search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tirupati"

    • திருப்பதி ஏழுமலையானுக்கு புரட்டாசி உகந்த மாதம் ஆகும்.
    • திருப்பதியில் நேற்று 85,626 பேர் தரிசனம் செய்தனர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையானுக்கு புரட்டாசி உகந்த மாதம் ஆகும். நாளை புரட்டாசி மாதம் பிறப்பதால் பக்தர்கள் முதல் நாளிலேயே ஏழுமலையானை தரிசிக்க நாடு முழுவதிலும் இருந்து குவிந்து வருகின்றனர்.

    சனி, ஞாயிறு தொடர் விடுமுறை மற்றும் நாளை அரசு விடுமுறை என்பதால் பக்தர்கள் பஸ், கார், வேன் மூலமாகவும் நடை பயணமாகவும் திருப்பதிக்கு வந்த வண்ணம் உள்ளனர். திருப்பதி மலையில் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டம் காணப்படுகிறது.

    பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸ் முழுவதும் பக்தர்கள் நிரம்பி வழிகின்றனர்.

    இதனால் தரிசன வரிசையில் இருந்து 2 கிலோமீட்டர் தூரம் வரை பக்தர்கள் வரிசையில் காத்திருக்கின்றனர். ரூ.300 ஆன்லைன் சிறப்ப தரிசன டிக்கெட் உள்ள பக்தர்கள் 15 மணி நேரத்திலும் நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 18 முதல் 24 மணி நேரம் வரை காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

    நாளை புரட்டாசி மாதம் முதல்நாள் என்பதால் மேலும் கூடுதலாக பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    திருப்பதியில் நேற்று 85,626 பேர் தரிசனம் செய்தனர். 33,138 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 4.13 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • படுகாயம் அடைந்த 2 பேரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பதியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    கர்நாடக மாநிலம் சிக்க பல்லாபூரை சேர்ந்த 5 பேர் திருப்பதி-அனந்தபூர் தேசிய நெடுஞ்சாலையில் பாக்ராபேட்டை என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது எதிரே தக்காளி ஏற்றிக் கொண்டு வந்த லாரி பயங்கர வேகத்தில் எதிர்பாராத விதமாக கார் மீது மோதியது.

    இந்த விபத்தில் கார் முழுவதும் நொறுங்கியது. காரில் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கி ரத்த வெள்ளத்தில் துடித்து துடித்து பரிதாபமாக 3 பேர் இறந்தனர். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்த 2 பேரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பதியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தனுஷ் நடிப்பில் வெளிவந்த மாப்பிள்ளை திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகினார்.
    • கார்டியன் மற்றும் 105 மினிட்ஸ் என்ற படங்களில் கதாநாயகியாக நடித்து இருந்தார்.

    தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் ஹன்சிகா. கடந்த 2011 -ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளிவந்த மாப்பிள்ளை திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகினார்.

    சமீபத்தில், மை 3 என்ற வெப் தொடரிலும் நடித்து இருந்தார். சுந்தர் சி இயக்கத்தில் உருவான அரண்மனை - 2 படத்தில் ஹன்சிகா நடித்திருந்தார். இந்தாண்டு கார்டியன் மற்றும் 105 மினிட்ஸ் என்ற படங்களில் கதாநாயகியாக நடித்து இருந்தார்.

    தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரபல நடிகை ஹன்சிகா மோத்வானி சுவாமி தரிசனம் செய்தார். திருப்பதி கோவிலுக்கு தனது தாயுடன் வந்த ஹன்சிகா மோத்வானி வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தார்.

    அவருக்கு வேத மந்திரங்கள் முழங்க தீர்த்தம் மற்றும் லட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து கோவிலுக்கு வெளியே வந்த அவரை சூழ்ந்த ரசிகர்கள் அவரிடம் புகைப்படம் எடுத்து கொண்டனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ரூ. 530 கோடி வரை முறைகேடு நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
    • விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    திருமலை:

    திருப்பதி தேவஸ்தானத்தில் ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட்டில் ரூ.500 கோடிக்கும் மேல் முறைகேடு நடந்ததாக விஜிலென்ஸ் அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

    இந்த அறக்கட்டளை மூலம் வரும் பணம், மீனவர்கள், எஸ்.சி, எஸ்.டி.க்கள் வசிக்கும் பகுதிகளில் ஏழுமலையான் கோவில்களை கட்டவும், நலிந்த கோவில்களை மராமத்து செய்யவும், தீப, தூப நைவேத்தியங்களுக்கு உதவவும் மட்டுமே பயன்படுத்துவதாக தேவஸ்தானம் அறிவித்திருந்தது.

