search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "admk member killed"

    அ.தி.மு.க. பிரமுகரை மனைவியே சுத்தியால் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருவாரூர்:

    அ.தி.மு.க. பிரமுகரை மனைவியே சுத்தியால் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூரில் இன்று அதிகாலை நடந்த இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

    திருவாரூர் அகரநல்லூர் மேட்டுத் தெருவை சேர்ந்தவர் ரவி (வயது 35). இவர் அப்பகுதி அ.தி.மு.க. கிளை செயலாளராக இருந்து வந்தார். இவரது மனைவி சித்ரா (30). இவர்களுக்கு பிரவீன்குமார்(9), மதன் குமார் (7) என்ற 2 மகன்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் ரவி தினமும் மதுகுடித்து விட்டு வந்து மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார். மேலும் மனைவியின் நடத்தையிலும் சந்தேகப்பட்டு தொடர்ந்து தகராறு செய்து வந்துள்ளார்.

    இதேபோல் நேற்று இரவும் கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இரவு நீண்டநேரமாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பிரச்சினை முற்றியது. பின்னர் ரவி தூங்கி விட்டார்.

    இந்த நிலையில் கணவர் மீது சித்ரா கடும் ஆத்திரத்தில் இருந்தார். இதனால் தன்னிடம் தொடர்ந்து தகராறு செய்து வரும் கணவரை கொலை செய்து விட வேண்டும் என்று அவர் முடிவு செய்தார்.

    இன்று அதிகாலையில் வீட்டில் ரவி தூங்கி கொண்டிருந்தார். அப்போது வீட்டில் இருந்த சுத்தியலை எடுத்து ரவியின் தலையில் சித்ரா, சுத்தியால் ஓங்கி அடித்தார். கடும் ஆத்திரத்தில் இருந்த அவர் பலமுறை சுத்தியால் தாக்கியதால் ரவி பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    பின்னர் ரவியை கொலை செய்ய பயன்படுத்திய சுத்தியலுடன் திருவாரூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் சித்ரா சரண் அடைந்தார். அப்போது போலீசாரிடம், தனது கணவரை கொலை செய்து விட்டதாக தெரிவித்தார்.

    இதை கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் கொலை நடந்த இடத்துக்கு போலீசார் சென்று ரவியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு ஆஸ்பத் திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து சித்ராவை கைது செய்தனர்.

    அ.தி.மு.க. பிரமுகரை மனைவியே சுத்தியால் அடித்து கொன்ற சம்பவம் திருவாரூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த வந்த வேலூர் அதிமுக பிரமுகர் நெரிசலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். #karunanidhideath #dmk

    வேலூர்:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணம் அடைந்ததை தொடர்ந்து அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக நேற்று சென்னை ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டது.பொதுமக்களின் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் இருந்தது.

    கருணாநிதியின் உடலை பார்த்து விட வேண்டும் என்ற ஆர்வத்தில் பொதுமக்கள் முண்டியடித்துக் கொண்டு சென்றனர். சிலர் தடுப்புகளை தகர்த்து விட்டு சென்றனர். இதில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 26 பேர் படுகாயம் அடைந்தனர்.

    அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதில் 4 பேர் இறந்தனர். ஆண் ஒருவர் அடையாளம் தெரியாமல் இருந்தது. அவரது புகைப்படம் இன்று செய்திதாளில் வெளியாகி இருந்தது. இதனை அவரின் உறவினர்கள் பார்த்து அடையாளம் கண்டு பிடித்தனர்.

    அவர் வேலூர் கஸ்பாவை சேர்ந்த மோகன் (வயது65) என்பது தெரியவந்தது. இவர் வேலூர் கஸ்பா பகுதி அ.தி.மு.க. துணை செயலாளராக பணியாற்றி வந்தார். அண்ணா காலத்தில் தி.மு.க.வில் இருந்த அவர் எம்.ஜி.ஆர். பிரிந்து சென்ற போது அ.தி.மு.க.வில் சேர்ந்தார். கருணாநிதி இறந்த தகவல் கேட்டு அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சென்னைக்கு புறப்பட்டார்.

