search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Awareness Walk"

    • மேலப்பாளையம் வி.எஸ்.டி. பள்ளிவாசல் முன்பு தொடங்கிய இந்த பேரணியை போக்கு வரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து கொடி யசைத்து தொடங்கி வைத்தார்.
    • நெல்லை மாவட்டத்தில் தினந்தோறும் விபத்து அதிகமாக நடந்து வருகிறது

    நெல்லை:

    நெல்லை மாவட்ட ஓட்டுனர் பயிற்சிப்பள்ளி களின் கூட்டமைப்பு, ஓட்டுனர் பயிற்சிப்பள்ளி சங்கம், அரசு போக்குவரத்து துறை இணைந்து சாலை பாதுகாப்பு வழிமுறைகள் தொடர்பான விழிப்புணர்வு நடை பயணத்தை நடத்தியது.

    பேரணி

    மேலப்பாளையம் வி.எஸ்.டி. பள்ளிவாசல் முன்பு தொடங்கிய இந்த பேரணியை போக்கு வரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து கொடி யசைத்து தொடங்கி வைத்தார். பேரணியானது மேலப்பாளையம் சிக்னலில் முடிவடைந்தது.

    அங்கு நடந்த நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பிரபாகரன் கலந்து கொண்டு 20 ஆண்டுகளுக்கும் மேலாக நெல்லையில் விபத்து ஏற்படுத்தாமல் ஆட்டோ ஓட்டிய டிரைவர்களுக்கு பொன்னாடை போர்த்தி பரிசு வழங்கினார். தொடர்ந்து அவர் பேசுகையில்,

    சாலை விதிகள்

    நெல்லை மாவட்டத்தில் தினந்தோறும் விபத்து அதிகமாக நடந்து வருகிறது. இதனை குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். தற்போது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கையால் விபத்துக்கள் சற்று குறைந்துள்ளது. அடுத்த ஆண்டிற்குள் விபத்தில்லா நெல்லையை உருவாக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம். அதற்கு வாகன ஓட்டிகள், பொதுமக்கள் எங்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். வாகன ஓட்டிகள் சாலை விதிகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்றார்.

    • இந்திய தணிக்கை நாளையொட்டி புதுவை மாநில முதன்மை தணிக்கை மற்றும் கணக்காய்வு துறை சார்பில் தணிக்கை குறித்த விழிப்புணர்வு நடை பயணம் புதுவை கடற்கரை சாலையில் நடைபெற்றது.
    • இந்த விழிப்புணர்வு நடை பயணத்தை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    இந்திய தணிக்கை நாளையொட்டி புதுவை மாநில முதன்மை தணிக்கை மற்றும் கணக்காய்வு துறை சார்பில் தணிக்கை குறித்த விழிப்புணர்வு நடை பயணம் புதுவை கடற்கரை சாலையில் நடைபெற்றது.

    இந்த விழிப்புணர்வு நடை பயணத்தை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் புதுவை பொது கணக்கு குழு தலைவரான கே.எஸ். பி.ரமேஷ் எம்.எல்.ஏ., முதன்மை கணக்காய்வு தலைவர் ஆனந்த், முதுநிலை கணக்காய்வு தலைவர் வர்ஷினி அருண் போலீஸ் டி.ஜி.பி. மற்றும் அதிகாரிகள் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

    • கலெக்டர் தொடங்கி வைத்தார்
    • தரைப்பாலம் அமையும் இடத்தையும் ஆய்வு

    வேலூர்:

    சர்வதேச கழிவறை தினத்தையொட்டி வேலூர் அடுத்த அடுக்கம்பாறையில் விழிப்புணர்வு நடைபயணத்தை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் இன்று தொடங்கி வைத்தார்.

    ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இருந்து போலீஸ் பயிற்சி கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி கொண்டு மூஞ்சூர் பட்டு வரை நடைபயணம் சென்றனர். நிகழ்ச்சியில் ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ மாவட்ட திட்ட இயக்குனர் ஆர்த்தி கணியம்பாடி, ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் திவ்யா, துணை தலைவர் கஜேந்திரன், தாசில்தார் செந்தில், வட்டார வளர்ச்சி அலுவலர் தயாளன் ,ஊராட்சி மன்ற தலைவர் திருநாவுக்கரசு துணைத் தலைவர் டான் பாஸ்கோ, கவுன்சிலர் வேலாயுதம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதையடுத்து மேட்டு இடையம் பட்டியில் சாலை இடத்தை ஆக்கிரமிப்பு செய்து கொண்டு சாலை அமைக்க விடாமல் எதிர்ப்பு தெரிவித்த இடங்களை மாவட்ட திட்ட அலுவலர் ஆர்த்தி பார்வையிட்டார்.

    இதேபோல் ஓட்டேரி ஏரிக்கு நீர்வரத்து வரும் கால்வாய் மீது தரைப்பாலம் அமைக்க உள்ள இடத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    • சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாளையொட்டி சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் “ஒற்றுமை தினம்” கொண்டாடப்பட்டது.
    • இதில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் 148 பேர், 5 கி.மீ. கல்லூரி வளாகத்தை சுற்றி ஓடினர்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அணி எண். 209 சார்பில் சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாளையொட்டி "ஒற்றுமை தினம்" கொண்டாடப்பட்டது.

    முதல்வர் பாலமுருகன் கலந்து கொண்டார். அவர் பேசுகையில், நாட்டு நலப்பணித்திட்டம் பற்றியும், இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல் பற்றியும் எடுத்துக்கூறினார்.

    அதன் பிறகு நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் ஒற்றுமை தின விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். பின்னர் முதல்வர் கொடியசைத்து விழிப்புணர்வு ஓட்டத்தை தொடங்கி வைத்தார்.

    இதில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் 148 பேர், 5 கி.மீ. கல்லூரி வளாகத்தை சுற்றி ஓடினர். இதற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ராஜீவ்காந்தி செய்திருந்தார்.

    ×