search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Delhi Rains"

    • டெல்லியில் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
    • இரு நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. கனமழையால் டெல்லியில் வெள்ளம் சூழ்ந்ததால், பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    டெல்லியில் இன்றும், நாளையும் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று மற்றும் நாளை கனமழைக்கான ஆர்ஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதனால் டெல்லியில் இன்னும் இரு நாட்களுக்கு கனமழை தொடரும்.

    இதற்கிடையே, டெல்லியில் பெய்த கனமழை காரணமாக இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை டெல்லியில் 228.1 மி.மீ. அளவு மழை பெய்துள்ளது.

    இந்நிலையில், டெல்லியில் கனமழையில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அளிக்கப்படும் என டெல்லி அரசு அறிவித்துள்ளது.

    • கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.
    • இன்றும், நாளையும் கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

    டெல்லியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. கனமழை காரணமாக டெல்லியில் வெள்ளம் சூழ்ந்ததால், பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில், டெல்லியில் இன்றும், நாளையும் கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று (ஜூன் 30) மற்றும் நாளை (ஜூலை 1) கனமழைக்கான ஆர்ஞ்சு அலர்ட் விடுக்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக டெல்லியில் இன்னும் இரண்டு நாட்களுக்கு கனமழை தொடரும்.

    டெல்லியில் பருவமழை தொடங்கிய முதல் நாளில் பெய்த கனமழை காரணமாக இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த வெள்ளிக் கிழமை மட்டும் டெல்லியில் 228.1mm அளவு மழை பெய்துள்ளது. கடந்த 1936 ஆண்டுக்கு பிறகு, ஒரே நாளில் பெய்த அதிகனமழை இது ஆகும். 

    • குஜராத் மாநிலத்திற்கு கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • ராஜ்கோட் விமான நிலையத்தின் கூரை கனமழையால் இடிந்து விழுந்தது

    வடமாநிலங்களில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், தொடர் கனமழை காரணமாக நேற்று டெல்லி விமான நிலையத்தின் முதலாவது முனையத்தில் மேற்கூரை இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் ஒருவர் மரணமடைந்தார். 8 பேர் காயமடைந்தனர்.

    இந்த சோகம் நீங்காத நிலையில், குஜராத் மாநிலம் ராஜ்கோட் விமான நிலையத்தின் கூரை கனமழையால் இடிந்து விழுந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

    இன்று குஜராத் மாநிலத்திற்கு கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • 8 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • பல்வேறு பகுதிகளிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

    டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. தொடர் கனமழை காரணமாக டெல்லி முழுக்க தண்ணீர் குளம் போன்று தேங்கி நிற்கிறது. வாகனங்கள் நீரில் மூழ்கின.

     


    கனமழை காரணமாக டெல்லி விமான நிலையத்தின் முதலாவது முனைய மேற்கூரை இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழந்த நிலையில், 8 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் காரணமாக டெல்லி விமான நிலையத்தின் முதலாவது முனைய செயல்பாடுகள் நிறுத்திவைக்கப்பட்டன.


    இதேபோன்று டெல்லியை சுற்றியுள்ள ஜங்புறா, ஆர்.கே. ஆஷ்ரம் உள்பட பல்வேறு பகுதிகளிலும் கனமழை காரணமாக வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.


    டெல்லியின் வசந்த விகார் பகுதியில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த கட்டிடத்தில் பணியாற்றிய பணியாளர்கள் அங்கிருந்த பள்ளத்தில் விழுந்தனர். இவர்களை மீட்கும் பணிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டனர்.  

    டெல்லி முழுக்க கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருக்கிறது. சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் சில பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    • தீயணைப்பு துறையினர் விமான நிலையத்திற்கு விரைந்தனர்.
    • மேற்கூரை இடந்து விழுந்த விபத்தில் நான்கு பேர் காயம்.

    டெல்லியின் பல்வேறு பகுதிகளில் நேற்று (ஜூன் 27) காலை முதலே மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக டெல்லியில் ஏராளமான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது.