    அவரது மனைவி பார்வதி சென்னைக்கு செல்ல வேண்டாம் என்று கூறினார். ஆனால் அவர் திராவிட தலைவர்களில் கடைசி தலைவர் இறந்து விட்டார். நான் கட்டாயம் அவர் உடலை பார்த்து அஞ்சலி செலுத்தியே ஆகவேண்டும் என்று கூறி ரூ.2 ஆயிரம் பணம் வாங்கி கொண்டு சென்னைக்கு ரெயிலில் வந்தார்.

    அங்கு வந்த அவர் நெரிசலில் சிக்கி பரிதாபமாக இறந்து விட்டார். இறந்த மோகனுக்கு பார்வதி என்ற மனைவி, மகன் பாலாஜி, மகள் இந்துமதி உள்ளனர். #karunanidhideath #dmk

    தேவனாம்பட்டினத்தில் அதிமுக பிரமுகர் கொலை வழக்கில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

    கடலூர்:

    கடலூர் தேவனாம்பட்டினம் மீனவர்களுக்கும், முதுநகர் சோனாங்குப்பம் மீனவர்களுக்கும் கடலில் மீன்பிடித்தது தொடர்பாக கடந்த 15-ந்தேதி மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக பயங்கர ஆயுதங்களுடன் தேவனாம்பட்டினம் மீனவர்கள் சோனாங்குப்பத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர்.

    இதில் சோனாங்குப்பத்தை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் பஞ்சநாதன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தேவனாம் பட்டினத்தை சேர்ந்த ஆறுமுகம் மற்றும் சதீஷ் (36) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    இவர்கள் மீது வழிப்பறி வழக்குகளும் உள்ளன. இந்நிலையில் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

    இதைத்தொடர்ந்து கலெக்டர் தண்டபாணி உத்தரவின்பேரில் ஆறுமுகம், சதீஷ் மற்றொரு ஆறுமுகம் ஆகிய 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

    கடலூர் அருகே அதிமுக பிரமுகரை கொன்ற குற்றவாளிகளை உடனே கைது செய்ய கோரி அமைச்சர் எம்.சி.சம்பத்திடம் மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
    கடலூர்:

    கடலூர் தேவனாம்பட்டினம் மற்றும் சோனாங்குப்பம் பகுதி மீனவர்களிடையே தகராறு இருந்து வந்தது. முன்விரோதத்தை மனதில் வைத்து கொண்டு தேவனாம்பட்டினம் மீனவர்களில் சிலர் சோனாங்குப்பத்துக்கு சென்று அங்கு வெளியில் நின்று கொண்டிருந்த அ.தி.மு.க. பிரமுகர் பஞ்சநாதனை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் பஞ்சநாதன் பரிதாபமாக இறந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனை முடிந்து சோனாங்குப்பத்தில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. அவரது உடலை பார்த்து குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுதனர்.

    அமைச்சர் எம்.சி.சம்பத், அ.தி.மு.க. நகர செயலாளர் குமரன்,முன்னாள் நகர மன்ற தலைவர் சேவல்குமார், ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி மற்றும் நிர்வாகிகள் பஞ்சநாதனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்கள். குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என்று பஞ்சநாதனின் உறவினர்கள், மீனவர்கள் அமைச்சரிடம் புகார் செய்தனர். குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மீனவர்களிடம் அமைச்சர் உறுதி அளித்தார்.

    இதேப்போல் முன்னாள் எம்.எல்.ஏ. அய்யப்பன் தலைமையில் கடலூர் மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர் சங்க தலைவர் பிரகாஷ், கூட்டுறவு சங்க தலைவர்கள் ஆதிபெருமாள், ரவிச்சந்திரன் மற்றும் ஏராளமானோர் பஞ்சநாதனின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்துக்கு ஆறுதல் கூறினர்.
    ×