    ஆனால், இதுவரை எத்தனை கோவில்கள் கட்டப்பட்டது? எவ்வளவு செலவு செய்தனர் என்பது குறித்து விஜிலென்ஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    இதில் ரூ. 530 கோடி வரை முறைகேடு நடந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கட்டிட காண்டிராக்ட் வழங்கியதிலும் கோடிக் கணக்கில் முறை கேடுகள் நடந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

    ஆதலால், அப்போதைய தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி மற்றும் திருப்பதி முன்னாள் எம்.எல்.ஏ.வும், அப்போதைய அறங்காவலர் குழு தலைவருமான கருணாகர் ரெட்டியிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    ஆண்டுக்கு ரூ. 300 கோடி வரை மட்டுமே கான்டிராக்ட் பணிகள் நடத்தப்படும். ஆனால் இவர்களது நிர்வாகத்தில் மட்டும், சிம்ஸ் தேவஸ்தான மருத்துவ மனைக்கு ரூ. 77 கோடி, கோவிந்தராஜ சத்திரம் இடிக்கப்பட்டு அதே இடத்தில் காம்ப்ளக்ஸ் கட்ட ரூ. 420 கோடி ஒதுக்கப்பட்டன.

    மேலும் இதுபோல் பல சிவில் பணிகளுக்கும் கோடி கணக்கில் நிதிகள் ஒதுக்கப்பட்டன. இதில் கமிஷன் பல கோடி பெற்றுள்ளதாக வந்த புகார்களின் பேரில் தர்மாரெட்டி மற்றும் கருணாகர் ரெட்டிக்கும், தேவஸ்தான ஆடிட்டர் பாலாஜி, முன்னாள் அறங்காவலரான ஒய்.வி. சுப்பாரெட்டி மற்றும் நிர்வாக அதிகாரி ஜவஹர் ரெட்டிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளன.

    • மருத்துவர்கள் பாதுகாப்பு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • நோயாளி மருத்துவரை தாக்கும் வீடியோ வெளியாகி வைரலாகி உள்ளது.

    ஆந்திரா மாநிலம் திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவ அறிவியல் கழகத்தில் கடந்த 24-ந்தேதி பெண் மருத்துவர் ஒருவரை நோயாளி ஒருவர் சரமாரி தாக்கி உள்ளார். இதன் சிசிடிவி வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அந்த வீடியோவில் நோயாளி ஒருவர் டாக்டரை துரத்தி சென்று அவரது தலைமுடியை பிடித்து இழுத்து தலையை ஒரு உலோக படுக்கையில் வைத்து இடித்து சரமாரி தாக்குகிறார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை காப்பாற்றுவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.

    இந்த தாக்குதலை நடத்திய நோயாளி வீசியங்கரம் மாவட்டம் பொப்பிலியை சேர்ந்த பங்கரா ராஜூ என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் வலிப்பு நோய்க்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் தாக்குதலுக்கான காரணம் தெரியவில்லை.

    இந்த தாக்குதலை தொடர்ந்து பல இளநிலை மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் பணியிடத்தில் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட டாக்டர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவ அறிவியல் கழக துணைவேந்தர் டாக்டர் ரவிக்குமாருக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்களுக்கும், சுகாதார பணியாளர்களுக்கும் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோக்கை விடுத்துள்ளார்.


    • பிரமோற்சவம் அக்டோபர் 4-ந் தேதி முதல் 12 வரை நடக்கிறது.
    • திருமலை மலை சாலைகள் 24 மணி நேரமும் திறந்து வைக்கப்படும்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரமோற்சவ விழா அக்டோபர் 4-ந் தேதி முதல் 12 வரை நடக்கிறது. இதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் ஜே.ஷ்யாமளா ராவ் கூறியதாவது:-

    திருப்பதி பிரமோற்சவ விழாவின் போது தினமும் காலை 8 முதல் 10 மணி வரையிலும் இரவு 7 முதல் 9 மணி வரையிலும் வாகன சேவைகள் நடைபெறும். கருட வாகன சேவை மாலை 6.30 மணிக்கு ஆரம்பமாகும்.

