என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Accusation"

    • கூட்டுறவு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்கள் அனைத்தும் நஷ்டத்தில் இயங்க ஊழியர்களே காரணம் என முதல்- அமைச்சர் ரங்கசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
    • ஆட்சி பொறுப்பில் கூட்டுறவு இலாக்காவை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த முதல்-அமைச்சர் தனது பொறுப்பை உணராமல் பேசியது கண்டனத்து க்குறியது.

    புதுச்சேரி:

    ஏ.ஐ.டி.யூ.சி. மாநில பொதுச்செயலாளர் சேதுசெல்வம் வெளியி ட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கூட்டுறவு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்கள் அனைத்தும் நஷ்டத்தில் இயங்க ஊழியர்களே காரணம் என முதல்- அமைச்சர் ரங்கசாமி குற்றம் சாட்டியுள்ளார். ஆட்சி பொறுப்பில் கூட்டுறவு இலாக்காவை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த முதல்-அமைச்சர் தனது பொறுப்பை உணராமல் பேசியது கண்டனத்து க்குறியது.

    கூட்டுறவு நிறுவனங்களில் ரங்கசாமி தன்னுடைய தொகுதியை சார்ந்தவர்களை வேலைக்கு அமர்த்தி பெரும் சுமையை ஏற்படுத்தினார். அதிகாரிகளும், முதல்- அமைசரின் உத்தரவை கேட்டு அனுப்பிய ஆட்களை எல்லாம் பணியில் அமர்த்தி அலுவலகத்தில் இடம் இல்லாமல் மரத்தடியிலும், படிக்கட்டுகளிலும் உட்காரவைத்து சம்பளம் வழங்கினர்.

    மேலும், கொள்முதல் செய்த பொருட்களுக்கு உரிய பணத்தை வழங்காமல் இழுத்ததடித்தது யார்.?

    வாரியத் தலைவர்கள் நியமித்து அலுவலக செலவு, சம்பளம், கார் மற்றும் பெட்ரோல், டி.ஏ. என கொடுத்து அழகு பார்த்தது யார்? பல்வேறு வகையில் நஷ்டத்தை ஏற்படுத்தி நிறுவனங்களை முடக்கியது யார்?

    கூட்டுறவு மற்றும் அரசு துறை நிறுவனங்களின் அவலநிலைக்கு ரங்கசாமி மற்றும் அதிகாரிகளின் நிர்வாக திறமையின்மையே காரணம் என்பது தான் நிதர்சனமான உண்மை. இவைகளை எல்லாம் மறைப்பதற்கு ஊழியர்களின் மீது குற்றம் சுமத்துவதை வன்மையாக கண்டிக்கிறோம்.

    இவ்வாறு சேதுசெல்வம் அறிக்கையில் கூறியுள்ளார்.

    • விவசாயிகள் மீது தி.மு.க. அரசு பொருளாதார தாக்குதல் நடத்துவதாக ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டி உள்ளார்.
    • ஏழை, எளிய மக்களுக்கு பொங்கல் பரிசு தொகையுடன், கரும்பை இணைக்க வேண்டும்.

    மதுரை

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    தமிழகத்தில் 43 ஆயிரம் ஏக்கருக்கு மேல் விவசாயிகள் செங்கரும்பு நடவு செய்துள்ளனர். இதை நம்பி ஏக்கருக்கு ரூ.45 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை செலவு செய்த விவசாயிகள் இதை அரசு கொள்முதல் செய்து பொங்கல் பரிசு தொகுப்போடு மக்களுக்கு வழங்கும் என்ற நம்பிக்கையோடு அவர்கள் கரும்பை விதைத்து வளர்த்து வைத்திருக்கிறார்கள்.

    கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலங்களில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பரிசுடன் கரும்பு வழங்கப்பட்டது. வருகிற பொங்கலுக்கு அரசு வழங்கும் பொங்கல் தொகுப்பில் கரும்பு இடம் பெறவில்லை. இதனால் கரும்பு விவசாயிகள் போராடி வருகிறார்கள்.