    இந்த நிலையில், தொடர் கனமழை காரணமாக டெல்லி விமான நிலையத்தின் முதலாவது முனையத்தில் மேற்கூரை இடிந்து விழந்தது. இன்று காலை அரங்கேறிய இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விமான நிலையத்திற்கு விரைந்தனர்.


    மூன்று தீயணைப்பு துறை வாகனங்கள் விமான நிலையத்தை சென்றடைந்தன. முதற்கட்ட தகவல்களின் படி விமான நிலைய மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் நான்கு பேர் காயமுற்றனர். காயமுற்றவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    கடந்த சில வாரங்களாக டெல்லியில் கடுமையான வெப்பம் நிலவி வந்த நிலையில், கனமழை காரணமாக அங்கு குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.


    வாட்டி வதத்த வெயில் காரணமாக கடந்த சில வாரங்களாக தண்ணீர் பஞ்சத்தில் டெல்லி சிக்கியது. தற்போது டெல்லி முழுக்க கனமழை காரணமாக தண்ணீர் தேங்கியுள்ள சம்பவம் அரங்கேறி உள்ளது. 

    • டெல்லியில் இன்று காலை பல்வேறு இடங்களில் மழை
    • கனமழை காரணமாக சாலையில் தண்ணீர் தேங்கியது

    தென்மேற்கு பருவமழை காரணமாக இந்தியாவின் வடமாநிலங்களில் மழை பெய்து வருகிறது. இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களில் கனமழை பெய்தததால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

    நேற்று உத்தரகாண்ட் மாநிலத்தில் திடீர் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 4 பேர் பலியான நிலையில், 10-க்கும் மேற்பட்டோர் மாயமானார்கள். அவர்களை தேடும்பணி நடைபெற்று வருகிறது.

    கடந்த மாதம் யமுனை நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. டெல்லியில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் ஓடியதால், டெல்லி நகருக்குள் மழை வெள்ளம் புகுந்தது. அதன்பின் வெள்ளம் வடிந்து இயல்பு நிலை திரும்பியது.

    இந்த நிலையில் இன்று காலை பெய்த கனமழையால் பெரும்பாலன இடங்களில் மழைநீர் சூழ்ந்தது. பதார்புர் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே வெள்ளம் சாலையில் தேங்கியது. வசந்த் விஹார் பகுதியிலும் மழை வெள்ளம் சாலையில் ஓடியது. இதனால் வாகனத்தில் செல்பவர்கள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

    • யமுனை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு டெல்லியின் பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
    • வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பள்ளிகள், ஆன்லைன் வகுப்புக்கு ஏற்பாடு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது.

    புதுடெல்லி:

    வடமாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நீர்நிலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் கரையோர பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன.

    யமுனை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு தலைநகர் டெல்லியின் பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. டெல்லியில் சாலை எங்கும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. ஆங்காங்கே சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், டெல்லியில் யமுனை நதியை ஒட்டிய பகுதிகளில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் ஜூலை 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் மூடப்படும் என கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து பள்ளிகளும் ஆன்லைன் வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • ஆங்காங்கே சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
    • அடுத்த 4 முதல் 5 நாட்களுக்கு டெல்லியில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்

    புதுடெல்லி:

    வடமாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நீர்நிலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் கரையோர பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன.

    யமுனை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு தலைநகர் டெல்லியின் பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்நதுளள்து. டெல்லியில் சாலை எங்கும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. ஆங்காங்கே சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

    எனவே, கான் மார்க்கெட், தீன் மூர்த்தி ரவுண்ட்-அபவுட், ஜிஜிஆர்-பிடிஆர், ஏ-பாயிண்ட் டு டபிள்யூ-பாயிண்ட், கம்லா எக்ஸ்பிரஸ் பில்டிங், ஆண்ட்ரூஸ் கஞ்ச், கான்பூர் டி-பாயின்ட், பைரன் மார்க் ரயில்வே பாலத்தின் கீழ் உள்ள வழித்தடம் உள்ளிட்ட சாலைகளில் பொதுமக்கள் பயணம் செய்வதை தவிர்க்கும்படி போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தி உள்ளது.

