search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "assignment"

    • ஆராய்ச்சி செய்து, உரிய விளக்கத்துடன் பதிலளிக்கும்படி அசைன்மென்ட் கொடுக்கப்பட்டது.
    • அதில் கேட்கப்பட்ட கேள்விகளைக் கண்ட மாணவர்கள் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் ஒக்லஹாமா மாகாணத்தில் ஒரு பள்ளி செயல்பட்டு வருகிறது. அங்கு படிக்கும் மாணவர்களுக்கு சமூக அறிவியல் பாடத்தில் வீட்டுப்பாடம் செய்து வரும்படி அசைன்மென்ட் கொடுக்கப்பட்டது.

    அந்த அசைன்மென்டில் ஆராய்ச்சி செய்து, உரிய விளக்கத்துடன் பதிலளிக்கும்படி சில கேள்விகள் கொடுக்கப்பட்டன.

    அதில் கேட்கப்பட்ட கேள்விகளைக் கண்ட மாணவர்களின் பெற்றோர் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதில் இடம்பெற்ற கேள்விகளை ஒரு மாணவியின் தாயார் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அது சர்ச்சையாக மாறியது.

    அதில் இடம்பெற்ற கேள்விகள் பின்வருமாறு:

    உலகம் உருவானது எப்படி? அதனை உருவாக்கியது யார்? எப்போது தீமை தோன்றியது. இப்போதும் உள்ளதா?

    ஒழுக்கம் என்றால் என்ன? மதம் என்றால் என்ன? கிறிஸ்துவம் என்றால் என்ன?

    கிறிஸ்தவராக இருப்பதன் அர்த்தம் என்ன? கடவுள் இருக்காரா? இல்லையா? சாத்தான் இருப்பது உண்மையா? நல்லது அல்லது கெட்டது அல்லது இரண்டையும் மக்கள் ஏற்றுக்கொண்டனரா?

    என இதுபோன்ற 10 கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தன.

    ஒக்லஹாமாவில் உள்ள உயர்நிலை பள்ளியில் மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட அசைன்மென்ட். உலக வரலாற்றில் கேட்கப்பட்ட கேள்விகள். இதனை ஆராய்ச்சித்தாள் என்கின்றனர். இது மிகவும் அற்பத்தனமானது என பதிவிட்டுள்ளார்.

    அவரது இந்தப் பதிவைக் கண்ட சமூகதள வாசிகள் அப்பள்ளியையும், கேட்கப்பட்ட கேள்விகளையும் விமர்சித்து கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

    இணைய தளத்தில் பேசுபொருளான நிலையில், இந்தக் கேள்விகள் குறித்து மறு ஆய்வு செய்யப்படும் என அப்பள்ளி நிர்வாகம் விளக்கமளித்தது.

    • ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் பணி நிரவல் செய்யப்பட உள்ளன.
    • மாணவ-மாணவிகளின் எண்ணிக்கையின்படி, நடத்தப்பட வேண்டும்.

    சென்னை:

    சென்னை, மதுரை, கோவை மாநகராட்சி பள்ளிகளை தவிர, அரசு, நகராட்சி, மாநகராட்சி உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் பணி நிரவல் செய்யப்பட உள்ளன.

    அதன்படி, பணி நிரவல் கலந்தாய்வு கடந்த ஆகஸ்டு மாதம் 1-ம்தேதி பள்ளியில் உள்ள மாணவ-மாணவிகளின் எண்ணிக்கையின்படி, நடத்தப்பட வேண்டும்.

