search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "admk general assembly"

    • ராஜபாளையம் அருகே அ.தி.மு.க பொதுக்கூட்டம் நடந்தது.
    • இதற்கான ஏற்பாடுகளை கிழக்கு ஒன்றிய செயலாளர் குறிச்சி யார்பட்டி மாரியப்பன் செய்திருந்தார்.

    ராஜபாளையம்

    சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராஜ பாளையம் கிழக்கு ஒன்றியம் சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவி கள் வழங்கும் விழா சத்திரப்பட்டி நடுத்தெருவில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். ராஜபாளையம் கிழக்கு ஒன்றியசெயலாளரும், கூட்டுறவு வங்கி தலை வருமான குறிச்சியார்பட்டி மாரியப்பன் வரவேற்று பேசினார். கிளைக் கழகச்செயலாளரும், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளருமான முருகபூபதி, சத்திரப்பட்டி கிளை செயலாளரும், ஒன்றிய அவைத்தலைவருமான முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முன்னாள் அமைச்சரும், கொள்கை பரப்பு இணைச் செயலாளருமான மா.பா.க.பாண்டியராஜன் சிறப்புரையாற்றி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தலைமைக்கழக பேச்சா ளர்கள் சவுண்ட் சரவணன், மதுரை முத்தரசு, சரவெடி சம்சுகனி பேசினர்.

    கூட்டத்தில் சாத்தூர் கிழக்கு ஒன்றிய செய லாளர் சண்முக கனி, வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் தங்கவேல், மேற்குஒன்றிய செயலாளர் மணிகண்டன், மகளிரணியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கணபதியாபுரம் கிளை செயலாளரும், ஒன்றிய அம்மா பேரவை செயலாளருமான சேகர் மற்றும் லட்சுமணன், முத்து கணபதி நன்றி கூறினர். ஏற்பாடுகளை கிழக்கு ஒன்றிய செயலாளர் குறிச்சி யார்பட்டி மாரியப்பன் செய்திருந்தார்.

    • எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் தொகுதி சார்பில் எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக பொதுக்கூட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள மாடப்பள்ளி மந்தைவெளியில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு திருப்பத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளரும் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் டாக்டர் என்.திருப்பதி தலைமை வகித்தார். அனைவரையும் திருப்பத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சி.செல்வம் வரவேற்றார், கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ கே. ஜி. ரமேஷ் நகரச் செயலாளர் டி. டி. குமார், ஒன்றிய செயலாளர் மணிகண்டன், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் டாக்டர் லீலா சுப்ரமணியம், தொடக்க உரை ஆற்றினார்கள் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சர் கே. சி. வீரமணி கலந்து கொண்டு பேசிகனார்.

    கூட்டத்தில் தலைமைக் கழக பேச்சாளர் டாக்டர் சுனில் பேராவூரணி திலீபன், உட்பட ஏராளமானோர் பேசினார்கள். முடிவில் மாவட்ட பிரதி பழனி நன்றி கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஓபிஎஸ் தரப்பில் 200 பேர் மீதும், ஈபிஎஸ் தரப்பில் 200 பேர் மீதும் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு.
    • மோதல் சம்பவத்தையடுத்து கட்சி தலைமை அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் ஏராளமான போலீசார் குவிப்பு.

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆதரவாளர்கள் கடுமையாக மோதிக்கொண்டனர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். அதேசமயம், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பலர் இன்னும் கட்சி தலைமை அலுவலகத்திற்குள் இருந்தனர்.

    மோதல் சம்பவத்தையடுத்து கட்சி தலைமை அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அளித்தனர். மேலும், சட்டம் ஒழுங்கு தொடர்பாக, ராயப்பேட்டை காவல் நிலையத்தில், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் ஆலோசனை நடத்தினர். அப்போது, அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.

    இந்நிலையில், சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகம் முன்பாக நடந்த கலவரம் தொடர்பாக 400 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், ஓபிஎஸ் தரப்பில் 200 பேர் மீதும், ஈபிஎஸ் தரப்பில் 200 பேர் மீதும் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் முன்பு மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணன் ஆஜரானார்.
    • முறையீட்டை ஏற்று நாளை விசாரிப்பதாக உயர்நீதிமன்ற நீதிபதி அனுமதி.

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆதரவாளர்கள் கடுமையாக மோதிக்கொண்டனர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.

    மோதல் சம்பவத்தையடுத்து கட்சி தலைமை அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சட்டம் ஒழுங்கு தொடர்பாக, ராயப்பேட்டை காவல் நிலையத்தில், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் ஆலோசனை நடத்தினர். அப்போது, அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்க முடிவு செய்தனர். அதன்பின்னர் கட்சி அலுவலகத்தை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.

    இந்நிலையில், அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முறையீடு செய்துள்ளார்.

    சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் முன்பு மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணன் ஆஜராகி அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவிடக் கோரி முறையீட்டுள்ளார்.

    அதிமுக அலுவலக சீலை அகற்றும் முறையீட்டை ஏற்று நாளை விசாரிப்பதாக உயர்நீதிமன்ற நீதிபதி அனுமதி அளித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டதில் என்ன நீதிமன்ற அவமதிப்பு உள்ளது ? என்று நீதிபதிகள் கேள்வி.
    • சென்னை உயர்நீதிமன்றத்தின் ஒரு நபர் அமர்வுதான் முடிவெடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

    அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூன் மாதம் 23-ந்தேதி சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    அந்த பொதுக்குழு கூட்டத்தில் ஏற்கனவே நிறைவேற்ற முடிவு செய்திருந்த 23 தீர்மானங்களை தவிர வேறு தீர்மானங்கள் எதையும் நிறைவேற்றக் கூடாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டன. அந்த நேரத்தில் ஜூலை 11-ந்தேதி அ.தி.மு.க. பொதுக்குழு மீண்டும் கூடும் என்றும் அதில் பொதுச்செயலாளர் பதவி தொடர்பான தீர்மானமும் சேர்க்கப்பட்டு ஏற்கனவே உள்ள 23 தீர்மானங்களும் நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுக்குழுவில் 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டதால் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சென்னை ஐகோர்ட்டில் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நாளை (7-ந்தேதி) விசாரணைக்கு வர உள்ளது.