    மிகப்பெரிய பொரு ளாதார பாதிப்பில் கரும்பு விவசாயிகள் வஞ்சிக்கப்பட்டு இருக்கி றார்கள். பொருளாதார தாக்குதல் அவர்கள் மீது தொடுக்கப்பட்டு இருக்கிறது. இதனால் அவர்கள் கண்ணீரும் கம்பலையுமாக இருக்கிறார்கள்.

    கரும்பு ஏன் வழங்கவில்லை என்று சொன்னால் அதற்கா கத்தானே பணம் தருகிறோம். வாங்கிக் கொள்ளுங்கள் என்று தி.மு.க. அமைச்சர்கள் விளக்கம் தருகிறார்கள்.

    முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில், பொங்கல் தொகுப்பில் ரூ.2,500 ரொக்கம், அரிசி, சர்க்கரை, ஏலக்காய், முந்திரி, ஒரு கரும்பு 2 கோடியே 10 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.

    கடந்த பொங்கலுக்கு தி.மு.க. ஆட்சியில் 21 வகை பொருட்கள் வழங்கப்பட்டதாக சொல்லி அதில் எத்தனை புகார்களை இந்த அரசு சந்தித்தது என்பது நமக்கு நினைவில் இருக்கிறது.

    இந்த பொங்கலில் மக்கள் மகிழ்ச்சியோடு இருக்க வேண்டாமா? இந்த அரசின் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்கள் வேதனையில் இருக்கிறார்களே? கரும்பு கொடுப்பதனால் உங்களுடைய பட்ஜெட்டில் என்ன துண்டு விழுவா போகிறது? துண்டு கரும்பு கொடுப்பதால் பட்ஜெட்டில் துண்டு விழுவதாக தெரியவில்லை.

    இந்த கரும்பை கொள்முதல் செய்தாலே விவசாயியின் கண்ணீரைத் துடைக்கும் நல்ல காரியம் அல்லவா நடைபெறும்? அதில் உங்களுக்கு என்ன வருத்தம் என்று தெரியவில்லை.

    இந்த அரசை நம்பி விதைத்திருக்கிற கரும்பை கொள்முதல் செய்வதற்கு தி.மு.க. அரசு முன் வரவேண்டும். ஏழை, எளிய மக்களுக்கு பொங்கல் பரிசு தொகையுடன், கரும்பை இணைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நிலுவை தொகையை கொடுக்காமல் ஏமாற்றி இருப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
    • கரும்புக்கான தொகையையும் வழங்குவதாக அளித்த வாக்குறுதியை மீறி சர்க்கரை ஆலை நிர்வாகம் நடந்து கொள்கிறது.

    தஞ்சாவூர்:

    அ.ம.மு.க பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை மாவட்டம் திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் ரூ.100 கோடிக்கும் மேல் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை வழங்காத நிலையில் விவசாயிகளை ஏமாற்றி வேறொரு நிறுவனத்திற்கு ஆலையை கைமாற்றும் முயற்சி கண்டனத்துக்கு உரியது.

    தாங்கள் ஆட்சிக்கு வந்தால் திருமண்டங்குடி சர்க்கரை ஆலையை அரசே ஏற்று நடத்தும் என தேர்தல் நேரத்தில் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார்.

    ஆனால் இப்போது ஆளும்கட்சியை சேர்ந்த ஒருவரின் பின்னணியோடு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை கொடுக்காமல் ஏமாற்றி ஆலையை அவர்கள் வசம் எடுத்து கொள்ள இருப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    விவசாயிகளை கடனில் சிக்க வைத்திருப்பதுடன் அவர்கள் ஆலைக்கு அளித்த கரும்புக்கான தொகையையும் வழங்குவதாக அளித்த வாக்குறுதியை மீறி திருஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் நடந்து கொள்கிறது.

