search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SLvIRE"

    • இலங்கை அணி முதல் இன்னிங்சில் 704 ரன்கள் எடுத்தது.
    • குசால் மெண்டிஸ், நிசான் மதுஷ்கா இரட்டை சதமடித்தனர்.

    காலே:

    இலங்கை-அயர்லாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி காலேயில் நடந்தது. டாஸ் வென்ற அயர்லாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

    முதலில் ஆடிய அயர்லாந்து 492 ரன்னில் ஆல் அவுட்டானது. பார் ஸ்டிர்லிங் 103 ரன்னில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். கர்டிஸ் கேம்பெர் 111 ரன்னில் வெளியேறினார். கேப்டன் பால்பிரின் 95 ரன்னில் அவுட்டானார். டெஸ்ட் போட்டியில் அயர்லாந்து 400 ரன்களுக்கு மேல் எடுப்பது இது முதல்முறையாகும்.

    இலங்கை சார்பில் சுழற்பந்து வீச்சாளர் பிரபாத் ஜெயசூர்யா 5 விக்கெட்டும், விஷ்வா பெர்னாண்டோ, அசிதா பெர்னாண்டோ தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 704 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. நிசான் மதுஷ்கா, குசால் மெண்டிஸ் இரட்டை சதமடித்தனர். மதுஷ்கா 205 ரன்னிலும், குசால் மெண்டிஸ் 245 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கருணரத்னே 115 ரன்னில் அவுட்டானார். மேத்யூஸ் சதமடித்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இதையடுத்து, 212 ரன்கள் பின்தங்கிய நிலையில், அயர்லாந்து அணி இரண்டாவது இன்னிங்சை ஆடியது. 5ம் நாள் ஆட்டம் நேற்று நடந்தது. இலங்கை அணியின் பந்துவீச்சு துல்லியமாக இருந்ததால் விக்கெட்டுகள் மளமளவென விழுந்தன.

    ஹாரி டெக்ட்ர் அரை சதமடித்து 85 ரன்னில் ஆட்டமிழந்தார். பால்பிரின் 46 ரன்னில் வெளியேறினார்.

    இறுதியில், அயர்லாந்து 2வது இன்னிங்சில் 202 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 10 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அத்துடன் டெஸ்ட் தொடரையும் 2-0 என கைப்பற்றியது.

    ஆட்டநாயகன் விருது பிரபாத் ஜெயசூர்யாவுக்கும், தொடர் நாயகன் விருது குசால் மெண்டிசுக்கும் வழங்கப்பட்டது.

    • அயர்லாந்து முதல் இன்னிங்சில் 492 ரன்னில் ஆல் அவுட்டானது.
    • இலங்கை அணி 3 விக்கெட்டுக்கு 704 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது.

    காலே:

    இலங்கை-அயர்லாந்து அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலேயில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற அயர்லாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

    முதலில் ஆடிய அயர்லாந்து 492 ரன்னில் ஆல் அவுட்டானது. பார் ஸ்டிர்லிங் 103 ரன்னில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். கர்டிஸ் கேம்பெர் 111 ரன்னில் வெளியேறினார். கேப்டன் பால்பிரின் 95 ரன்னில் அவுட்டானார். லார்கன் டக்கெர் 80 ரன்னுடனும் எடுத்தனர்.

    டெஸ்ட் போட்டியில் அயர்லாந்து 400 ரன்களுக்கு மேல் எடுப்பது இதுவே முதல்முறையாகும்.

    இலங்கை சார்பில் சுழற்பந்து வீச்சாளர் பிரபாத் ஜெயசூர்யா 5 விக்கெட்டும், விஷ்வா பெர்னாண்டோ, அசிதா பெர்னாண்டோ தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, இலங்கை அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்கள் கருணரத்னே, நிஷான் மதுஷ்கா ஆகியோர் நிதானமாக ஆடி சதமடித்தனர். முதல் விக்கெட்டுக்கு 228 ரன்கள் சேர்த்த நிலையில் கருணரத்னே 115 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய குசால் மெண்டிஸ் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார்.