    இதற்கிடையே அடுத்த 4 முதல் 5 நாட்களுக்கு டெல்லியில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் டெல்லி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியுள்ளது.

    • தென்மேற்கு பருவமழையால் வடஇந்தியாவில் பேய்மழை
    • இமாச்சல பிரதேசம், டெல்லியில் எங்குபார்த்தாலும் வெள்ளம்

    தென்மேற்கு பருவமழை காரணமாக வட இந்தியாவில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லி, உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், உத்தர பிரதேசம், ஹரியானா, ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களில பேய்மழை பெய்தது.

    இதனால் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. அணைகளிலும் நீர்மட்டம் ஜெட்வேகத்தில் உயர்ந்துள்ளது. ஹரியானா மாநிலம் யமுனா நகரில் அமைந்துள்ள ஹத்னிகுண்டு தடுப்பணையை அம்மாநில அரசு முன்னெச்சரிக்கை காரணமாக திறந்து விட்டது.

    இதனால் டெல்லி மாநிலத்தில் யமுனை ஆற்றில் நீர்மட்டம் அபாய கட்டத்தை தாண்டியுள்ளது. நேற்று மாலை 205.33 மீட்டரை தாண்டியது. இதனால் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் பழைய ரெயில் பாலம் அருகில் 206.28 மீட்டரை தாண்டியது. இன்று மதியம் 206.65 மீட்டரை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று அளித்த பேட்டியில் ''வெள்ள அபாயம் மோசமான நிலையில்தான் உள்ளது. ஆனால், அரசு எந்தவொரு சூழ்நிலையையும் சமாளிக்க தயாராக உள்ளது. 206 மீட்டரை தாண்டும்போது மக்களை வெளியேற்றும் பணி தொடரும்'' என்றார்.

    கிழக்கு டெல்லியின் சில இடங்களில் நேற்றிரவில் இருந்து அதிகாரிகள் மக்களை வெளியேற்றி வருகின்றனர். அதிகாரி ஒருவர் ''பாதிக்கப்படும் இடங்களில் வசிக்கும் மக்கள் மட்டும் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்'' என்றார்.

    ஹரியானா மாநிலம் 3 லட்சம் கனஅடி நீரை திறந்து விடுவதால் யமுனை ஆற்றில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. வழக்கமாக 352 கனஅடி நீர்தான திறந்து விடப்படும். தற்போது அதிகமாக திறந்து விடப்ப்டுள்ளது. தடுப்பணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் இரண்டு அல்லது மூன்று நாட்களில் டெல்லியை வந்தடையும்.

    ஏற்கனவே, வெள்ள அபாயம் எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், 16 கட்டுப்பாட்டு அறைகளையும் திறந்து கண்காணித்து வருகிறது.

    உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், இமாசல பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், டெல்லி மாநிலங்களில் நீர்ப்பிடிப்பு பகுதிகளை உள்ளிடக்கியது யமுனை ஆறு. டெல்லியில் சுமார் 41 ஆயிரம் மக்கள் தாழ்வான பகுதியில் வசித்து வருகிறார்கள்.

    யமுனை ஆற்றில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நீர் அளவு (206.38) அபாயம் கட்டத்தை எட்டியது. 2019-ல் ஆகஸ்ட் 18 மற்றும் 19-ந்தேதிகளில் 8.28 லட்சம் கனஅடி நீர் வரத்தால் 206.6 மீட்டர் அளவை எட்டியது. 2013-ல் 207.32 மீட்டரை தொட்டது.

    • சிம்லா மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையால் அங்குள்ள சப்பா மின் நிலையம் வெள்ளக் காடாக காட்சியளிக்கிறது.
    • இமாச்சல பிரதேசத்தில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக அளவில் மழை பெய்துள்ளது.

    சிம்லா:

    வட மாநிலங்களில் தற்போது பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த 2 நாட்களாக பெய்து வரும் பலத்த மழையால் பல மாநிலங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.