    அதாவது, மேல்நிலைப் பள்ளிகளில் 1,500 மாணவ-மாணவிகள் உள்ள பள்ளிகளுக்கு ஒரு ஆய்வக உதவியாளர், 1,501 முதல் 3,000 வரை 2 பேர், 3,001 முதல் அதற்கு மேல் 3 பேர் என்ற அடிப்படையிலும், உயர்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு பணியிடம் என்ற அடிப்படையிலும் ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் பணிநிரவல் செய்ய கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

    பணிநிரவல் மேற்கொள்ளும்போது உபரி என கண்டறியப்பட்ட ஆய்வக உதவியாளரில் மூத்தவர் முதலில் பணிநிரவல் செய்யப்படவேண்டும் என்பது போன்ற வழிகாட்டு நெறிமுறைகளையும் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

    • தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் 3,359 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
    • www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்துக் கொள்ளலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 17.09.2023 ஆகும்.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் 3,359 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    இத்தேர்விற்கு www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்துக் கொள்ளலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 17.09.2023 ஆகும்.

    இந்த தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு சேலம் கோரிமேடு பகுதியில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வருகிற 29-ந் தேதி காலை 10 மணியளவில் தொடங்கப்பட உள்ளது.

    இப்பயிற்சி வகுப்பு ஏற்கனவே போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்ற சிறந்த வல்லுநர்களை கொண்டு நடத்தப்பட உள்ளது. மேலும் பாடக்குறிப்புகள் இலவசமாக வழங்கப்படுவதோடு மாதிரித் தேர்வுகளும் நடத்தப்படவுள்ளன.

    தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    • 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த 6-ந் தேதி தொடங்கி, 20-ந் தேதியுடன் நிறைவடைந்தது.
    • 25-ந் தேதி முதல் உதவி தேர்வாளர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடவுள்ளனர்.

    சேலம்:

    தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த 6-ந் தேதி தொடங்கி, 20-ந் தேதியுடன் நிறைவடைந்தது. இதனையடுத்து விடைத்தாள் திருத்தும் பணிகளை நாளை மாநிலம் முழுவதும் தொடங்கவுள்ளது. இதற்காக மாணவர்களின் விடைத்தாள்கள் ஏற்கனவே விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தை பொறுத்த வரை 625 அரசு, உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 44,831 மாணவர்கள் நடப்பாண்டு 10-ம் வகுப்பு தேர்வெழுதினர். தொடர்ந்து, விடைத்தாள் திருத்தும் பணிக்காக 3 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    சேலம் கல்வி மாவட்டத்தில், சூரமங்கலம் செயின்ட் ஜோசப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், ஆத்தூர் தேவியாக்குறிச்சி தாகூர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், சங்ககிரி கல்வி மாவட்டத்தில் ஜலகண்டாபுரம் மினர்வா பள்ளியிலும் விடைத்தாள் திருத்தும் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

    விடைத்தாள் திருத்தும் பணிக்காக முகாம் அலுவலர்கள் தலை மையில், மதிப்பெண் சரிபார்ப்பு அலுவலர், முதன்மை தேர்வாளர், கூர்ந்தாய்வாளர், உதவி தேர்வாளர், இதர பணியாளர்கள் என சுமார் 2,400-க்கும் மேற்பட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர். நாளை 24-ந் தேதி முதன்மை தேர்வாளர், கூர்ந்தாய்வாளர் பணி களை தொடங்கி வைத்து, 25-ந் தேதி முதல் உதவி தேர்வாளர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடவுள்ளனர். இதனிடையே விடைத்தாள் திருத்தும் பணியின்போது, தேர்வுகள் இயக்கம் வெளியிட்டுள்ள நேர விதிகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இது குறித்து ஆசிரியர்கள் கூறுகையில், விடைத்தாள் மதிப்பீட்டுப் பணி என்பது மிகவும் பொறுப்பான பணி. ஆனால் பல நேரங்களில் உரிய நேர விதிகள் கடைபிடிக்கப்படு வதில்லை. ஒரு சிலர் அவசர, அவசரமாக ஒதுக்கிய நேரத்திற்கு முன்னதாகவே மதிப்பீடு செய்துவிடுகின்றனர்.