    மூன்றாம் நாள் முடிவில் இலங்கை அணி ஒரு விக்கெட்டுக்கு 357 ரன்கள் எடுத்துள்ளது. மதுஷ்கா 149 ரன்னும், குசால் மெண்டிஸ் 83 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இந்நிலையில், நான்காம் நாள் ஆட்டம் நேற்று நடந்தது. 2வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மதுஷ்கா, குசால் மெண்டிஸ் 268 ரன்கள் சேர்த்தது. மதுஷ்கா இரட்டை சதமடித்து 205 ரன்னில் அவுட்டானார். அவரைத் தொடர்ந்து குசால் மெண்டிஸ் இரட்டை சதமடித்து அசத்தினார். அவர் 245 ரன்னில் ஆட்டமிழந்தார். மேத்யூஸ் சதமடித்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இறுதியில், இலங்கை அணி 3 விக்கெட்டுக்கு 704 ரன்கள் எடுத்து, டிக்ளேர் செய்தது.

    இதையடுத்து, 212 ரன்கள் பின் தங்கிய நிலையில், அயர்லாந்து அணி இரண்டாவது இன்ன்னிங்சை தொடர்ந்தது.

    நான்காம் நாள் முடிவில் அயர்லாந்து 2 விக்கெட்டுக்கு 54 ரன்கள் எடுத்துள்ளது.

    இன்று இறுதி நாள் என்பதால் அயர்லாந்து அணியின் விக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கை வெற்றிபெற போராடுவது உறுதி.

    • அயர்லாந்து முதல் இன்னிங்சில் 492 ரன்னில் ஆல் அவுட்டானது.
    • மூன்றாவது நாள் முடிவில் இலங்கை அணி ஒரு விக்கெட்டுக்கு 357 ரன் எடுத்துள்ளது.

    காலே:

    இலங்கை-அயர்லாந்து அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலேயில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற அயர்லாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

    முதலில் ஆடிய அயர்லாந்து 492 ரன்னில் ஆல் அவுட்டானது. பார் ஸ்டிர்லிங் 103 ரன்னில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். கர்டிஸ் கேம்பெர் 111 ரன்னில் வெளியேறினார். கேப்டன் பால்பிரின் 95 ரன்னில் அவுட்டானார். லார்கன் டக்கெர் 80 ரன்னுடனும் எடுத்தனர்.

    டெஸ்ட் போட்டியில் அயர்லாந்து 400 ரன்களுக்கு மேல் எடுப்பது இதுவே முதல்முறையாகும். அத்துடன் இன்னிங்சில் இரு அயர்லாந்து வீரர்கள் சதம் காண்பதும் இதுவே முதல் நிகழ்வாகும்.

    இலங்கை சார்பில் சுழற்பந்து வீச்சாளர் பிரபாத் ஜெயசூர்யா 5 விக்கெட்டும், விஷ்வா பெர்னாண்டோ, அசிதா பெர்னாண்டோ தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, இலங்கை அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்கள் கருணரத்னே, நிஷான் மதுஷ்கா ஆகியோர் நிதானமாக ஆடினர். இருவரும் சதமடித்து அசத்தினர்.

    முதல் விக்கெட்டுக்கு 228 ரன்கள் சேர்த்த நிலையில் கருணரத்னே 115 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய குசால் மெண்டிஸ் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார்.

    மூன்றாம் நாள் முடிவில் இலங்கை அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 357 ரன்கள் எடுத்துள்ளது. மதுஷ்கா 149 ரன்னும், குசால் மெண்டிஸ் 83 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    • டெஸ்ட் போட்டியில் அயர்லாந்து 400 ரன்களுக்கு மேல் எடுப்பது இதுவே முதல்முறையாகும்.
    • ஒரு இன்னிங்சில் அயர்லாந்து வீரர்கள் 2 பேர் சதமடிப்பதும் இதுவே முதல் நிகழ்வாகும்.

