என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Auto accident"
- ஆட்டோ வந்து கொண்டிருந்தபோது சாலையின் குறுக்காக திடீரென நாய் ஓடியதாக கூறப்படுகிறது.
- ஆட்டோவில் பயணித்த சுமார் 10 பள்ளி குழந்தைகளுக்கு காயங்கள் ஏற்பட்டன.
சிங்கை:
நெல்லை மாவட்டம் அம்பையில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. பிளஸ்-2 வரை உள்ள இந்த பள்ளியில் அம்பை, கல்லிடைக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளி நிர்வாகம் சார்பில் மாணவ-மாணவிகளை அழைத்து வர தனியாக பள்ளியில் பஸ்கள் இருந்தாலும், பள்ளிக்கு சற்று தொலைவில் உள்ள அடையக்கருங்குளம், அகஸ்தியர்பட்டி பகுதிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் ஆட்டோக்களில் தினமும் வந்து செல்கின்றனர்.
அந்த வகையில் இன்று காலை வழக்கம்போல் வி.கே.புரம் அருகே உள்ள அடையக்கருங்குளத்தில் இருந்து ஒரு ஆட்டோவில் சுமார் 11 குழந்தைகள் பள்ளிக்கு புறப்பட்டனர்.
ஆட்டோவை அடையக்கருங்குளத்தை சேர்ந்த சுந்தர் என்பவர் ஓட்டி வந்தார். டிரைவரின் அருகே வி.கே.புரத்தை சேர்ந்த சித்திரை நாதன் என்பவரது மகன் பிரதீஷ்(வயது 10) என்ற 5-ம் வகுப்பு மாணவன் அமர்ந்திருந்தார்.
அகஸ்தியர்பட்டியில் தனியார் ஓட்டல் அருகே ஆட்டோ வந்து கொண்டிருந்தபோது சாலையின் குறுக்காக திடீரென நாய் ஓடியதாக கூறப்படுகிறது. இதனால் டிரைவர் சுந்தர் 'பிரேக்' பிடித்துள்ளார்.
இதில் கண்ணிமைக்கும் நேரத்தில் ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிரைவரின் அருகே அமர்ந்திருந்த பிரதீஷ் ஆட்டோவின் அடியில் சிக்கி கொண்டான்.
இதில் அவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான். ஆட்டோவில் பயணித்த சுமார் 10 பள்ளி குழந்தைகளுக்கு காயங்கள் ஏற்பட்டன. ஆட்டோ டிரைவரும் காயம் அடைந்தார். இந்த விபத்தில் ஆட்டோவின் கண்ணாடிகள் நொறுங்கியது.
தகவல் அறிந்து வி.கே. புரம் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். உயிரிழந்த மாணவன் பிரதீஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயம் அடைந்த குழந்தைகள் அம்பை ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- பலியானவர்களின் 5 பேரின் உடல்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மஞ்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
- விபத்தில் பலியான தஸ்னிமா ஐக்கிய அரபு நாட்டில் இருந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு தான் சொந்த ஊருக்கு வந்திருக்கிறார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மஞ்சேரி அருகே உள்ள குட்டிப்பாறை பகுதியை சேர்ந்த 7 பேர் நேற்று மாலை ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர். அந்த ஆட்டோவை அப்துல் மஜித்(வயது55) என்பவர் ஓட்டிச்சென்றார்.
அவர்களது ஆட்டோ செட்டியங்காடு என்ற பகுதியில் சென்ற போது, எதிரே கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் வந்த பஸ் மோதியது. இந்த விபத்தில் ஆட்டோ முற்றிலுமாக நொறுங்கியது.
இந்த விபத்தில் ஆட்டோ டிரைவர் அப்துல் மஜித், தஸ்னிமா(33), அவரது குழந்தைகள் ரின்ஷா பாத்திமா(12), ரைஹா பாத்திமா(4), சகோதரி முஹ்சினா(35) ஆகிய 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள்.
ஆட்டோவில் இருந்த மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்கள் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆட்டோவில் சிக்கிக் கிடந்தவர்களை மீட்டனர்.
பின்பு படுகாயம் அடைந்தவர்கள் கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பலியானவர்களின் 5 பேரின் உடல்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மஞ்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பஸ்சில் வந்த ஐயப்ப பக்தர்கள் யாரும் காயம் அடையவில்லை. சாலை திருப்பத்தில் பஸ் வேகமாக திரும்பிய போது தவறுதலாக ஆட்டோ மீது மோதியதாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் விபத்தில் பலியானவர்கள் பற்றி உருக்கமான தகவல்கள் கிடைத்துள்ளன. பலியான ஆட்டோ டிரைவர் அப்துல் மஜித் தனது மகளுக்கு திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்து வந்தார். அதற்கான வேலைகளில் ஈடுபட்டிருந்த நிலையில், மகள் திருமணத்திற்கு சில நாட்களே உள்ள நிலையில் அவர் பரிதாபமாக இறந்துவிட்டார்.