    குறிப்பாக இமாச்சல பிரதேசத்தை மழை வெள்ளம் புரட்டி போட்டுள்ளது. இமாச்சல பிரதேச மாநிலத்தில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக பல மாவட்டங்கள் வெள்ளக் காடாக காட்சியளிக்கின்றன.

    தொடர் மழை காரணமாக இமாச்சல பிரதேசத்தில் உள்ள முக்கிய ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. குறிப்பாக பியாஸ் ஆற்றில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தால் மண்டி மாவட்டத்தில் உள்ள பஞ்ச வக்த்ரா கோவில் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது.

    சிம்லா மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையால் அங்குள்ள சப்பா மின் நிலையம் வெள்ளக் காடாக காட்சியளிக்கிறது.

    குலு மாவட்டத்தில் தசோல பகுதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கார்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதியும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.

    சட்லஜ் ஆற்றில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் ஆற்றின் இரு பகுதிகளையும் இணைக்கும் இரும்பு பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.

    சிம்லாவில் காற்று, மழை காரணமாக ஒரு வீட்டின் மீது மரம் சரிந்து விழுந்தது. இதனால் வீடு இடிந்தது. அந்த இடிபாடுகளில் ஒருவர் சிக்கிக் கொண்டார். இதையடுத்து மீட்பு படையினர் விரைந்து சென்று அவரை மீட்டனர்.

    கனமழையால் இமாச்சல பிரதேசத்தின் பல மாவட்டங்களை இணைக்கும் முக்கிய சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி 700-க்கும் மேற்பட்ட சாலைகள் மூடப்பட்டு உள்ளன. அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. நிலச்சரிவில் ஒரு கிராமமே மண்ணோடு மண்ணாக புதைந்து போனது.

    பல இடங்களில் மின் கம்பங்கள் மீது மரங்கள் முறிந்து விழுந்து உள்ளதால் மின் இணைப்பு மற்றும் தொலை தொடர்பு சேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளன. இமாச்சல பிரதேச மாநிலம் உன்னா பகுதியில் அதிக பட்சமாக இதுவரை 22.8 செ.மீ. அளவுக்கு மழை கொட்டி உள்ளது.

    சோலன் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 13.5 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. இமாச்சல பிரதேசத்தில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக அளவில் மழை பெய்துள்ளது.

    கங்ரா, சம்பா, குலு, மண்டி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. சோலன், சிம்லா, சிர்மாவூர் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    டெல்லியில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி உள்ளது. இடைவிடாது கொட்டித் தீர்த்த கன மழையால் டெல்லியில் பல்வேறு சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

    பல இடங்களில் மத்திய மந்திரிகளின் வீடுகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    கிரேட்டர் கைலாஸ், பெரோசா சாலை, ரபீக் பார்க், வோதி ஸ்டேட் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் மூழ்கடித்தது. குடியிருப்பு பகுதிகளையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி உளளனர். ஐ.ஓ.டி. பகுதியில் குளம் போல் மழை நீர் தேங்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    கனமழை காரணமாக டெல்லி சுந்தர் நகர் மார்க்கெட் பகுதியில் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்தது.ரோகினி பகுதியில் சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்த பகுதியில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.

    டெல்லி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் இன்றும் கன மழை பெய்தது. கன மழையால் அரியானா மாநிலம் குருகிராமில் போக்குவரத்து முடங்கி உள்ளது. டெல்லி-மனேசர் நெடுஞ்சாலையில் வாகனங்கள் நீண்ட தொலைவுக்கு அணிவகத்து நிற்கின்றன. குருகிராமில் பல பகுதிளில் தண்ணீர் தேங்கியுள்ளது. அங்கு மின்சாரமும் தடைபட்டுள்ளது.

    டெல்லியில் 58 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அடுக்குமாடி குடியிருப்பின் கூரை இடிந்து விழுந்து பலியானார். பிரகதி மைதான சுரங்க பாதையில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் சுரங்கபாதை மூடப்பட்டு அங்கு போக்கு வரத்து தடை செய்யப்பட்டுள்ளது. யமுனா நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    பலத்த மழை காரணமாக டெல்லி, நொய்டா குரு கிராமில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது.