    இது குறித்து தி.மு.க. அரசு கண்டுகொள்ளவில்லை. எனவே இந்த பிரச்சினையில் உண்மை என்ன என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும்.

    பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகளுக்கு ஏற்கனவே ஒப்புகொண்டபடி நிலுவை தொகையை முழுமையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சிதம்பரத்திற்கு வருகை தந்த அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசினார்.
    • தற்போது பிரதமர் மோடி தமிழகத்திற்கு வந்த போது, பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வரவில்லை

    கடலூர்:

    சிதம்பரத்திற்கு வருகை தந்த அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசியதாவது,

    பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அடிப்படை ஆதாரம் இல்லாமல், அரசியலுக்காக ஊழல் குற்றச்சாட்டு கூறுகிறார். 10 ஆண்டுகளாக இருந்த அ.தி.மு.க. அமைச்சர்களின் பட்டியலை ஏன் வெளியிடவில்லை. பா.ஜ.க கட்சியினரே அண்ணாமலை ஊழல் பற்றி தெரிவிக்கின்றனர். அண்ணாமலை மீது தி.மு.க. கட்சி சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க உள்ளது. தி.மு.க. அமைப்பு செயலாளர் வழக்கு தொடுப்பதாகவும் தெரிவித்துள்ளார். அண்ணாமலை பொறுப்பை உணர்ந்து பேச வேண்டும். தமிழ்நாட்டில் அவர் அரசியல் நாகரீகத்தை பின்பற்றவில்லை. மிகப்பெரிய பதவியான ஐ.பி.எஸ் ஆகி ஊதியம் வாங்கியவர், அதை விட்டு எந்த நோக்கத்தில் அரசியல் கட்சியில் இணைந்துள்ளார். எந்த கனவோடு அரசியல் கட்சியில் இணைந்தாரோ? அதை ஆருத்ரா கோல்டு பைனான்ஸில் அந்த கனவை நிறைவேற்றி விட்டார். தற்போது பிரதமர் மோடி தமிழகத்திற்கு வந்த போது, பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வரவில்லை. தன்னை பதவியை விட்டு எடுத்து விடுவார்களோ என்ற அச்சத்தில் உள்ளார் என்பதை காட்டுகிறது . இவ்வாறு அவர் பேசினார்.

    • தி.மு.க. அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.
    • ஜி.கே. வாசன் குற்றச்சாட்டினார்.

    ராமநாதபுரம்

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ராமநாதபுரத்தில் நிருபர்களிடம் கூறிய தாவது:-

    பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை முதல்-அமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் அவர்களது உறவினர்கள் சொத்து விபரம் குறித்து பட்டியல் வெளியிட்டுள்ளார். இதை ஆளும் கட்சியினர் அலட்சியமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

    பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறிய குற்றச்சாட்டுகள் உண்மை தானா? என்பதை அறிய மக்கள் விரும்புகின்றனர். இதுகுறித்து அண்ணாமலை தெளிவாக கூறிவிட்டார். ஆனால் தி.மு.க.வினர் திரும்பத்திரும்ப பொய்யை கூறி உண்மை ஆக்க முயற்சிக்கின்றனர்.

    பட்டாசு ஆலைகள் வெடி விபத்து தொடர்பாக பாதுகாப்பு குறித்து அரசு தனிக் கவனம் செலுத்த வேண்டும். முதல்- அமைச்சர் மற்றும் அவரது அரசு வாக்கு றுதிகளை இதுவரை நிறைவேற்ற வில்லை. வாக்குறுதிகளை நம்பி மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    தேர்தல் வாக்குறுதியில் மதுபான கடைகள் 500 கடைகளை அடைப்போம் என்று கூறினர். ஆனால் இன்று வரை அது நடைபெற வில்லை.குறைந்தபட்சம் 25 சதவீத மதுபான கடைகளை வழிபாட்டு தலங்கள், பள்ளி-கல்லூரிகள் அருகில் உள்ள மது கடைகளை மூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தமிழகத்தில் கஞ்சா, ஹெராயின் மது போதை யால் இளைஞர்கள் வழி மாறி செல்கின்றனர். பிரதமர் மோடி ஹாட்ரிக் முறையில் 3-வது முறையாக பிரதமர் ஆவது உறுதியாகி விட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாவட்ட நிர்வாகிகள் நாகேசுவரன், முன்னாள் எம்.பி.உடையப்பன், முன்னாள் எம்.எல்.ஏ. ராம் பிரபு, சிவகங்கை மாவட்ட தலைவர் பாலசுப்பிர மணியன், அயோத்தி உள்பட பலர் உடனிருந்தனர்.