    இதனை பார்த்து மற்றவர்கள் பதற்றமடைந்து விரைவாக திருத்த வேண்டிய சூழல் உருவாகிறது. இதனால், துல்லியத்தன்மை இல்லா ததுடன், குளறுபடிகளும் நடப்பதால் மாணவர்கள் தான் பாதிக்கப்படுகின்றனர். கடந்த முறை விடைத்தாள் திருத்தும் பணியில் கவனக்கு றைவுடன் இருந்ததாக ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

    ஒரு சிலர் செய்யும் தவறால் ஒட்டுமொத்த மையமும் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. எனவே, விடைத்தாளை பொறுமையாக மதிப்பீடு செய்யும் வகையில், உரிய நேர விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்றனர்.

    • தாக்கப்பட்டதை கண்டித்து கருப்பு பேட்ஜ் அணிந்து பணிக்கு செல்ல வேண்டும்.
    • ஏப்ரல் முதல் வாரத்தில் உறுப்பினர் சேர்க்கை நடத்துவது.

    நீடாமங்கலம்:

    வலங்கைமானில் தமிழக ஆசிரியர் கூட்டணியின் வட்டார செயற்குழு கூட்டம் வட்டாரத் தலைவர் பாலமுருகன் தலைமையில் நடைபெற்றது. வட்டார செயலாளர் இளங்கோவன் கூட்டத்தின் பொருள் குறித்து விளக்கி பேசினார்.

    மாவட்டத் தலைவர் மணி, மாவட்ட மகளிர் அணி சத்தியபாமா, வட்டார மகளிர் அணி செயலாளர் சத்தியசீலா, மாவட்டத் துணைத் தலைவர் தர்மபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முன்னாள் வட்டார பொருளாளர்கள் கணேசன், சங்கராஜ், மாவட்ட பிரதிநிதி தண்டபாணி, கண்ணன், மைய செயலாளர்கள் இரவிசங்கர், லூர்து சேவியர், செந்தில் குமார், கல்வி ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

    இந்த கூட்டத்தில், தூத்துக்குடி மாவட்டம் புதூர் ஒன்றியம் கீழநம்பிபுரம் இந்து அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் கடுமையான முறையில் தாக்கப்பட்டதை கண்டித்து கருப்பு பேட்ஜ் அணிந்து பணிக்கு செல்ல வேண்டும்.

    ஐபெட்டோ அண்ணாமலை கோரிக்கைப்படி தாக்குதல் நடத்தியவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.

    ஏப்ரல் முதல் வாரத்தில் உறுப்பினர் சேர்க்கை நடத்துவது ஆகிய தீர்மானங்கள் இயற்றப்பட்டன.முடிவில் வட்டாரப் பொருளாளர் சுந்தரவடிவேலு நன்றி கூறினார்.

    இந்த தீர்மானங்களில் படி ஆசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணிக்கு சென்றனர்.

    • தமிழ்நாடு அரசு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் இரண்டாம் நிலை காவலர், சிறை காவலர், தீயணைப்பாளர் பணிக்கு வருகிற 27-ந்தேதி எழுத்துத் தேர்வு நடக்க உள்ளது.
    • காலை 10 மணி முதல் மதியம் 12.40 மணி வரை தேர்வு நடைபெற உள்ளது.

    சேலம்:

    தமிழ்நாடு அரசு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் இரண்டாம் நிலை காவலர், சிறை காவலர், தீயணைப்பாளர் பணிக்கு வருகிற 27-ந்தேதி எழுத்துத் தேர்வு நடக்க உள்ளது. இதையொட்டி சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் இலவச மாதிரி தேர்வு வருகிற 13-ந்தேதி நடத்தப்பட உள்ளது. ஏற்காடு அடிவாரத்தில் உள்ள விநாயகா மிஷன் மருந்தியல் கல்லூரியில் அன்று காலை 10 மணி முதல் மதியம் 12.40 மணி வரை தேர்வு நடைபெற உள்ளது. தேர்வுக்கு 9 மணிக்குள் தேர்வு மையத்துக்கு வர வேண்டும். தேர்வுக்கு விண்ணப்பித்த நகல், 2 பாஸ்போர்ட் போட்டோவை தேர்வை மையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

    ×