    வெள்ள மீட்பு பணிகள் தொடர்பாக அம்மாநில அதிகாரிகளுடன் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஆலோசனை நடத்தினார்.

    அரியானா மாநிலத்தில் மழை வெள்ளம் பலத்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அம்மாநில முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார் தனது நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளார். மீட்பு பணிகள் தொடர்பாக அவர் அதிகாரிகளின் அவசர கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

    ஜம்மு- காஷ்மீர் மாநிலத்திலும் பருவ மழை தீவிரமாக பெய்து வருகிறது. இங்கு பெய்த கன மழை காரணமாக உதம்பூர் பகுதியில் உள்ள பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.

    குஜராத் மாநிலத்திலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இங்குள்ள கடியா, தோரா பகுதியில் உள்ள நீர் வீழ்ச்சிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. மலைப் பகுதிகளில் அதிக அளவில் மழை பெய்து வருகிறது.

    உத்தரகாண்ட் மாநிலத்திலும் பருவ மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் அங்கு சாலைகள் உள்ளிட்ட பல இடங்களிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ராம்கர் என்ற பகுதியில் சென்ற பஸ் வெள்ளத்தில் சிக்கியது. இதன் காரணமாக அதில் இருந்த பயணிகள் ஜன்னல் வழியாக வெளியே குதித்து உயிர் தப்பினார்கள்.

    உத்தரகாண்ட் மாநிலத்தில் 8 மாவட்டங்களில் இன்னும் 2 நாட்களுக்கு கன மழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.

    கனமழை காரணமாக வட மாநில நதிகளில் வரலாறு காணாத வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கார்கள், வாகனங்கள், வீடுகள் என அனைத்துமே வெள்ளத்தில் அடித்து செல்லப்படுகின்றன. கங்கை நதியிலும் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.

    வட மாநிலங்களில் பெய்த மழைக்கு இதுவரை 18 பேர் பலியாகி உள்ளனர்.

    பஞ்சாப் மாநிலத்தின் மால்வா மற்றும் டோபா பகுதியில் பலத்த மழை காரணமாக கால்வாய்கள், சாலைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.

    பஞ்சாப் மாநிலத்தில் 5 நதிகளில் வெள்ளம் பெருக் கெடுத்து ஓடுகிறது. வயல்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. நெல், பருத்தி ஆகியவை சேதம் அடைந்துள்ளன. அங்கு மீட்பு பணியில் ஈடுபட முதல்-மந்திரி பகவந்த் மான் உத்தர விட்டுள்ளார்.

    இதே போல் ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, கோவா, மேற்கு வங்காளம், சிக்கிம், அசாம், மேகாலயா, அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர் ஆகிய மாநிலங்க ளிலும் மழை பெய்து வருகிறது. இந்த பகுதிகளில் இன்னும் 3 முதல் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    நாடு முழுவதும் நேற்று இயல்பை விட 81 சதவீதம் அதிக மழை பெய்துள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் முதல்-மந்திரிகளுடன் மத்திய மந்திரி அமித்ஷா ஆலோசனை நடத்தினார். அங்கு மீட்பு பணிகளுக்கு உதவ பேரிடர் மீட்பு படையினரும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

    • அடுத்த இரண்டு நாட்கள் கனமழை பெய்யும் என எச்சரிக்கை
    • இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர்

    பருவமழை கொட்டித்தீர்த்ததன் காரணமாக இமாச்சல பிரதேசத்தில் எங்கு பார்த்தாலும் வெள்ளாகாடாக காட்சி அளிக்கின்றன. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பாலங்கள் அடித்து செல்லப்பட்டுள்ளன. வாகனங்கள் இழுத்துச் செல்லப்பட்டன. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இரண்டு நாள் மழையில் இமாச்சல பிரதேசத்தில் மட்டும் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இந்த நிலையில் கனமழை அச்சுறுத்தல், வெள்ளத்தால் மாநிலம் தத்தளித்து வரும் நிலையில், மக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க அம்மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ செய்தில் ''அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் யாரும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம். நாங்கள் 1100, 1070, 1077 ஆகிய மூன்று உதவி எண்களை அறிவித்துள்ளோம்.