    • டெல்லியில் அதிகாரிகள் நியமன அதிகாரம்: மத்திய அரசு அவசர சட்டம் - ஆம்ஆத்மி குற்றச்சாட்டு
    • மத்திய அரசின் அவசர சட்டம் அரசியலைமைப்பு சட்டத்துக்கு விரோதமானவை.

    புதுடெல்லி:

    டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம்ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. டெல்லி அரசுக்கும், மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசுக்கும் இடையே அதிகார மோதல் நீடித்து வருகிறது.

    இதற்கு தீர்வு காணும் வகையில் டெல்லி அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமிக்கவும், இடமாற்றம் செய்யவும் மாநில அரசுக்கே அதிகாரம் உள்ளது என்றும், துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்றும் கடந்த 11-ந்தேதி தீர்ப்பு வழங்கியது.

    அரசியல் சாசன அமர்வு, நிலம், காவல், பொது உத்தரவு ஆகியவை தவிர அனைத்து விவகாரங்களிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி அரசுக்குத்தான் உரிமை உள்ளது என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    ஆனால் டெல்லி அரசுக்கு அதிகாரிகள் நியமனத்தில் மத்திய அரசு அனுமதி அளிப்பதில்லை என்று தீர்ப்பு வெளியான மறுதினமே சுப்ரீம் கோர்ட்டில் ஆம் ஆத்மி அரசு வழக்கு தொடுத்தது.

    இந்த நிலையில் உயர் அதிகாரிகள் பணி நியமனம், பணியிட மாற்றத்துக்கு புதிதாக ஆணையம் அமைக்க மத்திய அரசு நேற்று அவசர சட்டம் பிறப்பித்தது.

    யூனியன் பிரதேச உயர் அதிகாரிகளான டானிக்ஸ் பிரிவு குரூப் ஏ அதிகாரிகளின் பணி நியமனம், பணியிட மாற்றம் செய்வதை முடிவு செய்வதற்கான தேசிய தலைநகர் சிவில் சர்வீஸ் ஆணையம் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

    இதில் டெல்லி முதல்-மந்திரி தலைமை செயலாளர், முதன்மை உள்துறை செயலாளர் ஆகியோர் இடம்பெறுவார்கள். பெரும்பான்மை வாக்குகள் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    டெல்லி அரசின் பணி நியமன அதிகாரத்தை குறைக்கும் வகையில் இந்த அவசர சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளதாகவும், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அவமதிப்பதாக உள்ளது என்றும் ஆம்ஆத்மி கட்சி குற்றம்சாட்டி உள்ளது.

    இதுதொடர்பாக ஆம் ஆத்மி மந்திரி அதிஷி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய அரசின் அவசர சட்டம் அரசியலைமைப்பு சட்டத்துக்கு விரோதமானவை. டெல்லி அரசிடம் இருந்து அதிகாரத்தை பறிக்கும் முயற்சியாகும். சுப்ரீம் கோர்ட்டுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கும் நேரத்தில் மத்திய அரசு வேண்டுமென்றே இந்த அவசர சட்டத்தை கொண்டுவந்துள்ளது.

    முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை பார்த்து பிரதமர் நரேந்திர மோடி பயப்படுகிறார். அவர் (கெஜ்ரிவால்) அதிகாரம் பெற்றால் டெல்லிக்கு அசாதாரண பணிகளை செய்வார் என்று அவர்கள் பயப்படுவார்கள்.

    டெல்லி அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டு இருப்பதை மத்திய அரசால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஆணையத்தில் இருக்கும் தலைமை செயலாளர், முதன்மை உள்துறை செயலாளர் ஆகியோர் மத்திய அரசால் நியமிக்கப்படுவார்கள்.

    மத்திய அரசுக்கு பிடிக்காத எந்த ஒரு முடிவையும் எடுத்தால் அதை மாற்றுவதற்கு துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறது. இந்த அவசர சட்டம் சுப்ரீம் கோர்ட்டை அவமதிப்பதாகும். இந்த அவசர சட்டம் சுப்ரீம் கோர்ட்டு மூலம் ரத்து செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • குடிநீரில் கழிவுநீர் கலப்பதாக கவுன்சிலர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
    • நிர்வாகத்தில் தவறு நடப்பதாகவும் புகார் வந்தது.

    விருதுநகர்

    விருதுநகர் நாரசபை கூட் டம் தலைவர் மாதவன் தலை மையில் நடைபெற்றது துணைத்த லைவர் தனலட் சுமி மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். நக ராட்சி நிர்வாக அதிகாரிகள் யாரும் கலந்து கொள்ள வில்லை.

    கூட்டம் தொடங்கியதும் கவுன்சிலர்கள் மதியழ கன், பால்பாண்டி, கலையர சன் உள்ளிட்டோர் வார்டு மக்களின் தேவைகளை கடந்த கூட்டங்களில் தெரிவித்தும் அதுபற்றி எந்த தீர்மானமும் கொண்டு வராத நிலை ஏன் என்று கேள்வி எழுப்பினர்.

    கவுன்சிலர் முத்துராமன் சொத்து வரி கட்டிய வர்களுக்கும் மீண்டும் நோட்டீஸ் கொடுத்துள்ளது வரி கட்டா விட்டால் வீட்டை பூட்டி விடுவோம் என்று மிரட்டும் நிலை உள்ளதாக புகார் கூறினார். இதற்கு பதிலளித்த தலைவர் மாதவன் இதுபற்றி தனக்கு தகவல் இல்லை என்றும் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

    கவுன்சிலர் ராஜ்குமார் தனது வார்டு பகுதியில் மக்கள் கோரிக்கைகளை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் நகராட்சிநிர்வாகம் மீது மக்களுக்கு அவநம்பிக்கை ஏற்பட்டு விடும் என்றார். நக ரில் பல்வேறு பகுதி களில் குடி நீருடன் கழிவுநீர் கலப்பதாக கவுன்சிலர்கள் ஜெயக்குமார், முத்து லட்சுமி, ராமச்ச ந்திரன் உள்ளி ட்டோர் புகார் தெரிவித்தனர். கவுன்சிலர் பிருந்தா தனது வார்டு பகுதியில் மக்கள் கூறிய பிரச்சினைகள் பற்றி நகரசபை நிர்வா கத்திடம் தெரிவித்தும் எந்த நடவடி க்கையும் எடுக்கப்பட வில்லை என்று கூறியதுடன் எனது வார்டு மக்கள் உனக்கு ஓட்டு போட்டு எங்களுக்கு என்ன சேவை செய்தாய் என்று கேள்வி எழுப்பும் நிலை உள்ள தாக வேதனை தெரிவித்தார்.

    கவுன்சிலர் மதியழகன் இதேநிலை அனைத்து கவுன் சிலர்களுக்கும் ஏற்பட்டுள்ள தாக கூறினார். நகராட்சி பூங்காவில் மாவட்ட நிர்வா கத்தின் அறிவுறுத்தலில் வைக்கப் பட்ட விளம்பர பலகை சேதப்படுத்தப்பட்ட நிலை யில் அது பற்றி விசாரணை நடத்தாமல் மீண்டும் விளம் பர பலகை வைப்பதற்கு டெண்டர் கோரியதற்கு கவுன்சில ர்கள் ஆறுமுகம், ஜெயக்குமார் ஆட்சேபனை தெரிவித்தனர்.