    காலே:

    அயர்லாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் இலங்கை அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.

    இதற்கிடையே, இலங்கை-அயர்லாந்து அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலேயில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற அயர்லாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

    முதல் நாள் முடிவில் அயர்லாந்து 4 விக்கெட்டுக்கு 319 ரன்கள் எடுத்தது. கேப்டன் பால்பிரின் 95 ரன்னில் அவுட்டானார். லார்கன் டக்கெர் 78 ரன்னுடனும், கர்டிஸ் கேம்பெர் 27 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இந்நிலையில், 2-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய டக்கெர் 80 ரன்னில் போல்டு ஆனார். காயம் காரணமாக முந்தைய நாளில் பாதியில் வெளியேறிய பால் ஸ்டிர்லிங் மீண்டும் களமிறங்கினார். முதலாவது சதம் அடித்த பார் ஸ்டிர்லிங் 103 ரன்னில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவருடன் இணைந்த கர்டிஸ் கேம்பெர் முதல் சதம் அடித்த நிலையில் 111 ரன்னில் வெளியேறினார்.

    இறுதியில், அயர்லாந்து அணி முதல் இன்னிங்சில் 145.3 ஓவரில் 492 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.

    டெஸ்ட் போட்டியில் அயர்லாந்து 400 ரன்களுக்கு மேல் எடுப்பது இதுவே முதல்முறையாகும். அத்துடன் இன்னிங்சில் இரு அயர்லாந்து வீரர்கள் சதம் காண்பதும் இதுவே முதல் நிகழ்வாகும்.

    இலங்கை சார்பில் சுழற்பந்து வீச்சாளர் பிரபாத் ஜெயசூர்யா 5 விக்கெட்டும், விஷ்வா பெர்னாண்டோ, அசிதா பெர்னாண்டோ தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • முதல் இன்னிங்சில் 143 ரன்கள் மட்டுமே எடுத்த அயரலாந்து அணி பாலோ ஆன் ஆனது.
    • இலங்கை அணி தரப்பில் பிரபாத் ஜெயசூர்யா 7 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

    காலே:

    இலங்கையில் சுற்றுப்ப்யணம் மேற்கொண்டு விளையாடி வரும் அயர்லாந்து கிரிக்கெட் அணி அங்கு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதில் முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த 16-ம் தேதி காலேவில் தொடங்கியது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை கிரிக்கெட் அணியில் கேப்டன் கருணாரத்னே 179 ரன், குசல் மெண்டிஸ் 140 ரன், சண்டிமால் 102 ரன், சமரவிக்ரமா 104 ரன்கள் எடுத்தனர்.

    இந்த நால்வரின் சதத்தின் உதவியுடன் இலங்கை அணி 131 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 591 ரன்கள் குவித்தது. இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய அயர்லாந்து அணி முதல் இன்னிங்சில் 52.3 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 143 ரன்கள் மட்டுமே எடுத்தது. இலங்கை அணி தரப்பில் பிரபாத் ஜெயசூர்யா 7 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

    முதல் இன்னிங்சில் 143 ரன்கள் மட்டுமே எடுத்த அயரலாந்து அணி பாலோ ஆன் ஆனது. இதையடுத்து தனது 2வது இன்னிங்சை தொடங்கிய அயர்லாந்து முதல் இன்னிங்சை போல் இலங்கை அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணி 40 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது.

    தொடர்ந்து பந்துவீச்சில் மிரட்டிய இலங்கை அணி மேற்கொண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி 168 ரன்னில் அயர்லாந்தை ஆல் அவுட் செய்தது. இலங்கை தரப்பில் ரமேஷ் மெண்டிஸ் 4 விக்கெட்டும், பிரபாத் ஜெயசூர்யா 3 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன் மூலம் இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 280 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என இலங்கை முன்னிலையில் உள்ளது. அடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் 24-ம் தேதி காலேவில் தொடங்குகிறது.

    ×