இதே போல் விபத்தில் பலியான தஸ்னிமா ஐக்கிய அரபு நாட்டில் இருந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு தான் சொந்த ஊருக்கு வந்திருக்கிறார். அப்போது புல்லூரில் உள்ள உறவினர்களை பார்ப்பதற்காக சென்ற போது தனது 2 குழந்தைகள் மற்றும் சகோதரியுடன் பலியாகிவிட்டார்.
இந்த விபத்து பலியானவர்களின் குடும்பத்தினர் மட்டுமின்றி, விபத்து நடந்த பகுதியைச் சேர்ந்தவர்களையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பணியை முடித்து விட்டு வீடு திரும்பிய போது பரிதாபம்
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
அரக்கோணம்:
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த பொன் பாடி எ.எம்.பேட்டையை சேர்ந்தவர் சற்குணம்(வயது 39). அதேபகுதியை சேர்ந்தவர் பாலாஜி(22), விக்னேஷ் (22).கட்டிட தொழிலாளிகள். இவர்கள் 3 பேரும் சென்னையில் நடந்து வரும் கட்டிட பணிக்கு சென்றனர். அங்கு சாரம் கட்டும் பணியை முடித்து விட்டு இரவு ஒரே பைக்கில் வீடு திரும்பிக்கொ ண்டிருந்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த பெருங்களத்தூர் கூட்ரோடு அருகே சென்ற போது அங்குள்ள வளைவில் லோடு ஆட்டோவும், இவர்கள் சென்ற பைக்கும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பைக்கில் வந்த 3 பேரும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர்.
இதில் பாலாஜி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். உடன டியாக அங்கிருந்த பொதுமக்கள், சற்குணத்தை மீட்டு திருத்தணியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியிலுல், விக்னேஷை திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் அனுப்பி வைத்தனர்.
தகவலறிந்த அரக்கோணம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பாலாஜியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்துக்குள்ளான பைக், ஆட்டோவை பறிமுதல் செய்தனர். இந்நிலையில் தனி யார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சற்குணம் நேற்று அதிகாலைசிகிச்சை பலனின்றி பரி தாபமாக இறந்தார்.
இதையடுத்து சற்குணத்தின் உடல் பிரேத பரிசோத னைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து விக்னேசுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பள்ளி மாணவிகள் உள்பட 6 பேர் காயம்
- விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
வேலூர்:
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே பாலூர், மசிகம், உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களை ஏற்றிக்கொண்டு ஆட்டோ ஒன்று வந்தது.
பக்காலபள்ளி என்ற இடத்தில் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ தறிக்கெட்டு ஓடி சாலையில் குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் ஆட்டோவில் பயணம் செய்த 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் சத்யா, சக்தி,நதியா, ஆட்டோ டிரைவர் சரத்குமார், ராணி, மல்லிகா ஆகிய 6 பேர் பலத்த காயமடைந்தார்.
இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் ஓடிவந்து, காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக பேரணாம்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து தகவல் அறிந்து பேரணாம்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளி நேரங்களில் விதிகளை மீறி ஆட்டோவில் அதிக அளவில் பொதுமக்களையும், பள்ளி மாணவர்களையும் ஏற்றி செல்வதால் இது போன்ற விபத்துக்கள் ஏற்படுகிறது. இதுபோன்ற விபத்துகளை தடுக்க குடியாத்தம் வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் மற்றும் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- 8 பேர் படுகாயம்
- போலீசார் விசாரணை
ஆம்பூர்:
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்த பெண்கள், ஆம்பூரில் உள்ள தனியார் ஷூ கம்பெனியில் வேலை செய்து வருகின்றனர்.
அதன்படி இன்று காலை 10-க்கும் மேற்பட்ட பெண்கள் ஷேர் ஆட்டோவில் ஆம்பூர் நோக்கி வந்தனர். அப்போது கடாம்பூர் அருகே வந்தபோது, நாய் ஒன்று குறுக்க ஓடியது.
இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த டிரைவர், ஆட்டோவை நிறுத்த முயற்சித்தார்.
அப்போது தரிக்கட்டு ஓடிய ஆட்டோ நிலை தடுமாறி சாலை ஓரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.
அங்கு அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் பேரணாம்பட்டு கலைஞர் நகர் பகுதியை சேர்ந்த ஸ்டாலின் மனைவி ஹேமாவதி (வயது 35) என்பவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து உமராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பிய போது விபரீதம்
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
செங்கம்:
செங்கம் அருகே புதுப்பாளையம் ஜி.என்.பாளையம் பகுதியை சேர்ந்தவர் சிவகாமி (வயது 60). இவர் புதுப்பாளையம் அருகே கூலி வேலை செய்துவிட்டு ஆட்டோவில் திரும்பி வந்து கொண்டிருந்தார்.