    கவுன்சிலர் ஆறுமுகம் நகர சபை நிர்வாகத்தில் தவறு நடக்கிறது என குற்றம் சாட்டினார். தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் விவாத த்திற்கு பின் நிறைவேற்றப்பட்டன.

    • 3 மருத்துவக்கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்துக்கு தி.மு.க. அரசின் நிர்வாக சீர்கேடே காரணம்.
    • முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டினார்.

    மதுரை

    மதுரை அருகே உள்ள பொதும்பு கிராமத்தில் அ.தி.மு.க. புதிய உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. இந்த முகாமை சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலை வர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்து பேசியதா வது:-

    புதிய உறுப்பினர் சேர்க்கையில் தொழிலா ளர்கள், இளைஞர்கள், தாய்மார்கள் என அனைத்து தரப்பு மக்களும் ஆர்வத்து டன் இணைந்து வருகின்ற னர். 2 கோடி சேர்க்கையை எடப்பாடி பழனிசாமி நிர்ணயித்துள்ளார். ஆனால் இன்றைக்கு 2½ கோடி உறுப்பினர்கள் கொண்ட மாபெரும் இயக்கமாக உருவாகும் நிலை உள்ளது.

    கடந்த 2 ஆண்டுகளில் தி.மு.க. தாங்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஆனால் மின் கட்டணம், சொத்து வரி, பால் விலை ஆகியவற்றை உயர்த்தி விட்டனர். இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்தியாவிலேயே தமி ழகத்தில் தான் சட்டம்- ஒழுங்கு சீர்கேடாக உள்ளது.அதேபோல் கள்ளச்சாரா யத்தால் அதிகளவில் உயிர் பலியான மாநிலமாகவும் தமிழகம் உள்ளது.

    கடந்த 2022-2023ம் ஆண்டுக்கான கடன் வாங்கிய மாநில பட்டியலில் தமிழகம் முதலிடத்திலும், இரண்டாவது இடத்தில் மகாராஷ்ட்ரா, மூன்றாவது இடத்தில் மேற்கு வங்காளம், 4-வது இடத்தில் ஆந்திர மாநிலம் உள்ளன.

    எடப்பாடி பழனிசாமி ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகளை உருவாக்கி கொடுத்தார். அதன் மூலம் தமிழகத்திற்கு 1,450 மருத்துவ இடங்கள் கிடைத்தது. மேலும் 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டின் மூலம் அரசு பள்ளியில் படிக்கும் 565 மாணவர்கள் மருத்துவ படிப்பு பெற்று ஆண்டு தோறும் பயன் பெற்று வருகின்றனர்.

    தற்போது தமிழகத்தில் 3 மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப் பட்டுள்ளது. இதனால் மருத்துவ படிப்பில் 650 இடங்கள் பறிபோகி உள்ளது. இதற்கு முழு காரணம் தி.மு.க. அரசின் நிர்வாக சீர்கேடு தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அரசு ஆஸ்பத்திரியிலும் டாக்டர்கள் தங்கி சிகிச்சை அளிப்பது கிடையாது.
    • அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு சென்றால் டாக்டர்கள் இல்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனா்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் வளா்ந்து வரும் பகுதியாக மாறி வருகிறது. திருமருகலில் தலைமை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.

    இதன் கட்டுப்பாட்டில் திட்டச்சேரி, ஏனங்குடி,கணபதிபுரம், திருக்கண்ணபு ரம்,திருப்பத்தாங்குடி உள்ளிட்ட ஊா்களில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்படுகின்றன. தற்போது எல்லா இடங்களிலும் மருத்துவா்கள் நியமிக்கப்பட்டு செயல்படுகிறது. இருப்பினும் இரவு நேரத்தில் எந்த அரசு மருத்துவமனையிலும் மருத்துவா்கள் தங்கி சிகிச்சை அளிப்பது கிடையாது.

