என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "alcohol bottle seized"
நாகர்கோவில்:
பாராளுமன்ற தேர்தல் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது. வேட்பாளர்கள் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை, வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பறக்கும் படை அதிகாரிகளும் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். பணம் விநியோகம், மதுபானங்கள் சப்ளையை தடுக்க அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
நாகர்கோவில் அருகே இன்று பறக்கும் படை அதிகாரிகள் ஆம்னி பஸ் ஒன்றில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்த 17 மதுபாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.
பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள் நாகர்கோவில் மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. வாக்காளர்களுக்கு சப்ளை செய்ய மதுபாட்டில்கள் கொண்டு வரப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதேபோல் ராஜாக்கமங்கலம் அருகே பறக்கும் படை அதிகாரிகள் இன்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.2 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதி யில் அதிகாரிகள் நேற்றிரவு நடத்திய வாகன சோதனையில் காரில் கொண்டு வரப்பட்ட ரூ.2 லட்சம் சிக்கியது.
நேற்று காலையில் பத்மநாபபுரம் தொகுதியில் ரூ.4 லட்சத்து 92 ஆயிரத்து 720-ம், கிள்ளியூர் தொகுதியில் ரூ.2 லட்சத்து 10 ஆயிரத்து 500-ம், நாகர்கோவில் தொகுதியில் கார் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தத்தில் இதுவரை மாவட்டம் முழுவதும் 13 வாகனங்கள், 11 மிக்சிகள், 39 கிராம் தங்கம், 23 மதுபாட்டில்கள், ரூ.78 லட்சத்து 75 ஆயிரத்து 395 ரொக்கப்பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், திருட்டு மது விற்பனை நடைபெறுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜ ராஜனுக்கு தகவல் கிடைத்தது.
அவரது உத்தரவின் பேரில் ராஜபாளையம் சரகத்தில் துணை சூப்பிரண்டு ரவிச்சந்திரன் மேற்பார்வையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
தெற்கு போலீஸ் இன்ஸ் பெக்டர் பவுல்ஏசுதாஸ், சப்-இன்ஸ்பெக்டர்கள் அருண்குமார், மூவேந்திரன், திருமலைராஜா மற்றும் போலீசார் ரோந்து சென்றபோது சங்கரன் கோவில் முக்கு பகுதியில் உள்ள கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்ததோடு, கடை உரிமையாளர் முருகனையும் கைது செய்தனர்.
இதேபோல் அக்னி, சரவணன் (48) ஆகியோரும் புகையிலை பொருட்கள் விற்றதாக கைது செய்யப்பட்டனர்.
சேத்தூர் புறக்காவல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமசாமி தலைமையிலான போலீசார் ரோந்து சென்றபோது சுந்தர் ராஜபுரம் பகுதியில் ஒரு கடையில் திருட்டுத்தனமாக மது விற்கப்படுவது தெரிய வந்தது. அதனை விற்றதாக போதராஜ் (40) என்பவரை கைது செய்த போலீசார் 20 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
தளவாய்புரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பெருமள்சாமி, ரெங்கன் மற்றும் போலீசார் முறம்பு பகுதியில் மது விற்றதாக நாகராஜ் (27) என்பவரையும் சேத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ், சொக்கநாதன் புத்தூர் பகுதியில் மாரிமுத்து (29) என்பவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்