புதுப்பாளையம் அருகே வந்து கொண்டிருந்தபோது எதிர் பாராத விதமாக ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து விபத் துக்குள்ளானது.
இதில் சிவகாமி ஆட்டோவில் இருந்து கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு செங்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காககொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து புதுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- முஹம்மது பாஷா விருத்தாச்சலம் சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.
- ஆட்டோ சாலையின் இடது புறத்தில் கவிழ்த்து விபத்து ஏற்பட்டது .
கடலூர்:
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த காசிம் பாஷா மகன் முஹம்மது பாஷா( வயது 24) ஆட்டோ டிரைவர். இவர் தனது ஆட்டோவில் விருத்தாசலத்தில் இருந்து கண்டப்பக்குறிச்சிக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு, விருத்தாச்சலம் சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். ஏ. சித்தூர் கிராமத்திலுள்ள மின்சார வாரிய அலுவலகம் அருகே சென்ற போது நிலை தடுமாறி ஆட்டோ சாலையின் இடது புறத்தில் கவிழ்த்து விபத்து ஏற்பட்டது .
இதில் ஆட்டோவில் பயணம் செய்த கண்டபங்குறிச்சி கிராமத்தை சேர்ந்த தனலட்சுமி அவரது மகன் பிரவீன் ஆகிய இருவரும் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்கள் ஆனால் ஆட்டோவை ஓட்டி சென்ற டிரைவர் முஹம்மது பாஷா உடல் , தலை,முகம் ஆகிய பகுதிகளில் பலத்த அடிபட்டவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே முஹம்மது பாஷா இறந்து விட்டதாக கூறினார்கள் . அதனை தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் முஹம்மது பாஷா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருதா ச்சலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வேப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.
- ஆட்டோ மீது மின்சாரம் பாய்ந்து தீப்பிடித்தது.
- போலீசார் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆந்திரா மாநிலம் ஸ்ரீசத்யசாய் மாவட்டத்தில் விவசாய பணிக்காக 8 பேர் ஆட்டோவில் சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது, தாடிமரி மண்டலம் கொண்டம்பள்ளி அருகே ஆட்டோ மீது உயர்மின் அழுத்தம் மின்கம்பி அறுந்து விழுந்தது. இதில், ஆட்டோ மீது மின்சாரம் பாய்ந்து தீப்பிடித்தது.
ஆட்டோவிற்குள் இருந்து 8 பேரும் மின்சாரம் பாய்ந்து, தீயில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்ததை அடுத்து, போலீசார் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், மின்கம்பி அறுந்து ஏற்பட்ட விபத்தில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கந்தர்வக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அடுத்த வீராளிப்பட்டியை சேர்ந்தவர் விஜய் (வயது 26). இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் பார்த்தீபன் (28). மரம் வாங்கி விற்பனை செய்து வந்தார்.
சம்பவத்தன்று விஜய் ஆட்டோவில் பார்த்தீபன் புதுக்கோட்டைக்கு சென்றார். கந்தர்வக்கோட்டை அடுத்த ஆதனக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் போது சாலையோரம் நின்ற டிராக்டர் மீது ஆட்டோ மோதியது. இதில் 2 பேரும் பலத்த காயமடைந்தனர்.
அவர்களை பொதுமக்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பார்த்தீபன் இறந்தார். இந்த விபத்து குறித்து ஆதனக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜ் விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews
இச்சம்பவம் நேற்று காலை 10 மணி அளவில் நடைபெற்றுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து ஏற்பட்டதும் லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். #MPaccident
ஊத்துக்கோட்டையை அடுத்த ஆலபாக்கம் கிராமத்தை சேர்ந்த நரேஷ். ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர் ஆட்டோவில் திருவள்ளூரில் இருந்து ஊத்துக்கோட்டைக்கு சென்றார். அதில் 9 பேர் பயணம் செய்தனர்.
ஊத்துக்கோட்டை அருகே ஒதப்பை பகுதியில் சென்ற போது எதிரே வந்த கார் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ மீது மோதி கவிழ்ந்தது.
கார் மோதிய வேகத்தில் ஆட்டோ கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஆட்டோ டிரைவர் நரேஷ், ஆட்டோவில் பயணம் செய்த பூண்டி அருகே உள்ள மயிலாப்பூரை சேர்ந்த நதியா, இவரது மகள் ஹர்ஷவர்தினி, தாஸ், நாகசுந்தரி, காட்டம்மாள், ரித்விக், சேகர், செல்வம், கோவர்தன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அதே போல் காரில் பயணம் செய்த 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.
தகவல் அறிந்ததும் பென்னாலூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த 12 பேரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். விபத்து காரணமாக ஊத்துக்கோட்டை திருவள்ளூர் இடையே சுமார் அரை மணி நேரம் வாகன போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்