    குறிப்பாக இரவு நேரங்களில் பாம்பு,தேள் போன்ற விஷ பூச்சிகள் கடித்து பாதிக்கப்பட்ட வா்களும்,விஷம் அருந்தி உயிருக்கு போராடுபவா்களும் இப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சென்றால் மருத்துவா்கள் பணியில் இருப்பதில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனா். அங்கு இரவுப் பணியில் இருக்கும் செவிலியா்கள் முதல் உதவி மட்டும் செய்துவிட்டு உடனடியாக நாகப்பட்டினம் அல்லது திருவாரூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி விடுகின்றனா்.

    எனவே, இப்பகுதிகளில் இரவு நேரத்திலும் முழு சிகிச்சை கிடைக்கும் வகையில் இரவு நேரப்பணியில் மருத்துவா்களை நியமிக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

    • கைது நடவடிக்கை ஆளும் கட்சியின் விரோத போக்கை காட்டுவதாக காங்கிரஸ் கட்சியினர் புகார் தெரிவித்தனர்.
    • ஒவ்வொரு முறையும் நான் மயிரிழையில் உயிர் தப்பினேன் என்றார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநில காங்கிரஸ் தலைவராக இருப்பவர் சுதாகரன். இவர் சமீபத்தில் போலி புராதன பொருட்கள் விற்பனை மோசடியில் கைதானவருடன் தொடர்பு வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அவரது கைதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

    இந்த கைது நடவடிக்கை ஆளும் கட்சியின் விரோத போக்கை காட்டுவதாக காங்கிரஸ் கட்சியினர் புகார் தெரிவித்தனர். மேலும் சுதாகரனை கொலை செய்ய மார்க்சிஸ்ட் கட்சியினர் பலமுறை திட்டமிட்டதாக காங்கிரஸ் பிரமுகர் சக்திதரன் என்பவர் தெரிவித்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதனை காங்கிரஸ் தலைவர் சுதாகரனும் உறுதிப்படுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 6 முறை என்னை கொல்ல நேரடியாக முயற்சித்தனர். ஆனால் ஒவ்வொரு முறையும் நான் மயிரிழையில் உயிர் தப்பினேன் என்றார்.

    • பெரியமேடு போலீசில் புகார் அளித்தும் கூட அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
    • ஆசிரியையின் புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து உறுதி அளித்தனர்.

    சென்னை:

    சென்னையில் இன்று 13 இடங்களில் காவல் துறை சார்பில் மெகா குறை தீர்க்கும் முகாம் நடத்தப்பட்டது. கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் அலு வலகத்தில் நடைபெற்ற குறை தீர்க்கும் முகாமுக்கு வந்திருந்த பெண்கள் தங்களது குறைகளை கடுமையான கோபத்துடன் தெரிவித்து ரகளையில் ஈடுபட்டனர்.

    புளியந்தோப்பு பகுதியில் வசித்து வரும் இளம் ஆசிரியை ஒருவர் தனது கணவர் மீது பரபரப்பான புகார் ஒன்றை தெரிவித்து அதிர வைத்தார். நான் வேப்பேரியில் வசித்து வந்தபோது எனது கணவர் என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார். தனது நண்பர்களை அழைத்து வந்து அவர்களோடும் உல்லாசமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    ஆபாச வீடியோக்களை பார்த்துவிட்டு அதில் இருப்பது போல செக்சில் ஈடுபட அழைத்த அவர் நண்பர்களுடனும் அது போன்று இருக்க அறிவுறுத்தினார்.