    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, வெள்ளம் சூழ்ந்த பகுதியில் சிக்கியிருக்கும் நிலை ஏற்பட்டால் உதவிக்கு இந்த எண்களை அணுகலாம். உங்களுக்காக நான் எந்த நேரமும் உதவி செய்ய தயாராக இருப்பேன் எனத் தெரிவித்துள்ளார்.

    மேலும், எம்.எல்.ஏ.-க்கள் தங்களுக்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் முகாம் அமைத்து மக்களுக்கு உதவ கேட்டுக்கொண்டள்ளார்.

    • டெல்லியில் 24 மணி நேரத்தில் 153 மில்லி மீட்டர் மலை
    • இமாச்சல பிரதேசத்தில் பல இடங்களில் நிலச்சரிவு

    தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக டெல்லி உள்ளிட்ட வடஇந்திய மாநிலங்களிலும் மழை பெய்து வருகிறது. நேற்று கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் டெல்லி, இமாச்சால பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், உத்தரகாண்ட், அரியானா மாநிலங்கள் வெள்ளத்தில் தத்தளித்தன. குறிப்பாக டெல்லியில் சாலைகள் ஆறுபோல் காட்சியளித்தன. எங்குபார்த்தாலும் வெள்ளமாக காட்சியளித்தன.

    கெஜ்ரிவால் அரசு மீது மக்கள் அதிருப்தி தெரிவிக்க, ஞாயிறுக்கிழமை அரசு ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கவில்லை. மழை வெள்ளத்தை வெளியேற்றும் பணியை துரிதப்படுத்த கெஜ்ரிவால் இந்த நடவடிக்கையை மேற்கொண்டார்.

    டெல்லி மாநிலம் 24 மணி நேரத்தில் 153 மில்லி மீட்டர் மழையை பெற்றுள்ளது. இது 1982-ம் ஆண்டுக்குப்பின் ஒரே நாளில் பெய்ய அதிகனமழை ஆகும். ஜூலை 15-ந்தேதி வரை கனமழை மற்றும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இமாச்சல பிரதச மாநிலத்தில் சுற்றுலா இடங்களில் திடீரென வெள்ளப்பெருக்கு காரணமாக கார் வெள்ளத்தில் அடித்துச் சென்ற காட்சியை பார்க்க முடிந்தது. பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

    ஜம்மு-காஷ்மீரில் திடீரென ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட, மக்கள் சிக்கி தவித்தனர். பின்னர் மீட்புப்படையினர் அவர்கள் மீட்டனர். இந்திய வானிலை மையம் டெல்லி, அரியானா, இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், ராஜஸ்தான், பஞ்சாப், ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களில் கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது.

    டெல்லியில் 58 வயது பெண் ஒருவர், வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து உயிரிழந்தார். ராஜஸ்தானில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். உத்தர பிரதேசத்தில் வீடிந்து 6 வயது மகளுடன் பெண் ஒருவர் பலியானார்.

    ஜம்மு-காஷ்மீர் பூஞ்ச் மாவட்டத்தில் இரண்டு ராணுவ வீரர்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தனர்.

    மோசமான வானிலை காரணமாக கடந்த மூன்று நாட்களாக அமர்நாத் யாத்திரை நிறுத்தப்பட்டது.

    ஸ்ரீநகர்- ஜம்மு நெடுஞ்சாலையில் சாலை துண்டிக்கப்பட்டு 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்று போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

    இமாச்சல பிரதேச மாநிலத்தின் சிம்லா, சிமாயுர், லஹாயுல், ஸ்பிட்டி, சம்பா, சோலன் பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இங்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.


    இதற்கிடையே கேரள மற்றும் கர்நாடகாவிலும் கனமழை பெய்துள்ளது. கேரளாவில் கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசரகோடு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    ×