    அக்டோபர் 4-ந்தேதி மாலை, மாநில அரசு சார்பில் வெங்கடேசப் பெருமானுக்கு முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு பட்டு வஸ்திரங்களை சமர்ப்பிக்கிறார். அவர் சேஷ வாகன சேவையிலும் பங்கேற்பார்.

    பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், பல ஆர்ஜித சேவைகள் மற்றும் சிறப்பு தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    சுமார் 7 லட்சம் லட்டுகள் தயார் நிலையில் வைக்கப்படும். கருட வாகன சேவைக்காக மாவட்ட காவல்துறையின் ஒருங்கிணைப்புடன் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். கருட வாகன சேவை நாளில் திருமலை மலை சாலைகள் 24 மணி நேரமும் திறந்து வைக்கப்படும்.

    அனைத்து கல்யாண கட்டாக்களிலும் இடைவிடாமல் 24 மணி நேரமும் பக்தர்கள் மொட்டை அடிக்க வசதியாக கூடுதல் முடிதிருத்தும் பணியாளர்களை நியமிக்கப்படுவார்கள்.

    அன்னதான கூடம் மட்டுமின்றி பக்தர்கள் காத்திருக்கும் பகுதிகள் உள்பட பல்வேறு இடங்களில் அன்னதானம், பால் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இன்று காலையில் கூட்டம் மேலும் அதிகரித்தது.
    • சில மணி நேரங்களில் நேர ஒதுக்கீடு டிக்கெட்டுகள் தீர்ந்தன.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் முதல் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. சனி, ஞாயிறு, திங்கள் கிழமைகளில் தொடர் விடுமுறை காரணமாக அதிக அளவில் பக்தர்கள் திருப்பதியில் குவிந்துள்ளனர்.

    நேர ஒதுக்கீடு இலவச டோக்கன் வழங்கும் இடங்களில் அதிக அளவில் பக்தர்கள் இருந்தனர். இதனால் சில மணி நேரங்களில் நேர ஒதுக்கீடு டிக்கெட்டுகள் தீர்ந்தன.

    நேரடி இலவச தரிசனத்தில் அனைத்து காத்திருப்பு அறைகளும் நிரம்பி வெளியே வரிசையில் பக்தர்கள் காத்து நின்றனர். இன்று காலையில் கூட்டம் மேலும் அதிகரித்தது. இதனால் 24 மணி நேரத்திற்கு மேல் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    திருப்பதியில் தற்போது தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பக்தர்கள் சிக்கனமாக தண்ணீரை பயன்படுத்த வேண்டும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. கூடுதலாக தண்ணீர் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளையும் தேவஸ்தானம் செய்துள்ளது.

    இதற்காக திருப்பதி மாநகராட்சிக்கு ரூ. 5 கோடி திருப்பதி கோவில் சார்பில் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் புதியதாக குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று 79 ஆயிரத்து 521 பேர் சாமி தரிசனம் செய்தனர். 40 ஆயிரத்து 152 பேர் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.3.87 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • திருப்பதி தேவாஸ்தன மருத்துவமனையில் பெண் மருத்துவர் தாக்கப்பட்டார்.
    • மருத்துவர் தாக்கப்பட்டதை கண்டித்து மருத்துவர்கள் போராட்டம் நடத்தினர்.

    திருப்பதி தேவஸ்தான மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நேற்று நள்ளிரவு தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், மருத்துவர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    விசாரணையில் பெண் மருத்துவரை தாக்கிய நபர் மன நோயாளி என்று தெரியவந்தது. மன நல சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் மருத்துவரை தாக்கியுள்ளார். பெண் மருத்துவர் தாக்கப்பட்டது, மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

    மேலும், மருத்துவர்கள் போராட்டத்தால் நோயாளிகள் பாதிக்கப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களிடம் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    • அக்டோபர் 3 முதல் 12-ந்தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவம் நடக்கிறது.
    • அனைத்து சிறப்பு தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    திருப்பதி:

    திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அக்டோபர் 3 முதல் 12-ந் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவம் நடக்கிறது.

    பிரம்மோற்சவத்தின் போது சாமியின் வாகன சேவையை காண பொதுமக்கள் வழக்கத்தை விட அதிக அளவில் வருவார்கள். அவர்களுக்கு திருப்திகரமாக தரிசனம் செய்து வைக்கும் வகையில் அக்டோபர் 3-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை ஆர்ஜித சேவைகள், வி.ஐ.பி. தரிசனங்கள் மற்றும் பல்வேறு சிறப்பு தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இதன் ஒரு பகுதியாக அக்டோபர் 3-ந்தேதி (அங்குரார் ப்பணம் ) முதல் 12-ந் தேதி (சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி) வரை தினமும் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், ஒரு வயது குழந்தைகளின் பெற்றோருக்கு வழங்கும் சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இதேபோல் வி.ஐ.பி. தரிசனம் அதிகாரி பதவியில் உள்ள உயர் அதிகாரிகளுக்கு மட்டுமே வழங்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நடிகர் சிரஞ்சீவி இன்று தனது 69வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
    • திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் சிரஞ்சீவி குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.

    தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் ஆக இருந்து வருபவர் நடிகர் சிரஞ்சீவி. அவரது இயற்பெயர் கோனிடெலா சிவசங்கரா வரபிரசாத். தீவிர அனுமான் பக்தரான இருந்து வந்த இவர் தாயின் வேண்டுகோளுக்கு இணங்க, சினிமாவில் நடிக்கும்போது தனது பெயரை சிரஞ்சீவி என மாற்றிக்கொண்டார்.

    1978இல் வெளியான பிராணம் கரீது என்ற படம் மூலம் தெலுங்கு சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். பின்னர் பல வெற்றி படங்களில் நடித்து கோடிகளில் சம்பளம் வாங்கிய முதல் இந்திய ஹீரோ என்ற பெருமையை அவர் பெற்றார்.

    இந்நிலையில், நடிகர் சிரஞ்சீவி இன்று தனது 69வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தனது பிறந்தநாளை ஒட்டி, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சிரஞ்சீவி குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மெமு சிறப்பு ரெயில் இன்று திருத்தணி வரை மட்டும் இயக்கப்படும்.
    • மின்சார ரெயில் நாளை மற்றும் 24-ந்தேதிகளில் திருவள்ளூருடன் நிறுத்தப்படும்.

    சென்னை:

    சென்னை ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    சென்னை சென்ட்ரலில் இருந்து திருப்பதிக்கு காலை 9.50 மணிக்கு புறப்படும் மெமு சிறப்பு ரெயில் இன்று (21-ந் தேதி) வரை திருத்தணி வரை மட்டும் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் நாளை மற்றும் 24-ந் தேதிகளிலும் இந்த மாற்றம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    இதுபோல், சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணத்துக்கு காலை 9.10, 11 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில்கள் மற்றும் திருத்தணிக்கு காலை 10 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் நாளை மற்றும் 24-ந் தேதிகளில் திருவள்ளூருடன் நிறுத்தப்படும்.

    மறுமாா்க்கமாக அரக்கோணத்தில் இருந்து காலை 11.15, பகல் 12 மணிக்கும், திருத்தணியில் இருந்து பகல் 12.35 மணிக்கும் புறப்பட வேண்டிய மின்சார ரெயில்கள் திருவள்ளூரில் இருந்து புறப்பட்டு சென்ட்ரல் வந்தடையும்.

    வேலூா் கன்டோன்மன்டில் இருந்து அரக்கோணத்துக்கு காலை 10 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் சித்தேரி வரை மட்டும் இயக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மகேஷ்பாபு நேற்று மாலை தனது குடும்பத்தினருடன் திருப்பதிக்கு வந்தார்.
    • ரசிகர்கள் செல்பி எடுக்க போட்டி போட்டனர்.

    திருப்பதி:

    தெலுங்கு திரையுலக சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ்பாபு நேற்று மாலை தனது குடும்பத்தினருடன் திருப்பதிக்கு வந்தார்.

    அலிப்பிரி நடப்பாதை வழியாக தனது மனைவி நம்ரதா ஷிரோத்கர் மகன் கவுதம், மகள் சிதாரா ஆகியோருடன் திருப்பதி மலைக்கு நடந்து வந்தார்.

    நடைபாதையில் வந்த பக்தர்கள் மகேஷ் பாபு மற்றும் குடும்பத்தினருடன் செல்பி எடுக்க போட்டி போட்டனர். இதனால் அலிபிரி நடைபாதையில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து போலீசார் நடைபாதைக்கு வந்து மகேஷ்பாபு குடும்பத்தினரை பத்திரமாக திருப்பதி மலைக்கு அழைத்துச் சென்றனர்.

    மகேஷ் பாபு குடும்பத்தினருக்கு திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர். இன்று காலை மகேஷ்பாபு குடும்பத்தினர் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். அவரை கண்டு ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். இதனால் கோவில் வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    https://iflicks.in/

    ×