங்கப்பட்டது. இதுவரை 9,423 தீர்ப்புகள் இந்திய மாநில மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. இதில் தமிழ் உட்பட 14 மொழிகள் அடங்கும். உச்ச நீதிமன்றம் தோன்றிய நாளிலிருந்து இதுவரை வழங்கப்பட்ட 35,000 தீர்ப்புகளும் விரைவில் மாநில மொழிகளில் மொழி பெயர்க்கப்படும். தீர்ப்புகள் ஆங்கிலத்தில் இருந்ததனால் 99 சதவீத குடிமக்களுக்கு அவற்றை புரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கவில்லை," இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    மோடியின் பாராட்டும், அதற்கு தலைமை நீதிபதியின் நன்றி தெரிவித்தலும் காண்போரை பெருமையடைய செய்தது. இது சம்பந்தமான வீடியோக்களும், புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன.

    • தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் புதிய நடைமுறையை அமல்படுத்த உத்தரவிட்டுள்ளார்.
    • அவசர வழக்குகளை விசாரிக்க வழக்கம்போல முறையீடு செய்யலாம்.

    புதுடெல்லி :

    சுப்ரீம் கோர்ட்டில் ரிட், மேல்முறையீடு, இடையீட்டு மற்றும் பொது நல மனுக்கள் தாக்கல் செய்யப்படும்போது ஆன்லைன் மூலம் முதலில் பதிவாளருக்கு அனுப்ப வேண்டும். அவர் இதனை பரிசீலனை செய்து தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைக்கிறார்.

    இதனை அவர் ஆய்வு செய்து, வழக்குகளை எந்த அமர்வு விசாரிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு பதிவாளருக்கு உத்தரவிடுவார். இந்த நடைமுறை காலதாமதமாகும்போது மனுதாரர் சார்பில் ஆஜராகும் வக்கீல்கள் தலைமை நீதிபதி அமர்வில் ஆஜராகி தங்களது மனுவை அவசரமாக விசாரிக்க கோரிக்கை விடுக்கலாம்.

    இதற்கிடையே புதிதாக பொறுப்பேற்றுள்ள தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் நேற்று புதிய நடைமுறையை அமல்படுத்த உத்தரவிட்டுள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-

    வாரத்தில் திங்கள், செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் தாக்கல் செய்யப்படும் வழக்குகளை அடுத்த வாரம் திங்கட்கிழமைக்கு விசாரணைக்கு பட்டியலிட வேண்டும்.

    இதேபோல் வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் தாக்கல் செய்யப்படும் வழக்குகளை அடுத்த வாரம் வெள்ளிக்கிழமைக்கு விசாரணைக்கு தானாக பட்டியலிடும் வகையிலும் ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

    இந்த நடைமுறையை செயல்படுத்துமாறு பதிவாளர் அலுவலகத்துக்கு உத்தரவிட்டு உள்ளேன். அவசர வழக்குகளை விசாரிக்க வழக்கம்போல முறையீடு செய்யலாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×