    இதுதொடர்பாக பெரியமேடு போலீசில் புகார் அளித்தும் கூட அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால்தான் இன்றைய குறை தீர்க்கும் கூட்டத்துக்கு வந்துள்ளேன் என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தி ஆவேசப்பட்டார். அங்கிருந்த போலீசார் அவரை சமாதானப்படுத்தினார்.

    இருப்பினும் அவர் ஆதங்கம் குறையவில்லை. தனது கணவர் மீதும் அவரது நண்பர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறிக் கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் தரையில் புரண்டு அழுதார். இதனால் பரபரப்பு நிலவியது.

    இதை தொடர்ந்து ஆசிரியையின் புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து உறுதி அளித்தனர்.

    இவரைப் போன்று ஏராளமான பெண்கள் தங்களது குறைகளுக்காக துணை கமிஷனர் அலுவலகத்தில் கோஷம் போட்டு தரையில் விழுந்து புரண்டனர்.

    அவர்கள் அனைவரையும் பெண் போலீசார் குண்டு கட்டாக தூக்கி அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

    • மாநகராட்சி கூட்டத்தின் அனுமதி பெறாமல் ரூ.170 கோடி பணம் தனியாருக்கு தாரைவார்கப்பட்டு உள்ளது.
    • தப்பு செய்தால் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எடப்பாடியார் வழியில் அதிமுக கவுன்சிலர்கள் தட்டிக் கேட்போம்.

    கோவை,

    கோவை மாநகராட்சி கூட்டம் விக்டோரியா அரங்கில் இன்று காலை நடந்தது. கூட்டத்திற்கு அ.தி.மு.க கவுன்சிலர்கள் பிரபாகரன், ஷர்மிளா சந்திரசேகர், ரமேஷ் ஆகியோர் வந்தனர்.

    அவர்கள், கவுன்சிலர்களின் அனுமதி பெறாமல் ரூ.170 கோடி பணத்தை தனியாருக்கு அனுமதி அளித்த மேயருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    பின்னர் அ.தி.மு.க கவுன்சிலர் பிரபாகரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கோவை மாநகரா ட்சியின் முந்தைய கூட்டத்தில் குப்பை அள்ளுவதற்கு தனியாருக்கு டெண்டர் விட அனுமதி கோரப்பட்டது. இதை ஏற்றுக்கொள்ளக்கூடாது என தி.மு.க, அ.தி.மு.க கவுன்சிலர்கள் உள்பட அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தோம். இதனால் அந்த தீர்மானம் தள்ளி வைக்கப்பட்டது.

    ஆனால் இந்த மாதமும் அந்த விவாதம் மீண்டும் சபைக்கு வருகிறது. மாநகராட்சி கூட்டத்தின் அனுமதி பெறாமல் ரூ.170 கோடி பணம் தனியாருக்கு தாரைவார்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் பொது மக்கள் மாநகராட்சிக்கு கட்டிய வரிப்பணம் வீணடிக்கப்பட்டு உள்ளது.

    மேயருக்கு அதிகார வரம்பு என்னவென்று தெரியவில்லை. இந்த டெண்டருக்கு முன் அனுமதி வழங்கப்ப ட்டுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்து கிறது.

    அவசர கோலத்தில் டெண்டர் வழங்கப்பட்டு உள்ளது. இந்த விவகாரத்தில் எத்தனை லட்சம்-கோடிகள் கைமாறியது என தெரியவில்லை.

    தப்பு செய்தால் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எடப்பாடியார் வழியில் நாங்கள் தட்டிக் கேட்போம். இதில் ஊழல் நடந்து உள்ளது. கண்டிப்பாக விசாரணை தேவை.

    கோவை மாநகராட்சி மேயர் வீட்டிற்கு லஞ்ச ஒழிப்புத் துறையும் அமலாக்கத்துறையும் விரைவில் சோதனைக்கு வரும். அவருக்கு மக்கள் மீது அக்கறை இல்லை.கோவை மாநகராட்சியில் அத்தனை ரோடும் பழுதடைந்து உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

    ×