    கடந்த ஜூன் 23-ந்தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தரப்பினர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு வழக்கு தொடர்ந்தனர்.

    மேலும் பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் ஒத்துழைப்புதராததால் கட்சி நிர்வாகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கூடுதல் மனு ஒன்றையும் தாக்கல் செய்தனர்.

    அவர்கள் தாக்கல் செய்துள்ள மனுவில், 'ஓ.பன்னீர்செல்வம் ஒத்துழைப்பு தராததால் கட்சி நிர்வாகம் பாதிக்கப்பட்டுள்ளது. கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற நிலை மாறி இன்று ஓ.பன்னீர்செல்வம் பொருளாளராக மட்டும் செயல்பட்டு வருகிறார். கட்சிக்கு என்னென்ன பொறுப்புகள் இருக்கிறதோ அந்த பொறுப்புகளுக்கு ஏற்ப அவர் செயல்படவில்லை.

    ஓ.பன்னீர்செல்வம் தனது பொறுப்புகளை சரிவர செய்யவில்லை. பொருளாளர் கையெழுத்திடாததால் பணியாளர்களுக்கு ஊதியம் தரமுடியவில்லை' என்று மனுவில் கூறப்பட்டு இருந்தது.

    இதற்கிடையே எடப்பாடி பழனிசாமி தரப்பினர் ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டை நாடினால் தங்கள் தரப்பு வாதங்களையும் கேட்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனுவும் தாக்கல் செய்திருந்தனர்.

    இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. இதில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தங்கள் வாதங்களை எடுத்து வைத்தனர்.

    அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பினரிடம் சுப்ரீம் கோர்டு நீதிபதி பல்வேறு கேள்விகளை எழுப்பினார். 23 தீர்மானங்களுக்கு மேல் நிறைவேற்றக் கூடாது என்கிற அந்த சமயத்தில் ஏற்கனவே நடை பெற்ற பொதுக்குழுவில் முடிந்துவிட்டது.

    ஏனென்றால் அந்த பொதுக்குழுவில் ஒரு தீர்மானம் கூட நிறைவேற்றப்படவில்லை. எனவே அதற்கு எதிராக மேல் முறையீடு செய்ய வேண்டிய அவசியம் என்ன என்று கேள்வி எழுப்பினர்.

    அதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பை சேர்ந்த வக்கீல், 'எங்களுக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்பு வழக்கு போடப்படுகிறது. எனவே கோர்ட்டு அவமதிப்பு வழக்கை தொடரக்கூடாது என்று ஆணையிட வேண்டும். ஜூலை 11-ந்தேதி நடைபெற உள்ள பொதுக்குழுகூட்டத்துக்கு எந்த விதமான தடங்கலும் இருக்க கூடாது. தங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்களை நிறைவேற்ற சுதந்திரம் வேண்டும்.

    கடந்த முறை நடந்த பொதுக்குழு கூட்டத்துக்கு வந்தது போல எந்தவிதமான தடையோ, கட்டுப்பாடுகளோ வந்துவிடக்கூடாது என்ற வாதங்களை முன் வைத்தார். அதற்கு நீதிபதி, 'ஜூலை 11-ந்தேதி நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்துக்கு நாங்கள் ஏன் தடை விதிக்க வேண்டும்? கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு என்ன காரணங்கள் உள்ளன.

    இந்த வழக்கு ஐகோர்ட் டில் இருக்கிறது. அவர்கள் நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இருக்கிறது. அப்படிப்பட்ட நிலையில் பொதுக்குழுவுக்கு கட்டுப்பாடு மற்றும் தடையை ஏன் விதிக்க வேண்டும்?

    இது உள்கட்சி பிரச்சினை என்பதால் இதை நீங்கள் தான் சரிசெய்துகொள்ள வேண்டும். இதை ஏன் சுப்ரீம் கோர்ட்டுக்கு கொண்டு வருகிறீர்கள்? தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டதில் நீதிமன்ற அவமதிப்பு என்ன இருக்கிறது?

    இந்த விவகாரத்தில் சென்னை ஐகோர்ட்டின் ஒரு நபர் அமர்வு முடிவு எடுக்க வேண்டும். ஜூலை 11-ந்தேதி நடைபெறும் பொதுக்குழு விவகாரத்தில் நாங்கள் எப்படி தலையிட முடியும்? கட்சி உள் விவ காரங்கள், பொதுக்குழு செயல்பாடுகளில் கோர்ட்டு தலையிட வேண்டும் என்று நினைக்கிறீர்களா?

    நீங்கள் ஒரு கட்டத்தில் நட்பாக இருந்தீர்கள். இப்போது பிரச்சினை ஏற்பட்டுள்ளது. ஜூலை 11-ந்தேதி நடைபெற உள்ள அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க முடியாது' என்று நீதிபதி கூறினார்.

    இதையடுத்து இந்த மேல் முறையீட்டு வழக்கில் இரு தரப்பினரும் பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

    இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் வக்கீல்கள் வைத்தியநாதன், சித்தார்த்ருத்ரா ஆகியோர் ஆஜராகி வாதாடி னார்கள். வழக்கு விசாரணை நடைபெற்றதை யொட்டி சி.வி.சண்முகம் எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ. இன்பதுரை ஆகியோர் டெல்லி சென்றிருந்தனர்.

    ×